சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Oppose the Israeli invasion of Gaza

காசா மீதான இஸ்ரேலிய படையெடுப்பை எதிர்ப்போம்

Statement of the International Committee of the Fourth International
18 July 2014

Use this version to printSend feedback

இஸ்ரேல் இராணுவ படைகளின் காசா மீதான தரைவழி படையெடுப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) கண்டிக்கிறது. என்ன கட்டவிழ்ந்து வருகிறதென்றால், வடக்கு மற்றும் கிழக்கில் யூத-பாதுகாப்புவாத (சியோனிச) அரசாலும் மற்றும் தெற்கில் எகிப்திய ஆட்சியாலும் முற்றுகையிடப்பட்ட 200 சதுர மைலுக்கும் குறைவான ஒரு சிறிய நிலப்பகுதியில் சிக்கியிருக்கும், பாதுகாப்பற்ற 1.8 மில்லியன் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட யுத்த குற்றம் கட்டவிழ்ந்து வருகிறது.

இஸ்லாமியவாத பாலஸ்தீன இயக்கத்தால் இஸ்ரேலுக்குள் கொடூரமாக வீசப்பட்ட ராக்கெட் குண்டுகளுக்கு ஒரு நியாயமான விடையிறுப்பாக இந்த தாக்குதலை நியாயப்படுத்துகின்ற ஆளும் வட்டாரங்களுக்குள் இருக்கும் அனைவரும், முற்றிலுமாக புறக்கணிப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஹமாஸின் டஜன்கணக்கான அங்கத்தவர்கள் மீதான மற்றும் கணக்கில்லா பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கான பாலஸ்தீன அப்பாவி பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய விமான தாக்குதலுக்கு ஹமாஸின் பதிலடி நடவடிக்கையில் ஒரேயொரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜூன் மாதம் முழுவதிலும், ஹமாஸின் அங்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தும் மற்றும் பாலஸ்தீன மக்களை அச்சுறுத்தியும், மேற்கு கரை முழுவதிலும் வன்முறையில் ஈடுபடுவதற்கு, காணாமல் போன மூன்று விடலை சிறுவர்களைத் தேடுவதற்காக என்ற போலிக் காரணத்தை இஸ்ரேலிய படைகள் பயன்படுத்தியது. கடந்த இரண்டு வாரங்களில், இஸ்ரேல் மழையென படுகொலைகளை நடத்தி குவித்திருந்ததோடு, 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடுகள் மட்டுமின்றி, உணவுவிடுதிகள், மசூதிகள், சுகாதார மையங்கள், ஊடகங்கள் என தெளிவாக எழுதப்பட்ட வாகனங்கள், நீர் நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் ஆகியவற்றையும் இலக்கில் வைத்து, காசாவை சின்னாபின்னமாக ஆக்கி உள்ளது.

எகிப்தினால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு போர்நிறுத்தத்தை ஹமாஸ்கள் நிராகரித்ததால் தான் காசா மீதான படையெடுப்பு தூண்டிவிடப்பட்டது என்ற வலியுறுத்தலும், வெறுப்பூட்டுவதில் ஒன்றும் குறைந்ததாக இல்லை. போர்நிறுத்தம் என்றழைக்கப்பட்டதில் பாலஸ்தீனியர்களின் அடிப்படை கோரிக்கைகள் எதுவுமே உள்ளடக்கப்படவில்லை, அனைத்திற்கும் மேலாக பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் மேற்கு கரையில் இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டவர்களையும், ஏனைய அரசியல் கைதிகளையும் விடுவிப்பதும் அதில் உள்ளடக்கப்படவில்லை. அது நிராகரிக்கப்பட்டு, அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள் மற்றும் அரேபிய அரசுகளுக்கு இஸ்ரேலிய தாக்குதலை சட்டபூர்வமாக்க தேவைப்படும் பிரச்சாரத்திற்காகவே முற்றிலுமாக அது தயாரிக்கப்பட்டு இருந்தது.

ஹமாஸின் வீட்டுத்துறை மந்திரி மொஃபீத் அல்-ஹசைனாஹ் நேற்று குறிப்பிடுகையில்: “நாங்கள் ஒரு போர்நிறுத்தத்தை விரும்புகிறோம் தான், ஆனால் என்ன விலை கொடுத்தாவது அந்த போர்நிறுத்தத்தை விரும்புகிறோம் என்றாகாது. நாங்கள் விலங்குகள் அல்ல. சுதந்திரமாக எல்லை கடக்க முடியாமல், சம்பளங்கள் இல்லாமல், வேலைகள் இல்லாமல், அது என்ன ஒரு போர்நிறுத்தமா?" என்றார்.

