சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Against the European Union, for the United Socialist States of Europe!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்கு ஆதரவாக நிற்போம்!

Statement by the Partei für Soziale Gleichheit and Socialist Equality Party (UK) on the 2014 European Elections
10 January 2014

Use this version to printSend feedback

ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியும் (PSG) பிரிட்டனின் சோசலிச சமத்துவ கட்சியும் (SEP) மே 2014 ல் நடக்கவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

பரந்த பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பலிகொடுத்து ஒருசிலரை வளமாக்குவதற்கு மாறாக சமூக சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு சோசலிச சமூகத்தினை உருவாக்குவதற்கான போராட்டத்தில் ஐரோப்பா முழுமையிலுமான உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதே எமது நோக்கமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கட்டளைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்குமான எதிர்ப்பு சகல இடங்களிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. விடயங்களை அவற்றின் உண்மையான பெயர் கொண்டு அழைக்கிறதும், ஆளும் வர்க்கத்திற்கு சவால் அளிக்கிறதும், அத்துடன் பெருகும் எதிர்ப்புக்கு ஒரு தெளிவான மற்றும் சர்வதேசிய நோக்குநிலையை வழங்கக் கூடியதுமானதொரு கட்சி தான் இப்போது இல்லாமல் இருக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கொண்டு ஐரோப்பாவெங்கிலும் அத்தகையதொரு கட்சியைக் கட்டியெழுப்புவதையே எமது பிரச்சாரம் மையமாகக் கொண்டுள்ளது.

பெரு வணிகங்கள், அதன் கட்சிகள் மற்றும் அதன் அரசாங்கங்களுக்கு எதிராக ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன அரசியல் மற்றும் சமூக இயக்கத்தை அணிதிரட்ட நாங்கள் முனைகிறோம். நாங்கள் பரிந்துரைப்பது முதலாளித்துவத்தை சீர்திருத்துவதை அல்ல, மாறாக அதனைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தையே. ஐரோப்பிய ஒன்றியத்தையும், மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் உள்ளிட்ட அதன் அத்தனை ஜனநாயகவிரோத ஸ்தாபனங்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம். புலம்பெயர் விரோத பேரினவாதம், இனவாதம் மற்றும் தேசியவாதத்தின் ஒவ்வொரு வடிவங்களுக்கும் எதிராக நாங்கள் நிற்கிறோம். கட்டலோனியா, வடக்கு இத்தாலி, பெல்ஜியம் மற்றும் ஸ்காட்லாந்தில் பிரிவினைவாத உபதேசங்களையும் நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால் பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட்டதொரு போராட்டம் அவசியமாக இருக்கின்றதொரு சமயத்தில் இவை தொழிலாளர்களிடையே மேலும் பிளவுகளையே விதைக்கின்றன.

ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாகும். ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்அரசாங்கங்களை ஸ்தாபிப்பதும் ஐரோப்பாவை ஒரு சோசலிச அடிப்படையில் ஒன்றிணைப்பதும் மட்டுமே ஐரோப்பா தேசியவாதம் மற்றும் போருக்குள் வீழ்ச்சியுறுவதைத் தடுத்து நிறுத்தி, அதன் பரந்த ஆதாரவளங்களும் உற்பத்தி சக்திகளும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்களுக்காய் பயன்படுத்தப்படுவதற்கும் மற்றும் அபிவிருத்தி செய்யப்படுவதற்குமான நிலைமைகளை உருவாக்க இயலும்

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில் 2014 ஐரோப்பிய தேர்தல்கள் நடைபெறுகின்றன.

சென்ற தசாப்தங்களில், தொழில்நுட்பமும், உற்பத்தியும் மற்றும் வர்த்தகமும் பிரம்மாண்டமான முன்னேற்றத்தினைக் கண்டிருக்கிறது. இணையமும், நவீன போக்குவரத்து வழிமுறைகளும் மற்றும் நாடுகடந்த உற்பத்தியும் உலகப் பொருளாதாரத்தை மிக நெருக்கமாகப் பிணைத்திருப்பதோடு அதன் உற்பத்தித் திறனையும் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த சாதனைகள் எல்லாம் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களையும் கலாச்சார மட்டத்தையும் அதிகரிப்பதற்குப் பதிலாக ஒரு மிகச்சிறு எண்ணிக்கையிலானோரின் வரலாறு கண்டிராத வளர்ச்சிக்கே இட்டுச் சென்றிருக்கிறது.

