சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Egypt leads Arab regimes in facilitating Israel’s assault on Gaza

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு உதவுவதில் அரபு ஆட்சிகளில் எகிப்து முன்னிலை வகிக்கிறது

By Jean Shaoul
28 July 2014

Use this version to printSend feedback

அரேபிய ஆட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் காசாவில் இஸ்ரேலினால் பாரிய படுகொலைகளை நடத்தி இருக்க முடியாது. நிராதரவான பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை தாக்குதலுக்கு உதவுவதில், பெரும் ஜனத்தொகை மிகுந்த மற்றும் பலம் வாய்ந்த அரபு அரசான எகிப்து ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஜனாதிபதி மொஹம்மத் மூர்சியைப் பதவியிலிருந்து வெளியேற்றி, ஒரு கொடூர ஆட்சியைத் தொடங்கியதில் இருந்து, எகிப்தின் இராணுவ சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் அல்-சிசி, ரபாஹின் வழியாக காசாவின் தெற்கு எல்லையைக் கடந்து வருவதைக் கண்காணிப்பதில், அவருக்கு முன்னர் பதவியிலிருந்த ஹோஸ்னி முபாரக் மற்றும் மூர்சியின் காலடித் தடங்களைப் பின்தொடர்ந்துள்ளார். இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத வறுமை நிறைந்த அந்த பிரதேசத்திற்கான ஒரேயொரு நுழைவாயிலும் முற்றுகையிடப்பட்டு இருப்பதால், அங்கே 1.8 மில்லியன் மக்களுக்கும் காசா ஒரு திறந்தவெளி சிறைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தும், காசா மற்றும் எகிப்தை இணைக்கும் பெரும்பாலான நிலத்தடி சுரங்கங்களை வெடி வைத்து தகர்த்தோ அல்லது வெள்ளத்தைப் பாய்ச்சியோ, அந்த முற்றுகையை இன்னும் மேலதிகமாக இறுக்குவதற்கு அந்த அமெரிக்க வாடிக்கையாளர் ஆட்சி இஸ்ரேலுடன் செயற்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது காசாவில் பாலஸ்தீனர்கள் சார்ந்திருந்த உணவு, மருந்து பொருட்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் எரிபொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த முக்கிய உயிர்நாடிகளை துண்டிக்கிறது, அங்கே விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரபாஹிற்கு அருகில் இருந்த வீடுகளை அழித்ததன் மூலமாக, மக்கள் குடியிருந்த பகுதிகளிலிருந்து 300 மீட்டரை விரிவாக்கியும் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் 500 மீட்டரை விரிவாக்கியும், எகிப்திய பாதுகாப்பு படைகள் அங்கே ஒரு இடைத்தடை மண்டலத்தை அல்லது வெற்று மண்டலத்தை ஸ்தாபித்தன. வடக்கு சினாயில் உள்ள ஆயுதமேந்திய இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் சினாயைத் தாக்குவதற்கு காசாவை ஒரு தளமாக பயன்படுத்துவதைத் தடுப்பதே மேற்கூறிய நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.

எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு இடையிலான எரிவாயு குழாய்களையும், அத்தோடு எகிப்திய பாதுகாப்பு படைகளையும் இலக்கில் வைத்திருக்கும் ஜிஹாதிஸ்டுகளின் தாக்குதல் பிரவாகமாக சினாய் தீபகற்பம் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் உடன் பெருமளவிற்கு ஒத்திருக்கும் அதன் நலன்களோடு, எகிப்தும் ஜிஹாதிஸ்டுகளை ஒடுக்க டெல் அவிவ் உடன் நெருக்கமாக வேலை வருகிறது.

இஸ்ரேலிய நிறுவனங்களிடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய எகிப்திய எரிசக்தித்துறை நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து எகிப்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றளவிற்கு அங்கே எகிப்தில் மின்சார வினியோகங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. முந்தைய பிரிட்டிஷ் கேஸ் எனப்படும் BG, 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 7 பில்லியன் கன மீட்டர் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) எகிப்திற்கு வினியோகிக்க இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி உள்ளது.

