சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A deepening global economic and financial breakdown

ஓர் ஆழ்ந்த உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் நிலைமுறிவு

Nick Beams
2 July 2014

Use this version to printSend feedback

கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்ட சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியின் (Bank for International Settlements) ஆண்டு அறிக்கை செப்டம்பர் 2008இல் தொடங்கிய உலக முதலாளித்துவ நிலைமுறிவின் ஆழத்தையும், அதை தீர்ப்பதற்கான எந்தவொரு கொள்கைகளையும் முன்னெடுக்க ஆளும் பொருளாதார மற்றும் நிதியியல் மேற்தட்டுக்கள் இலாயகற்று இருப்பதையும் இரண்டையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

உண்மையில், அந்த அறிக்கையே தெளிவுபடுத்துவதைப் போல, பூகோளமயப்பட்ட நிதியியல் அமைப்புமுறையை ஒரு முழுமையான பொறிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியாக 2008க்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைமைகள் (அதாவது அதிமலிவு பணத்தை முடிவில்லாமல் வினியோகிக்கும் முறைமைகள்) மற்றொரு உடைவிற்கான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன. ஆனால் நிதியியல் மேற்தட்டுக்கள் மற்றும் அவற்றின் இலாபத்திற்கான தணியாத கோரிக்கைகளின் இறுக்கமான பிடியில் உள்ள மத்திய வங்கிகளோ பொருத்தமில்லாமல் அதே முறைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஓர் உலக யுத்தத்திற்கான நிலைமைகளை உருவாக்கி கொண்டே, ஒரு இராணுவ பேரழிவிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக் கொண்டிருப்பதோடு சேர்ந்து, பூகோள அரசியல் அமைப்புமுறையோ அதிகரித்தளவில் ஒரு பைத்தியக்கார கூடத்தைப் போன்று மாறி வருகிறது, நிதியியல் அமைப்புமுறையும் அதேபோல, எந்தவொரு பகுத்தறிவோ அல்லது தர்க்கமோ இல்லாமல், மற்றொரு உடைவின் போக்கில், அதுவும் கடந்த ஒன்றை விட பெரியதாக இருக்கக்கூடிய ஒன்றை நோக்கி செல்கிறது.

சந்தைகள் பணத்தில் மிதந்து கொண்டிருப்பதற்கும், மற்றும் உலகளாவிய பொருளாதார அபிவிருத்திகளின் அடித்தளங்களுக்கும் இடையே இருக்கும் சிக்கலான பிளவைக்" குறிப்பிட்டுக் காட்டி, எந்தவொரு தீர்வும் இல்லாமல், BIS அறிக்கையின் ஆசிரியர்கள் குழம்பி போயிருப்பதாக தெரிகிறது.

2009இல் இருந்து, பங்கு சந்தைகள் சீராக உயர்ந்துள்ளன. அவை கடந்த ஆண்டு புதிய சாதனை உயரங்களை எட்டியுள்ளன, அதேவேளையில் பொருளாதாரமோ இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய "மீட்சிகளிலேயே" மிக குறைந்த விகிதத்தில் இருக்கிறது. யூரோ மண்டலமோ 2007இல் எட்டிய பொருளாதார உற்பத்தியின்  அளவை கூட இன்னும் எட்டவில்லை.

இப்போக்கினது புள்ளிவிபரங்களைக் கணக்கிலெடுத்து பார்க்கும்போது, இந்த பேரிடரின் அடித்தளத்திலிருப்பது இன்னும் அதிகளவில் வெளிப்படையாக இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2.9 சதவீதம் பொருளாதார சுருக்கத்தைக் கண்ட அமெரிக்காவில், உற்பத்தி அளவு 12.5 சதவீதத்திற்கும் குறைவாகும், அங்கே நெருக்கடிக்கு முந்தைய போக்கு தொடர்ந்திருக்க வேண்டும். அதே புள்ளிவிபரம் பிரிட்டனில் 18.5 சதவீதமாகும், அதேபோல நிதியியல் நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் அந்த புள்ளிவிபரம் 29 சதவீதமாகும்.

நெருக்கடிக்கு முந்தைய போக்கு காலவரையின்றி தொடர்ந்திருக்க முடியாது என்ற உண்மையை ஒப்புக் கொண்ட பின்னரும் கூட, BIS அது எதை மிகவும் "சராசரியான புள்ளிவிபர முறைமைகளாக" குறிப்பிடுகிறதோ அவற்றை பயன்படுத்தியே, நெருக்கடிக்குப் பிந்தைய பற்றாக்குறை முன்னேறிய பொருளாதாரங்களில் சராசரியாக 7.5 மற்றும் 10 சதவீதத்திற்கு இடையே இருப்பதாக கண்டறிந்தது. “வளர்ச்சி போக்கின் மீட்சிக்கு பிரகாசமான வாய்ப்புகள் இல்லை" என்று குறிப்பிட்டு, உயர்ந்த வளர்ச்சி விகிதங்களுக்கு திரும்புவதை அது நிராகரிக்கிறது. முன்னேறிய பொருளாதாரங்களில் வீழ்ச்சி அடைந்துவரும் உற்பத்தித்திறனையும், தேவை பலவீனப்பட்டிருப்பதால் முதலீடு குறைந்திருப்பதையும் அது குறிப்பிட்டு காட்டியது.

