சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Libyan catastrophe

லிபிய பேரழிவு

Alex Lantier
29 July 2014

Use this version to printSend feedback

இந்த வார இறுதியில், லிபியாவின் திரிபொலியில் இருந்து அமெரிக்க தூதரக பணியாளர்களை அருகிலுள்ள துனிசியாவிற்கு பீதியுற்று வெளியேற்றியமை, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க-நேட்டோ யுத்தத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு பேரழிவின் உச்சக்கட்டமாகும்.

லிபிய தலைநகரில் எதிர்விரோத போராளி குழுக்களுக்கு இடையிலான சண்டை, அமெரிக்க அதிகாரிகள் அருகிலிருந்த திரிப்போலி விமான நிலையத்திலிருந்து வெளியேற துணிவு கொள்ள முடியாதளவிற்கு ஆழமடைந்திருந்தது. அதற்குப் பதிலாக, அந்த தூதரக பணியாளர்களும் அவர்களின் பலத்த ஆயுதமேந்திய கடற்படை பாதுகாவலர்களும் பேருந்துகளிலும் மற்றும் விளையாட்டுதுறைக்கான வாகனங்களிலும் தரைமார்க்கமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள். அவற்றின் பாதையில் எவரொருவர் வருகிறாரோ அவர்களை வீழ்த்துவதற்கு தயாராக, டிரோன்களும், ஜெட் விமானங்களும் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்ததோடு, ஒரு போர்க்கப்பலும் கடலோரம் சுற்றிக் கொண்டிருந்தது.

2011இல் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு யுத்தத்தின் பாகமாக கேர்னல் மௌம்மர் கடாபியைத் தூக்கியெறிய, இதே போராளிகள் குழுக்களுக்கு வாஷிங்டனும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் ஆயுத உதவி செய்தன. அவர்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தின் இதயமான எண்ணெய் தொழிற்துறையை பொறிந்து போகும் நிலைக்கு சின்னாபின்னமாக்கி, மற்றும் அந்நாடு முழுவதும் உள்நாட்டு யுத்தத்தால் மூழ்கிப்போன நிலையில், லிபியாவைப் பின்னுக்கு தள்ளி விட்டிருந்தனர்.

உலக சோசலிச வலைத் தளம் அப்போது எச்சரித்ததைப் போலவே, அந்த போர் ஒரு நிராதரவான முன்னாள்-காலனித்துவ நாட்டின் மீது நடத்தப்பட்ட ஓர் ஏகாதிபத்திய சூறையாடலாக இருந்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அவற்றின் மத்திய கிழக்கு கூட்டாளிகள் லிபியா மீது குண்டுவீசி தாக்கியதில் பத்தாயிரக் கணக்கான லிபியர்கள் கொல்லப்பட்டார்கள், அதேவேளையில் அவை அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட இஸ்லாமிய போராளிகள் குழுக்கள், பழங்குடியின சக்திகள், மற்றும் கடாபி-ஆட்சியிலிருந்து விலகியவர்களின் தலைமையிலான பிரிவுகளை இணைத்து ஒரு ஒட்டுவேலையிலிருந்து உருவான ஒரு படையை அவற்றின் காலாட்படைகளாக ஆயுதமேந்த செய்திருந்தன.

கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டேயில் குண்டுமழை பொழிந்ததில் அமெரிக்க பினாமிப் படைகளால் அவர் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட பின்னர், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் CBS செய்திக்கு சிரித்துக் கொண்டே, “நாங்கள் வந்தோம்; பார்த்தோம், அவர் கொல்லப்பட்டிருந்தார்," என்று பெருமையோடு அதை விவரித்திருந்தார்.

லிபியாவிற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்ததைப் போலவே, ஆரம்பகட்ட ஏகாதிபத்திய தலையீட்டின் கொடூர மரணங்களும் பேரழிவுகளும் இன்னும் மேலதிகமான சீரழிவுகளுக்கு மட்டுமே களம் அமைத்துள்ளது. ஒரு சீரழிக்கப்பட்ட நாட்டின் தலைமைபீடத்தில், ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்த இஸ்லாமிய மற்றும் பழங்குடி போராளிகள் குழுக்களின் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு மேற்கத்திய-சார்பிலான கைப்பாவை ஆட்சியை நிறுவும் முயற்சி, அவமானகரமாக தோல்வியடைந்துள்ளது. 2012இல் பெங்காசியில் ஒரு இஸ்லாமிய போராளிகள் குழு, அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவென்ஸைப் படுகொலை செய்ததோடு, இப்போது திரிப்பொலியின் அமெரிக்க தூதரகத்தில் இருந்து அவமானகரமாக சமீபத்தில் தப்பியோடுவதற்கு முன்னதாக, மார்ச்சில் நடந்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி அமெரிக்க ஆதரவிலான பிரதம மந்திரி அலி ஜெய்தானை அந்நாட்டை விட்டு வெளியேற நிர்பந்தித்திருந்தது.

