சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

European powers seize on flight MH17 crash as pretext for war

ஐரோப்பிய சக்திகள் MH17 விமான விபத்தை யுத்தத்திற்கான போலிக்காரணமாக கைப்பற்றுகின்றன

Peter Schwarz
22 July 2014

Use this version to printSend feedback

உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ, அவரது பிரெஞ்சு சமதரப்பினரான பிரான்சுவா ஹாலண்ட் உடன் உரையாடுகையில், கிழக்கு உக்ரேனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17இன் விபத்தை, சுமார் 3,000 பேர் கொல்லப்பட்ட நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலோடு ஒப்பிட்டார்.

இந்த ஒப்பீடு, பொறோஷென்கோ குறித்தும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்தும் உக்ரேனிய ஜனாதிபதி கூறவிரும்பியதைவிட இன்னும் மேலதிகமானதை வெளிப்படுத்துகிறது. எனினும் அந்த இரண்டு சம்பவங்களின் சூழ்நிலைகளுக்கும் இடையே அங்கே வெளிப்படையான வேறுபாடுகள் இருக்கின்ற போதினும், அவை அரசியல்ரீதியாக கைப்பற்றப்பட்டு, சூழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட விதத்தில் அங்கே ஒரு தெளிவான சமாந்திரம் இருக்கிறது.

அமெரிக்க அரசாங்கம் 9/11 சம்பவத்தை ஒரு பரந்த இராணுவவாத விஸ்தரிப்பிற்கும் மற்றும் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அரசின் ஆயுதமயமாக்கலுக்கும் சாக்குபோக்காக பயன்படுத்தியது. அந்த தாக்குதலுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்", ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிரான இராணுவ படையெடுப்பையும், அத்தோடு கூடுதல் அதிகாரத்தின் கீழ் தனிநபர்களை வேறு நாடுகளிடம் ஒப்படைப்பது, சித்திரவதை செய்வது மற்றும் இலக்கில் வைத்து கொல்வது போன்ற சட்டவிரோத நடைமுறைகளையும் நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களை உளவுபார்க்கும் ஒரு பிரமாண்டமான உளவுத்துறை எந்திரத்தை அமெரிக்கா கட்டமைத்தது.

இது ஒருபோதும் பயங்கரவாத தாக்குதலில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்காக செய்யப்பட்டதல்ல. “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்பது ஒரு மாபெரும் பொய்யாகும்—அதாவது பெரும்பான்மை மக்களோடு அதிகளவில் மோதலுக்கு வந்திருந்த மிகப் பெரிய-பணக்கார செல்வந்த தட்டுக்களின் ஆட்சியை பாதுகாப்பதற்கும், மற்றும் ஏகாதிபத்திய நலன்களை வன்முறையோடு பின்பற்றுவதற்கும் ஒரு அரசியல் மற்றும் சித்தாந்த மூடிமறைப்பாகும்.

MH17 விமான விபத்தும், அதேபோன்ற பிற்போக்குத்தனமான அரசியல் முடிவுகளுக்குச் சேவை செய்வதற்காக அதே விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விபத்திற்கான காரணமோ அல்லது அதற்கு பொறுப்பானவர்களோ அல்லது அவர்களின் நோக்கங்கள் குறித்தோ இன்னும் கண்டறியப்படவில்லை. கிடைக்கத் தொடங்கியிருக்கும் உறுதியான தகவல்களோ, ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளை அல்ல, மாறாக உக்ரேனிய அரசாங்கத்தைக் குற்றத்திற்குள் சிக்க வைக்கின்றன.