நிஜமான பொருளாதாரம் மந்தமடையும் அதேவேளையில், நிதியியல் சந்தைகளோ நேர்முகமாக குதூகலத்தில் உள்ளன. வோல் ஸ்ட்ரீட்டின் எஸ்&பி 500 குறியீடு மே 2014 வரையிலான 12 மாதங்களில் ஏறத்தாழ 20 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், ஆனால் அதே காலக்கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால வருவாய் 8 சதவீதத்திற்கு சற்று குறைவான அளவிற்கு உயர்ந்திருப்பதாகவும் BIS குறிப்பிட்டது. அந்த குறியீட்டின் விலை/வருவாய் விகிதம் (price/earnings ratio) மே மாதம் 25 புள்ளிகளில் நின்றது, இது கடந்த 50 ஆண்டுகளின் சராசரியை விட ஆறு புள்ளிகள் அதிகமாகும்.

இந்த ஏற்றத்தாழ்வு அமெரிக்க பெடரல் ரிசர்வினாலும் அத்தோடு பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பானாலும் முன்னெடுக்கப்பட்ட "பணத்தைப் புழக்கத்தில் விடும்" (quantitative easing) திட்டம், முக்கியமாக மொத்தமாக பணத்தை அச்சிடும் கொள்கையின் விளைபொருளாகும். அந்த கொள்கையை நடைமுறைப்படுத்தாத இடங்களிலும் கூட, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நோர்டிக் பிராந்தியம் போன்ற ஏனைய நாடுகளின் மத்திய வங்கிகள் அவற்றின் வட்டிவிகிதங்களைக் குறைக்க நிர்பந்திக்கப்பட்டு இருந்ததால், பங்குச் சந்தைகளின் உயர்வுகளுக்கு இட்டு சென்றுள்ளது.

அசாதாரணமாக கொள்கையைத் தளர்த்தியதன்" விளைவாக மத்திய வங்கி சொத்துக்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன. 2007இல் வேகமாக அதிகரித்த பின்னர், “அப்போதிருந்து அவை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக, முன்னொருபோதும் இல்லாத விதத்தில் மொத்தத்தில் 20 ட்ரில்லியன் டாலரை விட அதிகமாக (அதாவது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை விட கூடுதலாக) உயர்ந்துள்ளன.”

அதன் ஒரு விளைவாக, 2008 பொறிவிற்கு இட்டு சென்ற அனைத்து ஒட்டுண்ணித்தனமான மற்றும் முற்றுமுதலான குற்றவியல் நடைமுறைகளும் மீண்டும் திரும்பி வந்துள்ளன. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உலகளாவிய ஒருங்கிணைத்தல் மற்றும் கையகப்படுத்தலின் மதிப்பில் 75 சதவீதம் உயர்ந்திருப்பதைக் குறித்து இந்த வார தொடக்கத்தில் பிரசுரித்த ஒரு கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகையில், “ஆவேச ஒப்பந்தங்கள், மிருகத்தனமான உத்வேகம், ஒருங்கிணைக்கும் வெறிஅதை நீங்கள் என்னவென்று வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள், அது திரும்ப வந்துள்ளது,” என்று குறிப்பிட்டது. ஒருங்கிணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நிதி 1.75 ட்ரில்லியனை எட்டி, அது இப்போது 2007க்குப் பின்னர் அதன் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

அதே பத்திரிகையில் வந்த மற்றொரு கட்டுரை குறிப்பிடுகையில், அமெரிக்க நிறுவனங்கள் "ஒருங்கிணைப்பு மற்றும் கையகப்படுத்தல்கள் மூலமாக மற்றும் பங்கு வாங்கியதன் மூலமாக சாதனை அளவிற்கு கடன்களை வைத்துள்ளன,” மேலும் "போட்டியைத் தக்க வைத்திருப்பதற்காக பழமைவாத சொத்து நிர்வாகிகள் அபாயகரமான திட்டங்களில் துண்டை போட்டு விலை பேசி வருகிறார்கள்,” என்று குறிப்பிட்டது.