சிக்கலான உலகப் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாடு தனியார் பெருநிறுவனங்களின் கையில் உள்ளது. பொருளாதார விடயங்கள் அத்தனையையும் அவை தமது குறுகிய கால இலாப நலன்களுக்காய் கீழ்ப்படியச் செய்கின்றன.

சிலர் மட்டுமே கொண்ட நிதியியல் கும்பல் ஒன்று பொருளாதார வாழ்க்கையில் ஏகபோகம் செய்வதானது நவீன முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு ஒரு தனித்துவமான துஷ்ட தன்மையைக் கொடுக்கிறது. 2008 இலையுதிர் காலத்தில், முதலீட்டு வங்கிகளும் துணிகர நிதிகளும் தமது குற்றவியல் ஊக வணிகத்தைக் கொண்டு உலக நிதியமைப்பு முறையை நாசத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்தன. நிதித் துறையில் பில்லியன்கணக்கான தொகையை பாய்ச்சியது தான் அவற்றின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திருந்த அரசாங்கங்கள் அளித்த பதிலிறுப்பாக இருந்தது. ஐரோப்பாவின் வங்கிகள் 1.6 டிரில்லியன் யூரோக்களை இவ்விதம் பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவிக்கிறது. உண்மையில் இன்னும் மிக அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் வங்கிகள் மட்டுமே 1.1 டிரில்லியன் பவுண்டுகளைப் பெற்றிருக்கின்றன.

இதற்கான விலையை செலுத்திக் கொண்டிருப்பது ஐரோப்பாவின் தொழிலாளர்களே. ஏனென்றால் ஒவ்வொரு அரசாங்கமும் வேலைகளிலும், ஊதியங்களிலும் மற்றும் அடிப்படையான சமூக சேவைகளிலும் மிருகத்தனமான வெட்டுகளைத் திணித்துக் கொண்டிருக்கிறன.

இந்தப் புதியசிக்கன நடவடிக்கையின் காலம்மில்லியன் கணக்கான மக்களை அகோர வறுமைக்குள் தள்ளவும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கட்டுக்கடங்காத ஆட்சியை திணிக்கவுமான நோக்கம் கொண்டதொரு சமூக எதிர்ப்புரட்சியின் விளைபொருளாகும். ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியமுக்கூட்டின் சர்வாதிகார நடவடிக்கைகளில் இது அரசியல் வெளிப்பாட்டை கண்டு வருகிறது.

பாரிய எண்ணிக்கையிலான மக்களை திட்டமிட்டு வறுமைக்குள் தள்ளுகின்ற இந்தக் கொள்கையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை ஊர்ஜிதம் செய்கிறது. இது ஐரோப்பிய மக்களின் ஐக்கியத்தை உருவடிவப்படுத்தவில்லை, மாறாக ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த பொருளாதார மற்றும் நிதி நலன்களின் சர்வாதிகாரத்தின் உருவடிவமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தமது தாக்குதல்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும், தமது மோதல்களை முன்னெடுப்பதற்கும், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் தமது போர்களை திட்டமிடுவதற்கும் தேவையான கட்டமைப்பை இது உருவாக்கித் தருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜேர்மனி, ஐரோப்பாவில் தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கும் மற்ற நாடுகளுக்கு சிக்கன நடவடிக்கைகளின் அழிவுப் பாதையை உத்தரவிடுவதற்கும் யூரோவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியமானது அது எந்த மையவிலக்கு விசைகளை வெல்வதற்கு முனைவதாகக் கூறிக் கொள்கிறதோ அதே மையவிலக்கு விசைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  

