சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The Internet’s Own Boy: Documentary about hacktivist Aaron Swartz

The Internet’s Own Boy :வலைத்தள செயற்பாட்டாளன் அரோன் ஸ்வார்ட்ஸ் குறித்த ஆவணப்படம்

By Nick Barrickman 
1 July 2014

Use this version to printSend feedback

பிரியன் நேப்பன் பெக்கர் தயாரித்து இயக்கியிருக்கும் ஆவணப்படமான The Internet’s Own Boy , வெளிப்படையான இணைய செயல்பாட்டாளரும் இணைய தொழில்நுட்ப மேதையுமான ஆரோன் ஸ்வார்ட்ஸ் (1986-2013) பற்றியதாகும். அமெரிக்க மத்திய அரசாங்கம் இவர்மீது பழிவாங்கும் வகையிலான குற்றவியல் வழக்குசோடனை செய்து இவரை வேட்டையாடிய பின்னர், இவர் தற்கொலை செய்து கொண்டார். வாஷிங்டன் டி.சி புறநகரான மேரிலேண்ட் சில்வர் ஸ்பிரிங்கில் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் (AFI) ஆவணப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படமானது உலகெங்கிலும் ஜூன் 27 அன்று வெளியானது.


The Internet's Own Boy

2010 இல் ஸ்வார்ட்ஸ் ஒரு மடிக்கணினியைப் பயன்படுத்தி இணைய சந்தா தளமான JSTOR ல் இருந்து அந்த கட்டிடத்தில் இருக்கும் கணணியமைப்பை ஊடுருவுதல் மூலம் ஆயிரக்கணக்கான ஆய்வறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்வதை மசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) ஒளிப்பதிவு கருவிகள் பதிவு செய்தன. அவர் அந்த ஆவணங்களை அனைவருக்கும் இலவசமாக கிடைக்ககூடியதாக செய்ய விரும்பினார். இதனால் அரசு இவருக்கெதிரான வேட்டையில் இறங்கி, கம்பித் தொடர்பு மோசடி, கணணி மோசடி, பாதுகாக்கப்பட்ட கணணியிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக தகவல்களைப் பெறுதல் மற்றும் பொறுப்பில்லாமல் ஒரு பாதுகாக்கப்பட்ட கணணியை சேதப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு கிட்டத்தட்ட 50 வருடங்கள் சிறைத்தண்ட விதிக்கப்படும் என்றும் 1 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் கட்ட வேண்டுமென்றும் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தியது.

இணையம் மூலமாக பரவலாக தகவல் கிடைக்கும்படி செய்ய விரும்பிய குற்றத்திற்காக ஸ்வார்ட்ஸ் மீதான இந்த பழிவாங்கும் தாக்குதல் குறித்து அமெரிக்க வழக்கறிஞரான கார்மன் ஓர்டிஸ் தன் அறிக்கையில், நீங்கள் கணணி கட்டளையைப் பயன்படுத்துகிறீர்களோ அல்லது கடப்பாரையை பயன்படுத்துகிறீர்களோ மற்றும் ஆவணங்களையோ, தகவல்களையோ அல்லது டாலர்களையோ எதை எடுத்தாலும்... திருட்டு திருட்டுதான் என்று அவர் கூறியது மிகவும் பிரபலமானது.

ஸ்வார்ட்ஸ் இறந்தபோது அவர் உண்மையில் எவ்வளவு இளமையுடன் இருந்தார் என்பதையும்  பல்வேறு சூழ்நிலைகளில் இந்த உலகிற்கு அவர் எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்க முடியும் என்பதையும் இத்திரைப்படத்திலிருந்து ஒருவர் உணர முடிகிறது. ஸ்வார்ட்ஸின் இளம் வயது காலகட்டத்தோடு இணைந்த காட்சிகள்- நண்பர்கள், உதவியாளர்கள் மற்றும் குடும்பத்தாருடனான பேட்டிகள், இவரது வாழ்க்கை மற்றும் ஆளுமையின் பல்வேறு கோணங்களை சித்தரிக்கின்றன. ஸ்வார்ட்ஸின் கொள்கைகள் அவரைச் சுற்றிய உலகத்துடனான அவரது உண்மையான ஆர்வம் மற்றும் முற்சிந்தனைகளால் நிரம்பியிருந்தது.

