சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan ex-radical calls for a JVP presidential candidate

இலங்கை முன்னாள் தீவிரவாதி, ஜேவிபீ ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு அழைப்புவிடுக்கின்றார்

By K. Ratnayake
13 May 2014

Use this version to printSend feedback

ஒரு முன்னாள் மத்தியதர வர்க்க தீவிரவாதியாக இருந்து இராஜதந்திரியாக மாறிய மற்றும் இலங்கை ஸ்தாபகத்தின் அரசியல் ஆலோசகரான தயான் ஜயதிலக, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபீ) புதிய தலைவர் அனுர குமார திசாநாயக்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க் கட்சி வேட்பாளராக இருக்க வேண்டும் என்று பிரேரித்துள்ளார். அரசியலமைப்பின்படி 2016 வரை தேர்தல் நடத்த முடியாவிட்டாலும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2015 முற்பகுதியில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் ஊகம் தெரிவித்துள்ளன.

ஒரு மாணவராக, 1970களில் மாவோவாதம் மற்றும் காஸ்ட்ரோவாதத்தை தழுவிய ஜயதிலக, 1980களில் ஆயுதம் தாங்கிய தமிழ் பிரிவினைவாத குழுவான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் (EPRLF) சேர்ந்தார். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவர் கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தில் தன்னை ஒருங்கிணைத்துக்கொண்டுள்ளார். முதலில் 1980களின் பிற்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ) ஜனாதிபதி ஆர். பிரேமதாசவுக்கு ஆலோசகராக இருந்து சமீபத்தில் ஒரு சிரேஷ்ட இராஜதந்திரியாகியுள்ளார்.

2007ல் இராஜபக்ஷ அவரை ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமித்தார். அங்கு அவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இந்த வேலை கூருணர்வு கொண்டதாக இருந்தது. அவர், பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகள் 2009ல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இராணுவத்தின் யுத்த குற்றங்கள் பற்றிய விசாரணையை கோரி அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்திற்கு எதிராக, ஐநா மனித உரிமைகள் சபையில் (UNHRC) இராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க நேர்ந்தது. 2009ல் ஒரு யுஎன்எச்ஆர்சி தீர்மானத்தை தடுத்த அவர், இராஜபக்ஷவுடன் முரண்பட்டுக்கொண்டதை அடுத்து, பாரிசுக்கு மாற்றப்பட்டார். பின்னர் பதவி விலக்கப்பட்டார். அதிலிருந்து அவர் அரசாங்கத்தின் ஒரு வாய்மூல எதிர்ப்பாளர் ஆனார்.

இராஜபக்ஷவின் குடும்ப ஆட்சிவாதம் மற்றும் எதேச்சதிகார ஆட்சி வழிமுறையாலும் தமது நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளதை காணும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்காக ஜயதிலக பேசுகிறார். அவர்கள், சமூக பதட்ட நிலைமகள் ஏற்கனவே வெடிக்கும் கட்டத்தில் இருக்கும்போது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையை ஸ்தாபித்துள்ள, மார்ச் மாதம் அமெரிக்க ஆதரவுடன் யுஎன்எச்ஆர்சியில் புதிதாக முன்வைக்கப்பட்ட தீர்மானமானது தனிமைப்படுத்தல், கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றனர்.

"மனித உரிமைகள்" பற்றிய வாஷிங்டனின் போலியான கவலை, பெய்ஜிங்கிடம் இருந்து தானே ஒதுங்கிக்கொள்ள இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாகும் என்பதை ஜயதிலக நன்கு அறிவார். அவர் ஒரு மேற்கு நோக்கிய மாற்றத்தையும் இலங்கை தமிழ் மேல்தட்டினர் உடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண சுயாட்சியை வழங்குவதன் மூலம் புது டெல்லியுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வாதிடுகிறார்.

"2015 தேர்தல் : பணையம் வைக்கப்பட்டுள்ளவை," என்ற தலைப்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், இராஜபக்ஷவின் கீழ் இலங்கை ஒரு பேரழிவை நோக்கி நகர்கிறது என்று ஜயதிலக எச்சரிக்கிறார். இராஜபக்ஷ அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், அது "கிட்டத்தட்ட நிச்சயமாக வாய்ப்புகளை மீண்டும் திறக்கவும் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்குமான அவகாசங்களை முறியடித்துவிடும்." தன்னாட்சி உரிமையை கொடுக்க இராஜபக்ஷ தயாராக இல்லாததால், இலங்கை அரசின் " வடகிழக்கு பிராந்தியத்தில் பிளவு ஏற்பட்டு நாடு பிரிவதற்கு வழி வகுக்கும்." வளர்ந்துவரும் சமூக அமைதியின்மையை மறைமுகமாக குறிப்பிடுகையில், " [உழைக்கும் மக்களின்] அராஜகமும் [அரசாங்கத்தின்] அடக்குமுறையும் தெற்கில் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் என ஜயதிலக அறிவிக்கின்றார்.