ஐரோப்பியத் தொழிலாளர்களுக்கெனத் திட்டமிடப்பட்டிருக்கும் எதிர்காலம் போர்ச்சுகலிலும், அயர்லாந்திலும், ஸ்பெயின் மற்றும் கிரீசிலும் எடுத்துக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிரீஸ் முன்கண்டிராத பொருளாதார மற்றும் சமூகப் பின்னடைவு மட்டத்தை எட்டியிருக்கிறது. சராசரி ஊதியமானது 40 சதவீதம் வரை வெட்டப்பட்டு விட்டது. வயது மூத்தவர்களில் மூன்றில் ஒருவரும் இளைஞர்களில் இரண்டு பேருக்கு ஒருவரும் வேலைவாய்ப்பற்று இருக்கின்றனர். கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் கிரீசின் உள்கட்டமைப்பு பெருமளவில் நாசப்படுத்தப்பட்டு இருக்கின்றன. நூறாயிரக்கணக்கிலான கிரேக்கர்கள் எந்த வித வருவாய் ஆதாரமோ அல்லது சுகாதாரக் காப்பீடோ இல்லாத நிலையில் இருக்கின்றனர்.

இதேபோன்ற நடவடிக்கைகளில் இருந்து எந்தவொரு ஐரோப்பிய நாடுமே தப்புதற்கு இயலவில்லை. ”நிதிநிலை திண்ணமாக்கல்மற்றும்உழைப்பாளர் சந்தை சீர்திருத்தங்கள்போன்ற மருந்து தடவும் வார்த்தைகள் எல்லாம் உழைக்கும் மக்களின் உரிமைகள் மற்றும் சாதனைகள் மீது தொடுக்கப்படுகின்ற முடிவற்ற தாக்குதலுக்கான சங்கேத வார்த்தைகளாக ஆகி விட்டிருக்கின்றன.

ஐரோப்பிய தொழிலாளர்களில் கால்வாசிப் பேரை பொருளாதார ஸ்திரமின்மைக்கும் சமூக நிர்க்கதி நிலைக்கும் ஏற்கனவே இட்டுச் சென்று விட்டிருக்கக் கூடிய சிக்கன நடவடிக்கைகளின் காரணத்தால் வரும் ஆண்டுகளில், சுமார் 145 மில்லியன் மக்கள், அதாவது கிட்டத்தட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்கள், வறுமை வாழ்க்கைக்குள் தள்ளப்படும் நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பிரம்மாண்டமான தொழில்நுட்ப முன்னேற்ற நிலையிலும் முதலாளித்துவம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் போர் இவற்றைத் தவிர வேறொன்றும் அளிக்க இயலவில்லை. வேலைவாய்ப்பு பெற்றிருப்போரும் சொற்ப தொகையை ஊதியமாகப் பெறுவோராகவே உள்ளனர் அல்லது ஊதியமற்ற பயிற்சி ஊழியர்களாக பணிபுரியத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் மற்றும் பயிற்சி மையங்களும் தனியார்மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன அல்லது அழிவுகரமான வெட்டுகளுக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உலகின் மிகவும் அசமத்துவமான நாடுகளின் வரிசையில் இடம்பிடிக்கவிருக்கின்றன. உழைக்கும் குடும்பங்களில் இரண்டிற்கு ஒரு குடும்பம் வேலை இழப்புகளால் அல்லது வேலை நேரக் குறைப்புகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரும் பொருளாதாரமான ஜேர்மனியிலே கூட, மூன்று பேருக்கு ஒருவர் இப்போது ஆபத்தான நிலைமைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அத்துடன் இளைஞர்கள் ஒரு நிரந்தரமான வேலையைப் பெறுவது குதிரைக்கொம்பாகி விட்டிருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மில்லியன் மக்கள் அரசின் நல உதவிகளையே நம்பி வாழ்கின்றனர், அத்துடன் ஒரு மில்லியன் ஓய்வூதியதாரர்கள் வறுமைப்பட்டுள்ளனர். ஆறில் ஒருவர் வறுமை அபாயத்தில் உள்ளார். வேலைவாய்ப்பு பெற்றோர் அதிகமாக இருக்கின்ற விகிதமானது உண்மையில் மக்கள் தொகையில் ஏறக்குறைய கால்வாசிப் பேரும் (22 சதவீதம்)அத்துடன் 15 முதல் 24 வயதுக்குள்ளானோரில் மூன்றில் ஒருவரும் முழு-நேர ஒப்பந்தம் இல்லாத நிலையில் உள்ளனர் என்ற உண்மையை மறைத்து விடுகிறது என்பது இதற்கு முக்கியமான காரணம். சமூக ஜனநாயகக் கட்சியினர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்த்தவ ஜனநாயகக் கட்சியுடன் ஒரு சிக்கன நடவடிக்கைக் கூட்டணியில் இணைவதற்கு உடன்பட்டிருப்பதால் இந்த நிலை இன்னும் மோசமடையவிருக்கிறது.