அதன் விளைவு என்னவென்றால் மத்திய கிழக்கில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த இரத்தந்தோய்ந்த தலையீட்டின் மீதான ஒரு குற்றப்பத்திரிக்கையாகும். அவர்களின் வெளியுறவு கொள்கையானது, அரசியல் கொள்ளைக்கூட்டத்தின் ஒரு சதிக்கூட்டத்தாலும், நிதியியல் மூலதனம் மற்றும் எண்ணெய் தொழில்துறையின் நலன்களுக்காக அல்லாடிக் கொண்டிருப்பவர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. லிபியாவில் கட்டவிழும் இரத்த ஆறை பார்த்துக் கொண்டிருந்த பின்னர், இறுதியாக, எந்தவொரு பிராந்திய போராளிகள் குழுக்கள் முதலிடத்திற்கு வருகின்றனவோ அவற்றோடு பேரம்பேச முடியும் என்று மேற்கத்திய அரசாங்கங்களும் எண்ணெய் நிறுவனங்களும் வெளிப்படையாக கணக்கிட்டு கொண்டிருக்கின்றன.

அதன் அருவருத்தக்க நடவடிக்கைகளின் பாகமாக, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மீண்டும் மீண்டும் அப்தெல்ஹாகிம் பெல்ஹாஜ் தலைமையிலான போராளிகள் குழுக்கள் போன்ற அல் கொய்தா-இணைப்பு கொண்ட சக்திகளோடு அணி சேர்ந்துள்ளன. இந்த அப்தெல்ஹாகிம் பெல்ஹாஜைத் தான் CIA சட்டத்திற்குப் புறம்பாக கொண்டு சென்று, “அசாதாரண ஒப்படைப்புக்கு" உள்ளாக்கியது, அதாவது கடாபிக்கு எதிராக அவரை ஒன்றிணைத்துக் கொள்வதற்கு முன்னால், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையில் அடைத்து வைக்க மீண்டும் அவரை லிபியாவிற்கு அனுப்பி வைத்தது, பின்னர் சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராக சண்டையிட அவரை அனுப்பி வைத்தது.

ஒருவேளை தப்பிக்க வேண்டியிருக்கும் என்று பாக்தாத்தின் இராணுவ தலைவர்கள் "அவர்களின் பெட்டிகளைக் கட்டியிருந்த" நிலையில், அல் கொய்தா-இணைப்பு கொண்ட சிரிய சுன்னி போராளிகள் குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இடையே, 2003-2011 அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் அமைக்கப்பட்ட ஈராக்கிய ஆட்சி பொறியும் நிலைக்கு வந்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாயின. லிபியாவைப் போலவே, ஈராக்கும் பேரழிவுக்குள்ளாக்கப்பட்டு, ஒரு உக்கிரமடைந்துவரும் உள்நாட்டு யுத்தத்திற்குள் மூன்று தரப்பினிடையே, அதாவது மேற்கில் உள்ள சுன்னி தரப்பு, ஈரானுக்கு நெருக்கமான ஒரு ஷியைட் அரபு அரசு மற்றும் வடக்கில் முற்றுகைக்குடபட்ட ஒரு குர்திஷ் அரசு ஆகியவற்றிடையே பிளவுபடுத்தப்பட்டு போயுள்ளது. இதுதான், அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பால் பயன்படுத்தப்பட்ட பிரித்தாளும் மற்றும் சூறையாடும் கொள்கையின் விளைபொருளாக இருக்கிறது.

இந்த கொள்கை, ஏகாதிபத்திய ஆளும் மேற்தட்டுக்களின் குணாம்சத்தை வெளிப்படுத்துகிறது: அதாவது குறிப்பாக பலவீனமான, எண்ணெய் வளம்மிக்க நாடுகளில், அவர்கள் எதையும் உருவாக்காமல், சூறையாடுவார்கள்; திருடுவார்கள்; மற்றும் பறித்துக் கொள்வார்கள். 1970இல் எண்ணெய் தொழில்துறையை தேசியமயமாக்கியதன் மூலம் வாழ்க்கை தரங்களை ஒரு கணிசமான உயர்விற்கு இட்டுச் சென்ற ஒரு முதலாளித்துவ தேசியவாதியான கடாபியின் ஆட்சி, ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு தடைக்கல்லாக இருந்தது. அவர்களின் நிலைப்பாட்டில் இருந்து, நூறு ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கையை விலையாக கோரும் ஓர் உள்நாட்டு போர் என்பது, ஈராக்கைப் போலவே லிபியாவிலும், அப்பிராந்தியத்தின் எண்ணெய்யை இலாபத்திற்காக சூறையாடுவதோடு சம்பந்தப்பட்ட வெறுமனே ஆரம்ப செலவுகளாகும்.

இந்த இரத்தந்தோய்ந்த நடவடிக்கை, மனித உரிமைகள் என்ற மோசடி பதாகையின் கீழ் எவ்வாறு தொகுக்கப்பட்டு பொதுமக்களிடம் வியாபாரம் செய்யப்பட்டது என்பதை நினைவுகூர்வது மதிப்புடையதாக இருக்கும். 2011இன் தொடக்கத்தில் துனிசியா மற்றும் எகிப்தில் மேற்கத்திய சார்பிலான சர்வாதிகாரிகளைப் பதவியிலிருந்து வெளியேற்றிய தொழிலாளர் வர்க்க எழுச்சிகளால் அதிர்ந்தும் மிரண்டும் போன ஏகாதிபத்திய சக்திகள், அந்நாடுகளுக்கு இடையில் இருந்த ஒரு நாடான லிபியாவில் அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு கைப்பாவை ஆட்சியை உருவாக்கும் ஒரு கருவியாக, ஆட்சி மாற்றத்திற்கான போரை வடிவமைக்க முனைந்தன.

அந்த போரை விற்பதில் உதவுவதற்கு, ஆளும் வர்க்கம் பல மத்திய வர்க்க போலி-இடது கட்சிகளையும் மற்றும் கல்வித்துறையில் இருந்த ஒத்துழைப்பாளர்களையும் பயன்படுத்தியது, அவர்கள் லிபியாவின் சூறையாடலுக்கு ஒரு "இடது" முகத்தை அளிக்க விரைந்தார்கள்கடாபிக்கு எதிரான ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்துவதன் மூலமாக ஒடுக்குமுறையை எதிர்த்து போராடி வருவதாக அவர்கள் யாரைக் குறிப்பிட்டார்களோ அந்த எதிர்ப்பு சக்திகளைப் பாதுகாக்க, லிபியாவில் நடந்த சூறையாடலை ஒரு மனிதாபிமான போராக புகழ்ந்தார்கள்.

நேட்டோ யுத்தத்தைத் தொடங்கியதும், பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) "லிபிய புரட்சியை ஆதரிப்போம்! கடாபியை வெளியேற்றுவோம்," என்றவொரு அறிக்கையைப் பிரசுரித்தது, அந்த அறிக்கை லிபியாவில் "மக்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான மரணப் போராட்டம்" என்று அதை பாராட்டியது.

அமெரிக்காவில், லிபியாவில் ஏகாதிபத்திய தலையீட்டிற்கு எதிராக, WSWSஐ போலவே, ஒரு கோட்பாட்டுரீதியிலான நிலைப்பாட்டை எடுத்தவர்களை, மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜூவான் கோல் குற்றஞ்சாட்டினார். “ஒரு முட்டாள்தனமான வழியில் ஏனைய எல்லா மதிப்புகளையும் விட 'ஏகாதிபத்திய எதிர்ப்பை" ஒரு துருப்புச்சீட்டாக்க முயல்வது மிக வெளிப்படையாக அர்த்தமற்ற நிலைப்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது," என்று எழுதிய கோல், தொடர்ந்து குறிப்பிடுகையில்: “நேட்டோவிற்கு நான் தேவைப்பட்டால், நான் அதனோடு இருக்கிறேன்," என்று எழுதினார்.

