சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: BJP tables right-wing, pro-investor budget

இந்தியா: பிஜேபி வலதுசாரி, முதலீட்டாளர்-சார்பு வரவுசெலவு கணக்கைத் தாக்கல் செய்கிறது

By Keith Jones
11 July 2014

Use this version to printSend feedback

இந்தியாவின் புதிய பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் நேற்று தாக்கல் செய்த அதன் முதல் வரவு-செலவு திட்டத்தை, "சந்தை-சார்பு", “முதலீட்டாளர்-சார்பு" சீர்திருத்தத்தின் வேகத்தை அது தீவிரப்படுத்தும் என்பதற்கு ஒரு குறிப்பை வழங்குவதற்காக பயன்படுத்தியது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் இந்தியாவில் உள்ள பத்து மில்லியன் கணக்கான வேலையற்றோருக்கு மற்றும் தகுதிக்கு குறைந்த வேலையில் இருப்பவர்களுக்கு வேலைகளை உருவாக்குவது என்ற பெயரில், சமூக-பொருளாதார வாழ்வின் மீது பெருவணிகங்களின் கட்டுப்பாட்டை இன்னும் மேலதிகமாக பலப்படுத்துவதையும் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு இந்திய தொழிலாளர்களையும் மற்றும் உழைப்பாளர்களையும் விலை கொடுக்க செய்வதையும் நோக்கமாக கொண்ட ஒரு முறைமைகளின் தொகுப்பு அந்த வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அவரது வரவு-செலவு திட்ட உரையின் போது, நிதியியல் மந்திரி அருண் ஜேட்லி இந்தியாவின் சோகைபீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு (இந்திய பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே வளர்ந்துள்ளது என்பதால்) முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் "முடிவெடுக்க இயலாமை" மற்றும் "ஜனரஞ்சகவாதத்தை" குற்றஞ்சாட்டினார்.

அந்த இரண்டாவது சொற்பிரயோகமானது ("ஜனரஞ்சகவாதம்") சமூக நல செலவினங்களைக் குறை கூறுவதற்கு பெருவணிகங்களாலும், பெருநிறுவன ஊடகங்களாலும் வழக்கமாக பயன்படுத்தப்படுவதாகும்.

அதையொரு "கடினமான" இலக்கு என்று குறிப்பிட்ட ஜேட்லி, அரசாங்கம் 2014-15 நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறையை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.1 சதவீதமாக மட்டுப்படுத்தும் என்று சூளுரைத்தார். மேலும் 2015-16இல் அந்த பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்திற்கும் மற்றும் 2016-17இல் 3 சதவீதத்திற்கும் குறைக்க அரசாங்கம் பொறுப்பேற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு பெரும் செலவின வெட்டுக்களும் மற்றும் அரசாங்க சேவைகளுக்கான கட்டணங்களில் பெரிய அதிகரிப்புகளும் தேவைப்படும். கடந்த மாதம் இரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களில் அரசாங்கம் ஒரு கூர்மையான உயர்வை அறிவித்திருந்தது.

நேற்றைய வரவு-செலவு திட்ட கணக்கும் கூட, ஒரு கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர்கள் விரும்பினால் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை மற்றும் குறைந்தபட்ச கூலி வழங்கும் ஒரு திட்டமென்று கருதப்படும் ஒரு பெருந்திரளான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற உத்தரவாத திட்டம் உட்பட சில பிரிவுகளில் செலவினங்களைக் குறைத்திருந்தது.

மிக முக்கியமாக, அந்த வரவு-செலவு திட்டம் உணவு, எரிபொருள் மற்றும் உர விலைகள் மீதான மானியங்களைக் குறைப்பதற்கான, மற்றும் இறுதியாக அவற்றை நீக்குவதற்கான ஒரு உந்துதலைத் தொடங்கி இருந்தது. பெருநிறுவன மேற்தட்டுக்கள் நீண்டகாலமாகவே இந்த மானியங்களை நீக்குவதற்கு குரலெழுப்பி வந்துள்ளன.