இருந்த போதினும், ரஷ்யாவிற்கு எதிரான இராஜாங்க மற்றும் பொருளாதார தாக்குதலின் ஒரு தீவிரப்பாட்டை நியாயப்படுத்துவதற்கும், அணுஆயுதமேந்திய நேட்டோ சக்திகளுக்கும் மற்றும் ரஷ்யாவிற்கும் இடையே முன்னர் இருந்திராத அளவில் யுத்த சாத்தியக்கூறு நிலவுகின்ற நிலையில், கிழக்கு-ஐரோப்பாவில் இன்னும் கூடுதலாக இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கு போலிக்காரணத்தை உருவாக்கவும், மேற்கத்திய ஊடகங்களிலும் மற்றும் மேற்கத்திய அரசியல் வட்டாரங்களிலும் காதைப் பிளக்கும் பலமான ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

கியேவில் நடந்த வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டதை ஒரு "ஐரோப்பிய 9/11" சம்பவத்தைப் போன்று சித்தரிக்க முயன்ற ஐரோப்பிய ஊடகங்களின் முயற்சிகளை, உலக சோசலிச வலைத் தளம், வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் குறிப்பிட்டுக் காட்டி இருந்தது. MH17 விமான விபத்தும் மற்றும் அதிலிருந்த 298 பேரின் மரணமும் முந்தைய பிரச்சாரம் எதை செய்யத் தவறியதோ அதை நிறைவேற்றுவதற்கு கைப்பற்றப்பட்டு வருகிறது.

சான்றாக, Süddeutsche Zeitung எழுதுகையில், MH17 விமான விபத்தானது, ஜனாதிபதி கௌவ்க் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் யுத்த பிரச்சாரத்தால் மாற்ற முடியாமல் இருக்கும் ஜேர்மனியில் நிலவும் யுத்த-எதிர்ப்பு உணர்வை உடைப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகும் என்று எழுதுகிறது. சனியன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துரையில், MH17 விமானம் "ஒரு திருப்புமுனையை உருவாக்கும் என்பதோடு மேற்கில் வாழும் மக்கள் இன்னமும் யுத்த காலங்களில் தான் வாழ்கிறார்கள் என்ற உண்மைக்கு அவர்களின் கண்களைத் திறந்துவிடும்," என்று ஸ்ரெபான் உல்ரிச் அறிவிக்கிறார்.

"முற்றிலும் யுத்தகாலம் போன்ற ஒரு கடந்த காலக்கட்டத்திற்குப் பின்னர், இன்று அப்பாவித்தனமான பார்வையோடு உலகை கருத்துவாதரீதியில்" ஐரோப்பியர்கள் பார்த்து வருவதாக உல்ரிச் குற்றஞ்சாட்டுகிறார். “முரண்பாடுகளை நல்லெண்ணங்கள் மற்றும் பல்வேறு இராஜாங்க நடவடிக்கைகள் மூலமாக தீர்க்க முடியும்" என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இப்போது, அவர்கள் "உக்ரேனிய காட்சிகளை அவர்களின் பாதுகாப்பு மற்றும் இராணுவ கொள்கை குறித்து சிந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக" கையிலெடுக்க முடியும். இனிமேலும் இராணுவ வரவு-செலவு திட்ட கணக்குகளைக் குறைப்பதை அனுமதிக்க முடியாது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீண்டுமொருமுறை அவற்றின் பாதுகாப்பிற்காக இன்னும் அதிகமாக செலவிட வேண்டும்," என்று எழுதுகிறார்.

ஜேர்மன் பசுமை கட்சியினருக்கு நெருக்கமான taz பத்திரிகையின் வெளியுறவு விவகாரங்கள் பிரிவின் ஆசிரியர் டோம்னிக் ஜோன்சன், உக்ரேனில் மேற்கத்திய இராணுவ தலையீட்டிற்கு அழைப்பு விடுப்பதற்கு அந்த விமான பேரிடரை மேற்கோளிட்டு காட்டுகிறார். “குற்ற காட்சிகளைத் தடுப்பதற்காகவும் மற்றும் பிரேதங்கள் அழியாமல் காப்பாற்றுவதற்காகவும்" அந்நாட்டின் கிழக்கு பகுதிக்குள் சிறப்பு படைகளை அனுப்ப வேண்டுமென அவர் வாதிடுகிறார். இதையொரு "அதிக அபாயகரமான நடவடிக்கை" என்று ஜோன்சன் குறிப்பிடுகின்ற போதினும், அதை வலியுறுத்துவதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

