சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan students’ union promotes illusions in protest campaign

இலங்கை மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு பிரச்சாரத்தில் போலி நம்பிக்கையை ஊக்குவிக்கிறது

By IYSSE reporters
16 June 2014

Use this version to printSend feedback

சுமார் 2,000 பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி மற்றும் ஏனைய ஜனநாயக உரிமைகள் மீதான இலங்கை அரசாங்கத்தின் பரவலான தாக்குதல்களுக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தினர்.

துணை மருத்துவ விஞ்ஞான பட்டப்படிப்பு மாணவர்கள், அந்த கல்வித் திட்டத்தை நான்கில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பேராதனை மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் 170 நாள் உள்ளமர்வு போராட்டம் மற்றும் விரிவுரை புறக்கணிப்பை முன்னெடுத்ததைத் தொடர்ந்தே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது (IUSF) இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு அல்லது மாணவர் தரத்தில் இருந்து அகற்றப்பட்டதற்கும் எதிராக சமீபத்திய மாதங்களில் கொழும்பு மற்றும் அருகிலுள்ள ஏனைய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒரு பகுதியினர்

சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியில் (ஜேவிபீ) இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோசலிச கட்சியால் (முசோக) கட்டுப்படுத்தப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அபமாஒ), கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டத்தை நடத்தியது அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டம் மற்றும் கல்வி வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்வதற்கு அல்ல. மாறாக, அபமாஒ சரியாக பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்வதற்கு திட்டமிடுகின்ற சமயத்தில், அரசியல் நாடகத்தின் ஒரு வெற்றுப் பகுதியாகவே இந்த கூட்டத்தை நடத்தியது.

"மாணவர் மக்கள் அணிதிரள்வு” என அழைக்கப்பட்ட இந்த நிகழ்வு, கல்வி வெட்டுக்களை கண்டனம் செய்ததோடு அரசாங்கத்தின் கடத்தல் மற்றும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், மீனவர்களுக்கான மானியங்களை மீள வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது. எவ்வாறெனினும், இதன் மைய நோக்கம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்வேறு போலி-இடதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான ஒரு கூட்டணியினால், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு அதன் முதலாளித்துவ "சுதந்திர சந்தை" கொள்கைகளை கைவிட அழுத்தம் கொடுக்க முடியும் என்ற கூற்றை ஊக்குவிப்பதே ஆகும்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் காலூன்றிக்கொண்டுள்ள முசோக, நவசமசமாஜ கட்சி (நசசக), ஐக்கிய சோசலிச கட்சி (USP) போன்ற போலி-இடது கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய முதலாளித்துவ குழுக்களுடனும் மறு குழுவமைவதற்கு தற்போது முயன்று வருகிறது.

நவசமசமாஜ கட்சி கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, ஜேவிபீ சார்ந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு (HSTUF)  போன்ற பல்வேறு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன. இந்த கூட்டத்தில் பங்குபற்றிய பல தொழிற்சங்கங்கள், ஊதிய அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை நிலைமை மேம்பாட்டுக்கான தொழிலாளர்களின் போராட்டங்களை கவிழ்த்துவிடுவதில் பேர்போனவையாகும்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (ஐவைஎஸ்எஸ்இ) வளர்ந்து வரும் செல்வாக்கை முறியடிக்கவும் முயன்று வருகிறது. ஐவைஎஸ்எஸ்இ உறுப்பினர்கள், துண்டுப் பிரசுரமொன்றை விநியோகித்து கூட்டத்தில் தலையீடு செய்தனர். அரசாங்கத்தின் தாக்குதல்கள் சர்வதேச நிதி மூலதனத்தினால் உந்தப்படுவதோடு இலவச கல்வி மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது என்பது, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தின் பாகமாக, மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதுடன் பிணைக்கப்பட்டுள்ளது, என்று அந்த பிரசுரம் விளக்கியது.

