சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Following Malaysian plane disaster: German media pushes for confrontation with Moscow

மலேசிய விமான வெடிப்பைத் தொடர்ந்து: ஜேர்மன் ஊடகங்கள் மாஸ்கோவுடன் மோதலுக்கு விரைகின்றன

By Peter Schwarz
19 July 2014

Use this version to printSend feedback

உக்ரேன் மீது பறந்திருந்த ஒரு மலேசிய பயணிகள் ஜெட் விமான விபத்திற்கு வெறும் 25 மணி நேரத்திற்குப் பின்னர், முன்னணி ஜேர்மன் ஊடக நிறுவனங்கள் ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்துவதற்கு அழுத்தம் அளித்து வருகின்றன.

பெப்ரவரியில், ஜேர்மன் அரசாங்கம், வாஷிங்டன் உடன் மிகவும் நெருக்கமாக வேலை செய்து, ஒரு மேற்கத்திய-சார்பிலான ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தது. இருந்தாலும் கூட ஜேர்மன் பொருளாதார நலன்களின் மீது அக்கறைக் கொண்டுள்ள பேர்லின், ரஷ்யா மீதான தடைகளைத் திணிப்பதில் வாஷிங்டனை விட மிகவும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளது. மேலும் சமீபத்திய உளவுத்துறை மோசடியை ஒட்டி, வெளியுறவு கொள்கைகளில் அமெரிக்காவிலிருந்து ஜேர்மன் இன்னும் சுதந்திரமாக செயல்படுவதைக் கோரிய அழைப்புகள் உரக்க அதிகரித்துள்ளன.

இப்போது, ரஷ்யாவிற்கு எதிரான ஆக்ரோஷ நடவடிக்கைக்கு வக்காலாத்து வாங்குவோர்கள், தாக்குதலை நோக்கி செல்வதற்கும் மற்றும் பின்வாங்குவதற்கு எதிராக இன்னும் எச்சரிக்கையூட்டும் குரல்களை வழங்குவதற்கும் அந்த விமான பேரிடரைப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ரஷ்யாவிற்கு எதிராக பலமான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்து, Frankfurter Allgemeine Zeitung (FAZ) இரண்டு கட்டுரைகளை இணையத்தில் பிரசுரித்துள்ளது. வியாழனன்று, “மாஸ்கோவின் ஆக்ரோஷம்" என்ற தலைப்பில் ரைய்ன்ஹார்ட் வீசெர் எழுதுகையில், மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை உக்ரேனிய யுத்தத்தில் ஒரு துயரகரமான விளைவாகும் என்றார். “அதில் யார் குற்றவாளி" என்பதைத் தெளிவுபடுத்த வேண்டி இருக்கின்ற போதினும், “இந்த யுத்தத்திற்கு யார் பொறுப்பு" என்பது —அதாவது ரஷ்யா என்ற அர்த்தத்தில்— ஏற்கனவே தெளிவாக இருக்கிறது என்று அந்த பத்திரிகை எழுதியது. ரஷ்யாவைக் குற்றஞ்சாட்ட அங்கே ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, “உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவின் ஆக்ரோஷத்தைக் குறித்து பேச அங்கே போதிய உண்மைகள் இருக்கின்றன," என்று எழுதியது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்ய இராணுவமோ அல்லது ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளோ அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்பதற்கு அங்கே ஆதாரமே இல்லையென்றாலும் —மற்றும் உக்ரேனிய இராணுவப் படைகள் தான் பொறுப்பு என்று வெளிப்பாட்டாலும் கூடரஷ்யா தான் குற்றவாளித் தரப்பில் நிற்கும் என்றாகிறது. “புருசெல்ஸில் ஒப்புக் கொள்ளப்பட்ட தடைகளை விட கடுமையான தடைகளை விதிப்பதற்குரிய மதிப்பார்ந்த நேரமிது" என்று அந்த கருத்துரை முடித்திருந்தது.

வெள்ளியன்று, கிளவ்ஸ்-டீட்டெர் பிரான்கென்பேர்கரும் "கிழக்கு உக்ரேனில் பாரிய படுகொலைகள்" என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் அதே கருத்துருவை அழுத்தமாய் வலியுறுத்தினார். “சுமார் மூன்று நூறு மக்களின் மரணம்... மிகுந்த கலக்கத்தை தரும் இந்த சம்பவம் மோதலில் ஒரு திருப்பத்தை கொண்டு வரும், சம்பவமாக இல்லையா?", என்று அவர் வினவுகிறார். பின்னர் அவர் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுகையில்: “அது இந்த மோதலில் தலையீடு செய்ய விரும்புகிறது; அது உக்ரேனை நிலைகுலைக்க விரும்புகிறது; அது அதன் செல்வாக்கைப் பாதுகாக்க விரும்புகிறது," என்றார். “அது தடை விதிப்பு திருகியை இறுக்குமா அல்லது அது பிரமைகளின் பின்னால் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்குமா என்பதை" ஐரோப்பிய ஒன்றியம் இப்போது முடிவு செய்தாக வேண்டும்," என்று அவர் முடிக்கிறார்.

