சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The 17,000 Dow: Surging towards a disaster

டோவ் குறியீடின் 17,000 புள்ளிகள்: ஒரு பேரழிவை நோக்கி எழுகிறது

Nick Beams
7 July 2014

Use this version to printSend feedback

வோல் ஸ்ட்ரீட்ரின் டோவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு கடந்த வாரம், முந்தைய எல்லா காலத்தினும் அதிகமாக 17,000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் வெடிப்பார்ந்த முரண்பாடுகள் கட்டமைந்து வருவதற்கான மற்றொரு அறிகுறியாகும்

செப்டம்பர் 2008 நிதியியல் பொறிவைத் தொடர்ந்து மார்ச் 9, 2009 இல் அது குறைந்தபட்ச அளவாக 6,547 புள்ளிகளைத் தொட்டிருந்தது, ஆனால் அதற்குப் பின்னர் டோவ் குறியீடு 10,000த்திற்கும் அதிகமான புள்ளிகளின் உயர்வோடு,  ஐந்தாண்டுகளில் மட்டும் 250 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை எட்டியுள்ளது.

அதே நேரத்தில், டிசம்பர் 2007இன் உத்தியோகபூர்வ மந்தநிலையை தொடர்ந்து ஜூன் 2009 வரையில், அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் எவ்விதமாக ஒப்பீடுசெய்யக்கூடிய காலக்கட்டத்தையும் விட அதன் மிகவும் மோசமான "மீட்சியை" அனுபவித்துள்ளது. அதுவும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏறக்குறைய 3 சதவீதம் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. பெருநிறுவனங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு மாறாக பணத்தைக் குவித்துக் கொண்டு, பங்குகளை வாங்கி-விற்கும் நடவடிக்கைகளிலும் ஒன்றிணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளிலும், முக்கியமாக ஒட்டுண்ணித்தனமான நிதியியல் நடவடிக்கைகளில் பணத்தைச் செலுத்தி வருகின்ற நிலையில், நிஜமான பொருளாதாரத்தில் முதலீடு தொடர்ந்து அசைவற்று இருக்கிறது.   

சர்வதேசரீதியாக, நிலைமை மேம்படவில்லை அல்லது, சில விடயங்களில், இன்னும் அதிகமாக மோசமடைந்துள்ளது. முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தின் பெரிய பகுதிகள் அசைவற்றநிலையை அல்லது ஒட்டுமொத்த மந்தநிலைமையை அனுபவித்து வருகின்றன. யூரோ மண்டலத்தின் உற்பத்தி இதுவரையில் 2007இன் அளவுகளுக்கு திரும்பவில்லை.

உலகின் மத்திய வங்கிகளின் கூட்டமைப்பான சர்வதேச கொடுக்கல் வாங்கல் ஒழுங்கமைக்கும் வங்கியின் (BIS - Bank of International Settlements) கணக்கீட்டின்படி, 2008க்கு முந்தைய போக்குகள் எங்கே தொடர்ந்திருக்க வேண்டுமோ அந்த பிரதான பொருளாதாரங்களின் உற்பத்தி சுமார் 8 சதவீதத்திற்கு குறைவாக இருக்கிறது.  

முன்னேறிய பொருளாதாரங்களில் எந்தவொரு வட்டிவிகித உயர்வோடும் அதிகளவில் சம்பந்தப்பட்டஉடனுக்குடன் அச்சடிக்கும் பணம்" (hot cash) பெரிதும் குறைக்கப்பட்டால் மற்றொரு உலகளாவிய நிதியியல் பொறிவு தீவிரப்படுமே என்ற அச்சங்களுக்கு இடையே, உலக பொருளாதாரத்தின் இரட்சகர்களாக ஒரு சமயத்தில் புகழப்பட்டு வந்த "எழுச்சி பெற்றுவரும் சந்தைகள்" என்று அழைக்கப்படுபவைகளின் நிதியியல் சந்தைகளின் நிலை குறித்து அங்கே அதிகளவில் பதட்டம் நிலவுகிறது.

சீனா இப்போதும் கூட சுமார் 7.5 சதவீத வளர்ச்சி விகிதங்களை அனுபவித்து வருகின்ற போதினும் கூட, அது 2008க்குப் பின்னர் பாரிய கடன் விரிவாக்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட நிதியியல் குமிழி உடைவினால் பெரிதும் பாதிப்படையக்கூடியதாக இருப்பதாக பரவலாக கருதப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், கடன் தொகை உயர்வானது ஒட்டுமொத்த அமெரிக்க வங்கியியல் அமைப்புமுறையின் நிதிகளுக்கு சமமான மதிப்புள்ளதாக உயர்ந்துள்ளது.

