சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

After Malaysian Airlines disaster

German media steps up pro-war agitation

மலேசிய ஏர்லைன்ஸ் பேரிடருக்குப் பின்னர்

ஜேர்மன் ஊடகங்கள் யுத்தத்திற்கு ஆதரவான வலியுறுத்தல்களை அதிகரிக்கின்றன

By Uli Rippert
24 July 2014

Use this version to printSend feedback

ஒரு வாரத்திற்கு முன்னரான மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமான விபத்திற்குப் பின்னரில் இருந்து, ஜேர்மன் ஊடகங்களில் யுத்தவெறியூட்டல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது.

திங்களன்று, taz நாளிதழின் வெளியுறவு விவகாரங்கள் பிரிவிற்கான ஆசிரியர் டோம்னிக் ஜோன்சன், அந்த விமான வெடிப்பை செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலோடு ஒப்பிட்டார். 9/11 சம்பவம் நேட்டோவின் பரஸ்பர பாதுகாப்பு விதிமுறைகளைப் பயன்படுத்த தூண்டிவிட்டு இருந்ததாக வலியுறுத்திய அவர், கடந்த வாரத்தின் விமான வெடிப்பிலும் அதையே செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

இறுதியாக ஐரோப்பா செயலில் இறங்க வேண்டும், ரஷ்யாவிற்கு எதிராக "கடுமையான தடைகளை" விதிக்க வேண்டுமென செவ்வாயன்று, Süddeutsche Zeitungஇல், ஹூபெர்ட் வெட்செல் அறிவித்தார்.

அச்சுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள்—வேறெதையும் செய்யாதீர்கள்," என்ற தலைப்பின் கீழ் வெட்செல் கேள்வி எழுப்பினார்: கிழக்கு உக்ரேனிய யுத்தம் அவர்களையும் பாதிக்கிறது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் எப்போது புரிந்து கொள்ள போகிறது? இந்தக் கேள்வியை அவர் பல முறை திரும்ப திரும்ப எழுப்பியதோடு, பின்னர் அதை இன்னும் அதிக கூர்மையோடு கொண்டு வந்தார், ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறையில் ஒரு யுத்தத்தில் இருக்கிறது என்பதை அது எப்போது புரிந்து கொள்ளப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

"நிலைமை என்னவென்றால்: 200க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் இறந்திருக்கிறார்கள், ஐரோப்பாவால் இனியும் வேறு வழியை பார்த்துக் கொண்டிருக்க முடியாது," என்று எழுதினார்.

அத்தகைய கருத்துக்களின் பொறுப்பற்றதன்மையும், நேர்மையின்மையும் மனதை உறைய வைக்கின்றன. அந்த விமான விபத்தின் சூழல்கள் இதுவரையில் சிறிதும் கூட தெளிவுபடுத்தப்படவில்லை. தெரிய வந்துள்ளவைகளில் பெரும்பாலானவைஅதாவது கிழக்கு உக்ரேனின் மேலாக நேரடியாக விமானத்தை எடுத்துச் செல்லும் வகையில் விமானப் பாதையில் செய்யப்பட்ட கடைசி-நிமிட மாற்றங்கள்; அசாதாரணமான முறையில் அந்த விமானத்தின் பறக்கும் உயரத்தைக் குறைத்தமை, பாதிக்கப்பட்ட விமானத்திலிருந்து வந்த ரேடியோ ஒலிபரப்பில் அதனுடன் ஒரு உக்ரேனிய அதிவிரைவு போர்விமானம் இருப்பதைக் குறிப்பிட்டதாக தெரிவித்த ஒரு விமானக் கட்டுப்பாட்டு அதிகாரியின் கருத்து என இவையனைத்தும்கியேவ் ஆட்சியின் குற்றத்தன்மையைக் குறித்து ஒதுக்கி வைக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றன.

எந்தவொரு சட்ட வழக்கிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்ற, என்ன நோக்கத்திற்காக என்ற கேள்வியை ஒருவர் எடுத்துப் பார்த்தால், சந்தேகங்கள் உக்ரேன் அரசாங்கத்தின் மீது விழுகின்றன. அந்நாட்டின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் உடனடியாக ரஷ்யா உடனான மோதலைத் தீவிரப்படுத்த அந்த துயரத்தைக் கைப்பற்றினார்கள். அதேபோல அமெரிக்க அரசாங்கமும் மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கவும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பியர்களிடமிருந்து கடுமையான தடைகளைக் கோருவதற்கும் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ஜேர்மன் ஊடகங்களின் முற்றிலும் பொறுப்பற்ற கருத்துரைகளோ, MH17 விமானத்தில் இருந்தவர்களின் மரணம் எந்தவிதத்தில் நடந்ததோ அதை ரஷ்யா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றன என்பதை அடிக்கோடிடுகின்றன.

மேசையைத் தேய்த்துக் கொண்டிருக்கும் யுத்த வெறியர்களில் எவராவது, ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான தடைகள் எங்கே இட்டுச் செல்லும்? ரஷ்யாவிற்கு மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்களுக்கே கூட அவை என்ன விளைவுகளைக் கொண்டிருக்கும்? ஐரோப்பிய பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதியியல் அமைப்புமுறையின் மீது என்ன தாக்கத்தை அது ஏற்படுத்தும்? என்று எந்தவொரு ஆழ்ந்த சிந்தனையை வழங்கி இருக்கிறார்களா?

அவர்களில் யாராவது ரஷ்யா உடனான ஒரு பொருளாதார யுத்தத்தின் தாக்கங்களைக் குறித்து சிந்தித்திருக்கிறார்களா?

