சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Civil war escalates in Iraq amid reports of sectarian massacres

குறுங்குழுவாத படுகொலை செய்திகளுக்கு இடையே ஈராக்கில் உள்நாட்டு போர் தீவிரமடைகிறது

By James Cogan
16 June 2014

Use this version to printSend feedback

சுன்னி பிரிவு பழங்குடி போராளிகள் குழுக்களால் ஆதரிக்கப்பட்ட சுன்னி தீவிரவாத அமைப்பான ஈராக்-லேவன்ட் இஸ்லாமிய அரசு (ISIS), அண்டை நாடான சிரியாவிலும் ஈராக்கின் மேற்கத்திய அன்பார் மாகாணத்திலும் ஏற்கனவே அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளோடு வடமேற்கு ஈராக்கின் பெரும் பகுதிகளை ஒருங்கிணைக்க இந்த வாரயிறுதில் அதன் தாக்குதலைத் தொடர்ந்தது.

2003இல் இருந்து 2011 வரையில் அமெரிக்கா அதன் ஆக்கிரமிப்பின் போது திட்டமிட்டு தூண்டிவிட்டதும் மற்றும் பின்னர் அது ஒபாமா நிர்வாகமும் அதன் அப்பிராந்திய பங்காளிகளும் சிரியாவில் கிளறிவிட்ட ஒரு பிரிவினைவாத உள்நாட்டு யுத்தத்தால் மேலதிகமாக எரியூட்டப்பட்டுள்ளதுமான ஈராக்கின் இன மற்றும் குறுங்குழுவாத பிளவுகளைக் கடந்த வார சம்பவங்கள் கூர்மையாக அம்பலப்படுத்தி உள்ளன.

சிரிய எல்லையின் கிழக்கே வெறும் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதும் பிரதான மோசூல் நகருக்கு மேற்கே 40 கிலோமீட்டரில் அமைந்துள்ளதுமான தல் அஃபாரில் (Tal Afar) ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கடுமையான சண்டை நடந்து வருகிறது. ஈராக்கிய அரசாங்கத்திற்கு ஒரு பாரிய அடியாக, சிரியாவின் அவர்களது முகாம்களில் இருந்து ஈராக்கிற்குள் நகர்ந்துள்ள ISIS போராளிகள், மோசூலின் சுன்னி மக்கள் வாழும் புறநகர்களைக் கடந்த வாரம் கைப்பற்றினார்கள்.

தல் அஃபார் பெரும்பான்மையாக துருக்மெனிஸ்தானிய சுன்னி இன மக்களைக் கொண்டுள்ளது. 2003 படையெடுப்புக்குப் பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு மையமாக விளங்கிய அது செப்டம்பர் 2005இல் அமெரிக்க இராணுவ மற்றும் ஷியைட் அரசாங்க துருப்புகளின் ஒரு காட்டுமிராண்டித்தனமான கிளிர்ச்சி-எதிர்ப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அந்நகரின் பெரும்பான்மை பகுதிகள் அழிக்கப்பட்டதோடு, அதன் 300,000 மக்களில் 90 சதவீதத்தினர் அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர். அது பின்னர் மறுகட்டுமானம் செய்யப்பட்டது, ஆனால், ஈராக்கில் இனரீதியில் மற்றும் மதரீதியில் ஒன்றுகலந்த பெரும்பாலான பகுதிகளைப் போலவே, அதுவும் 2006இல் இருந்து தொடர்ச்சியான குறுங்குழுவாத மோதல்களால் சின்னாபின்னமாக ஆக்கப்பட்டுள்ளது, அங்கிருக்கும் சுன்னி மக்கள் அரசாங்கமும், பாதுகாப்பு படைகளும் தொல்லை கொடுப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வாரயிறுதியில் நடந்த சண்டையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரமான அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. ISIS மற்றும் சுன்னி போராளிகள் குழு நகரத்திற்குள் நுழைந்ததைக் காரணங்காட்டி, அரசாங்க பீரங்கிப்படையும், ஹெலிகாப்டர்களும் குடியிருப்பு பகுதிக்குள் குண்டுவீசியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேறி விட்டார்கள், மோசூலில் இருந்து வெளியேறியவர்களோடு சேர்ந்து 500,000 பேர் அகதிகளாக வெளியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது.

ISIS மோசூலில் நுழைந்த பின்னர், சதாம் ஹூசைனின் சொந்த நகரமான திக்ரித் மற்றும் பாக்தாத்தின் 80 கிலோமீட்டருக்கு நெருக்கமாக உள்ள சிறுநகரங்களைக் கைப்பற்ற தெற்கை நோக்கி முன்னேறியபோது அரசாங்க படைகள் தோற்றப்பாட்டளவில் கலைந்து போனதைப் போல இல்லாமல், இங்கே இந்நகரில் ஷியைட் ஈராக்கிய இராணுவ பிரிவுகளின் கைவசமிருக்கும் பகுதியில் பலமான எதிர்ப்பு நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் எல்லைக்கருகில் உள்ள கிழக்கு மாகாணமான தியாலாவின் (Diyala) சிறுநகரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சில மதிப்பீடுகளின்படி, ஏறக்குறைய 90,000 துருப்புகளும், பொலிஸூம் ISIS தலைமையிலான தாக்குதலுக்கு முன்னால் அவர்களின் பொறுப்பை விட்டே ஓடிவிட்டனர்.

அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்த வடக்கில் இருந்த பாதுகாப்பு படைகளின் அவமானகரமான பொறிவு, பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் அரசாங்கத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஷியைட் ஆளும் மேற்தட்டிடம் பீதியுடன் கூடிய எதிர்வினையைத் தூண்டியது. ஆயுதமேந்த கூடிய ஆண்கள் தானே முன்வந்து சண்டையிட வருமாறு கடந்த வெள்ளியன்று முன்னணி ஷியைட் மதகுரு கிராண்ட் அயாதொல்லாஹ் அலி அல்-சிஸ்தானி (Grand Ayatollah Ali al-Sistani) அழைப்புவிடுத்தார்.

ஆளும் கட்சிகளோடோ அல்லது மதகுரு மோக்தடா அல்-சதர் (Moqtada al-Sadr) தலைமையிலான இயக்கத்தோடோ தொடர்புபட்ட ஆயிரக் கணக்கான ஷியைட் போராளிகள், பாக்தாத்தில் இருந்து ஆக்கிரமிப்பு சமார்ரா (Samarra) வரையில் நிறுத்தப்பட்டனர். தலைநகரின் வடக்கே 125 கிலோமீட்டரில், அந்நகரில் மிக முக்கிய ஷியைட் புனித தளங்களில் ஒன்றான அல்-அஸ்காரி மசூதி அமைந்துள்ளது.

2006இல் சுன்னி தீவிரவாதிகள் அந்த மசூதியின் வரலாற்றில் இடம்பெற்ற தங்க கோபுரத்தின் மீது குண்டுவீசியமை, சுன்னி பிரிவினருக்கு எதிராக ஷியைட் போராளிகள் குழுக்களின் ஒரு கண்மூடித்தனமான ஆவேச வன்முறையை தூண்டியது. சுன்னி பிரிவினரின் எதிர்ப்பைத் தீவிரப்படுத்துவதற்காக அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் அங்கே நடந்த அந்த பாரிய படுகொலைகளை மவுனமாக ஆதரித்தன.

ஷியைட் போராளிகள் குழுக்களால் கூடுதலாக பலப்படுத்தப்பட்ட ஈராக்கிய இராணுவ பிரிவுகள், ISIS மற்றும் சுன்னி படைகளை மோசூலில் இருந்து பின்னுக்குத் தள்ள எதிர்-தாக்குதல்கள் நடத்தி உள்ளன. இரத்தவெறியைத் தூண்டிவிடும் உரைகளில் மலிக்கி, இழந்த அனைத்து பகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற சூளுரைத்தார். ஆனால் மலிக்கியால் கைது செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலில் ஈராக்கிலிருந்து தப்பி சென்றிருந்த முன்னாள் துணை ஜனாதிபதி தரிக் அல் ஹஷிமி (Tariq al Hashemi) உட்பட முன்னனி சுன்னி அரசியல் பிரபலங்கள், ஷியைட் அரசாங்கத்தின் தோல்விகளை ஒரு கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிரான "புரட்சியாக" புகழ்கின்றன. மோசூல் மற்றும் திக்ரித்தில் இருந்தும் மக்கள் கொண்டாடும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

திக்ரித் பகுதியில் பிடிபட்ட 1,700 ஷியைட் சிப்பாய்கள், பொலிஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதற்கு ISIS தரப்பு வாரயிறுதியில் பொறுப்பேற்றுக் கொண்டது. ஆழமில்லாத குழிகளின் முன்னால், ISIS போராளிகளின் துப்பாக்கிப் படை என்று தோன்றக்கூடிய ஒன்றின் முன்னால் பீதியோடு நிற்கும் கைதிகளின் படங்களும் இந்த பொறுப்பேற்பு அறிவிப்பில் இணைந்திருந்தது. அந்த குழிகளுக்குள் மலை போல் குவிக்கப்பட்ட உடல்களை இதர படங்கள் காட்டுகின்றன.

இன்னமும் உறுதிசெய்யப்படாத போதினும், இதுபோன்ற குற்ற அட்டூழியங்களுக்கு பொறுப்பேற்பதை ஷியைட் தீவிரவாதிகள் குறுங்குழுவாத உணர்வுகளுக்கு எரியூட்ட பயன்படுத்தக் கூடும், இது பாக்தாத்திலும் ஏனைய பகுதிகளிலும் சுன்னி மக்களுக்கு எதிரான படுகொலைகளின் ஒரு புதிய அலையை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.

மலிக்கி அரசாங்கத்திற்கும், ஒரு சுயாட்சி பகுதியாக பெரும்பான்மை குர்திஷ் மக்கள் வாழும் வடக்கு மாகாணங்களை ஆளுகின்ற குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திற்கும் (KRG) இடையே பகிரங்கமான யுத்தம் வெடிக்கக் கூடும். கடந்த வாரம் வடக்கில் ஈராக்கிய பாதுகாப்பு படைகள் பொறிந்து போன நிலையில், குர்திஷ் துருப்புகள் கிர்குக் நகரம் மற்றும் ஈராக்கின் வடக்கு எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்தன. குர்திஷ் படைகள் மோசூலின் கிழக்கு மாவட்டங்களிலும் குவிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது ISIS வசமிருக்கும் நகரின் பகுதிகள் மீதும் கட்டுப்பாட்டைக் கோரக்கூடும்.

கிர்குக் மீது ஒரு பிடியை ஸ்தாபிப்பதற்கான குர்திஷின் நகர்வு, துருக்கியின் உதவி மற்றும் ஆதரவோடு அதன் எல்லைகளில் தயாரிக்கப்படும் எண்ணெய்யை சுதந்திரமாக ஏற்றுமதி செய்வதற்கான KRGஇன் முயற்சிகளுக்கு அதிகரித்து வரும் அதிகளவிலான கடும் எதிர்ப்புகளைப் பின்தொடர்ந்து நடக்கிறது. KRG அதன் கோரிக்கைகளுக்கு பாக்தாத்தை மண்டியிட செய்வதில் அல்லது ஒரு தனி குர்திஷ் அரசின் பொருளாதார அஸ்திவாரங்களை விஸ்தரிப்பதில் ஒரு பேரம்பேசுவதற்கான துருப்புச்சீட்டாக பயன்படுத்தும் வகையில், இப்போது ஈராக்கின் ஒட்டுமொத்த வடக்கு எண்ணெய் உற்பத்தியிலும் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

ஈராக் உள்நாட்டு யுத்தத்திற்குள் நகர்வதும் மற்றும் ஒருவேளை சாத்தியமானால் உடைவை நோக்கி நகர்வதும் பல்வேறு பிராந்திய சக்திகளின் பகிரங்கமாக தலையிடுவதற்கான சாத்தியக்கூறையும் உயர்த்துகிறது.

குர்திஷ் பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டிலும், எண்ணெய் வளங்கள் மீது குர்திஷ் கட்டுப்பாட்டை விஸ்தரிப்பதிலும் கணிசமான பொருளாதார நலன்களைக் கொண்டிருக்கும் துருக்கி, அதன் பிரஜைகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க வடக்கு ஈராக்கிற்குள் துருப்புகளை அனுப்ப இருப்பதாக எச்சரித்துள்ளது. இப்போது ISIS ஆட்சியின் கீழ் இருக்கும் தல் அஃபாரில் துருக்கிய மக்களின் நிலைமைகள் மீது அதன் கவலைகளை அது ஞாயிறன்று வெளியிட்டது.

மலிக்கி மற்றும் ஈராக்கிய ஷியைட் கட்சிகளை மிக நெருக்கமாக ஆதரிக்கும் ஈரான், சுன்னி தீவிரவாதிகள் ஷியைட் மத தளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் ஈராக்கிற்குள் அது இராணுவ படைகளை நிறுத்துமென ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. ஏனைய ஊடக வடிகால்களோடு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலும் ஈரானிய துருப்புகள் ஈராக்கிய இராணுவத்தைப் பலப்படுத்த ஈராக்கிற்குள் நுழைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டது.

சிரியாவில் உள்ள சுன்னி போராளிகளின் முக்கிய நிதி வழங்குனர்களாக மற்றும் ஆயுத வினியோகிப்பாளர்களாக உள்ள சவூதி அரேபிய மற்றும் கட்டாரின் சுன்னி முடியாட்சிகள், சிரிய மோதலானது, ஈரான் ஆதரவிலான மற்றொரு ஷியைட் அரசாங்கத்திற்கு எதிராக ஈராக்கிற்குள் சுன்னி பிரிவினரின் புரட்சி என்றழைக்கப்படும் ஒன்று தீவிரமடைந்திருப்பதற்கு அவற்றின் அனுதாபங்களை வெகு குறைவாகவே இரகசியமாகவே வைத்திருக்கின்றன.

இன்னும் அதிகமான மரணங்கள் மற்றும் அழிவுகளைக் கட்டவிழ்த்து விடுவதற்காக தயாரிப்பு செய்வதே, அமெரிக்க படையெடுப்புகளின் பேரழிவுகரமான விளைவுகளுக்கும் மற்றும் மத்திய கிழக்கில் சூழ்ச்சிகளுக்கும் ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பாக உள்ளது. “இராணுவ வாய்ப்புகளுக்குத் அவசியப்படும் கூடுதல் இலகுதன்மையை" வழங்க விமானந்தாங்கிய ஜோர்ஜ் எச். டபிள்யு. புஷ் கப்பலும் மற்றும் ஆதரவு கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.