சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Contradictions of capitalism underlie monetary policy dispute

பணக்கட்டுப்பாட்டு கொள்கை பிரச்சினைக்கு அடியிலிருக்கும் முதலாளித்துவ முரண்பாடுகள்

By Nick Beams
24 July 2014

Use this version to printSend feedback

உலகின் பிரதான மத்திய வங்கிகள் தொடர்ந்து அதிமலிவு பணக் கொள்கைகளைத் தொடர்வதானது மற்றொரு உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்கி வருவதாக சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி (BIS), கடந்த மாத இறுதியில், அதன் ஆண்டு அறிக்கையில் ஓர் எச்சரிக்கை விடுத்தது.

அப்போதிருந்து, ஒருபுறம் அந்த வங்கியையும், மறுபுறம் மத்திய வங்கிகள், அத்தோடு நிதியியல் ஊடகங்களின் பிரிவுகளையும் சம்பந்தப்படுத்தி ஒரு அறிவிக்கப்படாத அறிக்கை போர் நடந்து வருகிறது.

அந்த அறிக்கை வெளியானதற்குப் பின்னர் உடனடியாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜேனட் யெலெனும், அத்தோடு ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தலைவர் மரியோ திராஹியும் (Mario Draghi) வரலாற்றில்-முன்னொருபோதும் இல்லாதளவிற்கு தற்போதைய குறைந்த வட்டிவிகிதத்திற்கு "அனுசரணையான" நடைமுறைகள் தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார்கள். அது இல்லையென்றால் வேலைவாய்ப்பின்மை பெரும் எண்ணிக்கையில் உயருமென்று யேலென் வலியுறுத்தினார்.

கடந்த வாரம், சர்வதேச நாணய நிதியமும் (IMF) சச்சரவுக்குள் நுழைந்தது. “திடமான முழு நம்பிக்கையோடு", அது நிதியியல் அமைப்புமுறைக்குள் இன்னும் அதிகமான பணத்தைப் பாய்ச்ச ஐரோப்பிய மத்திய வங்கிக்கு அழைப்பு விடுத்ததோடு, பணச்சுருக்கம் (deflation) தொடர்ந்தால் அது "மத்திய வங்கியின் நம்பகத்தன்மைக்கு குழிபறிக்கும்" என்று எச்சரித்தது.

நிதியியல் அடைப்புகளைத் திறந்துவிடுமாறு ஐரோப்பிய மத்திய வங்கிக்கு IMF விடுத்த அழைப்பு, திங்களன்று பிரசுரித்த ஒரு தலையங்கத்தில் BISஐ விளாசுவதற்கு இலண்டன் நகரில் அமைந்துள்ள உலகளாவிய ஊதுகுழல் பைனான்சியல் டைம்ஸால் கைப்பற்றப்பட்டது. அந்த பத்திரிகை குறிப்பிடுகையில், பணச்சுருக்கம் சிறிதளவே கவலைக்குரியது என்று BIS ஐரோப்பிய மத்திய வங்கிக்கு பரிந்துரைக்கிறது, நிதியியல் அமைப்புமுறைக்குள் இன்னும் மேலதிகமாக பணத்தை ECB பாய்ச்சக் கூடாது என்றும் அது மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது, பணச்சுருக்கம், செலவுகள் குறைப்பு மற்றும் மேலே தொங்கி கொண்டிருக்கும் கடன்களால் முன்னிறுத்தபட்ட அதிகரித்து வரும் நிஜமான கடன் அபாயத்தைப் அது புறக்கணித்திருப்பதாக எழுதியது. “சுருக்கமாக கூறுவதானால், BIS அதிர்ச்சியூட்டும் விதத்தில் சுயதிருப்தி அடைவதன் பேரில் குற்றவாளி ஆகிறது. அதிருஷ்டவசமாக, ECB அந்த தோல்விகரமான மூலோபாயத்தை எடுக்கவில்லை," என்று அந்த தலையங்கம் குறிப்பிட்டது.