அனைத்து அரச செலவினங்களைக் கண்காணிக்கவும் மற்றும் "வெறுமனே வெகுஜனவாத மற்றும் வீணான செலவுகளைத்" தவிர்க்கவும் செலவு நிர்வாக கமிஷன் அமைக்கப்படும் என்று ஜேட்லி அறிவித்தார். மானியம் அளிக்கப்படும் திட்டங்களை, குறிப்பாக உணவு மற்றும் எண்ணெய்க்கான மானியங்களை மீளாய்வு செய்வதே அந்த கமிஷனின் மையத்தில் இருக்கும் தீர்மானமாகும்.

மானியங்கள் "அதிகமாக இலக்கில்" வைக்கப்படும்—அதாவது மிகவும் வறிய ஏழைகளோடு நிறுத்துவது—என்பதையும் ஜேட்லி சேர்த்துக் கொண்டார். அதேபோன்று வறுமையைக் குறைப்பதற்கு ஆதரவளிக்குமாறும் அவர் அழைப்புவிடுத்தார். “நம்முடைய வறுமை ஒழிப்பு திட்டங்கள் நன்கு-இலக்கில் வைக்கப்பட்டிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்" என்று ஜேட்லி அறிவித்தார்.

2017க்குள் செயல்பாட்டில் கொண்டு வரப்படும் மின்ஆலைகளுக்கு 10 ஆண்டுகளுக்கான வரி விடுப்பு உட்பட பெருவணிகங்களுக்கான புதிய வரிச்சலுகைகளையும், மற்றும் தனிநபர் வருமான வரி செலுத்தும் சிறுபான்மை இந்தியர்களுக்கான ஒரு வரி வெட்டையும் ஜேட்லி அறிவித்தார்.

அரசாங்கத்தினது "நிதி திரட்சி" (fiscal consolidation), அதாவது பற்றாக்குறை குறைப்பு மூலோபாயம், இதன் ஒரு முக்கிய பாகமாக இருப்பது வருவாயை அதிகரிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த பன்னிரெண்டு மாதங்களுக்குள் பல்வேறு மாநில மற்றும் தேசிய வரிகளை, அனைத்திந்திய பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியைக் (GST) கொண்டு பிரதியீடு செய்ய மாநிலங்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று அரசாங்க வரவு-செலவு திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.

பெரும்பாலான முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் ஏற்கனவே அதுபோன்ற நுகர்வு வரிகளைக் கொண்டுள்ளன என்பதோடு, அது நிதியியல் "எதிர்-புரட்சியை" நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாகவும் இருந்துள்ளது, அதன்கீழ் வரிச்சுமையானது அதிகளவில் பெருவணிகங்களிடமிருந்து உழைக்கும் மக்களில் மிகவும் சலுகை படைத்தவர்களுக்கு மாற்றப்படுகிறது.

குறுகிய காலக்கட்டத்திற்கு, அரசு வருவாய்க்கு கணிசமான அளவிற்கு முட்டுக் கொடுக்க, பொதுத்துறை நிறுவனங்களை பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ தனியார்மயமாக்கும், பங்கு விற்பனை முறையை (disinvestment) அரசாங்கம் கணக்கில் எடுத்துள்ளது. பங்கு விற்பனையின் வருவாய்-இலக்கு, இந்த வரவு-செலவு திட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பெரியளவில் உள்ளது.

பெரும் எண்ணிக்கையில் பெருநிறுவனங்களின் வாராக் கடன்களின் கீழ் கட்டுற அச்சுறுத்தப்பட்டு இருக்கும் அரசுடைமை வங்கியியல் துறையை மீள்மூலதனமயமாக்குவதற்கும் (recapitalize) அரசாங்கம் பங்கு விற்பனையையே பயன்படுத்த நோக்கம் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கமும் மற்றும் அதற்கு முன்னர் பதவியிலிருந்த அரசாங்கமும் இரண்டுமுமே பொதுச் சொத்துக்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருவணிகங்களுக்கு விற்பதை ஒரு முக்கிய நிதியியல் கருவியாக பார்க்கின்ற என்றபோதினும், தனியார்மயமாக்கும் உந்துதலுக்கான முதன்மை உத்வேகம், பொருளாதாரத்தின் அனைத்து உட்கூறுகளின் மீதும் பெருவணிகங்களுக்கு அதிக நேரடியான கட்டுப்பாட்டை அளிப்பதற்காக அமைந்துள்ளது, அதன் மூலம் அது தொழிலாள வர்க்கத்திடமிருந்து இலாபங்களை நேரடியாக சீரிய முறையில் தீவிரமாக பிழிந்தெடுக்க முடியும்.

