சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australia, Japan forge closer military ties

ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் நெருக்கமான இராணுவ உறவுகளை ஏற்படுத்துகின்றன

By Peter Symonds
14 June 2014

Use this version to printSend feedback

இந்த வாரம் 2+2 என்றழைக்கப்படும் பேச்சுவார்த்தைகளுக்காக டோக்கியோவில் கூடிய ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள், ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஒரு நிகழ்ச்சிநிரலைக் கட்டமைத்தனர். ஒபாமா நிர்வாகம் சீனாவிற்கு எதிரான அதன் யுத்த தயாரிப்புகளினது மற்றும் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக அவ்விரு கூட்டாளிகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகளை ஊக்குவித்து வந்துள்ளது.

இந்த புதன்கிழமை சந்திப்பு, ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் மற்றும் அவரது ஜப்பானிய எதிர்தரப்பான ஷின்ஜோ அபேக்கும் இடையே ஏப்ரலில் நடந்த ஒரு சந்திப்பை தொடர்ந்து நடந்ததாகும், அந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையே மூலோபாய கூட்டுறவுகளை மேம்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இராணுவ உறவுகளை ஜோடிப்பதிலும் ஜப்பானிய இராணுவ தளவாடங்களை விற்பதற்கும் உள்ள அரசியலமைப்புரீதியான தடைகளை முடிவுக்கு கொண்டு வருவது உட்பட ஜப்பானை மீள்இராணுவமயமாக்கும் அவரது முயற்சிகளுக்கு முன்னோக்கி அழுத்தம் அளிக்க அபே ஆஸ்திரேலியாவுடனான இராணுவ உறவுகளின் அபிவிருத்தியை பயன்படுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலியா பிஷாப் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி டேவிட் ஜோன்ஸ்டன் இருவருமே, "ஒருங்கிணைந்த சுய-பாதுகாப்பை" அனுமதிக்கும் வகையில் ஜப்பானின் அரசியலமைப்பிற்கு "மீள்-விளக்கத்தை" —அதாவது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஜப்பான் ஈடுபடுவதற்கானஅபேயின் திட்டங்களுக்கு பகிரங்கமாக ஒப்புதல் கொடுத்தார்கள். “ஜப்பான் உலகளவிலும் மற்றும் பிராந்தியளவிலும் ஒரு பெரும் பாத்திரம் வகிப்பதற்கு உதவும் வகையில் முழு இராணுவ கொள்கையை நோக்கி ஜப்பான் வேலை செய்து வருவதை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்,” என்று பிஷாப் டோக்கியோவில் அறிவித்தார்.

டிசம்பர் 2012இல் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே அபே "முழு இராணுவ கொள்கைக்கு" அழுத்தம் அளித்துள்ளார். அவர் ஏற்கனவே இராணுவ வரவு-செலவு திட்டத்தை அதிகரித்திருப்பதோடு, ஒரு தேசிய பாதுகாப்பு குழுவையும் உருவாக்கி, இராணுவ ஏற்றுமதிகளின் மீதிருந்த தடைகளைத் தளர்த்தி உள்ளார். கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் அபே குறிப்பிடுகையில், ஆஸ்திரேலியாவுடன் "ஒரு புதிய சிறப்பு உறவைக்" கட்டியமைக்கும் அவரின் முயற்சிகளைக் குறிப்பாக குறிப்பிட்டுக் காட்டி, ஜப்பான் ஆசியாவில் "இன்னும் அதிகமாக மற்றும் இன்னும் செயல்திறனுக்கு-சார்பான பாத்திரம்" வகிக்கும் என்று குறிப்பிட்டார். அபே அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

விரிவாக்கப்பட்ட பயிற்சி மற்றும் ஒத்திகைகள், சிப்பாய்களின் பரிமாற்றங்களில் அதிகரிப்பு, அமெரிக்கா உடன் பெரியளவிலான முத்தரப்பு கூட்டுறவு, மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை உட்பட இராணுவ உறவுகளைக் கட்டமைக்க அவ்விரு நாட்டு மந்திரிகளும் அவரவர்களுக்குரிய தலைவர்களோடு கலந்தாலோசித்து "பரிந்துரைகளின் தொகுப்பை" அபிவிருத்தி செய்துள்ளதாக இந்த வாரத்தின் 2+2 பேச்சுவார்த்தைகளின் கூட்டறிக்கை அறிவித்தது.

ஜப்பானுடனான நெருக்கமான உறவுகள் சீனா உடனான உறவுகளைப் பாதிக்காது என்று பாதுகாப்பு மந்திரி ஜோன்ஸ்டன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “சீனாவுடன் நாங்கள் மிகவும் நெருக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமான உறவைக் கொண்டுள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், இதுபோன்ற அர்த்தமற்ற அறிவிப்புகள் பெய்ஜிங்கில் மிக மிக குறைந்தபட்ச நபர்களைத் தான் முட்டாளாக்கும்.