ஸ்ரெபான் கொர்னேலியோஸ் Süddeutsche Zeitung பத்திரிகையில் ஒரு கருத்துரை எழுதி உள்ளார். அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை அனுபவித்து வரும் கொர்னேலியோஸ் நீண்ட காலமாகவே அமெரிக்காவுடனான ஜேர்மனியின் மூலோபாய கூட்டணியை நியாயப்படுத்தி வந்துள்ளார் என்பதோடு புட்டினின் ஆட்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையைக் கோரி வந்தார். மிக சமீபத்தில் அவர் ஜேர்மனி மீதான அதன் உளவுவேலை நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவை விமர்சித்து, தடுமாற தொடங்கி இருந்தார்.

ஜேர்மன் ஆளும் மேற்தட்டு ஒரு ஆக்ரோஷமான மற்றும் இராணுவவாத வெளியுறவு கொள்கைக்குத் திரும்ப முயன்று வருகையில், அவரது எதிர்கால நோக்குநிலை இறுதியாக ஜேர்மன் ஆளும் மேற்தட்டின் போக்கைச் சார்ந்திருக்கும்," என்று உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.

இப்போதைக்கு, அந்த போக்கு மீண்டும் வாஷிங்டனை நோக்கி சாய்கிறது என்ற முடிவுக்கு கொர்னேலியோஸ் வந்திருப்பதாக தெரிகிறது. ரஷ்யா அல்லது மாஸ்கோவின் தரப்பில் இருக்கும் பிரிவினைவாதிகளே அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்கு பொறுப்பாகிறார்கள் என்பதற்கு மட்டுமே இப்போது வரையில் அங்கே "அறிகுறிகள்" காணப்படுகின்றன என்பதை அவரும் ஒப்புக் கொண்டார். எவ்வாறிருந்த போதினும், Frankfurter Allgemeine Zeitung இல் ரைய்ன்ஹார்ட் வீசெர் எழுதியதைப் போலவே, இவர் இதை பொறுத்தமற்ற ஒன்றாக பார்க்கிறார்.

"புட்டினால் உருவாக்கப்பட்ட அசுரன்" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், "ரஷ்யாவினது ஆதரவில்லாமலும் மற்றும் மாஸ்கோவால் போராளிகள் ஒன்று திரட்டப்படாமலும் இருந்திருந்தால், இந்த யுத்தம் என்றைக்கோ முடிந்திருக்கும்," என்று அறிவிக்கிறார். அவர் தொடர்ந்து எழுதுகையில், “மாஸ்கோவை-ஆதரிக்கும் போராளிகள் குழுக்களைக் கட்டளைக்குக் கட்டுபட விளாடிமீர் புட்டின் அழைப்பு விடுக்காத வரையில், அவர்கள் அவர்களது பகுத்தறிவற்ற மற்றும் மரணகரமான போராட்டத்தை தொடர்வார்கள்," என்று எழுதினார்.

பிரிவினைவாதிகள் அல்லது மாஸ்கோ உடந்தையாய் இருந்ததற்காக ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்தால், “பின் அந்த தடைகளின்—அதுவும் முக்கியமாக ஐரோப்பாவிடமிருந்து வந்தவற்றின்முழுச் சுமையை ரஷ்யா உணரமாறு இருக்க வேண்டும் என்று கொர்னேலியோஸ் முறையிட்டார். அவர் அத்தோடு நின்று விடவில்லை, இராணுவ தலையீட்டு பிரச்சினையையும் எழுப்புகிறார். “சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த சம்பவம் நேரடியாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இட்டுச் செல்கிறது, [அங்கே] உக்ரேன் இராணுவ ஆதரவைக் கோரக்கூடும்," என்று அவர் நம்பிக்கையோடு எழுதுகிறார்.

Frankfurter Allgemeine Zeitung மற்றும் Süddeutsche எங்கே செல்கிறதோ, அங்கே Die Zeit மற்றும் tazஉம் செல்ல வேண்டும் தானே.

சுட்டு வீழ்த்திய இந்த தாக்குதல் அனைத்தையும் மாற்றுகிறது" என்ற தலைப்பில் Die Zeit இல், கார்ஸ்டன் லூதெர் அப்பட்டமாக ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர் எழுதுகிறார்: “மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பல பயணிகளும் கூட அந்த விமானத்தில் இருந்திருக்கிறார்கள் என்ற நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான பிரச்சினை சர்வதேச பிரச்சினை ஆகியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொண்டு தடைகளை விதிப்பதைத் தவிர்க்கக்கூடாது என்பதோடு, இந்த முறை அவை பிச்சுப்பிடுங்கிய விதத்திலோ அல்லது மிக சொற்பமாகவோ இருக்கக் கூடாது. மேலும் இந்த நிலைமைகளின் கீழ், இராணுவ நடவடிக்கைகளில் மேற்கத்திய சக்திகளின் பங்களிப்பும் இனியும் வெறுமனே சம்பிரதாயமாக இருக்கக் கூடாது," என்கிறார்.