அட்லாண்டிக்கின் இரண்டு தரப்பிலும் நன்கறியப்பட்ட இரண்டு பொருளாதார விமர்சகர்களும் இந்த சர்ச்சைக்குள் பலமாக உள்ளே வந்திருக்கிறார்கள். “அழுத்தங்களைக் குறைக்கும் வேலையைச்" செய்யக்கூடிய "செயற்கை நிதிபொதிகளை" (artificial stimulus) எதிர்த்த 1930களின் "கலைப்புவாத போக்கினரைப்" (liquidationists) போலவே BISஉம் அடிப்படையில் அதே நிலைப்பாட்டில் இருக்கிறது என்று நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் போல் க்ருக்மன் தெரிவித்தார்.

பைனான்சியல் டைம்ஸின் மார்ட்டின் வொல்ஃபும் அதேமாதிரியான போக்கை எடுத்தார், அவர் BIS"பாசெல் இன் ஜெரிமியா" (Basel’s Jeremiah) என்று வர்ணித்தார்அதாவது, “இப்போதே பணக்கட்டுப்பாட்டு நடவடிக்கையைக்" கோரி முன்கூட்டியே மரண சாசனம் எழுதிய ஒரு பழைய தீர்க்கதரிசியாக BISஐ வர்ணித்தார்.

ஐயத்திற்கு இடமின்றி, BISஆல் கோரப்பட்ட முறைமைகளானது, முற்றிலுமாக மந்தநிலையைக் கொண்டு வரவில்லை என்றாலும், ஏறக்குறைய ஒரு பொருளாதார வீழ்ச்சியைக் கொண்டு வரும். ஆனால் அதற்காக மத்திய வங்கிகள் மற்றும் க்ருக்மன், வொல்ஃப் போன்ற அவற்றின் ஆதரவாளர்களின் கொள்கைகள் ஆழமடைந்து வரும் மந்தநிலைமைக்கு ஒரு மாற்றுமருந்தாக இருக்கிறதென்று அர்த்தமாகாது.

பணக்கட்டுப்பாட்டு கொள்கை மீதான மோதல் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்துவரும் நெருக்கடியினது ஒரு வெளிப்பாடாகும், அதற்கு இந்த இரண்டு தரப்பிலுமே எந்தவொரு பதிலும் கிடையாது. ஒரு தொலைநோக்கிய, வரலாற்று முன்னோக்கு இதை தெளிபடுத்துகிறது.

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னர், 1951இல் இருந்து 1970 வரையில் அமெரிக்க பெடரல் ரிசர்வின் சேர்மேனாக பதவி வகித்த, வில்லியம் மெக்செஸ்னெ மார்ட்டின் முதலீட்டு வங்கியாளர்களுக்கு ஒரு உரை வழங்கினார், அதில் அவர் பெடரலின் பணக்கட்டுப்பாட்டு கொள்கையின் அடியிலிருக்கும் அவர் கண்ட கோட்பாடுகளை வரையறுத்தார்.

பணக்கட்டுப்பாடு மற்றும் கடன் வழங்கும் கொள்கையின் துறையில், “அளவுக்கு அதிகமான பணவீக்கத்தைக்" கணக்கில் எடுத்து பார்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகும் என்றார். அவர் இன்றைய சொத்து குமிழிகள் போன்றவற்றை அல்ல, பொதுவான விலை அளவுகளின் உயர்வுகளை குறிப்பிட்டார் என்றாலும் கூட, அந்த பொதுக்கோட்பாடு தெளிவாக இருந்தது. பெடரல் சரியான நேரத்தில் போதுமானளவிற்கு தடைகளைப் பிரயோகிக்கவில்லை என்றால், “நாம் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்க வேண்டியதிருக்கும்," அது போன்ற நடவடிக்கை "சில கடினமான விளைவுகளோடு" பிணைந்திருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், “அதுபோன்ற கொள்கையை உருவாக்கும் பணியில் இருப்பவர்கள் உங்களிடம் இருந்து பாராட்டுக்களை எதிர்பார்க்க மாட்டார்கள்," என்று அவர் நிதியியலாளர்களின் கூட்டத்தில் அறிவித்தார்.