இத்தகைய மோசமடைந்து வரும் நிலைமைகளுக்கு இடையிலும், பிரதான மத்திய வங்கிகளிடமிருந்து அதிமலிந்த பணம் பாய்ச்சப்பட்ட அமெரிக்க மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகள், இது வரையில், தொடர்ந்து மேல்நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  

இந்த நிகழ்வுபோக்கை காலவரையின்றி தொடர முடியாது. பணம் இடைவிடாது அதிசயிக்கத்தக்க வகையில் தன்னைத்தானே இன்னும் அதிகளவில் பணமாக மாற்றி வருகின்ற நிலையில், முடிவில்லாமல் செல்வ திரட்சியென்பது இயல்பில் நீடித்து இருக்கக்கூடியதல்ல. ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையும் ஒரு தலைகீழான பிரமிட்டிற்கு ஒத்திருக்கிறது. அதில் பாரிய நிதியியல் சொத்துக்கள் ஒரு ஒடுங்கிவரும் நிஜமான பொருளாதார அடித்தளத்தின் மீது நிற்பதால், அது ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டாலும் கூட ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் முற்றிலும் உடைந்துவிடக் கூடியதாக செய்திருக்கிறது.   

இந்த சாத்தியப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய வங்கிகளின் கொள்கைகளோ ஒரு நிதியியல் பேரழிவை தடுப்பதற்கு உதவுவதற்கு மாறாக, தவிர்க்கவியலாமல் மற்றொரு அழிவிற்கு இட்டுச் செல்லக்கூடிய அதே நிலைமைகளுக்கு எரியூட்டுகின்றன.

கடந்த வார சம்பவங்கள் அதை பெரிதும் எடுத்துக்காட்டி உள்ளன. ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும், மற்றும் பில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் வேலைகள், சமூக நிலைமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் எந்தளவிற்கு ஒரு சிறிய நிதியியல் மேற்தட்டின் கட்டளைகளுக்கு அடிபணிந்துள்ளன என்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன.

அந்த வாரம் BISஇன் ஒரு எச்சரிக்கையோடு தொடங்கியது. இப்போதைய கட்டுப்பாட்டு கொள்கைகள் செப்டம்பர் 2008, ஒருவேளை இன்னும் பெரியளவிலான ஒன்றை, மீண்டும் கொண்டு வருவதற்கான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன என்று அந்த வங்கி எச்சரித்தது. ஆனால் இது மற்றொரு வலியுறுத்தலால் உடனடியாக எதிர்கொள்ளப்பட்டது, அதாவது அதி-மலிவு பண வினியோகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக ஊக வணிகத்தை நிறுத்த முயலும் எந்தவொரு முயற்சியும் ஒரு பொருளாதார பொறிவைக் கொண்டு வருமென கூறப்பட்டது. ஆகவே நடப்பு கொள்கைகள் ஒரு பேரிடருக்கு இட்டுச் செல்கின்றன என்ற உண்மை இருந்த போதினும், அவற்றைத் தொடர்ந்தே ஆக வேண்டும்.

பெப்ரவரியில் பதவியேற்றதற்குப் பின்னர் அவர் அளித்த மிகவும் முக்கிய பொதுக்கருத்துக்களில், கடந்த புதனன்று, அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜானெட் யெல்லென் குறிப்பிடுகையில், நிதியியல் சந்தைகளுக்கு முடிவில்லாமல் பணத்தை வினியோகிக்கும் நடப்பு கொள்கை காலவரையின்றி எதிர்காலத்திற்கும் தொடரும் என்று கூறினார்.  

அது பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தை உண்டாக்கி, வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க இட்டுச் செல்லும் என்ற போதினும், அபாயகரமான சொத்து குமிழிகளை மற்றும் 2008 பொறிவுக்கு இட்டுச் சென்ற ஒருவித ஒட்டுண்ணித்தனமான மற்றும் முற்றுமுதலான கிரிமினல் கொள்கைகள் உருவாவதைத் தடுப்பதற்காக நிதியியல் கொள்கையில் எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதையும் அவர் நிராகரித்தார். நிதியியல் அமைப்புமுறையைக் கட்டுப்படுத்தவிவேகமான பரந்த நெறிமுறைகள்" (Macroprudential regulation) பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.  