கிழக்கு சீனக் கடலில் ஜப்பானுடனும், தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுடனும் பிராந்திய பிரச்சினைகளில் பதட்டங்களை அதிகப்படுத்தி வருவதற்காக அந்த அறிக்கை வெளிப்படையாவே சீனாவைக் குற்றஞ்சாட்டியதோடு, அனைத்து தரப்பும் "சர்வதேச சட்டத்திற்கு இணங்க உரிமைகோரல்களை பின்பற்றுமாறு" அழைப்பு விடுத்தது. உண்மையில் சென்காயு/தியாவு தீவுகள் மீது ஒரு பிராந்திய பிரச்சினை இருப்பதை அங்கீகரிப்பதற்கும் கூட அபே அரசாங்கம் மறுத்து வருகிறது.

இராணுவ விமானங்களுக்கு இடையிலான இரண்டு மிக நெருக்கமான எதிர்கொள்ளல்களுக்கு பின்னர் ஜப்பானும் சீனாவும் மீண்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை பரிமாறின செவ்வாயன்று, ஜப்பானின் இரண்டு F-15 போர் விமானங்களும் சீனாவின் ஒரு TU-154 ரோந்து விமானத்திற்கும் இடையே நடந்தது, மற்றொன்று புதனன்று, சீனப் போர் விமானங்களுக்கும் இரண்டு ஜப்பானிய உளவு விமானங்களுக்கும் இடையே நடந்தது. இரண்டு தரப்பும் வான்வழி சூழ்ச்சிகளில் ஈடுபடுவதாக எதிர்தரப்பைக் குறை கூறிக் கொண்டன, இது ஒரு தவறான-கணிப்பின் அபாயத்திற்கு இட்டுச் சென்று ஒரு பரந்த மோதலைத் தூண்டிவிடக்கூடியதாகும்.

ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தின் "Lateline” நிகழ்ச்சியில் ஜோன்ஸ்டன் பேசுகையில், அமெரிக்காவின் நிலைப்பாட்டை பிரதிபிம்பப்படுத்துவதைப் போல, பிராந்திய பிரச்சினைகளில் ஆஸ்திரேலியா "எந்த தரப்பையும் எடுக்கப் போவதில்லை" என்ற நிலைபாட்டை மீண்டும் உரைத்தார். உண்மையில், அமெரிக்கா, நடுநிலைமை என்ற அதன் பொய்வாதத்திற்கு இடையே, சென்காயு தீவுகள் மீது சீனாவுடனான எந்தவொரு யுத்தத்திலும் அது ஜப்பானை ஆதரிக்குமென்று மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா உடனான அதன் கூட்டுறவு மற்றும் ஜப்பானுடனான அதன் மூலோபாய கூட்டணியின் வழியாக, எந்தவொரு மோதலுக்குள்ளும் தவிர்க்கவியலாமல் இழுக்கப்படும்.

பெண்டகன் சீனாவிற்கு எதிரான அதன் யுத்த திட்டங்களுக்குள் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இரண்டையும் மையமாக பார்க்கிறது. ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் சீன மண்ணுக்கு எதிராக ஒரு பேரழிவுகரமான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு ஏவுதளமாக விளங்கும், அதேவேளையில் ஆஸ்திரேலிய தளங்கள் தென்கிழக்கு ஆசியா மூலமாக கடந்து வரும் சீனக் கப்பல்களை முற்றுகையிட பயன்படுத்தப்படும். வாஷிங்டன் அவ்விரு நாடுகளையும் மிக நெருக்கமாக ஒன்று கூடி வேலை செய்யுமாறும், அவற்றின் இராணுவங்களை மேம்படுத்துமாறும் அழுத்தம் அளித்து வருகிறது.

பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக 2+2 கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஓர் உடன்படிக்கை குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது. அது ஆரம்பத்தில் "கடல்சார் நீரியக்கவியல்" (hydrodynamics) மீது குவிந்திருக்கும் இந்த பிரிவு, ஒரு புதிய நீர்மூழ்கி கப்பல்கள் பிரிவிற்கான ஆஸ்திரேலிய திட்டங்களுக்கு அத்தியாவசியமானதாகும். தொழில்நுட்ப பிரச்சினைகளில் சிக்கியுள்ள அதன் கொல்லின்ஸ் வகை நீர்மூழ்கி கப்பல்களை மாற்றும் திட்டத்தை வேகப்படுத்துமாறு அமெரிக்கா ஆஸ்திரேலியாவிடம் வலியுறுத்தி உள்ளது.

