சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US defense secretary menaces China at Singapore forum

அமெரிக்க பாதுகாப்பு செயலர் சிங்கப்பூர் விவாத கூட்டத்தில் சீனாவை அச்சுறுத்துகிறார்

By Peter Symonds
2 June 2014

Use this version to printSend feedback

சனியன்று சிங்கப்பூரில் வழங்கிய ஓர் அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் உரையில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல், "தென் சீனக் கடலில் உரிமை கோரி வலியுறுத்தும் அதன் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளுக்காகவும், ஸ்திரப்பாட்டைக் குலைப்பதற்காகவும்" சீனாவை நேரடியாக குற்றஞ்சாட்டியதோடு, “சர்வதேச ஒழுங்கமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும்போது அமெரிக்கா வேறு பாதையைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்றும் எச்சரித்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய பாதுகாப்பு விவாதக் கூட்டமான ஷாங்க்ரி லா பேச்சுவார்த்தையில் (Shangri-La Dialogue) ஹாகெல் வழங்கிய உரை, சர்ச்சைக்கு இடமில்லாத விதத்தில் ஆசியாவில் அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்க விரும்புகிறது மற்றும் அதற்காக அது அதன் இராணுவ பலத்தைக் கூட பயன்படுத்தும் என்பதற்கு ஒரு பகிரங்கமான மற்றும் நேரடியான அறிக்கையாக அமைந்திருந்தது. சீனாவிற்கு குழி பறிக்கும் மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட ஒரு ஆக்ரோஷமான மூலோபாயமான ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்கு" அல்லது "மறுசமன்" (rebalance) செய்வதற்கான வாஷிங்டனின் பொறுப்புறுதியை ஹாகெல் மீண்டும் உறுதிப்படுத்தினார். மறுசமன் செய்தல் என்பது "ஒரு இலக்கு அல்ல, ஒரு வாக்குறுதி அல்ல, அல்லது ஒரு நோக்கமல்ல — அதுவொரு யதார்த்தம்,” என்று அவர் அறிவித்தார்.

அப்பிராந்தியம் முழுவதிலும் இராணுவ உறவுகளைப் பலப்படுத்த ஒபாமா நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கைகளை ஹாகெல் அவரது உரையினூடாக பட்டியலிட்டார். வியட்நாம் மற்றும் மலேசியா உடனான புதிய மூலோபாய கூட்டுறவு, பிலிப்பைன்ஸில் அமெரிக்க படைகளை நிறுத்துவது மீதான உடன்படிக்கை கையெழுத்தானது, ஜப்பானில் அதிநவீன அமெரிக்க இராணுவ தளவாடங்களைக் கட்டியமைப்பது, ஆசியாவில் ஏவுகணை-தடுப்பு சாதனங்களை விஸ்தரிப்பது, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட முக்கிய பங்காளிகளுடன் பெரியளவில் இராணுவ கூட்டுழைப்பு ஆகியவையும் அந்த பட்டியலில் உள்ளடங்கி இருந்தது.

ஆசியாவில் வேகமான அமெரிக்க இராணுவ கட்டமைப்பானது, அதன் "முன்னெடுப்பு" முற்றிலும் அமைதி மற்றும் ஸ்திரப்பாட்டைத் தக்க வைப்பதற்கானது மற்றும் சீனாவிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதல்ல என்ற ஒபாமா நிர்வாகத்தின் வாதங்களைக் கேலிக்கூத்தாக்குகிறது. ஹாகெல் மீண்டும் உறுதிப்படுத்தியதைப் போல, 2020 வாக்கில், அமெரிக்கா அதன் வான்வழி மற்றும் கடல்வழி இராணுவ உபகரணங்களில் 60 சதவீதத்தை ஆசிய பசிபிக்கில் நிலை நிறுத்தி இருக்கும். வெளிநாட்டு இராணுவ நிதிகளை 35 சதவீத அளவிற்கு அதிகரிப்பதன் மூலமாக மற்றும் 2016க்குள் இராணுவ கல்வியூட்டல் மற்றும் பயிற்சிகளை 40 சதவீதத்திற்கு அதிகரிப்பதன் மூலமாக பெண்டகன் அதன் பங்காளிகள் மற்றும் மூலோபாய கூட்டாளிகளுக்கான ஆதரவை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.

ஹாகெல் மரபார்ந்த இராஜாங்க விபரங்களைப் பரிமாறியதோடு, தென் சீன கடலில் சீனாவின் நடவடிக்கைகளைக் குறித்து அதை பகிரங்கமாக தாக்கினார். பெய்ஜிங் அச்சுறுத்துவதாகவும், கட்டாயப்படுத்துவதாகவும்" குற்றஞ்சாட்டி, அவர் அறிவித்தார்: “அது ஸ்கார்பரோ ரீஃப் தீவுகளை (Scarborough Reef) அணுகுவதற்கு தடை செய்துள்ளது, இரண்டாவது தோமஸ் ஷோலில் (Second Thomas Shoal) பிலிப்பைன்ஸின் நீண்டகால இருப்பிற்கு அழுத்தம் அளித்தது, பல்வேறு இடங்களிலும் நில சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்கியது, மற்றும் பாரசெல் தீவுகளுக்கு அருகில் [வியட்நாமுடன்] சர்ச்சைக்குரிய கடல்வழியில் உள்ள எண்ணெய் கிணறை நோக்கி நகர்ந்தது,” என்று பட்டியலிட்டார்.

யதார்த்தத்தில், அமெரிக்கா தான், திட்டமிட்டு சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கும் விதத்தில் இத்தகைய நீண்டகால எல்லை பிரச்சினைகளைத் தூண்டிவிட்டுள்ளது. 2010இல், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், தென் சீனக் கடலில் "சுதந்திரமான கடல்வழி போக்குவரத்தை" உறுதிப்படுத்துவதில் அமெரிக்காவிற்கு "ஒரு தேசிய நலன்" இருப்பதாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) மாநாட்டில் ஆத்திரமூட்டும் விதத்தில் அறிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில், வாஷிங்டன் ஆசியான் நாடுகளை, அதுவும் குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை, சீனாவிற்கு எதிராக அவற்றின் உரிமை கோரல்களுக்கு அழுத்தம் அளிக்க ஊக்குவித்துள்ளது. அதன் விளைவாக, அடிமட்ட பிராந்திய பிரச்சினைகள் யுத்தத்திற்கான அபாயகரமான சர்வதேச வெடிப்பு புள்ளிகளாக மாறி உள்ளன.

ஒரு நிலையான பிராந்திய ஒழுங்கமைப்போடு ஐக்கியப்படுவது மற்றும் மறு-பொறுப்பேற்பது அல்லது ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை ஆபத்திற்குட்படுத்துவது என ஏதாவதொரு வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்து, ஹாகெல் பெய்ஜிங்கிற்கு இறுதி எச்சரிக்கைக்கு சமனானதொன்றை அறிவித்தார். ஏப்ரலில் அவரது ஆசிய சுற்றுப் பயணத்தின் போது ஜனாதிபதி ஒபாமா, சர்ச்சைக்குரிய எல்லைகள் மீது சீனா உடனான எந்தவொரு யுத்தத்திலும் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார்.

ஹாகெலின் உரை, சீனாவை அச்சுறுத்த மற்றும் பொறியில் சிக்க வைப்பதற்கான ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் இருந்த ஒன்றிணைந்த பிரச்சாரத்தின் பாகமாக இருந்தது. அவரது கருத்துக்கள் அமெரிக்க பசிபிக் படைபிரிவின் தளபதி அட்மிரல் சாமுவேல் லோக்லியர் (Samuel Locklear) போன்ற உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளால் மட்டும் எதிரொலிக்கப்படவில்லை, அத்தோடு ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி டேவிட் ஜோன்ஸ்டன் உட்பட முக்கிய ஆசிய பங்காளிகளின் பிரதிநிதிகளாலும் எதிரொலிக்கப்பட்டது.

கடந்த வெள்ளியன்று நிகழ்த்திய ஒரு முக்கிய உரையில் அபே அறிவித்தார்: ஆசியாவிலும், உலகம் முழுவதிற்குமான பாதுகாப்பு விவகாரங்களில் "ஜப்பான் இன்னும் பெரியளவில் மற்றும் இன்னும் உயிரோட்டமான பாத்திரத்தை வகிக்க விரும்புகிறது.” “கடல்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மற்றும் சுதந்திர கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தைக் உறுதியாக தக்க வைப்பதில் ஆசியான் அங்கத்துவ நாடுகளின் முயற்சிகளுக்கு ஜப்பானின் முழு ஆதரவை" அவர் அறிவித்தார்.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவிற்கு ரோந்து படகுகளை வழங்கியும், வியட்நாமை அதே போல செய்ய வைக்க அதனுடன் ஒரு உடன்படிக்கைக்கு அழுத்தம் அளித்தும், அமெரிக்காவைப் போல, ஜப்பானும் தென் சீன கடலின் பிரச்சினைகளில் நேரடியாக தலையீடு செய்து வருகிறது. சீனாவைக் குறி வைத்து அபே அறிவித்தார்: “உலகம் எதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறதென்றால், நமது கடல்வழிகளும், வான்வழிகளும் சட்டங்கள், விதிகள் மற்றும் ஸ்தாபிக்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டு ஆளப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்,” என்றார்.

அபேயின் கருத்துக்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும். கிழக்கு சீன கடலில் சென்காயு/தியாவு தீவுகள் விவகாரத்தில், “பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப்" (dispute resolution procedures) பொருத்தமற்றதாக செய்ய, சீனாவுடன் ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை கூட ஒப்புக்கொள்ள அவர் மறுத்து வருகிறார். டிசம்பர் 2012இல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, இராணுவ வரவுசெலவு கணக்குகளை அதிகரித்ததோடு, ஜப்பானிய இராணுவத்தின் மீதிருந்த அரசியலமைப்புரீதியிலான கட்டுப்பாடுகளை நீக்கியது உட்பட ஜப்பானின் மீள்இராணுவமயமாக்கலை நியாயப்படுத்த அபே எல்லை பிரச்சினைகளைப் பயன்படுத்தி உள்ளார்.

ஷாங்க்ரி-லா விவாத கூட்டத்தில் ஹாகெல் மற்றும் அபேயின் உரைகள் அங்கிருந்த சீன அதிகாரிகளைக் குத்தும் நோக்கத்தோடு கணக்கிடப்பட்டன. இராணுவ துணை தலைவரும் மற்றும் சீன பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான லெப்டினென்ட் ஜெனரல் வாங் கோன்ஜ்ஹாங், ஹாகெலின் உரையை "முற்றிலும் அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் மொழியில்" இருப்பதாகவும், “முற்றிலும் ஆக்கபூர்வமற்றதாகவும்" மற்றும் "முழுவதும் மேலாதிக்கம் கொண்டதாகவும்" முத்திரை குத்தி, திருப்பி தாக்கினார்.

ஹாகெலும், அபேயும் "ஒன்று சேர்ந்து ஒரே குரலில் பாடுவதாக" தோன்றுகிறது என்று வாங் அறிவித்தார். “பல பேர் இடம் பெற்றிருக்கும் இதுபோன்ற பொது இடத்தில், எந்தவித காரணமும் இல்லாமல் சீனாவை பகிரங்கமாக விமர்சிப்பதில் செயலர் ஹாகெலின் உரை, முழுவதும் ஊக்குமூட்டுவதாகவும், தொந்தரவுகளை வளர்த்து விடும் வகையில் ஆசிய பிராந்தியத்தின் ஸ்திரமின்மையைத் தூண்டிவிடுவதாகவும் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் விவாத கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளின் சீனாவிற்கு எதிரான சுற்றி-வளைப்பு, ஆசியாவில் யுத்தத்திற்கான ஒபாமா நிர்வாக உந்துதலில் குறிப்பிடத்தக்க தூண்டுதலாக அமைந்துள்ளது. உக்ரேனில் அது ரஷ்யாவுடன் ஒரு மோதலில் ஈடுபட்டிருக்கின்ற போதினும் கூட, ஹாகெலின் யுத்தம் நாடும் மொழியானது, அமெரிக்கா சீனாவின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க மற்றும் ஆசியாவில் அதன் இராணுவ கட்டமைப்பைத் தொடர தீர்மானகரமாக இருப்பதைக் குறித்துக் காட்டுகிறது.

ஹாகெல் தென் கிழக்கு கடல் மீது கவனத்தைக் குவித்தமை ஏதோ தற்செயலானதல்ல. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா எதை சார்ந்துள்ளதோ அந்த தென் கிழக்கு ஆசியா வழியாக உள்ள முக்கிய கடல் வழிகளின் மீது கட்டுப்பாட்டை பெறுவது, சீனாவிற்கு எதிரான பெண்டகனின் யுத்த திட்டங்களில் உள்ள ஒரு முக்கிய உட்கூறாகும். ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான அதன் நெருக்கமான ஒத்துழைப்போடு, சீனாவின் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தை முடமாக்கும் நோக்கில் அதன் மீது ஒரு முற்றுகையைக் கொண்டு வர அமெரிக்கா தன்னைத்தானே நிலைப்படுத்தி கொண்டு வருகிறது.