சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Inequality doubles in the US between 2003-2013

2003-2013 இற்கும் இடையே அமெரிக்காவில் சமத்துவமின்மை இரண்டுமடங்காகியது

By Gabriel Black
27 June 2014

Use this version to printSend feedback

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராச்சியாளர்களாக இருப்பவர்களின் ஒரு அறிக்கை புதன்கிழமை அன்று வெளியானது. கடந்த தசாப்த காலத்தில் அமெரிக்காவில் பெரியளவில் செல்வத்தின் சமத்துவமின்மை அதிகரித்திருப்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஒரு இரண்டு பக்க ஆராய்ச்சி குறிப்பில், அமெரிக்க சமுதாயத்தில் உள்ள இந்த அகன்று வரும் இடைவெளி குறைவதற்கான அறிகுறியே இல்லாமல் தொடரும் என ஆசிரியர்கள் கணிக்கிறார்கள்.

அந்த அறிக்கையின் படி, 2003இற்கு பின்னர் செல்வ சமத்துவமின்மை "கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2003இல் 95 சதவீதத்திற்கு மேலாக இருந்த ஒரு சராசரி குடும்பத்தை விட மத்தியதர அமெரிக்க குடும்பங்கள் 13.6 மடங்குகள் ஏழையாக இருந்தனர். 2013 அளவில் 95 சதவீதத்திற்கு மேலாக இருந்த (உயர்ந்த 5 சதவிகிதம்) இருந்த சராசரி குடும்பம் 24.2 மடங்குகள் மத்தியதர குடும்பத்தை விட செல்வந்தர்களாக இருந்தார்கள். மேலும் 25 சதவீதத்திற்கு மேலாக இருந்த சராசரி குடும்பங்களை விட 426.5 மடங்குகள் செல்வந்தர்களாக இருந்தார்கள்.

செல்வந்தர்கள் மற்றும் செல்வச் செழிப்பு மிக்க செல்வந்தர்கள் தவிர்த்து சமூகத்தின் ஏறத்தாழ ஒவ்வொரு பிரிவும் 2003 இற்கு பிறகு செல்வத்தில் எப்படி ஒரு மிகப்பெரிய இழப்பை சந்தித்தார்கள் என்பதை அந்த அறிக்கை விளக்கி காட்டுகிறது.

அமெரிக்க குடும்பங்களின் செல்வ வளம்

2003 இல் ஐம்பது சதவீதத்திற்கு மேலாக இருந்த அமெரிக்கர்கள் 87,992 டாலர்கள் மதிப்பிற்கு மொத்த சொத்திருப்புகளை கொண்டிருந்தார்கள். 2003 மற்றும் 2013இற்கும் இடையே மத்தியதர அமெரிக்க குடும்பங்கள் 2013இல் அவற்றின் மொத்த சொத்திருப்புகள் 56,335 டாலர்கள் என்ற அளவிற்கு 36 சதவிகிதத்திற்கு அவற்றின் செல்வ வளத்தை இழந்தன (2013இன் டாலர்கள் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு). இடைப்பட்ட நேரத்தில் 75 சதவீதத்திற்கு மேலாக (உயர்மட்ட 25 சதவீதம்) 2013இல் 260,405 டாலர்கள் என்ற அளவிற்கு அவற்றின் 13.8 சதவிகித செல்வ வளத்தை இழந்தார்கள். இந்த சரிவின் ஒரு பெரும் பகுதி வீட்டு விலைகளில் ஒரு வீழ்ச்சியின் காரணமாக இருந்தது.

மத்திய தர குடும்பங்கள் அதன் 36 சதவிகித செல்வ வளத்தை இழந்திருக்கும் அதேவேளையில், 10,129 இருந்து 3,200 டாலர்கள் என்ற அளவிற்கு குறைந்து 25சதவீதத்திற்கு மேலானோர் ஒரு அதிர்ச்சிதரும் வகையில் 68.3 சதவிகிதம் என்ற அளவிற்கு அதன் செல்வ வளத்தை இழந்திருக்கின்றனர்.  அதேவேளையில், 5 சதவீதத்திற்கு மேலாக உள்ளோர் 2003இல் 9,749 டாலர்கள் கடனில் ஆரம்பித்து 2013இல் 27,416 டாலர்கள் கடனில் முடிவடைந்து கடன் கணிசமாக அதிகரித்திருப்பதைக் கண்டார்கள்.