எரிச்சலூட்டுகின்ற மற்றும் பெயர் பொருத்தமற்ற Operation Protective Edge எனும் காசா மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் நடவடிக்கை, எகிப்துடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது—இஸ்ரேலின் குண்டுவீச்சால் தாக்கப்படுவதைத் தவிர்க்க அத்தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாகவே ரபாஹிலிருந்து அது அதன் எல்லை பாதுகாப்பு படைகளை வெளியேற்றி இருந்தது. காசாவைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஹமாஸ், முஸ்லீம் சகோதரத்துவ வழிதோன்றல்கள் ஆகியவற்றோடு சேர்ந்து போராளிகள் குழுக்கள் தாக்குதல்களைத் தொடங்குவதைத் தடுப்பதற்காக, சினாய் எல்லையோரத்தில் அந்த இராணுவம் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த வாரம் தான், சினாயில் உள்ள போராளிகள் குழுக்கள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்களை வீசின. தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள இலேட் நகரை நோக்கிய போராளிகள் குழுவால் செலுத்தப்பட இருந்த இன்னும் இரண்டு ராக்கெட்டுக்களை அவர்கள் தடுத்திருந்ததாக எகிப்திய பாதுகாப்பு படைகள் தெரிவித்தன.

கெய்ரோவிடம் இருந்து முரண்பாடான விடையிறுப்பு எதையும் தூண்டிவிடாத விதத்தில், எகிப்திய தரப்பின் எல்லையோரத்தில் இருந்த கட்டிடங்களை இஸ்ரேலிய குண்டுவீச்சு சேதப்படுத்தி இருந்தது. Al-Monitor வலைத் தளத்தில் வெளியான ஒரு கட்டுரையின்படி, பாலஸ்தீன தரப்பில் இருந்த நுழைவிடங்களையும் மற்றும் நிலத்தடி சுரங்கங்களின் பகுதிகளையும் அழிக்க போர் விமானங்கள் மிகவும் சக்திவாய்ந்த பேரதிர்ச்சியூட்டும் குண்டுளோடு தெற்கு காசாவின் சுரங்க நுழைவாயில்களை இலக்கில் வைத்திருந்தது. அங்கே குடியிருக்கும் ஒருவர் கூறுகையில், அந்த தீவிர குண்டுவீச்சு காசா மீதான முந்தைய எந்தவொரு யுத்தங்களையும் விட மிக மிக மோசமாக இருந்ததோடு, அவை "நிலங்களுக்கும் மற்றும் அதைத் தொடர்ந்து எங்கள் வீடுகளுக்கும் அசாதாரணமான நில நடுக்கங்களை" உண்டாக்கி இருந்ததால் அவை வித்தியாசமான விதத்தில் நடத்தப்பட்டு இருந்தன என்று தெரிவித்தார், அவர் அதை 5 புள்ளி அளவிற்கான சக்தி வாய்ந்த ஒரு நிலநடுக்கத்தோடு தொடர்புபடுத்தினார். அவர்கள் வீட்டிற்குக் கீழே 1,000கும் மேற்பட்ட சுரங்கங்கள் இருப்பதால், அந்த குண்டுவீச்சு தொடர்ந்தால் அந்த நிலம் முற்றிலுமாக பெயர்ந்து போகுமென அவர் அஞ்சினார்.

கட்டாரை மையமாக கொண்ட அல்-ஜசீரா அலுவலகம் இருந்த கட்டிடத்திற்குள் நேராக மிகத் துல்லியமாக செலுத்தப்பட்ட இரண்டு குண்டுகளோடு அந்நிறுவனத்தின் காசா குழுவினரையும் இஸ்ரேல் தாக்கி உள்ளது. இது இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி அவிக்டொர் லிபெர்மேன், ஹமாஸின் ஒரு ஊதுகுழலாக அல்-ஜசீரா இருந்து வருவதாக குற்றஞ்சாட்டி, அதற்கு தடை விதிக்குமாறு அழைப்புவிடுத்த அடுத்த நாள் நிகழ்ந்திருந்தது. அதன் பங்கிற்கு, எகிப்தும் கெய்ரோவில் இருந்த அல்-ஜசீராவினது பிரிவை மூடியுள்ளது, அதன் இதழாளர்கள் நான்கு பேரை எகிப்தின் ஒரு கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றம், அவர்கள் எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு உதவினார்கள் என்ற பேரில் அவர்களுக்கு நீண்டகால சிறைதண்டனை விதித்தது. இது கட்டாரில் உள்ள முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது அது தொடர்ந்து கடைபிடித்து வரும் எதிர்ப்போடு பொருந்தி உள்ளது, கட்டார் ஹமாஸின் வெளியுறவு விவகாரத்துறை குழுவின் தலைவரான கஹாலெட் மிஷாலின் சொந்த நாடும் ஆகும்.

இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து பாலஸ்தீனியர்கள் தப்பிப்பதைத் தடுக்க கெய்ரோ ரபாஹ் வழியாக கடந்து வரக்கூடிய பகுதியை மூடிவிட்டது. காயமடைந்தவர்கள் எகிப்திய மருத்துவமனைகளில் சிகிச்சை கோருவதை அது அனுமதிக்க மறுத்துள்ள அதேவேளையில் காசாவில் குடியிருப்பவர்களை மருத்துவ பிரதிநிதிகளின் குழுக்களோ அல்லது உதவிக்குழுக்களோ எட்ட முடியாதபடிக்கு அது தடுத்தும் வருகிறது.

இஸ்ரேலுக்கு சார்பாக இருக்கும் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் ஆட்சி செலுத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மஹ்மொத் அப்பாஸின் பதாஹ் தலைமையிலான கன்னைக்கும், காசாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸிற்கும் இடையே, சில மாதங்களுக்கு முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு அரசியல் ஐக்கியத்திற்கான சாத்தியக்கூறையும் தகர்ப்பதே இஸ்ரேலினது தாக்குதலின் நோக்கமாகும். இஸ்ரேலினால் தொடங்கப்பட்ட காசாவின் நிலத்தடி சுரங்கங்களை அழிப்பது என்பதன் உண்மையான நோக்கம், ஹமாஸையே அழிப்பதை உள்ளடக்கி இப்போது பரந்துபட்ட விதத்தில் விரிவடைந்திருக்கிறது.

1967இல் இருந்து இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோலன் குன்றுகளில் இருந்து சமீபத்தில் சிரியாவிற்கு எதிராக தாக்குதல்களை தொடுக்க வேண்டுமென இஸ்ரேல் பாகத்தில் அதிகரித்துவரும் யுத்தவெறிக்கு இடையே, இந்நடவடிக்கைகள் நிகழ்கின்றன. எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ ஆட்சியைத் தூக்கியெறிவதிலும் மற்றும் அல்-சிசியை அதிகாரத்தில் கொண்டு வருவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ள மற்றும் ஈரானை கட்டுப்படுத்தி வைப்பதற்கான அதன் பரந்த மூலோபாயத்தின் பாகமாக சிரியா மற்றும் ஈராக்கில் சுன்னி இஸ்லாமிய சக்திகளை ஆதரத்துள்ள சவூதி அரேபியாவுடன் இஸ்ரேல் நெருக்கமாக வேலை செய்து வருகிறது.

காசாவிற்கு எதிரான யுத்தம் வெறுமனே பாலஸ்தீனர்களை மட்டும் ஒடுக்குவதை நோக்கமாக கொண்டதல்ல, மாறாக ஈரான் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக மத்திய கிழக்கில் ஒரு நெருக்கமான கூட்டை ஏற்படுத்துவதற்காக ஆகும். பல ஆண்டுகளாக, ஈரான் ஹமாஸினது பிரதான ஆதரவாளர்களில் ஒன்றாக செயல்பட்டது. இந்த கூட்டுறவை உடைப்பதற்காக கட்டாரால் நடத்தப்பட்ட ஒரு முயற்சிக்குப் பின்னர், இஸ்ரேலின் தாக்குதல் மீண்டுமொரு முறை ஹமாஸை தெஹ்ரானுக்கு நெருக்கமாக உந்திச் செல்கிறது—அதேவேளையில் சிரியா மற்றும் ஈரானுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான அல்லது அமெரிக்காவினால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு பரந்த தாக்குதலுக்கான நிலைமைகளை மத்திய கிழக்கில் உருவாக்க ஜெருசலேம் முனைந்துள்ளது.