அந்த தரைவழி படையெடுப்புக்கு முன்னதாக, ஏற்கனவே குறைந்தபட்சம் 243 பாலஸ்தீனியர்கள் காசாவில் கொல்லப்பட்டு இருந்தனர் என்பதோடு, 1,800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். அந்த மனிதப் படுகொலைகள் இப்போது இன்னும் அதிகரிக்கும்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் (IDF) செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் மோட்டி அல்மோஸ் அறிவிக்கையில், வியாழக்கிழமை இரவு வரையில் "பாரிய விமானப்படை ஒத்துழைப்போடு, கடற்படைகள் மற்றும் உளவுத்துறையோடு சேர்ந்து பெரியளவிலான தரைப் படைகள் காசாவின் இலக்குகளைக் கைப்பற்றி வருவதோடு, சுரங்க வழிகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன," என்றார்.

பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாஹூவின் இஸ்ரேலிய அரசாங்கம், இராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்ய இன்னும் கூடுதலாக 18,000 துருப்புகளைத் திரட்ட நேற்று உத்தரவிட்டது. தங்களின் மக்களைப் பாதுகாக்க முயலும், மிக மிக இலகுரக ஆயுதமேந்திய பாலஸ்தீன போராளிகளோ, அமெரிக்காவால் வினியோகிக்கப்பட்ட டாங்கிகள், கனரக ஆயுத தளவாடங்கள், அதிவிரைவு போர் விமானங்கள், துப்பாக்கி ஏந்திய ஹெலிகாப்டர்கள், ஆயுதமேந்தக் கூடிய ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிநவீன மனித பாதுகாப்பு கவசங்கள் என இவற்றைக் கொண்ட 60,000க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய துருப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

ட்விட்டரில் தங்கள் செய்திகளைப் பதிவு செய்த இதழாளர்களின் செய்திகளும், மற்றும் அந்த தாக்குதலின் தொடக்க கட்டங்கள் குறித்து வெளியான இதர செய்திகளும், பியட் லாஹியா மற்றும் அல் அடாட்ரா போன்ற வடக்கு காசா நகரங்களில் நடந்த பயங்கரவாத காட்சிகளை ஏற்கனவே வர்ணித்திருக்கின்றன. டாங்கிகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் மற்றும் கடற்கரையோரத்தில் இருந்த இஸ்ரேலிய யுத்தக் கப்பல்களின் தாக்குதல்கள் என அவை பாலஸ்தீன எல்லைக்குள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. வெடிகுண்டுகள் வெடிக்கும் வெளிச்சத்தைத் தவிர, ஒட்டுமொத்த இருட்டுக்குள் அந்த பகுதியை மூழ்கடித்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

"டஜன் கணக்கானவர்கள் வடக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் ஒருவிதமான வாயுவால் மூச்சுதிணறலுக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன" என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 2008-2009இல் காசா மீதான தாக்குதலில் அது செய்ததைப் போலவே, மற்றும் ஈராக்கில் பல்லூஜாஹின் 2004 முற்றுகையின் போது அமெரிக்க படைகள் செய்ததைப் போலவே, IDF சட்டவிரோதமான வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைக் கொண்டு மீண்டும் தாக்கி வருவதாக, தரைவழி தாக்குதலுக்கு முன்னதாக ஏற்கனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டி இருந்தார்கள்.

ஹமாஸ் அரசாங்கத்தைத் தூக்கியெறிவது நோக்கமல்ல என்று நெத்தெனியாஹூவின் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கிறார்கள். பாரிய படுகொலைகள் மற்றும் பாரிய பேரழிவுகளை நடத்திய பின்னர், காசாவை ஒரு எரிந்துபோன சாம்பலாக விட்டு விட்டு திரும்புவதே அந்த தாக்குதலின் நோக்கமாகும். இஸ்ரேலின் எல்லைக்கருகில் இருந்த ஒட்டுமொத்த ஆறு நகரங்களின் மக்களையும், அவர்களின் வீடுகளை விட்டு விட்டு, காசா நகரத்திற்குள் தஞ்சம் கோருமாறு, அந்த நிலப்பகுதியின் வடக்கில், விமானத்திலிருந்து IDFஆல் வீசப்பட்ட துண்டறிக்கைகள் உத்தரவிட்டன. அப்பகுதியின் மையத்தில் உள்ள நான்கு நகரங்களில் வசிப்பவர்கள் கான் யூனிஸிற்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டிருந்தனர், அதேவேளையில் தெற்கில் இருந்த இரண்டு நகரங்களின் மக்கள் ரஃபாவிற்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