Taz உம் இராணுவ மோதலை அறிவுறுத்துகிறது. பசுமைக் கட்சியின் பாணியில், அவர்களின் வெளியுறவுத் துறை விவகார பதிப்பாசிரியர் டோமினிக் ஜோன்சன் முதலில் ஒரு "முழு விசாரணையைக்" கோருகிறார், இது எதற்கென்றால் மாஸ்கோ "முழுவதுமாக ஒத்துழைக்கவில்லை" என்றால் இராணுவ வன்முறை கொண்டு அச்சுறுத்துவதற்காகவே ஆகும்.

"298 பயணிகளின் மரணங்களைத் தெளிவுபடுத்தும் பாதையில் உள்நாட்டு தடைகள் விதிக்கப்பட்டால், கியேவின் சர்வதேச கூட்டாளிகள் அந்நாடு முழுவதிலும் உக்ரேனின் அரசு அதிகாரத்தை பலவந்தமாக இன்னும் செயலூக்கத்தோடு மீளமைப்பதைப் பின்தொடரும் அடித்தளத்தில் அதை கையாள வேண்டுமென," ஜோன்சன் எழுதுகிறார். “துரதிர்ஷ்டமான இந்த நேரத்தில் ஐரோப்பாவில் யுத்தம் அல்லது சமாதானம் என்று பேசிக் கொண்டிருப்பது இன்னமும் மிகைப்படுத்தலாக இருக்கிறது. ஆனால் இது நீண்ட காலத்திற்குத் தொடராது," என்றார்.

முதலாளித்து ஊடகங்களில் இருக்கும் போலிக்கூட்டம் ரஷ்யா உடனான யுத்தத்திற்கு அழைப்புவிடுக்க சுமார் 300 அப்பாவி மக்களின் மரணங்களைச் சுரண்டி வருகின்றன என்பது அவற்றின் வாதங்களில் இருக்கும் பொய்மையை அம்பலப்படுத்துகிறது, அது கூறமுடியாத அளவுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை கொண்டிருக்கும் ஒரு அணுஆயுத உலக யுத்தத்தில் போய் முடியக்கூடும்.

ஒரு பயணிகள் ஜெட் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை, அது தான் நடந்திருந்தது என்றால், அதுவொரு கொடூரமான குற்றமாகும். ஆனால் அதுபோன்றவொரு குற்றம் நடப்பதற்கு சாத்தியமான சூழ்நிலைகளை உருவாக்குவதில் மேற்கத்திய சக்திகள் முக்கிய பொறுப்பை கொண்டுள்ளன.

அதன் மூலப்பொருட்கள், போக்குவரத்து வழிகள் மற்றும் விவசாய உற்பத்தி நிலங்களோடு உக்ரேனை அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான மற்றும் ரஷ்யாவை சுற்றி வளைப்பதற்கான அவற்றின் முயற்சிகளில், அவை கியேவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை ஒழுங்கமைத்து இருந்ததோடு, அந்நாட்டை ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள்ளே தள்ளியிருந்தன. ஜேர்மன் ஏகாதிபத்தியம் முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களில் அது பின்பற்றிய அதே நோக்கங்களை பின்தொடர்ந்து வருகிறது, அப்போது அது கொடூரமாக உக்ரேனை ஆக்கிரமித்து இருந்தது. மேலும் அது அதே சக்திகளோடு கூடி வேலை செய்து வருகிறது: அதாவது ஆட்சியிலிருக்கும் பாதர்லாந்து கட்சி உடனும், ஸ்டீபன் பன்டோரா போன்ற நாஜி ஒத்துழைப்பாளர்களை தேசிய மாவீரர்களாக போற்றும் அதன் பாசிச கூட்டணியின் கூட்டாளி ஸ்வோபோடா உடனும் வேலை செய்து வருகிறது.

அவற்றின் பாசிச கூட்டாளிகள் அரசியல் எதிர்ப்பாளர்களை தாக்கியதோடு, ஒடெசாவில் உள்ள ஒரு தொழிற்சங்க கட்டிடத்தில் 40 பேரை படுகொலை செய்தன என்ற நிலையில், வாஷிங்டனும் பேர்லினும் முழு ஒப்புதலோடு அவர்கள் தரப்பில் நிற்கின்றன. அந்நாட்டின் கிழக்கில் அவரது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுக்கவும், டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் நகரங்களில் குண்டுவீசவும் ஜனாதிபதி பொறோஷென்கோ அவர்களை ஊக்குவித்திருக்கிறார். இந்த நிலைமைகளின் கீழ், அந்த மோதல் தீவிரமடையும் என்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.

மேற்கத்திய யுத்தவெறியர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதானது, ரஷ்ய ஜனாதிபதி புட்டினை ஆதரிப்பது என்றாகாது. அவர் முதலாளித்துவ மீட்சியிலிருந்த வளர்ந்துள்ள ஒரு செல்வந்த தட்டின் நலன்களைப் பாதுகாக்கிறார். ஆனால் இது, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் சார்பாக யுத்தத்திற்கு அழைப்புவிடுத்து வரும் ஜேர்மன் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் இருக்கும் யுத்தவெறியர்களுக்கு ஒரு மன்னிப்பு ஆகாது.