வேறு ஒரு கட்டுரையில், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பற்றி ஜயதிலக ஆராய்கிறார், ஆனால் அவரது முடிவு கவனத்தை ஈர்க்கின்றது. பேரழிவை தடுக்க தேவையானது எதுவெனில், ஹசன் ரௌஹானி வகையிலான வேட்பாளராகும் : ஒரு நியாயமான தேசபக்தர் / தேசியவாதி, அதாவது தாராண்மைவாத அல்லது முற்போக்கான சிங்கள பௌத்தர். வலதுசாரி யூஎன்பீயின் தலைவர் ஒருவர் அல்லது மற்றொரு "பொது வேட்பாளர்" இராஜபக்ஷவுக்கு பொருந்த மாட்டார் என அவர் வலியுறுத்துகிறார்.

ரௌஹானி பற்றிய குறிப்பு குறிப்பிடத்தக்கது. இது, இராஜபக்ஷவின் கீழ் இலங்கையும், ஒரு போக்கிரி நாடு என்று வாஷிங்டன் வகைப்படுத்திய ஈரான் போன்று, அதே பாதையிலேயே முடிவடையும் என அங்கீகரிப்பதாகும். ஈரான் மீதான சர்வதேச பொருளாதார தடைகளுக்கு முடிவு கட்டும் முயற்சியில், வாஷிங்டனுடன் ஒரு நல்லிணக்கத்தை அடைவதோடு சந்தை சார்பு மறுசீரமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு அலையை கட்டவிழ்த்துவிட, கடந்த ஆண்டு ஈரானின் ஜனாதிபதியாக ரௌஹானி நியமிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஒரு இலங்கை ரௌஹானிக்கு வக்காலத்து வாங்கும் ஜயதிலக, ஜேவிபீயின் தலைவரை முன்கொணர்கின்றார். வரம்புக்கு வெளியே இடது எதிர்ப்பில் இருந்து ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அணுர குமார திசாநாயக்க- சூழ அணிதிரள்வதன் மூலம் நாட்டுக்கு பெரும் சேவை கிடைக்கும். இராஜபக்ஷ இராஜ்ஜயத்துக்கு ஒரு மிக கடுமையான, ​​தார்மீக மற்றும் கருத்தியல் சவாலாக நான் அவரை கருதுகின்றேன்," என அவர் அறிவிக்கின்றார் .

"அவரது [இராஜபக்ஷவின்] வெற்றி இலக்கு சரியுமானால், பாராளுமன்ற தேர்தலில் மேலாதிக்கங்கள் விழத் தொடங்கும்," என ஜயதிலக பிரகடனம் செய்கின்றார். இராஜபக்ஷ தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் அரசியலமைப்பை மாற்றும் அதிகாரத்தையும் இழந்துவிடுவார். "இது இராஜபக்ஷவை சுற்றியுள்ள நிதிப்பிரபுத்துவத்தின் அதிகாரத்தை குறைப்பதை சாத்தியமாக்கும். இதன் விளைவாக மீண்டும் திரும்பும் விவேகம் மற்றும் யதார்த்தமும் அயல் நாடுகளுடனும் மற்றும் உலகத்துடனுமான இலங்கையின் உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்து வைக்கும்."

ஜேவிபீ பக்கம் மீண்டும் திரும்புவது உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஜேவிபீ ஸ்ராலினிசம், காஸ்ட்ரோவாதம், சிங்கள ஜனநலவாதம், ஏகாதிபத்திய விரோத வெற்று வாய்ச்சவடால் மற்றும் "ஆயுத போராட்டத்தை" முன்னிலைப்படுத்துவதனதும் ஒரு கலவையை அடிப்படையாகக் கொண்டு, 1960 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டதுஅது 1971ல் வழிநடத்திய ஒரு பேரழிவுகரமான ஆயுத எழுச்சி ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டதில் குறைந்தது 15,000 சிங்கள கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

1980ல் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் வெடித்ததை அடுத்து, ஜேவிபீ அதன் மார்க்சிச பாசாங்குகளை கைவிட்டுவிட்டு முற்றிலும் வலதுபக்கம் மாறியதோடு இராணுவத்துக்கு ஆதரவுகொடுத்தது. 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான அதன் "தேசப்பற்று" பிரச்சாரத்தில், தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் மீது அதன் துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட பாசிச தாக்குதல்களும் அடங்கும்.

ஜயதிலகவைப் போல், ஜேவிபீயும் நீண்ட நாட்களாக அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடனும் நட்புறவை பேணி வருகின்றது. 2004ல், ஜேவிபீ இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னோடியான சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து, மூன்று அமைச்சு அதிகாரங்கைள பெற்றதோடு சந்தை-சார்பு மறுசீரமைப்புக்கும் ஆதரவளித்தது .

ஜேவிபீ 2005 தேர்தலில் இராஜபக்ஷவுக்கு செயலளவில் பிரச்சாரம் செய்ததுடன் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை அவர் கிழித்தெறிந்து 2006ல் உள்நாட்டு யுத்தத்தை புதுப்பித்ததற்கும் ஆதரவளித்தது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதிலும், ஜேவிபீ யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததுடன் இராணுவத்தின் அட்டூழியங்களையும் மற்றும் "தாய்நாட்டை காக்க" என்ற பெயரில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் நசுக்கப்பட்டதையும் நியாயப்படுத்தியது.

ஜேவிபீ "நமது நோக்கு" என்ற தலைப்பில் "ஒரு புதிய கொள்கை கட்டமைப்பைபெப்பிரவரியில் அறிவித்துள்ளது. ஜனநாயகம் மற்றும்நியாயம் பற்றிய சொற்றொடர்களுக்குப் பின்னால், அந்தக் கட்சி முதலீட்டாளர்களின் பொருத்தமான பாதுகாவலனாகவும் "நவீன மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தின் வாகனமாகவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கின்றது. ஆவணம் ஒரு கட்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே, அது அதை இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் பெருவணிக பிரதிநிதிகளிடம் முன் அனுமதிக்காக வழங்கியுள்ளது. ஆளும் வட்டங்களில் உள்ளவர்களுடனான தனது உறவுகளால் பேர்போன திசாநாயக்க, அதே மாநாட்டில் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த சாதனைகளுக்குப் பின்னரும், இலங்கை ஆளும் உயரடுக்கின் பிரிவுகள், அதிகாரத்தின் உச்சியில் இருத்துவதற்கு இன்னமும் ஜேவிபீ பரீட்சிக்கப்படவில்லை என்று கருதுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. மார்ச் மாதம் ஒரு கட்டுரையில், கட்டமைப்புக்கு வெளியேஎன்ற தனது யோசனை முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்க பொருத்தமான ஒரு வழிமுறையா என்பது பற்றி சந்தேகமுடையவர்களுக்கு புரிய வைப்பதற்காக, ஜயதிலக இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவத்தின் அனுபவத்தை அவர்களுக்கு சுட்டிக் காட்டினார்.

"அதன் புதிய இளம் தலைவர் [திசாநாயக்க] மூலம் ஜேவிபீ புதுப்பிக்கப்படுவது, லத்தீன் அமெரிக்காவில் முன்னாள்-புரட்சிகர குழுக்களின் தேர்தல் மறுமலர்ச்சியை மனதில் கொண்டுவருகிறது" என்று ஜயதிலக எழுதினார் . "இலங்கை நெருக்கடியின் அவசரத்தைப் பொறுத்தளவில், லத்தீன் அமெரிக்க ஜனநலவாத-ஜனநாயக இடதின் வெற்றிகரமான பாதையில், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஜேவிபீயை மையப்படுத்திய பரந்த ஒரு எதிர்ப்புத் திட்டத்துக்கு... சமுதாயம் சில அடிகள் இடதுபக்கமாக நகர்த்தப்படலாம் நகர்த்தப்பட வேண்டும்- எனக் கூறுவதில் எனக்கு தயக்கம் கிடையாது.

தசாப்த கால யுத்தம், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கு பின்னர், வருவுள்ள சமூக கொந்தளிப்பு பற்றி ஆளும் வட்டாரங்களில் அச்சம் அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவின் பக்கம் திரும்புவதும் சீனாவை விட்டு விலகுவதும் தவிர்க்க முடியாமல் மலிவான கடன்கள் பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதோடு இன்னும் சிக்கன நடவடிக்கைகளை உக்கிரமாக்க நெருக்கும். அரசாங்க கட்சிகள் மற்றும் யுஎன்பீ போன்ற எதிர் கட்சிகளில் இருந்து மக்கள் பரந்தளவில் அந்நியப்படுகின்ற நிலையில், வலது பக்கமாக சில அடிகள் திரும்பி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கு ஜேவிபீயில் தங்கியிருக்குமாறு ஜயதிலக ஆளும் வர்க்கத்திற்கு ஆலோசனை தெரிவிக்கின்றார்.

ஜேவிபீயின் முழு வரலாறும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். அது இலங்கை முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற பாதுகாவலனாக இருக்கும்.