ஒரு இடத்தில் ஆரோன், நீங்கள் எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன், நான் இதனை மிக அறிவியல்பூர்வமான அணுகுமுறையாக எடுத்துக்கொள்கிறேன், இதில் நீங்கள் அறிந்துள்ள அனைத்தும் வெறும் தற்காலிகமானதுதான், அது எப்பொழுதும் பின்வாங்கலுக்கும் மற்றும் கண்டனத்திற்கும் உட்பட்டதாகவே இருக்கிறது... இதே விஷயம் சமுதாயத்திற்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன் என்று சொல்கிற ஒரு பதிவு காண்பிக்கப்படுகிறது. (ஸ்வார்ட்ஸ் பதிவிறக்கம் செய்திருந்த JSTOR ஆவணங்களில் கணைய புற்றுநோய்க்கான சிகிச்சை சாத்தியமானது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு பதிவும்  இத்திரைப்படத்தில் உள்ளடங்கியுள்ளது)

அதே போல், இவர் தனது 13 வயதில் RSS வலை பதிவேற்ற நெறிமுறைகளை கண்டுபிடிக்க உதவியது, 20 வயது ஆவதற்கு மென்பொருள் நிறுவனமான Infogami ஐ உருவாக்கியது (பின்பு அது இணையதொடுப்புகளை தொகுக்கும் வலை தளமான Reddit உடன் இணைந்தது), மற்றும் Cond Nast பதிப்பகம் மற்றும் Wired இதழின் உரிமையாளராக இருந்தது போன்ற பணிகள்  இவரது தனிப்பட்ட சாதனைகளுள் சிலவாகும். பின்பு ஸ்வார்ட்ஸ் தனது மனதுக்கு நெருக்கமான கொள்கைகளைப் பின் தொடர்வதற்காக சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் வாழ்க்கைக்கு தனது பின்முதுகை காட்டினார்.  பெருநிறுவன அமெரிக்காவை நோக்கிய ஸ்வார்ட்ஸின் அணுகுமுறை குறித்து, ஒரே ஒரு ரோஜாவை பறிப்பதற்காக, இந்த இளைஞர் அசிங்கம் சூழ்ந்த ஒரு மலையில் ஏறிவிட்டார், இறுதியில் அவர் தனது வாசனை உணர்வை இழந்துவிட்டதை தான் கண்டுகொண்டார் என்று கருத்து தெரிவித்த அவரது கூட்டாளி ஒருவரது முக்கிய வர்ணனை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்பு, இத்திரைப்படம் செயல்பாட்டுவாதம் மற்றும் பிற சமுதாய பிரச்சனைகளுடனான ஸ்வார்ட்ஸின் ஈடுபாட்டை நோக்கிச் செல்கிறது. வலைத்தள திருட்டு தடுப்புச் சட்டம் (SOPA) மற்றும் 2012 இன் இணைய நெறிமுறைப் பாதுகாப்புச் சட்ட (PIPA) மசோதாக்களுக்கான எதிர்ப்புகளை ஒருங்கிணைப்பதில் அவரது கதாப்பாத்திரம் உச்சகட்டத்தை எட்டுகிறது. இவை தங்கள் மீது தேவையற்ற நிதிச் சுமைகளை விதிக்கும் என்ற அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள் அவற்றுக்கெதிராக திரும்பிய பின்னர், சட்டபூர்வமான தணிக்கைக் கட்டமைப்பு ஒன்றை செயற்படுத்துவதை வேண்டிய இந்த மசோதாக்கள் இறுதியில் கைவிடப்பட்டன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பெருநிறுவனம் சார்ந்த முடிவு கீழ்மட்ட செயல்பாடுகளுக்கான ஒரு வெற்றியாக சித்தரிக்கப்பட்டு, இந்த பகுதி படத்தில் சற்று விமர்சனமின்றி கையாளப்பட்டுள்ளது.