அந்த கட்டளைக்கு பத்தாயிரக் கணக்கான மக்களால் அடிபணிய முடியாது அல்லது அடி பணிய மாட்டார்கள் என்பதால், அவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் கருணைக்காக தற்போது காத்திருக்கிறார்கள். காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் வரும் சுரங்கங்களையும் மற்றும் பயனற்ற ராக்கெட் தாக்குதலைத் தொடங்குவதற்கான ஹமாஸ் போராளிகளின் ஆற்றலையும் அழிப்பதற்காக என்ற போலிக்காரணத்தின் மீது, அந்த இலக்கில் வைக்கப்பட்ட சமூகங்களை முற்றிலுமாக தரைமட்டமாக்க IDF உத்தரவிடப்பட்டு இருக்கிறதா என்பதை வரவிருக்கும் நாட்களே எடுத்துக்காட்டும்.

யூத-பாதுகாப்புவாதத்தைப் (சியோனியம்) பாதுகாப்பவர்களின் முற்றிலுமான அறநெறிரீதியிலான சிதைவையும், மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பிரிவினைவாத யூத முதலாளித்துவ அரசு செதுக்கி வரும் அதன் பிற்போக்குத்தனமான முன்னோக்கின் இறுதி முட்டுச்சந்தையும் நெத்தெனியாஹூவின் ஆட்சியினது நடவடிக்கைகள் நிரூபணப்படுத்துகின்றன. இஸ்ரேலுக்குள் நிலவும் ஆழ்ந்த வர்க்க மற்றும் சமூக பதட்டங்களை, பாலஸ்தீன மக்களின் தசாப்தகால எதிர்ப்பை நசுக்குவதை நோக்கி திசைதிருப்பிவிடும் யூத-பாதுகாப்புவாத முயற்சியானது, இனப்படுகொலையின் பரிமாணங்களை எடுத்துள்ளது. எவ்வாறிருந்த போதினும், வரும் நாட்களிலும் மற்றும் வாரங்களிலும் இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கி குண்டுகளினால் காசாவில் பலர் இறப்புக்குள்ளாவர், ஏறத்தாழ குடிநீர் வினியோகங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற சேவைகளின் பொறிவோடு நூறு ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கை அச்சுறுத்தப்பட்டுள்ளது.

நெத்தெனியாஹூவின் அரசாங்கம் அதன் குற்றங்களுக்குத் துணை சாதன தொகுப்புகள் இல்லாமல் பாலஸ்தீன மக்கள் மீது அதன் யுத்தத்தை நடத்த முடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவில்லாமல் அரசியல் மற்றும் இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வினியோகிக்கிறது. காசாவில் உள்ள "அப்பாவி மக்கள் வாழ்க்கை இழப்பது குறித்து" ஐரோப்பிய ஒன்றியம் "ஆழமாக இரக்கப்படுகிறது என்றாலும், “இஸ்ரேல் அதன் மக்களைப் பாதுகாக்கும் உரிமையை அது கொண்டிருக்கிறது," என்று அறிவித்து, ஒரு அனுமானிக்கத்தக்க அறிக்கையை பிரசுரித்தது. எகிப்தும், ஏனைய அரபு முதலாளித்துவ அரசுகளும் மற்றும் பாலஸ்தீன ஆணையத்தின் தலைவர் மஹ்மொத் அப்பாஸூம் இஸ்ரேல் உடனான அவர்கள் ஏற்பாடு செய்த போர்நிறுத்த நாடகத்தை ஹமாஸ் ஏற்க மறுத்ததற்கு அதை குற்றஞ்சாட்டி உள்ளனர். ஹமாஸின் தலைமையே கூட அதே அரபு முதலாளித்துவ சக்திகளிடமும் மற்றும் பாலஸ்தீன மக்களை முற்றிலும் காட்டிக் கொடுத்துள்ள ஏகாதிபத்திய-கட்டுப்பாட்டிலான ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறையிடுவதைத் தவிர, அத்தாக்குதலுக்கு அதனிடம் வேறு எந்தவொரு பதிலும் இல்லை.

காசாவில் நடத்தப்பட்டு வருகின்ற அட்டூழியங்கள், இஸ்ரேலிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அவர்களது தத்தமது நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் மீது அவர்களின் கொந்தளிப்பை மற்றும் குரோதத்தை ஆழப்படுத்தும். உலக சோசலிச வலைத்தளம் ஜூலை 12ஆம் தேதி முன்னோக்கில் வலியுறுத்தியதைப் போல, சோசலிச சர்வதேசியத்தின் வேலைத்திட்டத்திற்காக, அரபு மற்றும் யூத தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதன் மீதே எதிர்காலம் தங்கியுள்ளது.