எவ்வாறிருந்த போதினும் அதுபோன்ற எந்தவொரு நெறிமுறைகளும் இறுதியாக, நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளில் தான் வந்து நிற்கின்றன, அனைத்திற்கும் மேலாக மிகப் பெரிய நிதியியல் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கு எதிராக வருகின்றன. இந்த நிறுவனங்களோ, 2001 விசாரணை அறிக்கைகள் மீதான அமெரிக்க செனட்டின் நிரந்த துணைக்குழு தெளிவுபடுத்தியதைப் போல, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இருந்த போதினும் மார்ச் 2013இல் அரச வழக்குத்தொடுனர் எரிக் ஹோல்டர் ஒரு காங்கிரஸ் குழுவிற்குத் தெரிவிக்கையில், மிகப்பெரிய அமைப்புகள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டால், அவை "தேசிய பொருளாதாரத்தின் மீதும், ஒருவேளை உலக பொருளாதாரத்தின் மீதும் கூட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென" தெரிவித்து, அவற்றின் மீது குற்றத்தன்மைமிக்க குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்வதை நிராகரித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க கட்டுப்பாட்டு ஆணையங்கள் மற்றும் சட்ட ஆணையங்கள் இரண்டுமே வங்கிகள் மற்றும் நிதியியல் பெருநிறுவனங்களுக்கு முழுவதுமாக கடமைப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு ஆணையங்களாக இருப்பவைகளுக்கு வெளியே வங்கிகளால் ஒரு "இணை உலகமாக" (parallel universe) நிழலுலக வங்கியல் அமைப்புமுறையை உருவாக்கும் அவற்றின் ஆற்றலைக் குறித்து கேட்கப்பட்ட போது, யெல்லென் அவரிடம் அந்த பிரச்சினைக்கு ஒரு "பெரிய பதில்" எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் இவ்வாறு திவாலாகிப்போன் ஒப்புக்கொள்ளலானது, அவரது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதை தடுத்துவிடப் போவதில்லை.  

சமீபத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டிவிகிதங்களை பூஜ்ஜியம் அளவிற்கும், அதற்கு கீழேயும் குறைத்த ECBஇன் தலைவர் மரியோ திராஹி அவரது அமெரிக்க எதிர்தரப்பின் நிலைப்பாட்டை ஆதரித்தார். “விவேகமான பரந்த நெறிமுறை" முறைமைகள், அதாவது கட்டுப்பாட்டு கொள்கைகள் கிடையாது, இவைநிதியியல் ஸ்திரப்பாட்டு அபாயங்களுக்கு எதிராக எடுக்கப்படும் முதல் பாதுகாப்பு நடவடிக்கையாக" இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

ஏனையவர்களும் அதற்கு உடனடியாக ஒத்திசைந்துபோயினர். பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் துணை ஆளுனர் ஜோன் கின்லிப்பே கூறுகையில், பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அபாயகரமான சொத்து மதிப்புக்களுக்குக் கடிவாளமிட கட்டுப்பாட்டு கொள்கைகளை இறுக்குவதைப் "பாதுகாப்பிற்கான கடைசி வாய்ப்பாக" பார்க்க வேண்டுமென தெரிவித்தார்.  

ஸ்வீடனின் மத்திய வங்கி ரிஸ்பேங்க் (Risbank) பொதுக்குழுவிற்குள் நடந்த ஒரு மோதலுக்குப் பின்னர் என்ன முடிவெடுத்ததென்றால் சொல்லை விட செயல்கள் அதிகமாக பேசுகின்றன என்று வட்டிவிகிதங்களில் 50 அடிப்படை புள்ளிகளை வெட்டியதோடு, அதிகரித்துவரும் தனியார் கடன் மற்றும் வீட்டுத்துறை சந்தைகளை நிர்வகிக்க அவற்றை "ஏனைய கொள்கை பகுதிகளுக்கு" உரியதாக அறிவித்தது.

செல்வ வெகுமதிகள் தொடரும் என்பதை இட்டு பேங்க் ஆஃப் அமெரிக்கா மூலோபாயவாதிகள் தெளிவாக பெருமகிழ்ச்சி அடைந்தனர். பெடரல், ECB மற்றும் ரிஸ்பேங்கிடமிருந்து வரும் சேதி என்னவென்றால் அதாவது எந்தவொரு நிதியியல் ஸ்திரப்பாட்டு அபாயங்களையும் கையாள "விவேகமான பரந்த நெறிமுறை" கொள்கைகள் எடுக்கப்பட்டு, கட்டுப்பாட்டு கொள்கை "தளர்ச்சியாக" வைக்கப்பட்டிருக்கும் என்பதாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே இருக்கும் பெரும் செல்வந்தர்களின் செல்வ வளத்தில் மேலும் கூடுதலாக செல்வத்தைச் சேர்க்கும் வகையில், நிதியியல் ஒட்டுண்ணித்தனம் ஊக்குவிக்கப்படுவது உத்தியோகபூர்வ கொள்கையாக பொதிந்துள்ள அதேவேளையில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலோ ஆழமடைந்து செல்கின்றன.