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் வரி அதிகரிப்புகள், ஓய்வூதிய வெட்டுகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் காரணத்தால் பிரான்சில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் வெகுஜன வெறுப்பை அதிகமாகச் சம்பாதித்த அரசாங்கமாக அது ஆகி இருக்கிறது.

புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் கதி ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சி செய்து 1990 முதலாக 25,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு அக்டோபரில் மட்டும், 28 ஆண்டுகள் பேர்லின் சுவர் இருந்தபோது உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு மடங்கான பேர் லாம்பேடூஸா என்ற இத்தாலியத் தீவில் ஒரேநாளில் உயிரிழந்த சம்பவம் இரண்டு முறைக்கும் அதிகமாய் அரங்கேறியது.

ஐரோப்பிய மண்ணில் ஒருவழியாய் நுழையும் அகதிகளுக்கு அத்தனை அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகிறது, அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள், அல்லது அடிமைகளாய் சுரண்டப்படுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் பின்விளைவுகளுக்காய் அஞ்சி ஐரோப்பாவிற்குள்ளேயே இடம்பெயரும் மக்களுக்கும் இதே விடயங்கள் பொருந்தும். அவர்கள் பட்டினிக் கூலிகளுக்காய் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள், அல்லது ரோமாக்களைப் போல அரசு ஆதரவுடனான இனவாதப் பிரச்சாரங்களின் இலக்காக்கப்படுகிறார்கள்.

ஸ்தாபகக் கட்சிகள் தங்களது கொள்கைகளுக்குப் பெருகும் எதிர்ப்பிற்கான பதிலிறுப்பாக பாதுகாப்பு எந்திரத்தின் அதிகாரங்களை அதிகரிக்கின்றன, பாரிய கண்காணிப்பைத் தீவிரப்படுத்துகின்றன, ஜனநாயக உரிமைகளை அழிக்கின்றன அத்துடன் தீவிர-வலது கட்சிகளை ஊக்குவிக்கின்றன.

ஜூலியான் அசாஞ், பிராட்லி மேனிங் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டென் ஆகியோரது துணிச்சல்மிக்க நடவடிக்கைகளின் காரணத்தால் இன்று ஐரோப்பாவின் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் மிருகத்தனமான போர்க் குற்றங்கள் குறித்தும் உலகின் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தையின் வாழ்க்கைக்குள்ளும் அரச கண்காணிப்பு எந்திரம் ஊடுருவி ஒட்டுக் கேட்கும் நிலை இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இத்தகையதொரு எந்திரத்திற்கும்பயங்கரவாதத்தைஎதிர்த்து போராடுவதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. உள்நாட்டில் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்குவதற்கு வழிவகை செய்கின்ற ஒரு பொறிமுறை ஆகும் அது.  

2014 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் வெடித்த, அதாவது யுத்தக்களங்களிலும், இரண்டு உலகப் போர்களின் வெடிகுண்டு வீச்சுகளிலும், உள்நாட்டு யுத்தங்களிலும் மற்றும் நாஜிக்களின் வதைமுகாம்களிலும் 100 மில்லியன் மக்கள் கோரமாக உயிரிழந்த 30 வருட காட்டுமிராண்டித்தனத்தின் தொடக்கத்தின், 100வது ஆண்டாகும் என்பதைக் கொண்டு பார்த்தால் போலிஸ் அரச சர்வாதிகாரத்தின் அழுகல் குறிப்பாக மிகவும் கொடூரமாக இருக்கிறது.