Aaron Swartz

ஒபாமா நிர்வாகத்தின் சார்பாக பணியாற்றும், அமெரிக்காவின் உதவி வழக்கறிஞரான ஸ்டீஃபன் ஹேமேன் அளித்திருக்கும் கொடூர குற்றச்சாட்டினை பலர் நிடைவுகூருவதுபோல், அமெரிக்க அரசாங்கம் ஸ்வார்ட்ஸை ஒடுக்குவதுடன் தொடர்புடைய காட்சிகள் இத்திரைப்படத்தில் வலுவானவை. ஆரம்பத்தில் MITயில் பிடிபட்ட பின்னர், ஸ்வார்ட்ஸும் அவரது குடும்பத்தாரும் FBI யின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் இந்த கண்காணிப்பானது மிகவும் மோசமானதாகிறது, ஆரோன் தன் வீட்டை விட்டு வர மறுக்கிறார். தடுப்புக் காவலில் வைத்து, ஸ்வார்ட்ஸை காவல்துறை அதிகாரிகள் தாக்கினர், பின்னர் அவரது இடுப்புபட்டி மற்றும் காலணி இழைகளை அகற்றியும் ஆடைகளை கழைந்தும் அவரை சோதனை செய்தனர். 

ஆரம்பத்தில் ஸ்வார்ட்ஸ் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதுடன் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால், அது அவரை வீட்டுக் காவலின் கீழ் வைத்து இணைய பயன்பாட்டிலிருந்து அவரைத் தடுத்திருக்கும் என்ற ஒரு மன்னிப்பளிக்கும் பேரமும் பேசப்படுகிறது. இந்த பேரத்தினை மறுத்த பின், ஸ்வார்ட்ஸனின் குற்றச்சாட்டுகளுடன் கடுமையான கணிப்பொறி மோசடி மற்றும் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் (CFAA - 1986) இன்னும் எட்டு போலி குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன.  இதற்கிடையில், கூறப்படும்வகையில் ஸ்வார்ட்ஸ் திருடியதாக கூறப்படும் நிறுவனமான JSTOR இந்த வழக்கினை கைவிட விரும்பியதாக திரைப்படம் குறிப்பிடுகிறது.

தனது மகனின் வழக்கிலிருந்து குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் வழக்கினை உருவாக்க ஹேமன் விரும்புவதாக ஆரோனின் தந்தை ரொபேர்ட் ஸ்வார்ஸ் பேட்டியாளர்களிடம் தெரிவிக்கிறார். 2008 பொருளாதார சரிவுக்குப் பின் மத்திய அதிகாரிகளிடமிருந்து வங்கிகள் பெற்ற மென்மையான நடவடிக்கைகளிலிருந்து இந்த மூர்க்கமான நடவடிக்கைக்கு தந்தை ஸ்வார்ட்ஸ் வேறுபடுகிறார். அமெரிக்காவில் தொலை தொடர்பு நிறுவனங்களின் இலாபத்தன்மைக்கு அடிப்படையாக இருந்த கருவிகளை உருவாக்கியதன் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில்கேட்ஸ் போன்ற பிரபல தொழில்நுட்ப பில்லியனர்கள் ஆரம்பகட்ட வெற்றியை எட்டியதாக ஸ்வார்ட்ஸின் அப்பா மேலும் தெரிவிக்கிறார். ஆரோனுக்கும் அவர்களுக்குமான ஒரே வித்தியாசம், அவன் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்க விரும்பியதுதான் என்று அவரது தந்தை கூறுகிறார்.

இன்னொரு காட்சியில், ஸ்வார்ட்ஸின் முன்னாள் தோழியான குவின் நோர்டானிடம் அமெரிக்க வழக்கறிஞர் ஆரோன் பற்றிய தகவல்களைப் பெறுகையில் அதனை விவரிக்கும்போது அவள் கண்களில் கண்ணீர் உடைத்துக் கொண்டு வருகிறது. அவர்கள் வரலாற்றின் பிழையான பக்கத்தில் இருந்ததாக அமெரிக்க மத்திய வழங்குதொடுனர்களுடன் அவள் கெஞ்சும்போது அவள் பேசுவது அதிகாரிகளுக்கு அலுப்பூட்டுவது போல்தான் இருந்ததாக கூறுகிறாள். இந்த காட்சிகளில் ஆளும் வர்க்கத்தின் குறுகிய பார்வை மற்றும் புத்திஜீவிதமற்றதன்மை பதிவு செய்யப்படுகிறது.