சிக்கன முறைமைகளின் அவசியத்தை வரைந்து காட்டிய ஆஸ்திரேலிய வரவு-செலவு பொருளாளர் (treasurer) ஜோய் ஹாக்கி கூறுகையில், உலகில் "பணம் பாய்ந்து கொண்டிருக்கின்ற" போதினும் அரசாங்கங்களிடம் பணம் இல்லை என்று அறிவித்தார். இந்த குறிப்பிட்ட விடயமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ளன. வாழ்க்கை நிலைமைகளை கீழே தள்ளுவதும் மற்றும் பாரிய வறுமையைத் திணிப்பதும், பகுப்பாய்வின் இறுதியாக, என்ன புரிதலின் அடிப்படையில் இருக்கிறதென்றால் நிதியியல் சொத்துக்களுக்கு மதிப்பை வைத்திருப்பதற்கான ஒரே வழி தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதை உறுஞ்சுவதே ஆகும் என்ற புரிதலில் இருக்கிறது.

விவேகமான பரந்த நெறிமுறை" ஒரு பேரழிவைத் தடுக்கும் என்ற வாதம் ஒரு கொடூரமான ஏமாற்றுதனமாகும். அத்தகைய நெறிமுறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டதும் நிதியியல் சந்தைகள் அவற்றிலிருந்து தப்பித்துச் செல்ல வழிகளை அபிவிருத்தி செய்கின்றன என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, அத்தகைய கட்டுப்பாட்டு ஆணையங்களிலேயே பிரச்சினைகள் இருக்கின்றன.  

பூகோள நிதியியல் அமைப்புமுறையின் இதயத்தானமாக விளங்கும் அமெரிக்காவில், கட்டுப்பாட்டு நெறிமுறை ஆணையங்களோ வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் பதவிகளில் இருந்தவர்களை அல்லது முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் குறுக்கீடு செய்யும் நோக்கில் அவற்றிற்காக வழக்குகளில் இறங்கிய சட்ட அமைப்புகளின் பதவியில் இருந்தவர்களை நேரடியாக எடுத்து வைத்துள்ளது. அத்தகைய நபர்கள் "அரசசேவையில்" அவர்களின் பதவி காலத்தை என்னவாக பார்க்கிறார்கள் என்றால், பெருநிறுவன நிதியியல் உலகில் மில்லியன்களைச் சம்பாதிக்க அவர்கள் திரும்பி வரும் போது  அவர்களின் "சந்தை மதிப்பை" உயர்த்திக் கொள்வதற்கு அந்த பதவிகளை ஒரு வழிவகையாக காண்கிறார்கள்.

பதவிகளில் படிப்படியாக உயர்ந்து வருபவர்களைப் பொறுத்த வரையில், அங்கே அவர்களின் பதவி "இணை உலகிற்குள்" நுழைவதற்கான வெறுமனே ஒரு படிக்கல்லாக பார்க்கிறார்கள். ஒருவேளை சந்தர்ப்பவசத்தால் நெறிமுறைகளில் உண்மையாகவே நம்பிக்கை வைக்கும் யாராவது ஒருவர் வந்துவிட்டால், அவரை மிக எளிதாக பாலியல் விவகாரங்களிலோ அல்லது ஏனைய மோசடி வடிவங்களில் ஏதோவொன்றில் சிக்க வைத்து அவர்களால் வெளியேற்றி விடமுடியும்

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ திராஹி கோல்ட்மேன் சாச்ஸின் முன்னாள் சர்வதேச துணை-தலைவராவார் என்ற உண்மையே எடுத்துக்காட்டப்படுவதைப் போல, இந்த நிலைமை எல்லா இடங்களிலும் இதே விதத்தில் உள்ளது.

நடப்பு பொருளாதார மற்றும் நிதியியல் அமைப்புமுறையில் என்ன திருப்பங்களையும்-மாற்றங்களையும் ஒருவர் தேர்ந்தெடுத்தாலும், அதை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பொது உடைமையை உருவாக்குவதன் மூலம்,  முற்றிலுமாக பறிமுதல்செய்துகொள்ளாமல் அங்கே ஒரு பேரழிவைத் தடுப்பதற்கு எந்தவொரு வழியும் இல்லை.