நூறாண்டு காலத்திற்குப் பின்னரும் கூட அந்நாளின் எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. பெருகும் சர்வதேசப் பதட்டங்கள், வர்த்தகம் மற்றும் நாணயமதிப்பு தொடர்பான மோதல்கள், மற்றும் மத்திய கிழக்கு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான மூர்க்கமான ஏகாதிபத்தியக் கொள்கைகள் ஆகியவை உலக சூழ்நிலைக்கு முன்னெப்போதையும் விட வெடிப்பு மிகுந்த தன்மையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா தனது பொருளாதார வீழ்ச்சியைச் சரிக்கட்டும் பொருட்டும், தாயகத்தின் வெடிப்பு மிகுந்த சமூகப் பதட்டங்களை அயல்நாட்டை நோக்கித் திசைதிருப்புவதற்கும் தனது பாரிய இராணுவ எந்திரத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவிற்குப் பின்னர் அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை உறுதிசெய்ய சீனாவுக்கு எதிராகவும் திரும்பிக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய சக்திகள் மீண்டுமொரு முறை தங்களது செல்வாக்கு வட்டங்களுக்காகவும், சந்தைகளுக்காகவும் மற்றும் ஆதார வளங்களுக்காகவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஈராக் போருக்குப் பின்னர் பிரிட்டன் மீண்டும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி என்பது நிரூபணமாகி இருக்கிறது. பிரான்ஸ் ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் அதன் பழைய காலனிகள் மீது கண்ணைத் திருப்பியிருக்கிறது. நாஜிக்கள் செய்த குற்றங்களைத் தொடர்ந்து சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருக்க நிர்ப்பந்தம் பெற்றிருந்த ஜேர்மனியும் கூட, கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியப் பகுதிகளுக்குள் நுழைத்துக் கொண்டு தன்னை ஒரு உலக சக்தியாக மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளின் கீழ், எப்படி 1914 இல் சரஜேவோவில் இளவரசர் பெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டது ஒரு தூண்டுதலாகியதோ, அதேபோல ஒரு சிறு பொறி போதும் பிராந்திய மோதலை ஒரு உலகளாவிய காட்டுத்தீயாக ஆக்குவதற்கு.

ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புதல்

ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் எல்லா இடங்களிலும் கோபத்தையும் எதிர்ப்பையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பு அரசியல் வெளிப்பாட்டைக் காண இயலவில்லை.

ஒருகாலத்தில் தொழிலாளர்களின் நலன்களுக்காய் முதலாளித்துவத்தை சீர்திருத்த ஆலோசித்த கட்சிகள் அனைத்தும் இப்போது சமூக அழிவு மற்றும் இராணுவவாதத்தின் இரக்கமற்ற விளக்கவுரையாளர்களாய் மாறியிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள், தொழிலாள வர்க்கத்தின் மீது போர் அறிவிப்பு செய்திருக்கக் கூடிய, அத்துடன் தொழிலாள வர்க்கத்தை அலட்சியத்துடனும் வெறுப்புடனும் அணுகக் கூடிய அரசாங்கங்களுக்குத் தலைமை கொடுத்திருக்கின்றனர்

இது பசுமைக் கட்சியினருக்கும் பொருந்தும், அவர்களுக்கும் பழமைவாதக் கட்சிகளுக்குமான வேறுபாடு இன்று வாழ்க்கைப்பாணி விடயங்களில் மட்டும் தான் இருக்கிறது.

தொழிற்சங்கங்கள் இனியும் தொழிலாளர்அமைப்புகளாக இல்லை, மாறாக அவை சலுகைபடைத்த அதிகாரத்துவ எந்திரங்களாக ஆகி விட்டிருக்கின்றன. அதன் நிர்வாகிகள் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் கணிசமான ஊதியங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இன்று ஒவ்வொரு ஆட்குறைப்பிலும், ஊதிய வெட்டிலும் மற்றும் ஆலை மூடலிலும் அவர்களது முத்திரை இருக்கிறது. ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் முழுமையாகத் தடுக்க முடியாது போனால், அவை உருப்படியாக முன்னேறி விடாதபடி அதிகாரத்துவம் உறுதி செய்து கொள்கிறது. கிரீசில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 35க்குக் குறையாத பொது வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுமே அந்த வேலைநிறுத்தம் முன்னேற்றம் கண்டு விடாதபடி பார்த்துக் கொள்வதற்குத் தான் தொழிற்சங்கங்கள் முனைந்திருக்கின்றன