அந்த taz ஆசிரியர், "ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினிடம் 'இன்னும் நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று' வேறு வழியின்றி முறையிடுவதில்" மேற்கத்திய அரசாங்கங்கள் தங்களைத்தாங்களே மட்டுப்படுத்துவதாக அவற்றைக் குற்றஞ்சாட்டுகிறார். இது "திவால்நிலைமையை அறிவிப்பதாகும்" என்று அவர் எழுதுகிறார்.

மேற்கத்திய அரசாங்கங்கள் குறைந்தபட்சம் அவற்றின் சுய-மரியாதையைக் கருத்தில் கொண்டாவது, இன்னும் நிறைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஜோன்சன் அறிவிக்கிறார். “அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல், உடனடியாக நேட்டோவின் பரஸ்பர இராணுவ வகைமுறைகளைக் கையிலெடுக்கப் பயன்படுத்தப்பட்டது. ஜூலை 17, 2014இல் MH17 விமானத்தின் பயணிகள் கொல்லப்பட்டதும், அதேமாதிரியிலான ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது," என்கிறார்.

இந்த கோரிக்கையின் தாக்கங்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. உக்ரேனை ஒரு புதிய ஆப்கானிஸ்தானாக மாற்றுவதற்கும், மற்றும் ஒரு அணுஆயுத உலக யுத்தத்திற்குள் திரும்பக்கூடிய ரஷ்யா உடனான ஒரு இராணுவ மோதலைத் தூண்டிவிடுவற்கும், பசுமை கட்சியினரின் உத்தியோகபூர்வமற்ற ஊடகமாக விளங்கும் அது, சிறிதும் தயக்கமின்றிக் கோரிக்கை விடுக்கிறது. அந்த விமான விபத்திற்கு ரஷ்யா இந்த விதத்தில் பொறுப்பாகிறது என்பதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் வழங்குவதற்கு அது இலாயகற்று இருக்கின்ற போதினும், அது இவ்வாறு செய்கிறது.

அந்த வடிவமைப்பு ஒரேமாதிரியானது ஆகும். மிகப் பெரிய குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்கு 9/11 சம்பவத்தின் அதிர்ச்சி கைப்பற்றப்பட்டதைப் போலவே, மலேசிய விமான பயணிகளின் துயரகரமான மரணத்தின் கொடூரமும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி, சுரண்டப்படுகிறது.

இந்த பிரச்சாரம் துச்சமாக நிராகரிக்கப்பட வேண்டியதாகும். அரைவாசி-உண்மைகள் மற்றும் பொய்கள் மீது தங்கியிருந்த பிரச்சார நடவடிக்கைகளின் மூலமாக எண்ணிக்கையற்ற யுத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அங்கே டோன்கின் வளைகுடா (Gulf of Tonkin) சம்பவம் இருந்தது, அதை கொண்டு அமெரிக்கா 1964இல் வியட்நாம் மீதான அதன் தலையீட்டில் செய்த ஒரு பாரிய விரிவாக்கத்தை நியாயப்படுத்தியது; அங்கே ராகாக் படுகொலை (Račak massacre) சம்பவம் இருந்தது, அது ஒருபோதும் உறுதி செய்யப்படவில்லை என்றபோதும், 1999இல் யூகோஸ்லாவியா மீது நேட்டோ யுத்தத்திற்கு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்டது; அடுத்தது, ஈராக்கினது பாரிய பேரழிவு ஆயுதங்கள் குறித்த முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வாதங்கள், அதைக் கொண்டு அமெரிக்கா 2003இல் அதன் படையெடுப்பை நியாயப்படுத்தியது.