தள்ளுபடி விகிதத்தில் செய்யப்பட்ட ஒரு சமீபத்திய உயர்விற்குப் பின்னர், அவர் தனது விபரத்தைத் தொகுத்தளிப்பதற்காக, "விருந்து நிகழ்ச்சி உண்மையில் சுகமாக மாறிக் கொண்டிருக்கும் போது, மதுக்கோப்பையை அகற்றுமாறு உத்திரவிடும் ஒரு பாதுகாவலரின் இடத்தில்" பெடரல் இருப்பதாக குறிப்பிட்டுக் காட்டியிருந்த ஒரு எழுத்தாளரை மார்ட்டின் மேற்கோளிட்டுக் காட்டினார்.

இன்றோ, பெடரலின் "பணத்தைப் புழக்கத்தில் விடும்" கொள்கை மூலமாகவும் மற்றும், அத்தோடு பூஜ்ஜியத்திற்கு அண்மித்தளவில் வட்டிவிகிதங்களை அது வைத்திருப்பதன் மூலமாகவும் நிதியியல் அமைப்புமுறைக்குள் அது 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான டாலர்களைப் பாய்ச்சி இருப்பதன் விளைவாக, 2009க்குப் பின்னரில் இருந்து டோவ் குறியீடு புதிய சாதனை உயரத்திற்கு 10,000 புள்ளிகளுக்கு உயர்ந்திருக்கையில், அமெரிக்க மத்திய வங்கி மற்றும் அதன் குழாமின் கொள்கையை, விருந்து உச்சக்கட்டத்திற்கு செல்ல தொடங்கியதும், மதுக்கோப்பையை ஊற்றி நிரப்புவது போலிருக்கிறது என்று வர்ணிக்கலாம்.

இன்றைய கொள்கைக்கும் கடந்தகால நடைமுறைகளுக்கும் இடையே மற்றுமொரு முக்கிய வேறுபாடும் இருக்கிறது. பெடரலும் ஏனைய மத்திய வங்கிகளும் எதை "முன்னோக்கிய வழிகாட்டிகள்" என்று அழைக்கின்றனவோ அவற்றை, அதாவது, கட்டுப்பாட்டு கொள்கையை எந்தவிதத்தில் முன்னெடுக்கிறார்களோ அந்த திசையை, நிதியியல் சந்தைகளுக்குத் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டி இப்போது ஆலோசனை வழங்குகின்றன. கடந்த காலத்தில், வங்கிகளும் நிதியியல் பெருநிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கையோடு செல்வதை உறுதிப்படுத்துவதற்காக ஓரளவிற்கு நிச்சயமற்றதன்மையை உருவாக்கி வைக்க முயன்றிருந்தன.

மலிவு பணக் கொள்கைகளும், “முன்னோக்கிய வழிகாட்டிகளும்" மத்திய வங்கிகள், மிக சக்திவாய்ந்த சர்வதேச நிதியியல் அமைப்புகளுக்கு முற்றிலுமாக அடிபணிந்திருப்பதை எடுத்துக்காட்டுவதோடு, நிதியியல் கட்டுப்பாட்டு ஆணையங்கள் எவற்றை மேற்பார்வையிட்டு நெறிப்படுத்த வேண்டுமோ அதே தனியார் பெருநிறுவனங்களிடம் அவற்றின் அனைத்து சுதந்திரத்தையும் இழந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இத்தகைய கொள்கை மாற்றங்கள், பெடரலையோ அல்லது ஏனைய நிதியியல் அமைப்புகளையோ நடத்துபவர்களின் மனநிலை மாற்றத்தின் விளைவில் வேரூன்றியில்லை. அல்லது, வேறு விதத்தில் கூறுவதானால், கொள்கை வகுப்பாளர்களின் அகநிலை நோக்கில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் அடிப்படையான காரணத்தைக் கொண்டிருக்கின்றன என்பதாகாது. அவை, மார்ட்டினின் காலத்திலிருந்து, முதலாளித்துவ அமைப்புமுறையில் ஏற்பட்ட பரந்த மாற்றங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன—அடிப்படை போக்குகளை முன்னுக்குக் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மூலதனத்திற்குள்ளே தங்கியிருந்தன.