சமீபத்தில் நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரமான ஒரு கட்டுரையின்படி, வீட்டுக்கடன் சந்தைகளில், “பிணையற்ற அடமானக் கடன்" (subprime) என்பது ஒரு "தகாத வார்த்தையாக" நலிந்து போய் கொண்டிருக்கிறது. இரண்டாம் நிலை அடமானக் கடன்களின் அளவு பத்திர விற்பனை கடன்களில் முதலீட்டாளர்களுக்கு உதவும் அளவுக்கு போதியளவில் பெரியதல்ல என்ற போதினும், 2007-2008இன் பொறிவுக்கு இட்டு சென்ற காலக்கட்டத்தில் நடந்ததைப் போல, “பிணையற்ற அடமானக் கடனைச் சார்ந்த பத்திரங்களுக்கான சந்தை மீண்டும் எழுச்சி பெறுவது வெறுமனே ஒரு காலஅவகாசம் சார்ந்த விடயம் மட்டுமே என்று கடன் கொடுப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.”

மத்திய வங்கிகள் வெள்ளமென பணத்தைப் பாய்ச்சுவதென்பது, முந்தைய பொறிவுக்கு இட்டுச் சென்ற நிலைமைகளை மீண்டும் உருவாக்கி வருகிறது என்பது மட்டுமல்ல, அது மேலதிகமாக வெடிப்பு புள்ளிகளின் சாத்தியப்பாடுகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. முன்னேறிய பொருளாதாரங்களின் குறைந்த வட்டி விகிதங்கள், அதிக இலாபங்களுக்கான தேடலில் "எழுச்சி பெற்றுவரும் சந்தைகள்" என்றழைக்கப்படும் நாடுகளுக்குள் பணத்தைப் பாய்ச்சி உள்ளது. ஆனால் இந்த உள்ளீடுகள், துருக்கி மற்றும் தென் ஆபிரிக்கா உட்பட பல நாடுகளின் மத்திய வங்கிகள், பணம் வெளியேறாமல் இருக்க வட்டி விகிதங்களை உயர்த்த நிர்பந்திக்கப்பட்ட போது 2013இன் கோடையிலும் மற்றும் 2014இன் தொடக்கத்திலும் தெரிந்ததைப் போல, அவை மிக வேகமாக திரும்பிவிடக்கூடும்.

இந்த கொந்தளிப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டாலும் கூட, 1997-98 ஆசிய நெருக்கடி அளவிற்கான ஒரு பெரிய குறிப்பிடத்தக்க இடையூறு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும், ஏனென்றால், BIS குறிப்பிடுவதைப் போல, உலக பொருளாதாரத்தில் இப்போது எழுச்சி பெற்றுவரும் சந்தைகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதோடு அவையும் பூகோளமயப்பட்ட நிதியியல் அமைப்புமுறைக்குள் மிக மிக நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன.

அமெரிக்க பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளின் "எளிய பண" கொள்கைகளுக்காக மறைமுகமாக விமர்சிக்கின்ற போதினும், இந்த நெருக்கடியைத் தீர்க்க BIS வசம் எந்தவொரு கொள்கையும் இல்லை. அதற்கு மாறாக நிதியியல் சந்தைகள் பணத்தில் மிதப்பது ஒரு குறுகிய-கால தீர்வு மட்டுமே ஆகும், அதுவும் பெரும் ஆபத்துக்களை உயர்த்துகின்றது என்பதை உணர்ந்திருப்பதன் அடிப்படையில் அது அதன் விமர்சனங்களை அமைந்துள்ளது.

அந்த அறிக்கை "கட்டமைப்பு சீர்திருத்தம்", நிறைய "இலகுதன்மை" மற்றும் நிதி திரட்டுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து அளிக்கப்பட்ட தொடர்ச்சியான மேற்கோள்களை உள்ளடக்கி இருந்ததுஇவை அனைத்தும் உலகளாவிய சமூக எதிர்புரட்சியை தீவிரப்படுத்துவதற்கான குறிச்சொற்களாகும்.

அந்த முன்னோக்கு உலக முதலாளித்துவத்தின் அரசியல் பொருளாதாரத்தை அடித்தளமாக கொண்டிருக்கிறது. பணத்தை உட்புகுத்துவதானது அட்ரீனல் சுரப்பியை ஊக்குவிப்பது போன்றிருக்கும் என்றாலும் கூட, பகுப்பாய்வின் இறுதியாக, மூலதனமானது, இரத்த காட்டேரியைப் போல, ஊதியங்களைக் குறைத்து, நிலைமைகளில் வெட்டுகளைக் கொண்டு வந்து, சுரண்டலைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் உயிரோட்டமான வாழ்வாதார இரத்தத்தை உறிஞ்சுவதையே சார்ந்திருக்கிறது.