லிபிய கிளர்ச்சியின் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கான அவர்களின் திவாலாகி போன நியாயப்படுதலின் வலதுசாரி குணாம்சத்தை மூடிமறைக்கும் இத்தகைய சக்திகளை WSWS, அப்போது, அம்பலப்படுத்தி காட்டியது. ஏகாதிபத்தியத்தின் மீது WSWSஇன் கோட்பாட்டுரீதியிலான எதிர்ப்பு, லிபியாவில் நடக்கும் இரத்தந்தோய்ந்த பேரழிவால் முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, அந்த பேரழிவுக்கு NPA மற்றும் பேராசிரியர் கோல் போன்ற இந்த சக்திகளே அரசியல்ரீதியாக பொறுப்பாகின்றன.

2012இல், குறுகிய காலமே நிலைத்திருந்த ஜெய்டனின் கைப்பாவை ஆட்சியை வாஷிங்டன் லிபியாவில் கொண்டு வந்த போது, கோல் யுத்தத்தை எதிர்த்தவர்களை ஏளனஞ் செய்ததோடு, அதன் விளைவுகளைக் குறித்தும் எச்சரித்தார், அவர்களை கடாபியின் ஆதரவாளர்களாக பழிதூற்றினார். திரிப்போலி விமான நிலையத்தில் லிபிய போராளிகள் குழுக்களால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஒரு நூலிழையில் தப்பித்து லிபியாவிற்கான அந்த விஜயத்திலிருந்து திரும்பியதும், அவர் அந்த சம்பவத்தை நகைச்சுவையாக கூறி சிரித்து, லிபியாவின் சூறையாடலை இன்னும் பிரகாசமான நிறங்களில் சித்தரித்தார்.

கோல் எழுதினார்: “லிபியாவைக் குறித்து ஒருவித அவதூறான கட்டுக்கதை நிலவுகிறது, அதாவது ஏதோ அதுவொரு தோல்வியுற்ற அரசாக மாறியிருப்பதாகவும், குழப்பத்தில் இருப்பதாகவும், எங்கெங்கிலும் ஆயுதமேந்திய போராளிகள் இருப்பதாகவும், ஒவ்வொருவரும் ஒரு பிரிவினைவாதியாகவும், ஒரு இடைகால அரசாங்கம் ஒன்றுமே செய்யாமல் இருப்பதாகவும், துணை-சஹாரா ஆபிரிக்க மரபுவழி மக்கள் வீதிகளில் தொந்தரவிற்கு உள்ளாகி வருவதாகவும், இன்னும் இது போல பலவாறாக இருக்கிறது. இந்த அவதூறான கட்டுக்கதை கடாபி ஆட்சியின் எச்சசொச்சங்களாலும் மற்றும் அவர் மீது மதிப்பு வைத்திருக்கும் மேற்கில் இருப்பவர்களாலும், வெளிப்படையாக கவலை கொண்டிருக்கும் மத்தியதர வர்க்க லிபியர்களாலும் ஊக்குவிக்கப்படுகின்றன... லிபியா சோமாலியாவைப் போல இல்லை! அது யேமனைப் போலவும் கூட இல்லை," என்றார்.

யுத்தத்திற்குப் பிந்தைய லிபியாவின் கொடூரமான எதார்த்தத்தைக் குறித்த இந்த பொய்மைப்படுத்தல், போலி-இடது அரசியலின் கோழைத்தனத்தின் மற்றும் முட்டாள்தனத்தின் சாராம்சமாகும், அது உயர்-மத்தியதர வர்க்கத்தினது தனிச்சலுகை படைத்த, ஏகாதிபத்திய-சார்பு பிரிவுகளின் நலன்களை வெளிப்படுத்துகிறது. அவை உருவாக்கி உள்ள பல்வேறு பேரழிவுகள் எதிலிருந்தும் எந்தவொரு பாடங்களையும் எடுத்துக்கொள்ளாமல் இத்தகைய சக்திகள், இப்போது சிரியாவிலும் உக்ரேனிலும் இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய தலையீடுகளை ஜனநாயக மற்றும் மனிதாபிமானத்திற்கான நடவடிக்கைகளாக ஊக்குவித்து வருகின்றன.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் மேலும் ஒரு கட்டுரை:

பேராசிரியர் ஜூவான் கோல் விவகாரம்
[1 April 2011]