சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Rallies held in the US and around the world against Israeli invasion of Gaza

காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் பேரணிகள் நடைபெற்றன.

By our reporters
28 July 2014

Use this version to printSend feedback

காசா மீது மிருகத்தனமான இஸ்ரேலிய குண்டுவீச்சு உலகம் முழுவதும் ஒரு தொடர்ச்சியான கண்டனங்கள் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில், அதிகரித்துக்கொண்டிருக்கும் எதிர்ப்பு மற்றும் கடும் வெறுப்புணர்வை தூண்டிக்கொண்டிருக்கிறது.

.நா. மதிப்பீடுகளின் படி வார இறுதிவரையான காலத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. .நா. கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளில் அடைக்கலம் புகுந்துள்ள 160,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த பள்ளிகளில் ஒன்று இஸ்ரேல் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகி, அதில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

2005ல் இரண்டாம் பாலத்தீன எழுச்சியின் முடிவுக்குப் பின்னர், பாலஸ்தீனத்தில் மேற்கு கரை மிகப் பெரிய எதிர்ப்புக்களை கண்டது. இஸ்ரேலிய போலீசாருடன் நிகழ்ந்த மோதல்களில் இருவர் கொல்லப்பட்டனர் எண்ணற்றோர் காயமடைந்தனர்.

ஐரோப்பாவில், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினால் போடப்பட்ட தடை இருந்த போதிலும், மீறி, பிரான்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்கள் போலீஸாரால் கலைக்கப்பட்டனர் மற்றும் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

45,000 பேர் தெருக்களில் இறங்கி போராடிய உலக அளவிலான மிகப்பெரிய போராட்டங்களில் சிலவற்றை லண்டன் கண்டது. மறுபுறம், பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இந்தியா, கொரியா, இந்தோனேஷியா, ஸ்பெயின், அயர்லாந்து, மற்றும் பல நாடுகளிலும் நடத்தப்பட்டன.

அமெரிக்காவில் அரேபியர்களின் மிகப் பெரிய எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் டியர்பார்ன், மிச்சிகனில், நியூசிலாந்து மற்றும் கனடாவில் இருக்கும் போராட்டக்காரர்களிடம் WSWSன் செய்தியாளர்கள் பேசினார்கள்.



சிகாகோவில் ஆர்ப்பாட்டப் பேரணி

அமெரிக்காவில் வேறு எங்கும் விட 2,000-3,000 பேர் நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் கூடினர், மேலும் WSWS செய்தியாளர்கள் சிகாகோ மற்றும் போர்ட்லேண்டில் இருக்கும் போராட்டக்காரர்களிடமும் பேசினர்.

சனிக்கிழமை பிற்பகல் நடந்த சிகாகோ ஆர்ப்பாட்டத்திற்கு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர்.



இஸ்மாயில் அவரது நண்பர்களுடன்

இஸ்ரேலிய குற்றங்களுக்கான அமெரிக்க ஆதரவை இஸ்மாயில் கண்டித்தார். "அவர்கள் குழந்தைகளை கொன்று கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனம் என்னுடைய வீடு, அங்குதான் நான் பிறந்தேன். அதனால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். நான் இப்போது அமெரிக்காவில் வாழ்கிறேன், என்னுடைய டாலர் வரிகள் இந்தப் போருக்கு நிதியாக செலுத்தப்படப்போகின்றன என்பது உண்மையிலேயே என்னை வருத்தப்பட செய்கிறது. எமது அரசாங்கம் இந்த குற்றங்களை ஆதரிக்கிறது. அவர்கள் சமூக பாதுகாப்புகளை குறைக்கிறார்கள், அவர்களிடம் சமூக திட்டங்களுக்கு பணம் இல்லை ஆனால் இந்த போர்களுக்கு அவர்களிடம் இருக்கிறது. இந்தப் போருக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் உங்களுடன் நான் உடன்படுகிறேன்.

திரைப்படம் குறித்து படிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு சமூக கல்லூரி மாணவர், ஜஸ்டின் கூறியதாவது, அது அடிப்படை மனித உரிமை அதை அவர்கள் இங்கும் எல்லா இடங்களிலும் மீறுகிறார்கள்" என்றார். நாம் எல்லைகளை கொண்டிருக்கக்கூடாது அல்லது இனம் அல்லது மதத்தால் பிரிக்கப்பட்டிருக்கக்கூடாது. பயங்கரவாதத்தின் மீதான ஒரு போர் என்று அப்பாவி பொது மக்களை கொல்வதற்கு அவர்கள் நிதி வைத்திருக்கிறார்கள், ஆனால் உள்நாட்டில் கல்விக்கு அவர்களிடம் நிதி இல்லை. நம்மிடம் இந்த நாட்டில் ஒரு பெரிய சொத்து இடைவெளி இருக்கிறது அது மேலும் தொடர்ந்து பெரிதாக வளர்கிறது.

எகிப்தில் என்ன நடந்தது, அதுபோல நமக்கு ஒரு புரட்சி தேவைப்படுகிறது.



ரிஸ்வான்

பாக்கிஸ்தானை சேர்ந்த பொறியியலில் சமீபத்திய ஒரு பட்டதாரி, ரிஸ்வான் காசாவில் குண்டுவீச்சை "நம்பமுடியாததாக இருக்கிறது என்றார்.

"அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம் தான். நமக்கு இன்னும் அன்பு மற்றும் மனிதநேயம் தேவைப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத அரசு போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் அனைத்து அரபு நாடுகளும் கூட தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் எதையும் செய்யவில்லை. அங்கு மத்திய கிழக்கில் அமெரிக்காவிலிருந்து எகிப்து வரை இஸ்ரேலுக்கு ஒரு தொடர்ச்சியான ஆதரவும், பல தசாப்தங்களாக பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிப்பும் இருக்கிறது. இஸ்ரேலுக்கு நிதி அளிப்பதில் ஒரு உண்மையான தொடர் ஆதரவு இருக்கிறது. நாம் இது போன்ற குற்றங்கள் மற்றும் தீவினைகளுக்கு எதிராக எழுச்சி பெற வேண்டும்."

"இது குழந்தைகளுக்கு எதிரான ஒரு போர்," என்று ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி இஷ்ரா கூறினார். "அந்த இஸ்ரேலிய குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு கடத்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சூறையாடவும், அப்பாவி மக்களை அழிக்கவும் ஹமாஸ் இஸ்ரேலுக்கு இது ஒரு சாக்குபோக்கு மட்டுமே. பாலஸ்தீனத்தில் நான் வளர்ந்த என் சொந்த கிராமத்தில் அவர்கள் குண்டுகள் வீசுகிறார்கள். அதை தற்பாதுகாப்பு என்று அவர்கள் கூறுகிறார்கள்? அதாவது ஹமாஸ் "மனிதக் கேடயங்களை" பயன்படுத்தி கொண்டிருந்ததா?" இல்லை, அவர்கள் கொலைகாரர்கள். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச அரசாங்கங்கள், இந்த கொலைகாரர்களுக்கு உதவி வருகின்றன."

ஒரேகானின் நகர்புறம் போர்ட்லேண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பயனீர் கோர்ட்ஹவுஸ் சதுக்கத்தில் கூடினர். நகர்ப்புற பகுதி வழியாக சென்ற ஒரு பேரணி, பங்கேற்பாளர்கள் இணைந்து கொண்டதால் வளர்ந்தது. "இன்னொரு நிக்கல் வேண்டாம், இன்னொரு சதமும் வேண்டாம்! இஸ்ரேலிய குற்றத்திற்கு இனியும் பணம் தரமுடியாது!" என்று பேரணியில் சென்றவர்கள் கோஷமிட்டார்கள். "ஜனாதிபதி ஜோன்சனை நோக்கி கூறப்பட்ட வியட்நாம் காலத்திய கோஷத்தின் ஒரு குறிப்பாக, ஆர்ப்பாட்டக்காரர்கள், "ஜனாதிபதி ஒபாமா, இன்று எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று உங்களால் சொல்ல முடியுமா" என்று கூச்சலிட்டார்கள்.

செல்சியா, "இது போன்ற தருணங்களில் ஒன்று வரலாற்றில் இருந்தது, அங்கு இப்பொழுதிலிருந்து 30 வருடங்கள் கழித்து 'நான் என்ன செய்தேன்?' என்று நான் கேட்பேன். இது நடந்துக்கொண்டிருக்கும் இனப்படுகொலை! இதுதான் இப்போது நடக்கிறது! நான் அரசியல்வாதிகளிடம் போகலாம் என்று எண்ணினேன் ஆனால் அது சரியாக வேலை செய்யபோவதில்லை என்று அதன்பின்தான் நான் உணர்ந்தேன்" என்று கூறினார்.



அமினா

படையெடுப்பை, வரலாற்று முட்டுசந்தின் ஒரு அடையாளமாக அமினா பார்த்தார்: "அந்த குழந்தைகள் கொல்லப்படுவதை பார்க்க இதயம் உடைகிறது. இதை முழுமையான இனப்படுகொலை என நான் நினைக்கிறேன். தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனை சுடும் ஒரு வீடியோ படத்தை நான் பார்த்தேன். பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதன் மூலம் இஸ்ரேல் அதன் பாதுகாப்பை நியாயப்படுத்துகிறது? உண்மைகள் மிகைப்படுத்தலை செய்யாது. (இரண்டாம் உலகப்போரில்) ரோமின் வீழ்ச்சி மற்றும் ஜேர்மனியின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அமெரிக்காவும் அதே பாங்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது என நான் கேள்விப்பட்டேன்.

இஸ்ரேலுக்கான ஒபாமாவின் ஆதரவிற்கு ஹெதர் கண்டனம் தெரிவித்தார்: "குழந்தைகளால் நான் இங்கு இருக்கிறேன். எந்தநிலையிலும் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது. இந்த இராணுவ நடவடிக்கைக்காக இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்ட பணத்தின் அளவைப் பொறுத்தவரை, அதை நான் எதிர்க்கிறேன். நான் ஒபாமாவிற்கு வாக்களித்தேன் ஏனென்றால் அதற்கான பதிலீடு குறித்து பயந்தேன். நான் 'நம்பிக்கை மற்றும் மாற்றத்தை' எப்பொழுதும் நம்பியதில்லை.