இன்னும் பின்னோக்கிய காலத்திற்குச் சென்றால், பூகோளரீதியாக ஜோன்சன் மற்றும் உல்ரிச் போன்றவர்களுக்கு அருகாமையிலேயே நடந்திருந்த, பெப்ரவரி 1933இல் ரைச்ஸ்டாக் எரிப்பு (burning of the Reichstag) சம்பவமும் அங்கே இருந்தது, அந்த சம்பவம் முழு அதிகாரத்தைப் பெறுவதற்கு ஹிட்லருக்கு போலிக்காரணமாக சேவை செய்தது.

MH17 சுட்டு வீழ்த்தப்படுவதற்கு சாத்தியமான நோக்கங்களை ஒருவர் கருத்தில் எடுப்பாரேயானால், கியேவில் உள்ள ஆட்சியும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் தான் சந்தேகத்திற்குரியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள். அந்த சக்திகளுக்கு, இந்த விமான பேரிடர் சம்பவம், ரஷ்யா உடனான ஒரு மோதலுக்கு இப்போது வரையில் எதிர்த்து வந்த அரசாங்கங்களை அவர்களின் தரப்பிற்குக் கொண்டு வரவும் மற்றும் கீழ்படியாமல் இருக்கின்ற பொதுமக்களின் கருத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் பெரிதும் உரிய சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. மறுபுறம், ரஷ்யாவின் தரப்பில், ஒரு நேர்மையான நோக்கத்தைக் காண்பதும் சிரமமாக இருக்கிறது.

பிரிவினைவாதிகளோ அல்லது ரஷ்யாவோ குற்றவாளிகளா என்பதற்கு எவ்வாறு ஆதாரமில்லாமல் இருக்கிறதோ அதேபோல கியேவ் குற்றவாளியா என்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. எவ்வாறிருந்த போதினும், அதுபோன்றவொரு சந்தேகத்திற்கு அடித்தளம் இருக்கிறது. உக்ரேனிய ஆட்சியோ அல்லது அதை ஆதரிக்கும் மேற்கத்திய உளவுத்துறை முகமைகளோ அந்த தாக்குதலுக்கு அவர்களே உத்தரவிடவில்லை என்றாலும் கூட, எந்தவிதத்திலும் முற்றிலும் கியேவில் உள்ள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பாசிச மற்றும் குற்றகரமான உட்கூறுகளும் உக்ரேனிய பாதுகாப்பு படைகளில் உள்ளடங்கி இருக்கின்றன.

எவ்விதத்தில் பார்த்தாலும், அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்து மேற்கத்திய அரசாங்கங்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ எந்தவித அக்கறையும் கிடையாது. அந்த பேரிடர் யுத்த பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துவதற்கு ஒரு உபயோகமான அடித்தளம் என்ற விதத்தில் பார்க்கப்படுகிறது. கியேவில் பெப்ரவரி 22 ஆட்சிக்கவிழ்ப்பிற்கு அவை வழங்கிய ஆதரவோடு, ஸ்வோபோடா மற்றும் Right Sectorஇன் பாசிசவாதிகள் உடனான அவர்களின் கூட்டுறவு, மற்றும் பொறோஷென்கோ, கோலோமோஸ்கி மற்றும் அக்மெடோவ் போன்ற செல்வந்தர்களுடனான அவற்றின் கூட்டணியோடு, அவை அந்நாட்டை உள்நாட்டு யுத்தத்திற்குள் உந்தியிருந்தன என்பதோடு, ஒரு பயணிகள் விமானத்தைத் தாக்குவதற்கு இட்டுச் சென்றிருந்த அடிப்படை நிலைமைகளை அவை உருவாக்கி இருந்தன. இப்போது இன்னும் கூடுதலான ஆக்ரோஷமான அவற்றின் யுத்தவெறி கொள்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாக எதிர்வினை காட்டி வருகின்றன.