தனியார்-அரசு கூட்டுறவு என்றழைக்கப்படும் (Private Public Partnerships - PPP) வழிவகையின் மூலமாக, அனைத்து விதமான ஸ்தூல மற்றும் சமூக உள்கட்டமைப்பையும் கட்டமைப்பதிலும் மற்றும் நிர்வகிப்பதிலும் வணிகங்களுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வழங்க பிஜேபியின் வரவுசெலவு கணக்கு மூர்க்கமான திட்டங்களை வரைந்துள்ளது. இந்தியா ஏற்கனவே உலகின் மிகப்பெரிய PPP சந்தையாக இருக்கிறது என்றும் ஜேட்லி ஊக்கப்படுத்தினார்.

பிஜேபி எதிர்கட்சி இருக்கையில் இருந்த போது எடுத்த நிலைப்பாட்டிலிருந்து தலைகீழாக, காப்பீட்டு துறையில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திற்கு உயர்த்தி ஒப்புதல் வழங்குவதற்கு முந்தைய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிமுறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜேட்லி அறிவித்தார்.

அவர் கூறுகையில், இந்தியாவின் புதிய அரசாங்கம் "முதலீட்டாளர்களுக்கு நேசமானதும் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதுமான ஒரு நிலையான மற்றும் அனுமானித்தக்க வரிவிதிப்பு முறையை வழங்க" தீர்மானமாக இருப்பதாக தெரிவித்தார். "முந்தையகால" வரி (“retrospective” tax) முறையீடுகளை எந்தவொரு எதிர்காலத்திலும் மீளாய்வு செய்ய ஒரு உயர்மட்ட குழுவை அரசு அமைக்குமென்றும் அவர் மேற்கொண்டு அறிவித்தார். ஆனால் அவர் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பியவாறு மற்றும் 2012 சட்டத்தை இரத்து செய்ய கோரிய அந்தளவிற்கு செல்லவில்லை, அந்த சட்டத்தின் கீழ் தான் பன்னாட்டு நிறுவனமான வோடாபோன் முந்தைய அதன் கையகப்படுத்தலின் மீது மூலதன வருவாய் வரியைச் (capital gains tax) செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டின் வரவு-செலவு திட்டம், பெருவணிக நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதில் ஒரு முதல்படி மட்டுமே ஆகும் என்று வலியுறுத்திய ஜேட்லி, “அடுத்த 3-4 ஆண்டுகளுக்குள் 7-8 அல்லது அதைவிட அதிகமான ஒரு நீடித்த வளர்ச்சியை நோக்கிய ஒரு பயணத்திற்கு" இது தொடக்கமாகும் என்றார்.

வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முந்தைய வாரங்களில், பிஜேபியின் செய்தி தொடர்பாளர், "கட்டமைப்பு மாற்றங்களுக்கு" 2015-16 வரவு-செலவு திட்டம் வரையில் காத்திருக்க வேண்டியதிருக்கும் என்று கூறி, அதேபோன்ற ஒரு சேதியை வழங்கி இருந்தார்.

இந்தியாவின் 2014-15 நிதியாண்டு ஏப்ரல் 1இல் தொடங்குகின்ற நிலையில் கால அவகாச சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த வரவு-செலவு திட்டம் பெரிதும், முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு "இடைக்கால" வரவு-செலவு திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதை பெருவணிக வட்டாரங்கள் பொதுவாக புரிந்து கொண்டிருந்தன.

ஆனால் அந்த சிரமங்கள் காலத்தை மட்டுமே சார்ந்தவை அல்ல. இந்திய பொருளாதாரம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. இந்த அரசாங்கம் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமென சர்வதேச பங்குபத்திர தரவரிசை பட்டியலிடும் முகமைகள் கோரி வருகின்றன. இதற்கிடையே, இந்திய பெருவணிகங்களோ பெரும் கடன் சுமைகளில் இருந்து தப்பிக்கவும் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர் நலன்களுக்கு புத்துயிரூட்டவும் ஒரு மிக வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் பிரயத்தனத்தில் உள்ளன.

அதன் வரவு-செலவு திட்டத்தில் பிஜேபி பெருவணிகங்களுக்கு வரிச்சலுகைகளை வாரிக் கொடுத்தும், அரசாங்க செலவுகளைக் குறைத்தும் ஒரு சமநிலையான ஒருவித நடவடிக்கைக்கு முயற்சித்திருந்தது.

பெருவணிக வட்டாரங்களின் பிரதிபலிப்பு ஒரு கலவையாக இருந்தது, ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இன்னும் மேலதிகமான ஆக்ரோஷமாக நகரவில்லை என்பதற்காக அரசாங்கத்தை விமர்சித்திருந்ததோடு, அது காங்கிரஸின் புத்தகத்திற்கு மிக நெருக்கமாகவே ஒட்டிக் கொண்டிருப்பதாக அறிவுறுத்தியது.

யதார்த்தம் என்னவென்றால் கடந்த இரண்டு தசாப்தங்களாக முதலாளித்துவத்தின் நவ-தாராளவாத நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ் பெரும்பாலும் பெரும்பளுவை நகர்த்தி இருந்ததோடு, அது வாஷிங்டனுடன் ஒரு உலகளாவிய மூலோபாய கூட்டுறவையும் ஏற்படுத்தி இருந்தது. எவ்வாறிருந்த போதினும், ஸ்ராலினிச இடது முன்னணி காங்கிரஸூடன் மீண்டும் மீண்டும் அணி சேர்ந்தும் மற்றும் அதை "மக்கள்-சார்பு" கொள்கைகளைப் பின்தொடருமாறு அழுத்தம் அளிக்க செய்ய முடியும் என்று வாதிட்டும், அது பெருவணிகங்களுக்கு எதிரான தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை திட்டமிட்டு மூச்சடைக்கச் செய்தது. இது தான், பெருவணிக காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கோபத்தை நரேந்திர மோடியும் மற்றும் இந்து மேலாதிக்கவாத பிஜேபியும் சுரண்டிக் கொள்வதற்கும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தற்காக பதவியில் ஏறுவதற்கும் கதவைத் திறந்து விட்டது.

வரவு-செலவு திட்டக்கணக்கின் மற்றொரு உட்கூறும் கருத்திற்குரியதாக இருக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறையின் வரவு-செலவு திட்டத்தை, அமெரிக்க டாலரில் கூறுவதானால், 37 பில்லியன் டாலராக உயர்த்தி இராணுவ செலவினங்களில் 12.5 சதவீத உயர்வையும் அது உள்ளடக்கி இருந்தது. வான்வழி-தரைவழி-மற்றும்-கடல்வழி அணுஆயுதங்களை அபிவிருத்தி செய்வது மற்றும் ஒரு பரந்த கடற்பகுதிக்கான கப்பற்படையை அபிவிருத்தி செய்வது உட்பட, இந்திய மேற்தட்டு அதன் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கு மையமாக, அது இராணுவப் பலம் விரிவாக்கப்பட வேண்டுமென்று பார்க்கிறது.

பாதுகாப்பு மந்திரியாகவும் இரட்டை பொறுப்பு வகிக்கும் ஜேட்லி, இராணுவத் துறையில் வெளிநாட்டு அன்னிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தி இருப்பதாகவும் அறிவித்தார். வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்பதன் மூலமாக, தொழில்நுட்ப பரிவர்த்தனைகளைப் பெற முடியுமென்றும், அது இந்தியாவின் சொந்த ஆயுத தளவாட நிறுவனங்களை ஊக்குவிக்கும் என்றும், அத்தோடு வெளிநாட்டு ஆயுத தளவாடங்களை வாங்குவதால் செலவாகும் அன்னிய செலாவணி இழப்பை மட்டுப்படுத்த முடியுமென்றும் இந்திய அரசாங்கம் நம்புகிறது. “இந்தியா இன்று உலகின் மிகப் பெரிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் நாடாக இருப்பதோடு, இந்த துறையில் உள்நாட்டு உற்பத்தி திறமைகள் இன்னும் ஒரு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது", என்று ஜேட்லி தெரிவித்தார்.