ரஷ்ய அரசாங்கத்தை நிலைகுலைப்பதன் மூலமாக துல்லியமாக அவர்கள் எதை சாதிக்க முடியுமென நம்புகிறார்கள்? ரஷ்யாவிற்கு எதிராக இராணுவரீதியில் நடவடிக்கை எடுப்பதன் மூலமாக கியேவில் உள்ள அதிதீவிர தேசியவாத அதிகாரிகளுக்கு மன்னிப்பு வழங்குவது அவர்கள் நோக்கமா? விரைவிலேயே அணுஆயுதங்களோடு சண்டையிடும் ஒரு உலக யுத்தமாக மாறக்கூடிய ஒரு யுத்தத்தை அவர்கள் விரும்புகிறார்களா?

சேர்பியாவிற்கு எதிராக—ஜூலை 28, 1914இல்—ஆஸ்திரிய-ஹங்கேரியால் யுத்தம் அறிவிக்கப்பட்டதன் 100வது நினைவுதினத்திற்கு முன்னதாக, வல்லரசுகள் முதலாம் உலக யுத்தத்திற்குள் படிப்படியாக உள்ளே இழுக்கப்பட்டனவா அல்லது தான்தோன்றித்தனமாக நுழைந்தனவா என்பதன் மீது அங்கே நிறைய விவாதங்கள் நிலவுகின்றன. ஆனால் இன்றோ, அங்கே இருக்கும் ஊடக வனப்புரையாளர்களின் ஒரு கும்பல், படிப்படியாக நுழையவில்லை, மாறாக யுத்தத்தை நோக்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது, ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலை வெடிக்கச் செய்ய விடயங்களைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும், யுத்தவெறியூட்டும் அரசியல்வாதிகளே கூட ஏதோவொரு விதத்தில் மிகவும் எச்சரிக்கையாக நடந்து வருகிறார்கள்.

இந்த முற்றிலும் பொறுப்பற்ற யுத்த உந்துதல், ஊடகங்களுக்குள் எங்கே இருந்து வருகிறது?

ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவுக்கு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், குறிப்பிட்ட சில சமூக உட்கூறுகள் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில், அதுவும் குறிப்பாக ஊடகங்களில், மேலாதிக்கம் செலுத்த வந்துள்ளன. தன்னலவாதம், அசுரத்தனம், அறியாமையால் குணாம்சப்பட்டுள்ள அவை, தொலைதூரத்திலும் ஏதாவதொன்று சோசலிசத்தோடு தொடர்புபட்டிருந்திருந்தால் அதனோடு ஆழ்ந்த விரோதம் கொண்டிருக்கின்றன.

டிசம்பர் 1991இல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு ஒரு வரலாற்று திருப்புமுனையாகும். ஸ்ராலினிசத்தின் விளைவாக அது சீரழிந்து போயிருந்ததற்கு இடையிலும், சோவியத் ஒன்றியம், அது இருந்த வரையில், முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய ஆக்ரோஷத்தைக் குறிப்பிட்டளவிற்குத் தடுத்து வைத்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் சிதைவானது, தங்களின் சொந்த ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்ட மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் வெறித்தனமான உட்கூறுகளை ஒன்றுதிரள செய்தது.

அனைத்து சமூக தாக்குதல்கள் மற்றும் ஏகாதிபத்திய குற்றங்களையும் நியாயப்படுத்தும் மற்றும் அவற்றை பூசிமொழுகும், அந்த பழிக்கு அஞ்சாத போலிகள் ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்துகின்றன. நிதியியல் மேற்தட்டை பிணையெடுக்க, பொதுமக்களின் கருவூலங்களில் இருந்து ட்ரில்லியன்கள் வங்கிகளுக்கும், ஊக வணிகர்களுக்கும் மாற்றப்பட்டிருக்கிறது. பொதுநிதியின் இந்த பாரிய திருட்டுக்கு விலையாக, காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கை திட்டங்கள் திணிக்கப்பட்டுள்ளன. சமூகநல திட்டங்கள் சிதைக்கப்பட்டதால், வெளியில் தெரியாமல் மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள்.

மிகவும் தொலைதூரப் பார்வை கொண்ட, சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் குறித்து எச்சரித்த இதழாளர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள் அல்லது நீக்கப்பட்டார்கள். செய்தி அலுவலகங்களில் மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்குத்தனமான உட்கூறுகளின் தொனியை ஒலிக்கச் செய்யும் வகையில், தகுதியற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்வுபோக்கு கொண்டு வரப்பட்டது.

அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் பொறிவை ஒரு விடுதலையளிக்கும் சம்பவமாக கருதினார்கள்—அதாவது எந்த விதமான சமூக கடமைப்பாட்டிலிருந்தும் விடுதலை அடைவதற்கான ஒரு அறிகுறியாக கருதினார்கள். எவரொருவருக்கும் தாம் பொறுப்புச் சொல்லத்வேவையில்லை என்றும் எவரொருவருக்கும் அவர்கள் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் இந்த நம்பிக்கை பொய்யானது என்பது நிரூபிக்கப்படும். ஏகாதிபத்தியத்தை படுபாதாளத்தின் விளிம்பிற்குத் தள்ளி வந்திருக்கும் அதே முரண்பாடுகள், சமூக புரட்சிக்கான புறநிலையான நிலைமைகளையும் உருவாக்கி வருகின்றன. அவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு, அந்த ஊடக யுத்தவெறியூட்டிகள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.