மூலதனம் நூலின் இரண்டாம் தொகுதியில், மார்க்ஸ் விவரிக்கையில், மூலதனத்தின் சளைக்காத சுழற்சிகள் பணத்தைப் பண்டங்களாக மாற்றும் வடிவத்தை எடுக்கிறதுஅதாவது, உற்பத்திக் கருவிகள் மற்றும் உழைப்பு சக்தியை விலைக்கு வாங்குவதுஅதை உற்பத்தி நிகழ்முறையும் மற்றும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பை உறிஞ்சுவதும் பின்தொடர்கின்றன. உற்பத்தியானது, உபரி அல்லது கூடுதல் மதிப்பை உள்ளடக்கிய, புதிய பண்டங்களை உருவாக்குகின்றது, அவை விற்கப்பட்டு மீண்டும் பணமாக மாற்றப்பட்டு, இந்த முடிவில்லா சுழற்சி நீண்டுக் கொண்டே போகிறது, என்றார்.

மூலதன சுழற்சியை M ... M' என்று வைத்துக் கொள்ளலாம், அங்கே M' என்பது பணத்தின் ஆரம்ப தொகையையும், அதனோடு சேர்ந்த ஒரு உயர்வையும் பிரதிநிதித்துவம் செய்கிறது.

மார்க்ஸ் எழுதுகிறார், அந்த சுழற்சியின் வடிவம், அதில் "ஆரம்ப மற்றும் முடிவு புள்ளிகள் ... நிஜமான பணமாகும்," அது "முதலாளித்துவ உற்பத்தியின் - அதாவது பணமாக்குவதன் - நிர்பந்திக்கப்பட்ட நோக்கத்தை சித்திரத்தைப் போல தெளிவாக வெளிப்படுத்துகிறது. உற்பத்தி நிகழ்முறையோ ஒரு தவிர்க்கவியலாத நடுவில் இருக்கும் வெறுமனே ஒரு பிணைப்பாக, அதாவது பணம் பண்ணுவதில் இருந்தே ஆகவேண்டிய ஒரு தீயவினையாக பார்க்கப்படுகிறது. ஆகவே முதலாளித்துவ உற்பத்தி முறையில் அமைந்திருக்கும் எல்லா நாடுகளும், உற்பத்தி நிகழ்முறையில் தலையீடு செய்யாமல், பணம் பண்ணும் ஒரு பரபரப்பான முயற்சியைக் காலத்திற்கேற்ப கைப்பற்றுகின்றன."

உற்பத்தியில் "இருந்தே ஆக வேண்டிய ஒரு தீவினையாக" இருக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து உடைத்துக் கொள்ள, பணத்தின் வடிவத்தில் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு மதிப்பை விரிவாக்கிக் கொண்டே போகும் மூலதனத்தின் இயல்பில் தங்கியிருந்த ஒரு உள்ளார்ந்த போக்கை மார்க்ஸின் பகுப்பாய்வு சுட்டிக் காட்டியது.

இந்த போக்கு ஒரு அடிப்படை முரண்பாடுகளில் இருந்து எழுகிறது: மூலதனம் ஒருபுறம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரிமதிப்பை உறிஞ்சுவதை சார்ந்துள்ளது, ஆனால், மறுபுறம், இலாபமீட்டும் தளங்களை விரிவாக்குவதற்காக அதை சார்ந்திருப்பவைகளில் இருந்தும், அதன் தடைகளில் இருந்தும் தப்பிக்க அது முயல்கிறது.