எதிர்ப்பு பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி மாணவர்கள் மத்தியிலான கவனத்தை திசை திருப்புவதற்காக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்கள் இந்த எதிர்ப்பு கூட்டத்தைப் பயன்படுத்தப்படுத்திக் கொண்டனர். இது மாணவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை தொழிற்சங்க அலுவலர்கள் போலியாக புகழ்வதை உள்ளடக்கியிருந்தது.

கூட்டத்தில் உரையாற்றிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் சரத் சில்வா, கல்வி மற்றும் சமூக சேவைகள் மீதான தாக்குதல்களுக்கான "மூல காரணம்" "நவ-தாராளவாத முதலாளித்துவமே" என்று பிரகடனம் செய்தார். "நவ-தாராளவாதம்" என்ற பதத்தைப் பயன்படுத்தியது, முதலாளித்துவத்தின் கீழ் ஏனைய கொள்கைகளால் கல்வி மீதான தாக்குதல்களை தடுக்க முடியும் என்ற மாயையை முன்னிலைப்படுத்துவதற்கே. உண்மையில், உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள், அனைத்துவித அரசியல் சிக்கல்களிலும், இதே மாதிரியான சிக்கன நடவடிக்கைகளையே விரிவுபடுத்துகின்றன.

"வெற்றிகரமான துணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர்களின் போராட்டத்தில் காட்டப்பட்டது போல், மாணவர்களின் போராட்டத்தால் அரசாங்கம் பின்வாங்கத் தள்ளப்பட்டது” என்று சில்வா அறிவித்தார். அவர் "வெற்றி" என்று கூறிக்கொள்வது, துணை மருத்துவ விஞ்ஞான பட்டப்படிப்பின் காலத்தை வெட்டிக்குறைக்கும் திட்டத்தை கொஞ்சம் திருத்துமாறு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கட்டளையிட்டதை அடுத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) சமீபத்தில் எடுத்த முடிவை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் மிகவும் பாராட்டப்பட்ட வெற்றி மிகவும் குறுகியதாக இருக்கக் கூடும். பட்டப்படிப்பை ஒரு ஆண்டு குறைப்பதற்கு பதிலாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இப்போது 120-புள்ளி முறைமையை பயன்படுத்த முடியும். உலக சோசலிச வலைத் தளத்துக்கு கடந்த வாரம் கருத்துத் தெரிவித்த பேராதனை பல்கலைக்கழகத்தில் துணை மருத்துவ விஞ்ஞான பீடாதிபதி, 120-புள்ளி முறைமையை நான்கு ஆண்டுகளில் பெற முடியும் மற்றும் மாணவர்கள் நான்கு ஆண்டு கால கல்வியைப் பெறுவர், என்றார்.

எனினும், பட்டத்தை வழங்குவதற்கு “கால எல்லை அன்றி கற்கும் அளவே அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது” என்பதை தாம் எற்றுக்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ள நிலையில், இந்த 120-புள்ளி முறைமை எதிர்காலத்தில் பட்டப்படிப்பு முறைமை தரம் குறைப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடும்.

கூட்டத்தில் உரையாற்றிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் நஜித் இந்திக்க, "மற்ற சக்திகள், தற்போதைய நிலைமையை எதிர்கொளவது எப்படி என்று எப்போதும் கவலைப்படும்" அதேவேளை, மாணவர் இயக்கமானது வரலாற்றில் ஒவ்வொரு முக்கியமான சமயத்திலும் எதிர்காலத்தை பிரதிநித்துவம் செய்துள்ளது, என்றார். "[உயர் கல்வி அமைச்சர்] எஸ்.பி. திசாநாயக்க, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முடிந்துவிட்டது என்றார், ஆனால், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே முடிவுக்கு வந்துள்ளதை எங்கள் சமீபத்திய வெற்றிகள் காட்டுகின்றன," என்று இந்திக தெரிவித்தார்.

ஐவைஎஸ்எஸ்இயை மறைமுகமாக சுட்டிக்காட்டிய இந்திக்க, மாணவர் போராட்டங்களை உள்ளிருப்பு எதிர்ப்புக்களுக்குள் மட்டுப்படுத்துவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விமர்சிக்கப்படுகின்றது, ஆனால் "நாம் [மாணவர்] போராட்டங்களின் மூலம் வெல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்," என்றார்.

கூட்டத்தில் பேசிய நவ சம சமாஜக் கட்சி சார்ந்த ஐக்கிய தொழிலாளர் சமாசத்தின் தலைவர் லீனஸ் ஜயதிலக்க, துணை மருத்துவ விஞ்ஞான மாணவர்கள் "உழைக்கும் மக்களுக்கு ஒரு உதாரணமாகும்", ஏனெனில், அவர்களது நடவடிக்கைகள் "எந்த அடக்குமுறைக்கும் சரணடையாமல் அல்லது தலைகுனியாமல் தைரியமாக மேற்கொள்ளப்பட்டது." என்றார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும் மாணவர்-மக்கள் அணிதிரள்வை பாராட்டிய அவர், அது "ஏனைய போராட்டங்களுக்கும் ஒரு நல்ல உதாரணம்," என்று அறிவித்தார்.

இந்த கூற்றுக்கள், இலங்கையின் இரண்டாவது முதலாளித்துவ பாராளுமன்ற கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பி) சிறகின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மாணவர்களை கொண்டுவருவதற்கான நவ சம சமாஜக் கட்சியின் சூழ்ச்சி வரிசையில் ஒன்றாகும்.

சுகாதார ஊழியர்கள் சங்க சமாசத்தின் தலைவர் சமன் ரட்னப்பிரிய, யுஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சில மணி நேர உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னரே செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்டார். இராஜபக்ஷ அரசாங்கத்தால் "மக்களின் மீது ஒரு கடுமையான பொருளாதார சுமை திணிக்கப்பட்டுள்ளதுடன் ஜனநாயகம் புதைக்கப்படுகிறது," என்று அவர் வாய்சவடால் விட்டார்.

ஆட்சியில் இருந்தபோது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பேர்போன யுஎன்பீ தலைவருடன் இணைந்து ஜனநாயகத்தை பாதுகாப்பது எப்படி என்று சமன் ரட்னபிரிய விளக்கத் தவறிவிட்டார். உரையாற்றிய ஏனையவர்களில், 2012ல் பல்கலைகழக ஆசிரியர் சங்க ஒன்றியத்தின் (FUTA) மூன்று மாதகால வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு தலைமை வகித்த அதன் முன்னாள் தலைவர் நிர்மல் ரஞ்சித் தேவசிறியும் ஒருவர்.

உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் பாகமாக மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பாமல் தடுப்பதே கூட்டத்தின் உண்மையான நோக்கமாகும். வெகுஜன அழுத்தம் "சுதந்திர சந்தை" கொள்கைகளை கைவிட அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் என்ற கட்டுக் கதைகளுடன் மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒரு பொறியை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அதன் போலி-இடது கூட்டாளிகளும் தயாரிக்கின்றன. இது இலாப முறைமையை பாதுகாக்கும் முயற்சியை தவிர வேறொன்றுமில்லை.

சோசக உடன் சேர்ந்து ஐவைஎஸ்எஸ்இ கொழும்பில் பொது கூட்டமொன்றை இந்த வாரம் நடத்தவுள்ளது. இங்கு கல்வியை பாதுகாக்கவும் இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீதான அரசாங்கத்தின் பரவலான தாக்குதல்களைத் தோற்கடிக்கவும் தேவையான சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடப்படும்.

கூட்டம் ஜூன் 19 வியாழக்கிழமை, 3.30 மணிக்கு கொழும்பு 8, பொரளை, என்.எம். பெரேரா மையத்தில் நடைபெறும். நாம் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.