ஜேர்மனியின் இடது கட்சி, பிரான்சில் Front de Gauche மற்றும் கிரீசில் SYRIZA போன்ற கட்சிகள் குறிப்பாக அருவெருப்பானதொரு பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றன. இக்கட்சிகள் முதலாளித்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஒரு பக்கம் பாதுகாத்துக் கொண்டு அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றுவதற்காகஇடதுவார்த்தைஜாலங்களைப் பயன்படுத்துகின்றன. இக்கட்சிகள் அரசாங்கங்களில் பங்குபெறும் சமயங்களில், மற்ற முதலாளித்துவக் கட்சிகளின் அரசாங்கங்களது அதே வேகத்துடன் தான் இவையும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றன. ஜேர்மன் இடது கட்சியானது இதனை பல மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களில் எடுத்துக்காட்டியிருக்கிறது. SYRIZA வின் தலைவரும் ஐரோப்பிய இடது கட்சியின் தலைமையில் இருப்பவருமான அலெக்சிஸ் சிப்ராஸ், ஒரு SYRIZA அரசாங்கத்தைக் கண்டு உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதில் அத்தலைவர்களுக்கு உறுதியளிக்கும் பொருட்டு வாஷிங்டன் பயணம் செய்து வந்ததன் மூலம் இந்தப் பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இக்கட்சிகளுக்கு ஒரு முற்போக்குப் பூச்சைக் கொடுப்பதற்கென ஏராளமான போலி-இடது அமைப்புகள் இந்தக் கட்சிகளுக்கு உள்ளும் இவற்றைச் சுற்றியும் இருக்கின்றன. ஜேர்மனியின்  SAV மற்றும் Marx21, பிரிட்டனின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் இடது ஐக்கியம், மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி போன்ற இக்குழுக்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது உயர் நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளையே தவிர உழைக்கும் மக்களை அல்ல. இந்த நெருக்கடியை இக்குழுக்கள் தமது வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்கும் அரசாங்கத்திலும், அரசு எந்திரத்திலும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலும் வருமானம் மிக்க பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பமாகக் காண்கின்றன. ஒரு புரட்சிகர முன்னோக்கை ஆவேசத்துடன் எதிர்க்கும் இந்த அமைப்புகள், பல நாடுகளிலும் அரசின் பாதுகாப்பு அங்கங்களுடன் நெருக்கமாக இணைந்து வேலைசெய்வதோடு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகின்றன

பிரான்சின் தேசிய முன்னணி(FN)மற்றும் பிரிட்டனின் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி(UKIP)போன்ற அதிவலது பேரினவாதக் கட்சிகள் ஐரோப்பியத் தேர்தலில் கணிசமான வெற்றிகளைப் பெறும் என கருத்துக்கணிப்புகள் கணிக்கின்றன. “இடதுஎன்பதாய் அழைக்கப்படும் கட்சிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை அடிமைத்தனமாக பாதுகாத்து நிற்பதை இக்கட்சிகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கோபத்தை பிற்போக்குத்தனமான பாதைகளுக்குள் திருப்பி விடுவதற்காய் பயன்படுத்திக் கொள்கின்றன

எகிப்தின் நிகழ்வுகள் அதிமுக்கியமான படிப்பினைகளைக் கொண்டிருக்கின்றன. வெகுஜனப் புரட்சிகர எழுச்சிகள் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கையும் அதன்பின்னர் முஸ்லீம் சகோதரத்துவத்தையும் அகற்றுவதற்கு இட்டுச்சென்றன. ஆயினும் இராணுவ ஆட்சிக்குழுவானது மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்ப முடிந்தது என்றால் அதன் காரணம் புரட்சிகர சோசலிஸ்டுகள் ஒரு புரட்சிகர தொழிலாளர் கட்சியைக் கட்டுவதை எதிர்த்தன என்பதோடு மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளுடன் கூட்டுவைத்துக் கொண்டன.   

ஊழலடைந்த முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றை அண்டி வாழும் போலி-இடதுகளுக்கு எதிராகவே ஒரு புதிய தொழிலாளர் கட்சியானது கட்டியெழுப்பப்பட முடியும். அக்கட்சிகளில் இருந்து PSG மற்றும் SEP ஒவ்வொரு வகையிலும் வேறுபடுகின்றன. எமது வேலைத்திட்டமும், எமது கோட்பாடுகளும் மற்றும் எமது உடையாத பாரம்பரியமுமே எமது வலிமையாகும். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் ரோசா லுக்சம்பேர்க் ஆகிய மகத்தான புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் தொடர்ச்சியாக நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்.  