இருந்த போதினும், மார்க்ஸின் காலத்திலும், மற்றும் பெடரலின் தலைமையில் மார்ட்டின் இருந்த இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய வளர்ச்சி காலம் முழுவதிலும், இந்த போக்கு தன்னைத்தானே காலத்திற்கு காலம் விட்டுவிட்டு வெளிப்படுத்தியது.

இன்றோ அது அமெரிக்காவிலும், ஏனைய அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் இலாப திரட்சியின் மேலாதிக்க வடிவமாக மாறியுள்ளது.

யுத்தத்திற்குப் பிந்தைய வளர்ச்சியின் போது, இலாப திரட்சி முறை, அமெரிக்காவிலும் மற்றும் ஏனைய அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் பெரியளவிலான தொழில்துறைமயமாக்கலின் அடித்தளத்தில் இருந்தது. இருப்பினும், இந்த உற்பத்தி நடைமுறையானது, சராசரி இலாப விகிதம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய போது, 1960களின் இறுதியிலிருந்து ஒரு நெருக்கடிக்குள் நுழைந்தது.

முதலாளித்துவ அமைப்புமுறையில் ஒரு அடிப்படையான மறுசீரமைப்பு ஏற்பட்டது. தொழில்துறையின் பரந்த பிரிவுகள் ஒன்றில் ஒழித்துக் கட்டப்பட்டன அல்லது மலிவு-தொழிலாளர் மண்டலங்களாக மாற்றப்பட்டன, மேலும் அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்களில் இலாப திரட்சியானது அதிகளவில் நிதியியல் சந்தைகளுக்குள் நடக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் வந்தது.

இந்த மறுசீரமைப்பு எந்தளவிற்கு இருந்ததென்பது, அமெரிக்காவில் 1980இல் நிதியியல் துறையின் இலாபங்கள் மொத்த பெருநிறுவன இலாபங்களில் 5 மற்றும் 10 சதவீதத்திற்கு இடையே இருந்தது என்ற உண்மையால் குறித்துக் காட்டப்படுகிறது, அந்த அளவு இன்று 40 சதவீதத்திற்கு உயர்ந்திருக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூலதனத்தின் பெரும் பகுதிகள் தன்னைத்தானே உற்பத்தி நிகழ்வுபோக்கிலிருந்து திக்குதிசையில்லாமல் வெட்டிக் கொண்டிருப்பதோடு, மத்திய வங்கிகள் நிதியியல் சொத்துக்களின் விலைகளை ஊக்குவிப்பதற்காக எந்தளவிற்குத் தொடர்ந்து பணத்தைப் பாய்ச்சுகின்றனவோ அந்தளவிற்கு மட்டும் இலாபத்தைத் திரட்டிக் கொள்வதைத் தொடர்கின்றன.

"மதுக்கோப்பையை அகற்றுவதற்கான" எந்தவொரு முயற்சியும், BIS கூறியதைப் போல, ஒட்டுமொத்த பொருளாதாரத்திலேயே ஒரு பொறிவை ஏற்படுத்தும், மூலதனத்தின் பிரிவுகளோ அந்தளவிற்கு மிகப் பெரியதாக இப்போது வளர்ந்துள்ளன.

ஆனால் எவ்வாறிருந்த போதினும் பெரும்பாலான மூலதனமோ, தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பை உறிஞ்சுவதற்காக "இருந்தே ஆகவேண்டிய தீயவினையிலிருந்து" தன்னைத்தானே பிரித்துக் கொள்ள போராடக்கூடும், ஆனால் உண்மையில் அதை எந்தளவிற்கு மூலதனத்தின் பெரிய பிரிவுகளால் செய்ய முடியுமென்றால், பணம் பணத்தை உருவாக்கும் ஒருவிதமான நிதியியல் சொர்க்கத்திற்குள் எந்தளவிற்கு நுழைய முடியுமோ அந்தளவிற்கே செய்ய முடியும், மூலதனம் இன்னமும் பூமியில் வர்க்க சுரண்டலில் தான் வேரூன்றி உள்ளது. பகுப்பாய்வின் இறுதியாக, தொழிலாள வர்க்கத்தின் உயிருள்ள உழைப்பிலிருந்து புதிய உபரி மதிப்பு வினியோகங்களை உறிஞ்சுவதன் மூலமாக மட்டுமே அதனால் நீடித்திருக்க முடியும்.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் இந்த அடிப்படை யதார்த்தமானது, பணக்கட்டுப்பாட்டு கொள்கை மீதான பிரச்சினையில் இருதரப்பும், அவர்களுக்குள் என்ன தான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இலாபகர அமைப்புமுறையின் நெருக்கடிக்கான விலையை தொழிலாள வர்க்கமே கொடுத்தாக வேண்டுமென்று வலியுறுத்துவதில் ஐக்கியப்பட்டிருக்கின்றன என்ற உண்மையில் பிரிதிபலிக்கிறது.

பணத்தைப் புழக்கத்தில் விடும்" (quantitative easing) இந்த வேலைத்திட்டம் வேலைகளை உருவாக்குவதற்கோ அல்லது பொருளாதார வளர்ச்சிக்கோ இட்டுச் செல்லவில்லை, மாறாக பங்கு விலைகள் மற்றும் இலாபங்களில் மலைப்பூட்டும் உயர்விற்கு இட்டுச் சென்றுள்ளது, இது, ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை கீழே கொண்டு வந்தமை மற்றும் சமூக சேவைகள் மற்றும் ஏனைய சமூக செலவினங்களை வெட்டியமை உட்பட, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு தாக்குதலையும் உடன் கொண்டு வந்தது. அதை ஆதரிப்பவர்கள், தொழிலாளர் சந்தையில் திருப்பி விடப்படும் "மறுகட்டமைப்பு சீர்திருத்தங்கள்" என்று அவர்கள் எதை அழைக்கிறார்களோ அதையும் இதனோடு சேர்த்துக் கொள்ள மேலதிகமாக வலியுறுத்துகிறார்கள்.

BIS கொள்கையும் அதே முடிவை வேறு வழியில் கோருகிறது, அதாவது பொருளாதாரத்தின் பெரிய பிரிவுகளை முறிப்பதை மற்றும் பாரிய வறுமைக்குள் உள்ளாக்குவதைக் கோருகிறது.

இந்த பொருளாதார நெருக்கடி முதலாளித்துவத்தின் இயல்பிலேயே வேரூன்றியிருக்கும் முரண்பாடுகளில் இருந்து எழுவதால், இதற்கு இரண்டு தரப்புமே எந்தவொரு நம்பகமான அல்லது பகுத்தறிவான தீர்வையும் வழங்க முடியாது. ஊகவணிகத்தின் மேலாதிக்கம், ஒட்டுண்ணித்தனம் மற்றும் நிதியியல் அமைப்புமுறையில் நிலவும் ஒட்டுமொத்த குற்றகரதன்மை மற்றும் அதை கட்டுப்படுத்த நெறிமுறை ஆணையங்களாக இருக்க வேண்டியவைகளின் செல்தகைமை ஆகியவற்றில் இந்த முரண்பாடுகள் அவற்றின் வெளிப்பாட்டைக் காண்கின்றன.

நிகழ்ந்துவரும் பொருளாதார சீரழிவைத் தடுப்பதற்கான ஒரே வழி மூலதனத்தையே ஒழிப்பதாகும், அதாவது, உற்பத்திக் கருவிகளை சமூக உடைமையாக மற்றும் சமூக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், அதன் மூலமாக பகுத்தறிவார்ந்த பொருளாதார திட்டமிடலுக்கான பாதையைத் திறந்துவிட, தனியார் சொத்துடையை முடிவுக்குக் கொண்டு வருவதும் என்பதாகும்.