ஈரானிய அவைத்தலைவர், அலி லரிஜனியும், புரட்சிகர படைகளின் தளபதி, ஜெனரல் மொஹம்மது அலி ஜபாரியும், ஹமாஸ்கள் அவர்களின் சொந்த ஆயுதங்களை உருவாக்க அவசியமான தொழில்நுட்பத்தை அவர்கள் வினியோகிப்பதாக இந்த வாரம் ஊக்குவித்திருந்த நிலையில், தலையாய தலைவர் அயாதொல்லாஹ் அலி காமெனி காசாவிலிருந்து ஆக்கிரமிப்பு மேற்கு கரை வரையில் அவர்களின் எதிர்ப்பை விரிவாக்க பாலஸ்தீனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதனன்று, வெளியுறவுதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மார்ஜிஹ் அஃப்கஹாம் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு தெரிவிக்கையில், அணிசேரா அரசுகள் உட்பட ஏனைய நாடுகளோடு காசா மக்களுக்கு உதவும் பாதையில் அரசியல் ஆலோசனைகளை ஈரான் நடத்தி உள்ளதாக தெரிவித்தார்.

சவூதி அரேபியா, அரபு லீக் மற்றும் வாஷிங்டன் உடன் விவாதித்த பின்னர், இஸ்ரேலிய தரைவழி தாக்குதலுக்கு ஒரு போலி போர்நிறுத்த பரிந்துரைக்கான அவரது தரகு வேலையோடு அல்-சிசி ஒரு முக்கிய மூடிமறைப்பை வழங்கி உள்ளார். மேற்கு கரை மற்றும் காசாவில் ஜனவரி 2006 தேர்தல்களில் வெற்றி பெற்ற ஹமாஸிற்கு எதிராக 2007இல் ஒரு ஆட்சிகவிழ்ப்புக்கு முயற்சித்தப் பின்னர் வெளியேற்றப்பட்டிருந்த ஃபத்தாஹ்-தலைமையிலான பாலஸ்தீன ஆணையத்தை மீண்டும் கொண்டு வருவதோடு சேர்ந்து, காசாவில் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவது எகிப்திய பரிந்துரையின் ஒரு முக்கிய உட்கூறாகும். நோய்வாய்பட்டிருக்கும் அப்பாஸிற்குப் பின்னர் அவரிடத்தில், இஸ்ரேலின் விருப்பத்திற்குரிய இரும்புமனிதர் மொஹம்மது தஹ்லானின் கட்டுப்பாட்டின் கீழ் பாலஸ்தீன ஆணையம் பாதுகாக்கப்படாத வரையில் ரபாஹைக் கடந்து வருமிடத்தை அது மீண்டும் திறந்துவிடப் போவதில்லை என எகிப்து கூறிவிட்டது.

அந்த போர்நிறுத்தத்தை ஹமாஸ் நிராகரித்துவிட்டது, முற்றுகையை நீக்காமல், இஸ்ரேல் சிப்பாய் ஜிலாத் ஷாலித் மற்றும் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கொல்லப்பட்ட பின்னர் மேற்கு கரையில் கைது செய்யப்பட்ட ஏனையவர்களுக்கு பிரதியீடாக விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்ட சிறைக்கைதிகளை விடுவிக்காமல், அத்தோடு காசாவின் மீன்பிடி உரிமைகளை அவர்களின் முந்தைய எல்லை வரம்பு வரைக்கும் நீடிக்காமல், விரோதங்களை அது முடிவுக்குக் கொண்டு வராது என ஹமாஸ் வலியுறுத்துகிறது.

அப்பிராந்தியத்தின் ஆட்சியாளர்களினது நடவடிக்கை மீண்டுமொருமுறை எதை எடுத்துக்காட்டுகிறதென்றால், ஒடுக்குப்பட்ட நாடுகளில் மிக அடிப்படை ஜனநாயக மற்றும் தேசிய கடமைகளைப் பெறுவதென்பது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசவாத முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை அரசியல்ரீதியாக சுயாதீனமாக ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்பதையே ஆகும். பாலஸ்தீன பிரச்சினை சோசலிச புரட்சியின் வெற்றியோடு பிணைந்துள்ளது. அப்பிராந்தியத்தில் உள்ள நேர்மையற்ற மற்றும் கொடூரமான ஆட்சிகளைத் தூக்கியெறியவும், ஐக்கிய சோசலிச மத்தியகிழக்கு அரசுகளை ஸ்தாபிப்பதற்குமான ஒரு போராட்டத்தில் அரபு மற்றும் யூத தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அவசியத்தை அது முன்னிறுத்துகிறது.