சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Oppose Australia’s handover of refugees to Sri Lankan navy

ஆஸ்திரேலியா அகதிகளை இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பதை எதிர்த்திடுக

By the Socialist Equality Parties of Sri Lanka and Australia
8 July 2014

Use this version to printSend feedback

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சிகள், ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை தஞ்சம் கோருவோரை பலாத்காரமாக மீண்டும் இலங்கையிடம் ஒப்படைப்பதை சமரசமின்றி கண்டனம் செய்கின்றன. இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தினதும் வன்முறை மற்றும் அடக்குமுறையினால் நாட்டை விட்டு வெளியேறத் தள்ளப்பட்ட இந்த அகதிகள், மீண்டும் அதே ஒடுக்குமுறை சக்திகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பெருங்கடலில் இந்த கொடூரமான கூட்டு இராணுவ நடவடிக்கையை எதிர்க்குமாறு, நாம் இந்த இரு நாடுகளிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். இதுவரை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக சுமார் 200 அகதிகள் ஆஸ்திரேலிய "எல்லை பாதுகாப்பு" படகுகளில் நடுக்கடலில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அல்லது ஒப்படைப்பதற்கு கொண்டுசெல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, 41 தஞ்சம் கோருவோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, கைதிகளை துஷ்பிரயோகம் செய்வதில் பேர் போன பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அதிகாரிகளின் படி, கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 37 பேர் சிங்களவர்கள் ஆவர். இது தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் இப்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

முழுச் செயல்பாடும், அகதிகள் மற்றும் சித்திரவதை மீதான தீர்மானங்கள் உட்பட சர்வதேச சட்டம் மற்றும் தஞ்சம் கோருவோரின் அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். இரண்டு வாரங்களாக இராணுவ இரகசியம் மற்றும் உத்தியோகபூர்வ மூடிமறைப்பில் வைக்கப்பட்டிருந்த பின்னர், நடுக்கடலில் அகதிகள் ஒப்படைக்கப்படுவதை இரு அரசாங்கங்களதும் சிரேஷ்ட அமைச்சர்கள் உறுதி செய்துள்ளனர்.

நெருக்கமாக செயற்படும் இரு அரசாங்கங்களும், கொடுமைப்படுத்தப்பட்ட மக்களை அவர்களை கொடுமைப்படுத்தியவர்களின் கைகளில் நேரடியாக ஒப்படைப்பதற்கு அல்லது குறித்த நாட்டிடமே கையளிப்பதற்கு ஒரு புதிய உலக உதாரணத்தை அமைக்கின்றன. இது 1939ல் புனித லூயிசின் அவப்பெயர் பெற்ற கடற் பிரயாணத்தை நினைவுபடுத்துகிறது. ஐரோப்பாவில் நாஜி துன்புறுத்தல்களில் இருந்து தப்பிச் சென்ற 937 யூத அகதிகள் கியூபா மற்றும் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு, நாஜி படைகளால் விரைவில் ஆக்கிரமிக்கப்படவிருந்த பெல்ஜியத்திற்கு திரும்பினர்.

இப்போது இலங்கை, அகதிகள் நாடு திரும்புவதற்கு "பாதுகாப்பானதாக" உள்ளது என்ற ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டின் சிடுமூஞ்சித்தனமான கூற்று ஒரு அப்பட்டமான பொய் ஆகும். அபோட் உண்மை நிலைமையை நன்கு தெரிந்தவர். கடந்த நவம்பர் மாதம், அவர் நாட்டுக்கு விஜயம் செய்தபோது, இலங்கை அதிகாரிகள் சித்திரவதையை பயன்படுத்துவதை விளைபயணுள்ள வகையில் ஆதரித்தார். "சில நேரங்களில் கடினமான சூழ்நிலைகளில் கடினமாக விஷயங்கள் நடக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். (பார்க்க: Australian PM defends torture, hails Sri Lankan regime).

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரத்தம் தோய்ந்த தோல்வியின் பின்னர், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் நடத்திய நீடித்த போர் முடிவுக்கு வந்தமை, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை தீவிரப்படுத்தப்படவும், மற்றும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் வர்த்தக-சார்பு மற்றும் சிக்கன திட்டங்களுக்கு எதிரான இலங்கை தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்க பொலிஸ்-அரச நடவடிக்கைகளை பரந்தளவில் தினிப்பதற்குமே வழிவகுத்தது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள், இராணுவத்தினர் அல்லது போலீசாரால் சுட்டுத் தள்ளப்பட்டனர். உழைக்கும் மக்கள், வெள்ளை வான்களில் பலாத்காரமாக கடத்தப்படுதல், சித்திரவதை மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள், இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு, பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் படுகொலை செய்யப்படுதல் போன்றவற்றுக்கு அஞ்சி வாழத் தள்ளப்பட்டுள்ளனர். பலாத்காரமாக சுயவிருப்பின்றி காணாமல் போதல் சம்பந்தமான ஐநா செயற்பாட்டுக் குழு, 1980 முதல் 12,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் காணாமல் போன எண்ணிக்கையில் ஈராக்கிற்கு மட்டுமே இரண்டாவதாக இருப்பதாகவும் இலங்கையை தரப்படுத்தியுள்ளது.