எமது சர்வதேச இயக்கமான நான்காம் அகிலமானது ஸ்ராலினிசத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பு நடத்திய போராட்டத்தில் வேரூன்றியதாகும்.

ஸ்ராலின் சலுகைபடைத்ததொரு அதிகாரத்துவத்திற்குத் தலைமை தாங்கினார். அந்த அதிகாரத்துவம் தொழிலாளர்களின் ஜனநாயகத்தை ஒடுக்கியது, அக்டோபர் புரட்சியின் போல்ஷிவிக் தலைவர்களைப் படுகொலை செய்தது, அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும் சர்வதேசத் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது. 1917 அக்டோபர் புரட்சியால் ஸ்தாபகம் செய்யப்பட்ட முதல் தொழிலாளர் அரசுக்கு சவக்குழி வெட்டுவதாக அது நிரூபணமானது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முதலாளித்துவமும் குற்றவியல் சிலவராட்சியும் மறு அறிமுகம் செய்யப்பட்டதில் அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சியானது அதன் உச்சப் புள்ளியை எட்டியது

இதன் மிகக் கடுமையான விலையைச் செலுத்திக் கொண்டிருப்பது கிழக்கு ஐரோப்பியத் தொழிலாளர்கள் ஆகும். இவர்கள் பரம ஏழைகளின் நிலைக்குக் கொண்டுவரப்பட்டு, ஐரோப்பிய பெருநிறுவனங்களின் மலிவு உழைப்புக்கான ஒரு மூலவளமாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். பல்கேரியா மற்றும் ரோமானியாவின் விடயத்தில் போல, இந்நாடுகள் சூழ்ச்சி வேட்டைக்கு இலக்காக்கப்படுகின்றன, முதலாளித்துவத்தினால் உருவாக்கப்படுகின்ற பாரிய வேலைவாய்ப்பின்மை, ஊதிய வெட்டுகள் மற்றும் சமூக அழிவுக்கு பலிகடாக்களாக்கப்படுகின்றன.

மார்க்சிச தலைமையையும், சோசலிசக் கலாச்சாரத்தையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவையும் அழிப்பதில் ஸ்ராலினிசம் செய்த முயற்சிகள், கட்டவிழும் வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்கள் இல்லாத நிலையில் முதலாளித்துவ வர்க்கம் தன்னை பரந்த அளவில் வளப்படுத்திக் கொள்ள வழிவகை செய்து தருவதில் அத்தியாவசிய பங்காற்றியிருக்கிறது. ஆயினும் எதிர்ப்பானது பெருகி வளர்ந்து கொண்டிருக்கிறது, பலர், எல்லாவற்றுக்கும் மேலாய் இளம் தொழிலாளர்கள், இப்போது ஒரு புதிய முன்னோக்கையும் தலைமையையும் எதிர்நோக்கி நிற்கின்றனர்.

அவர்கள் இதனை உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFI இல் காண்பார்கள். ஸ்ராலினிசத்தின் குற்றங்களுக்கு எதிராய் உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் பாதுகாப்பதற்கு இடது எதிர்ப்பும் நான்காம் அகிலமும் நடத்திய போராட்டத்தின் வரலாற்றுப் பாரம்பரியங்களது உருவடிவமாகத் திகழ்வது அது ஒன்று மட்டுமே. ஐரோப்பா முழுவதிலும் சோசலிச சர்வதேசியவாதத்திற்கு புத்துயிர் அளிப்பது அத்துடன் புதிய மற்றும் உண்மையான சோசலிசக் கட்சிகளை அதாவது ICFI இன் பிரிவுகளைக் கட்டியெழுப்புவது ஆகியவற்றின் அடிப்படையில் இது மட்டுமே ஒரு முன்னோக்கிய வழியை வழங்குகிறது

எங்களது பிரச்சாரத்திற்கு நடைமுறைரீதியாகவும் நிதிரீதியாகவும் ஆதரவளிக்கவும், எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும், PSG மற்றும் SEP ஐத் தொடர்பு கொண்டு எங்களது கட்சியில் இணையவும் நாங்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் விண்ணப்பம் செய்கிறோம்.