பாதுகாப்பு மந்திரி ஜோன்ஸ்டன் ஒரு புதிய சோர்யு (Soryu) ரக நீர்மூழ்கி கப்பலில் ஒரு அரிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அது உலகின் மிகப் பெரிய டீசல்-மின்சார நீர்மூழ்கி கப்பல் என்பதோடு ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு அதனால் நீருக்கடியில் தொடர்ந்து இருக்க முடியும். வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் என்று கான்பெர்ரா இப்போதும் அதையே கூறி வருகின்ற போதினும், அது சோர்யுவின் மிகவும் சத்தமில்லாத உந்துவிசை அமைப்புமுறை (propulsion system) உட்பட ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு முயன்று வருகிறது. ஜப்பானைப் பொறுத்த வரையில், 37 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் ஈடுப்படுவது இராணுவ ஏற்றுமதிகளைப் பெரிதும் அதிகரிக்கும், அத்தோடு அவ்விரு நாடுகளுக்கும் இடையே இராணுவ உறவுகளைப் பலப்படுத்தும்.

ஜப்பானின் கொள்கை ஆய்வுகளுக்கான தேசிய பட்டமளிப்பு பயிலகத்தின் இயக்குனரான நருஷிஜி மிச்சிஷிடா (Narushige Michishita), ஆஸ்திரேலியன் பத்திரிகைக்கு கூறுகையில், “ஜப்பான் ஆஸ்திரேலியாவிற்கு சோர்யு-ரக நீர்மூழ்கி கப்பல்களை விற்க விரும்புவதாக சிலர் கூறுகிறார்கள். அவ்வாறு நடந்தால், அது எங்கள் இருதரப்பிற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அமையும்,” என்றார்.

ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் முதலில் 2007இல் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன் ஹோவர்டின் கீழ் பாதுகாப்பு கூட்டுறவு மீதான ஒரு கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டன, அப்போது அபே முதன்முறையாக பதவிக்கு வந்திருந்தார். பின்னர் அவ்விரு நாடுகளுக்கும் இடையே விலைக்கு வாங்குவது மற்றும் கூட்டு பராமரிப்பிற்கான உடன்படிக்கையைச் சேர்க்க அமெரிக்காவின் "முன்னெடுப்பின்" கீழ் அவற்றின் ஒத்துழைப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது, இந்த உடன்படிக்கை கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்ததோடு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தகவல் பாதுகாப்பு உடன்படிக்கையும் கையெழுத்தானது. இந்த 2+2 பேச்சுவார்த்தைகள் ஒரு "இருதரப்பு இணையவழி கொள்கை பேச்சுவார்த்தைக்கும்" மற்றும் இணையவழி பாதுகாப்பு போன்ற ஏனைய துறைகளில் கூடுதலாக ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் அடித்தளத்தை அமைத்துள்ளது.

அப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு குழிபறிக்கும் நோக்கில் அமெரிக்க தரப்பில் இணைந்த ஒரு பிரச்சாரமாக, ஆசிய பசிபிக் முழுவதிலும் உள்ள நாடுகளோடு உறவுகளைப் பலப்படுத்துவதில் கூட்டு பொருளாதார மற்றும் இராஜாங்க முயற்சிகளைக் கட்டியமைக்க ஜப்பான்-ஆஸ்திரேலியா கூட்டுறவு விரிவடையும். “பசிபிக் தீவு நாடுகளுக்கான ஆதரவின் மீது" அவ்விரு நாடுகளும் கவனத்தைக் குவிக்கும் என்று அந்த கூட்டறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியது, அதன் செல்வாக்கு பரப்பெல்லையாக கருதும் அப்பிராந்தியத்தில் சீனாவின் உதவிகள் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் இடத்திற்கு குழிவெட்டுவதாக கான்பெர்ரா கவலைக் கொண்டுள்ளது.

இந்த விஜயத்தில் வழக்கமான பேச்சுவார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு இராணுவத்தின் மீதான கவனக்குவிப்பு விரிவடைந்திருந்தது. அந்த இரண்டு ஆஸ்திரேலிய மந்திரிகளும் டோக்கியோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள முக்கிய யாகோடா விமானப்படை தளத்திற்கும் விஜயம் செய்து, ஜப்பானின் விமான பாதுகாப்புப்படையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்ததோடு, ஜப்பானில் அமெரிக்க படைகளின் தலைமை தளபதியோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர், அவர் முத்தரப்பு கூட்டணி இந்தளவிற்கு ஒருபோதும் பலமாக இருந்ததில்லை என்று அறிவித்தார்.