மார்ச் தொடக்கம், புலிகளின் "மறுமலர்ச்சியை" எதிர்த்து போரிடும் ஆதாரமற்ற சாக்கில் இராஜபக்ஷ அரசாங்கம் புதுப்பித்த தாக்குதலினால், ஏற்கனவே 100,000க்கும் அதிகமான இலங்கை அகதிகள் தஞ்சமடைந்துள்ள தென் இந்தியாவுக்கு மக்கள் புதிதாக தப்பிச் செல்ல நெருக்கப்பட்டனர். அண்மையில் இடைமறிக்கப்பட்ட படகு தென்னிந்தியாவில் இருந்தே புறப்பட்டிருந்தது.

இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்படும் அகதிகளை, அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தமைக்காக இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்க முடியும். திரும்பி வந்தவர்கள் போலீஸ் மற்றும் இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுள்ளதோடு காணாமல் ஆக்கப்பட்டதற்கான நிரூபிக்கப்பட்ட பதிவுகள் உள்ளதுடன், சர்வதேச மனித உரிமைகள் முகவரமைப்புகளாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு பொதுவான அரசியல் போக்கு இரண்டு அரசாங்கங்களின் நடவடிக்கைகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. மேலும் மேலும், அவை இராணுவ வழிமுறைகளையும், அதே போல், 2008ல் வெடித்த பொருளாதார வீழ்ச்சியின் ஆழமான தாக்கத்தின் கீழ் வளர்ந்துவரும் சமூக அமைதியின்மையை திசை திருப்ப, வகுப்புவாதம் மற்றும் இனவெறியை தூண்டுவதையும் நாடுகின்றன.

இலங்கையில், இராஜபக்ஷ அரசாங்கம், ஒரு புதிய தமிழர்-விரோத பிரச்சார பீதியை தூண்டிவிட்டுள்ளதோடு தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளை ஒருவருக்கொருவர் எதிராக மூட்டி விடும் முயற்சியில், முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் நடத்தும் சிங்கள-பெளத்த பேரினவாத குழுக்களை ஆதரிக்கின்றது.

ஆஸ்திரேலியாவில், அபோட் அரசாங்கம், முந்தைய பசுமை கட்சி ஆதரவிலான சிறுபான்மை தொழிற் கட்சி அரசாங்கத்தின் வழியை பின்பற்றி, பாரிய வேலை இழப்புக்கள் மற்றும் கல்வி, சுகாதாரம், நலன்புரி மற்றும் அடிப்படை சமூக திட்டங்கள் போன்றவற்றிலான கடும் வெட்டுக்கள் தொடர்பாக பெருகிவரும் மக்கள் விரோதத்தை திசை திருப்பும் முயற்சியில், இலங்கை மற்றும் ஏனைய நாட்டு அகதிகளை பலிகடாவாக ஆக்குகின்றது.

அனைத்து அகதிகளையும் ஆஸ்திரேலியாவில் கால்வைக்காமல் தடுக்கும், "படகுகளை நிறுத்து" என்ற கொள்கை இரு கட்சிகளதும் கொள்கையாகிவிட்டது. இது தொழிற் கட்சி அரசாங்கம் நவூரு மற்றும் பப்புவா நியூ கினியில் உள்ள நரகத்தைப் போன்ற முகாம்களுக்குள் சகல தஞ்சம் கோருவோரோயும் பலாத்காரமாக அப்புறப்படுத்துவதன் மூலம் தொடக்கி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் காலவரையறை இன்றி தடுத்து வைக்கப்படுவதுடன் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இலங்கை கடற்படையை மேம்படுத்துவதற்கு இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி, புலனாய்வு பகிர்வு மற்றும் மேலதிக வளங்களை கொடுத்து தொழிற் கட்சி அரசாங்கம் 2012ல் இட்ட அடித்தளத்தின் மீதே அபோட் அரசாங்கம் நேரடியாக கட்டியெழுப்பப்படுகின்றது. அகதிகள் விண்ணப்ப முன்னெடுப்புகளை எதேச்சதிகாரமாக “பரிசோதித்த பின்னர், தொழிற் கட்சி அரசாங்கம் ஒட்டுமொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருவோரை மீண்டும் கொழும்புக்கு அப்புறப்படுத்தியது.  இப்போது இந்த "விரிவான பரிசோதனை" விசாரணைகள் சட்டத்திற்கு புறம்பாக, ஆஸ்திரேலிய சுங்கத்துறை கப்பல்களில் –உண்மையில் சிறைச்சாலை கப்பல்களில்- தடுத்து வைத்து மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு பரந்த புவி-சார் மூலோபாய நிகழ்ச்சிநிரலும் கொழும்புடனான கன்பெராவின் ஒத்துழைப்பை உந்துகின்றது. குறிப்பாக எண்ணெய் மற்றும் பிற மூலப்பொருட்களுக்கான தனது நுழைவாயிலாக சீனா நம்பியிருக்கும் இந்திய பெருங்கடல் முழுவதும் உள்ள கப்பல் பாதைகளுக்கு அருகிலேயே இலங்கை அமைந்துள்ளது. இலங்கை உடனான விரிவான இராணுவ ஒத்துழைப்பு, அமெரிக்காவின் ஒரு முக்கிய பங்காளியான ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு, அகதிகள் படகுகளை கண்காணித்தல் மற்றும் குறுக்கிடுதல் என்ற போர்வையில் இந்திய பெருங்கடலுக்குள் மேலும் ஊடுருவும் வாய்ப்பை கொடுக்கின்றது.