இறுதியாக, தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தனது பாதுகாப்பிற்காக நிதி பெறுவதற்கான போராட்டம் ஆகியவற்றை இந்த இளம் செயல்பாட்டாளர் எதிர்கொள்கிறார். இது குறித்து அவரது பல நண்பர்களும் உதவியாளர்களும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதான ஒரு சுமையாக இருப்பது போல் அவர் உணர்ந்ததாக கூறுகின்றனர். 2013 ஜனவரி 11 அன்று ஸ்வார்ஸ் தனது புரூக்ளின் அடுக்குமாடியில் தற்கொலை செய்து கிடந்து காணப்பட்டார். அப்போது அவருக்கு 26 வயது.

ஆரோன் ஸ்வார்ட்ஸின் குற்றச்சாட்டுகளின் அரசியல் தன்மைகளை விளக்குவதற்காக, குற்றச்சாட்டு குறித்த வரலாற்று கட்டமைப்புகளை இத்திரைப்படம் காண்பிக்கிறது. பதவியிலிருந்து ஒரு அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி வெளியேற கட்டாயப்படுத்திய எகிப்து புரட்சி மற்றும் அந்த சமயத்தில் உலகையே அடித்துச்சென்ற வோல் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டம் இரண்டின் காட்சிகளும் இத்திரைப்படத்தில் உள்ளடங்கியுள்ளது. இந்த இரு நிகழ்வுகளும் வலுவாக இணையத்தின் வலைத் தள சக்தியை சார்ந்திருந்தன. அதில் ஸ்வார்ட்ஸ் ஒரு பிரபல நிபுணர் என்பதை இத்திரைப்படம் குறிப்பிடுகிறது.

தனது வரலாற்றின் பல்வேறு கோணங்களில் ஸ்வார்ட்ஸ் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுடன் ஒத்து போகிறார். உலக மக்களின் முதுகிற்கு பின்னாலும் எதிராகவும் அரசாங்கம் செயல்படுத்தி வந்த கண்காணிப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்துவதற்காக, உளவு நிறுவத்தில் தான் பார்த்துவந்த பெரும் இலாபகரமான தனது தொழில் வாழ்க்கையையே ஸ்னோவ்டன் உதறித்தள்ளினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக, மத்திய அரசாங்கத்தின் உளவு பார்க்கும் தடையில்லாத அதிகாரத்திற்கு எதிராக ஸ்வார்ட்ஸ் பேசும் காட்சி இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது அடிப்படையில் மக்களை நோக்கி இயக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

சட்டத்தினை திரும்பப் பெறும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக்காட்டுவதன் மூலம், திரைப்பட இயக்குனர்கள் CFAA குறித்து அதிக காட்சிகள் வைத்துள்ளனர் என்பதுடன் ஒரு இடத்தில் மசோதாவிற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக   ஓரிகான் செனட்டர் ரொனால்ட் வைடன் கலிஃபோர்னிய பிரதிநிதியான ஷோ லாஃப்கிரென் போன்ற ஜனநாயக அரசியல்வாதிகளின் கருத்துக்களை வரவேற்கும் ஒன்றும் இதில் காணப்படுகிறது. CFAA மீதான குறுகிய கவனத்தை செலுத்துதல் அமெரிக்க அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான தீவிர குணாதிசயத்தை கவனிக்க குறிப்பிடத்தவறுகிறது. SOPA மற்றும் PIPA மசோதாக்களை விவரிப்பதில், அனைத்து சட்டமன்ற போட்டிகளையும் வித்தியாசமான பெருநிறுவன நலன்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே என்று சரியாக சொல்லி ஒரு வர்ணனையாளர் இதனை பதிவு செய்கிறார்.

இருப்பினும், நிதானமாக கணிக்க முடிகின்ற இந்த மட்டுப்படுத்தல் அடிப்படையில் இத்திரைப்படத்தின் பலத்தினை குறைத்து மதிப்பீடு செய்யவில்லை, இது அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் கபட நாடகத்தின் முகமூடியை அவிழ்க்க உதவுகிறது. அதன் செயற்பாட்டாளர்கள் மக்களின் அனைத்து ஆக்கபூர்வமான மற்றும் சமத்துவமான தூண்டுதல்களையும் அவநம்பிக்கையுடனும் குரோதத்துடனும் பார்ப்பதுடன், மேலும் அதனை ஒடுக்குவதற்காக எந்தவிதமான குற்றத்தையும் செய்ய விரும்புகிறார்கள். அந்த காரணத்திற்காக மட்டுமே, இத்திரைப்படம் அனைவரும் பார்க்கலாம் என்ற தகுதி பெறுகிறது.