அதேசமயம் 2003இற்க்குப் பின்னர் நான்கிற்கு மூன்று பங்கு அமெரிக்கர்கள் செல்வ வளத்தை இழந்து வந்திருக்கிறார்கள், மிகப் பெரிய அமெரிக்க செல்வந்தர்கள் அதிகளவிற்கு சேர்த்திருக்கிறார்கள். 95 சதவீதத்திற்கு மேலாக உள்ள அமெரிக்கர்கள் அவர்களின் செல்வ வளத்தை 14.4 சதவிகிதமாக, 2003இல் 1,192,639 இலிருந்து 2013இல் 1,364,834 டாலர்கள் அளவிற்கு அதிகரித்திருக்கிறார்கள்.


1980களுக்கு பின் செல்வத்தில் மாற்றம்

நசுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் அவர்களின் ஊதியங்கள் குறைக்கப்படுவதை, வேலைகள் இல்லாமல் போவது மற்றும் அவர்களின் வீடுகள், ஒருவேளை அவர்கள் அது போன்ற ஒன்றை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியுமானால், அவற்றின் மதிப்பில் குறைவதைப் பார்த்திருக்கிறார்கள். எவ்வாறிருப்பினும், ஆளும் வர்க்கம் அதன் சொத்தை பெரிய நிறுவனம் மற்றும் வங்கிகளின் பத்திரங்களில் குவித்திருக்கிறார்கள். அவை வாழ்க்கைதரங்கள் மற்றும் சொத்துக்களின் விலைவீக்கம் மீதான தாக்குதல்களிலிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள பலனளிக்கின்றன.

குறிப்பாக, பெடரல் ரிசர்விடமிருந்து அளிக்கப்பட்ட மலிவான கடன் மூலமாக வேண்டுமென்றே பங்குச் சந்தை ஊதிப் பெருக செய்யப்பட்டிருந்தது. அரசாங்கம் வங்கிகளுக்கு பூஜ்யம் அல்லது பூஜ்யத்துக்கு அருகில் வட்டி வீதத்தில் ஒரு அளவற்ற கடன் அடைப்பை முக்கியமாக திறந்துவிட்டது. பணத்தின் குவியலுடன் இணைந்து, பங்குச் சந்தை சாதனை மட்டத்தை அடைந்திருக்கிறது.

அந்த அறிக்கையின் ஆசிரியர்கள் விளக்குவதாவது, "2007இல் பொறிவுக்கு பின்னர் வேகமாக பங்குகளின் விலைகள் ஒப்புநோக்கதக்க அளவில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டபோது வீட்டு விலைகள் கட்டுப்படுத்தப்படவில்லை. ஆசிரியர்கள் தொடர்ந்து கூறியதாவது, வளமான குடும்பங்கள் ஏனைய குடும்பங்களை விட பெரிய அளவிலான ஊகவாணிக தொகுப்புகளையும் மற்றும் பங்குகளையும் கையகப்படுத்த அதிகமாக வாய்ப்புள்ளவையாக இருந்தன. அவர்களை பங்குச் சந்தைகளின் இலாபங்களிலிருந்து பயன்பெற அவை அனுமதித்தன.

கடந்த பத்து வருடங்களில் மட்டுமல்ல கடந்த 30 வருட காலத்தில் ஒரு சராசரி அமெரிக்கர் செல்வத்தை இழந்ததை மிச்சிகன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த சுருக்கமான அறிக்கை வெளிப்படுத்துகிறது. 1984 மற்றும் 2007-க்கு இடையே மத்திய தர அமெரிக்க குடும்பங்கள் பெரியளவில் வீடுகளுக்கான மதிப்புக்களின் மதிப்பேற்றம் காரணமாக மெதுவாக சொத்து சம்பாதித்தார்கள். எவ்வாறிருப்பினும், பொருளாதார நெருக்கடியின் பின்விளைவாக அந்த சொத்து அழிப்பு, மற்றும் தற்போதைய மந்தம் அந்த இலாபங்களை மாற்றி அமைத்துவிட்டது.


சமத்துவமின்மையில் போக்குகள்

1984 மற்றும் 2013 இற்கிடையில் அமெரிக்க மத்திய தர குடும்பம் அதன் சொத்தில் ஒரு கால் பங்கு மிக மோசமாக இழந்தது. அதே சமயத்தில் அடிமட்ட 25 விகிதத்திற்கு மேலானோர் ஏறத்தாழ அதன் மூன்றில் ஒரு பங்கு சொத்தை இழந்தது. எவ்வாறிருப்பினும், உயர் 95 சதவீதத்திற்கு மேலானோரின் செல்வம் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த தசாப்த காலத்தில் செல்வச்செழிப்பு கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது, இந்த போக்கு நிலை நிற்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

"அதிகரித்துவிட்ட செல்வச் செழிப்பின் சமத்துவமின்மையை ஏற்படுத்த, பெரும் மந்த நிலையிலிருந்து மிக மெதுவான மீட்சி, வரும் ஆண்டுகளில் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கிறது" என்று ஆசிரியர் எழுதுகிறார். அந்த கடுமையான தாக்குதல் தற்போதைய நுகர்வை வியாபிக்க விடப்பட்டது. அந்த சில சொத்து மதிப்புகளை இன்னும் அவை குறைத்துக் கொண்டிருப்பதால் மற்றும் கட்டுமான சந்தை சுமாரான வேகத்தில் வளர தொடங்கி இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியம், பெடரல், மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் அறிக்கைகளை தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கைகள் அனைத்தும் 2014 இற்கான அமெரிக்காவின் வளர்ச்சி பற்றிய முந்தைய மதிப்பீடுகளிலிருந்து குறைப்பை செய்துள்ளன. மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தய சராசரி 3.3 சதவிகிதத்திற்கும் மிகவும் குறைவாகவும், இந்த வருடம் கிட்டத்தட்ட ஒரு முழு சதவிகிதத்தால் குறைத்து 2சதவிகித அளவிற்கு மட்டுமே அமெரிக்கா பொருளாதாரம் வளரும் என்று அனைத்து முகமைகளும் கணித்திருக்கின்றன.

அமெரிக்க பொருளாதாரம் இந்த வருடம் முதல் மூன்று மாதத்தில் 2.9 சதவிகித வருடாந்த விகிதத்தில் சுருங்கியுள்ளதாக புதன்கிழமை அன்று, அமெரிக்க வணிகத்துறை வெளியிட்ட புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன. 2014 வளர்ச்சியை முன்னர் குறைத்ததன் பின்னர் வெளிவந்த இப்புள்ளி விபரங்கள், 2014இல் வளர்ச்சி தற்போது கணிக்கப்பட்டுள்ளதை விட குறைவானதாக கூட இருக்கலாம் என கருத்துத்தெரிவித்துள்ளன.

மிச்சிகன் அறிக்கையுடன் சேர்த்து இந்த புள்ளிவிபரங்கள் பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு  பொருளாதார நிவாரணம் இருக்காது என்பதை தெளிவாக்குகின்றன. கடந்த ஆறு வருடங்களாக அதிக வேலைவாய்பின்மை, சம்பளக் குறைப்பு, கல்வி, சுகாதார பராமரிப்பு, மற்றும் பிற முக்கிய சமூக சேவைகளில் வெட்டு ஆகியவை "புதிய வழமையாகிவிட்டன". இதற்கிடையில் நிதியியல் பிரபுத்துவத்துவம் ஒரு புதிய பொருளாதாரப் பொறிவை இல்லாது செய்யலாம் என்ற நம்பிக்கையில் மலிவு பணத்தை விழுங்கிக்கொள்கையில் சமத்துவமின்மை தொடர்ந்தும் மிகவுயர் மட்டத்தை அடையும்.