ஒபாமா நிர்வாகம், சீனாவை எதிர்கொள்ள இந்திய-பசிபிக்கிலான அதன் இராணுவ மற்றும் மூலோபாய "முன்னிலை" வகிப்பின் பாகமாக, பெய்ஜிங்குடன் இராஜபக்ஷ கொண்டுள்ள நெருங்கிய உறவுகளை அறுத்துக்கொள்ள அவரை இழுப்பதில் தீவிரமாக உள்ளது. கொழும்பு அரசாங்கத்துக்கு யுத்தத்தின்போது தீர்க்கமான ஆதரவை அளித்த பெய்ஜிங், தொடர்ந்தும் முதலீடு மற்றும் வெளிநாட்டு உதவிகளை வழங்கி வருகின்றது.

இந்த உந்துதலில், அமெரிக்கா இலங்கையில் "மனித உரிமைகளில்" அக்கறை காட்டுவதாக பாசாங்கு செய்கின்றது. 2009ல் போரின் இறுதி மாதங்களில் இலங்கை இராணுவம் செய்த கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை, தற்போதைய ஒடுக்குமுறையினால் வெளியேறும் அகதிகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் பற்றி அது மெளனமாக இருக்கின்றது.

அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையாளரின் படி, 2013 இறுதியில் உலகம் முழுவதும் அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதவாறு 51.2 மில்லியனை எட்டியுள்ளது. 2013ல், பெருமளவில் சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய ஆட்சி மாற்ற நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பின் விளைவாகவும் தற்போதைய எண்ணிக்கை 6 மில்லியனால் உயர்ந்துள்ளது.

அகதிகளாக புகலிடம் கோரும் மக்களின் அளவு பெருமளவில் அதிகரிப்பது, ஆழமடைந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையினால் உந்தப்படுகிறது. ஜனவரியில் ஒக்ஸ்பாம் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியவாறு, உலகின் பணக்கார 85 பேர் உலகின் மக்கள் தொகையில் கீழ் நிலையில் உள்ள 50 சதவீதத்தினரின் -3.5 பில்லியன் பேர்- செல்வத்தை கட்டுப்படுத்துகின்றனர்.

இவ்வாறு ஒரு சிலரின் கைகளில் இந்தளவு பிரமாண்டமான செல்வம் குவிந்த போதிலும், உலக நாடுகளின் அரசாங்கங்கள் பொருளாதார வளங்கள் தட்டுப்பாடாக இருப்பதாகக் கூறி அகதிகளுக்கு கதவுகளை மூடிவிடுகின்றன. இதே அரசாங்கங்கள்,  பூகோள மூலதனம் தேர்வுசெய்துகொள்ளும் இடங்களில் அதன் சுதந்திரமான இயக்கத்துக்கு வசதியளிக்கும் அதே வேளை, அதனால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கானவர்கள் முழு சமூக மற்றும் அரசியல் உரிமைகளுடன் வாழ்வதற்கும் வேலை செய்வதற்குமான அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கின்றன.

முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், வளங்கள் மற்றும் சந்தைகள் மீதான கட்டுப்பாட்டுக்காக மற்றொரு உலக போர் ஆபத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக இருத்துவதற்காக தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தை முன்னிலைப்படுத்துவதுடன் இந்த அகதிகள்-விரோத பாரபட்சத்தை தூண்டுவதும் கட்டுண்டுள்ளது.

முதலாளித்துவ இலாப முறையினால் உருவாக்கப்படும் போர்கள், உள்நாட்டு யுத்தங்கள், இன மோதல்கள் மற்றும் பஞ்சத்தினால் இலங்கை மற்றும் உலகின் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் வெளியேறுபவர்கள், எல்லா இடங்களிலும் உள்ளவர்களைப் போலவே கண்ணியமான வாழ்க்கைத் தரங்கள், சமூக சேவைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக சமத்துவம் போன்ற அதே அடிப்படை தேவைகள் மற்றும் அபிலாஷைகளை கொண்டுள்ளனர்.

உலகத் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பாதிக்கப்படும் பகுதியினரில் சிலரான தஞ்சம் கோருவோரை பாதுகாப்பதானது, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி, சமூக நெருக்கடியின் மூலவேரான பகுத்தறிவுக்கு பொருந்தாத மற்றும் யுத்தவெறி கொண்ட இலாப நோக்கு அமைப்பு முறைக்கே முற்றுப் புள்ளி வைக்கும் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது.