சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Instability set to continue after Afghan presidential election

ஆப்கான் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரும் ஸ்திரமின்மை தொடர உள்ளது

By Mike Head
16 June 2014

Use this version to printSend feedback

கடந்த சனியன்று முடிந்த ஆப்கானிஸ்தானின் இறுதி கட்ட ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை, முடிவுகள் ஒரு பகுதி ஜூலை 2இல் மற்றும் இறுதி முடிவு ஜூலை 22இல் வெளியிடப்பட உள்ளன.

இந்த நீண்ட தாமதத்திற்குப் பகுதியளவு காரணம், சுமார் 13 ஆண்டுகள் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த பின்னரும் அந்நாட்டில் நிலவும் பழைய உள்கட்டமைப்பு நிலைமைகள் ஆகும். ஆனால் அதற்கும் மேல் நூற்றுக்கணக்கான தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்களும் காரணமாக உள்ளன, மிக நெருக்கமாக வருமென்று எதிர்பார்க்கப்படும் தேர்தல் முடிவுகளை இவை தீர்மானிப்பதாக இருக்கக்கூடும்.

வேட்பாளர்களில், ஏப்ரலில் நடந்த தேர்தலின் முதல் சுற்றில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா 45 சதவீத வாக்குகளைப் பெற்றார். முன்னாள் நிதி மந்திரி அஸ்ரஃப் ஹானி அஹ்மாத்சாய் (Ashraf Ghani Ahmadzai) வெறும் 32 சதவீத வாக்குகள் பெற்றார், ஆனால் பின்னர் அந்நாட்டின் பாஸ்துன் (Pashtun) பெரும்பான்மையினரை சேர்ந்த தோல்வியுற்ற வேட்பாளர்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.

அந்த இரண்டு அமெரிக்க ஆதரவு வேட்பாளர்களில் யார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாலும், அந்த தேர்தல் பல மட்டங்களில் ஒரு மோசடியாக உள்ளது. அது மிரட்டும் ரீதியிலான பாதுகாப்பு நடவடிக்கையின் நிழலில் நடத்தப்பட்டிருந்ததுமதிப்பிடப்பட்ட அளவிற்கு ஆப்கான் தேசிய பாதுகாப்பு படைகளின் 40,000 உறுப்பினர்களும், அத்தோடு அமெரிக்க தலைமையிலான 50,000 அன்னிய துருப்புகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பூர்வாங்க உத்தியோகபூர்வ செய்திகளின்படி, அந்நாட்டின் பதிவு பெற்ற வாக்காளர்களில் வெறுமனே 52 சதவீதத்தினரே அதில் பங்கெடுத்தனர்.

மிகவும் அடிப்படையாக, 2001 அமெரிக்க படையெடுப்புக்கு அதிகரித்துவரும் மக்கள் எதிர்ப்பின் எந்தவொரு வெளிப்பாட்டையும் காட்ட அந்த தேர்தலில் அனுமதிக்கப்படவில்லை. அப்துல்லா மற்றும் ஹானி இருவருமே மற்றும் முதல் சுற்றில் வெளியேறிய ஏனைய ஆறு வேட்பாளர்களும்ஒபாமா நிர்வாகத்துடன் ஒரு இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையை (BSA) அனுமதிக்க உறுதியளித்திருந்தனர். இந்த உடன்படிக்கை, கால அட்டவணைப்படி இந்த ஆண்டின் இறுதியில் பெரும்பாலான ஆக்கிரமிப்பு துருப்புகளைத் திரும்ப பெற்ற பின்னரும் நிரந்தரமாக அமெரிக்க தலைமையிலான இராணுவ பிரசன்னத்தை அங்கே அனுமதிக்கும்.

வாஷிங்டனைப் பொறுத்த வரையில் 2002இல் நியமிக்கப்பட்டவரும் 2005 மற்றும் 2009 மோசடி தேர்தல்களின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவருமான வெளியேறவிருக்கின்ற ஜனாதிபதி ஹமித் கர்சாயை விட மிகவும் நம்பகமான ஒரு கைப்பாவையை அது விரும்புகிறது. இரண்டு பதவி கால வரம்பு (two-term limit) இருப்பதன் காரணத்தால் கார்சாய் இனி மீண்டும் போட்டியிட இயலாது. சமீபத்திய ஆண்டுகளில் அவர் அரசியல்ரீதியாக உயிர்பிழைத்திருக்க, அமெரிக்க குண்டுவீச்சுக்கள் மற்றும் டிரோன் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான அப்பாவி மக்களினது விமர்சனகராக காட்டிக் கொண்டதோடு, தேசிய பாதுகாப்பு உடன்படிக்கையை அனுமதிக்கவும் மறுத்து வந்தார்.

அந்நாட்டில் நடத்தப்பட்ட யுத்த குற்றங்களுக்கு ஆப்கான் அல்லது சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்க படைகள் பொறுப்பாகாது என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதை BSA உட்கொண்டிருக்க வேண்டுமென வாஷிங்டன் வலியுறுத்துகிறது. அந்த உடன்படிக்கை அடுத்த ஆண்டில் ஏறத்தாழ 10,000 துருப்புகளையும், 2016இல் இருந்து குறைந்தபட்சம் 1,000 துருப்புகளையும் அங்கே வைத்திருக்க வழிவகுக்கிறது. அவர்கள் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய எதிர்தரப்பினரின் ஆதரவோடும் மற்றும் விஸ்தரிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தனியார் ஒப்பந்ததாரர்களோடும், "பயங்கரவாத-தடுப்பு" நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அதிரடி படைகளால் வழிநடத்தப்படுவார்கள்.

தேர்தலுக்கு வெகு சில நாட்களுக்கு முன்னதாக கடந்த வாரம் நடந்த ஐந்து அமெரிக்க சிறப்பு படை சிப்பாய்கள் கொல்லப்பட்ட "நட்புரீதியிலான துப்பாக்கிசூடு" போன்ற நடவடிக்கைகள், மிகத் தெளிவாக, ஆட்சிக்கு எதிரான பரந்த எதிர்ப்பை ஒடுக்குவதற்காக காலவரம்பின்றி தொடரக்கூடும்.

ஈராக்கைப் போலவே ஆப்கானிஸ்தானில் இருந்தும் "படைகள் திரும்பப் பெறப்படும்" என்று காட்டிக் கொள்வதற்கு இடையே, வறுமைக்கு உட்படுத்தப்பட்ட ஆனால் அதேவேளையில் ஈரான் மற்றும் சீனா இரண்டையும், மற்றும் முன்னாள் சோவியத்தின் மத்திய ஆசிய நாடுகளையும் மற்றும் இந்திய துணை கண்டத்தையும் எல்லைகளாக கொண்டு மூலோபாயரீதியில் முக்கியத்துவம் பெற்ற அந்நாட்டின் மீதான அமெரிக்க மேலாதிக்கத்தைக் குறைக்கும் நோக்கம் ஒபாமா நிர்வாகத்திற்கு கிடையாது.

அந்த தேர்தல் ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் ஆப்கானிஸ்தான் முன்னோக்கி எடுத்து வைத்திருக்கும் முக்கிய படியாகும், அதேவேளையில் "2014க்குப் பின்னரும் ஆப்கானிஸ்தானுக்கு நமது பொறுப்புகளைத் தொடர்ந்து வழங்குவோம்" என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான ஒரு அறிக்கை வெறுப்பூட்டும் விதமாக குறிப்பிட்டது.

அமெரிக்க படையெடுப்புக்கு இருந்த பரந்த விரோதத்தைச் சுரண்டியிருந்த வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய ஆட்சியான தாலிபானின் வன்முறை அந்த தேர்தல்கள் நடப்பதை நிறுத்திவிடவில்லை என்பதால் பொதுவாக மேற்கத்திய அரசாங்கங்களும் ஊடகங்களும் இந்த தேர்தலை ஒரு "வெற்றியாக" பிரகடனம் செய்தன.

இருந்தபோதினும், உள்துறை மந்திரி மொஹம்மது உமர் தௌத்சாய் கூற்றுப்படி, ஆப்கான் சிப்பாய்கள் உட்பட 47 பேர் ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் ஏனைய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை மாலையில் வெடித்த ஒரு சாலையோர குண்டு வெடிப்பில் நான்கு தேர்தல் பணியாளர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டார்கள்.

காபூல் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களின் எண்ணிக்கை முதல் சுற்று தேர்தல்களின் போது இருந்ததை விடவும் வெகுவாக குறைந்திருந்ததாகவும், எதிர்கால வாய்ப்புவளங்கள் மீது வெகுவாக ஆர்வம் குறைந்து காணப்பட்டதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இரண்டு வேட்பாளர்களும் பரவிவரும் ஊழலை ஒழிக்க வாக்குறுதி அளித்தனர், ஆனால் அதேவேளையில் அமெரிக்க கைப்பற்றுதலால் செழித்துள்ள இன அடிப்படையிலான முக்கிய படை தளபதிகளோடும் (warlords), ஏனைய அதிகார தரகர்களோடும் அவர்கள் கூடி வேலை செய்து வந்தனர். கடந்த தசாப்தத்தில் ஆட்சியைத் தூக்கி நிறுத்த ஆப்கானிஸ்தானுக்குள் பாய்ச்சப்பட்ட பில்லியன் கணக்கான அமெரிக்க பணத்திலிருந்து இலாபம் பார்த்த ஒரு மெல்லிய மேற்தட்டு அடுக்கின் மீது அவர்கள் அனைவரும் தங்கியிருந்தனர்.

1990களில் தாலிபான் உடனான சண்டையில் வடக்கு கூட்டணியை ஸ்தாபித்தவரான அப்துல்லாவிற்கு கிடைக்கும் பலமான ஆதரவு தஜிக் படை தளபதிகளிடமிருந்து (Tajik warlords) வருகிறது. அவர் அவரது தளத்தை விரிவாக்க முனைந்துள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் அப்துல்லாவின் இரண்டு சகாக்களில் ஒருவர் ஹஜாரா சிறுபான்மையினரை அடிப்படையாக கொண்ட ஒரு முன்னாள் படை தளபதியாவார், மற்றொருவரான மொஹம்மத் கான், படை தளபதி குல்புதீன் ஹெக்மத்யாரால் (Gulbuddin Hekmatyar) ஸ்தாபிக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய இயக்கமான எசாப்--இஸ்லாமியின் (Hezb-e-Islami) சட்டத்துறை பிரிவின் ஒரு மூத்த தலைவர் ஆவார்.

2002இல் இருந்து 2005 வரையில் கார்சாயின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த அப்துல்லாவிற்கு மேற்கத்திய சக்திகளோடும், மற்றும் கார்சாயின் ஊழல் நிர்வாகத்தோடும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஜனாதிபதி கார்சாய்க்கு மிக நெருக்கமான மற்றொரு முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஜல்மாய் ரஸ்சோல், ஒரு முன்னாள் பாஸ்துன் படை தளபதி குல் அக்ஹா ஷிர்சாய் (Gul Agha Shirzai), அந்நாட்டின் மேற்கில் ஒரு அதிகார தரகரான இஸ்மாயில் கான் மற்றும் ஜனாதிபதியின் சகோதரர்களில் ஒருவரான மஹ்மத் கார்சாய் ஆகியோரும் அவரை ஆதரிப்பவர்களில் உள்ளடங்குகின்றனர்.

தாலிபான் தோல்விக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானிற்கு திரும்புவதற்கு முன் உலக வங்கி மற்றும் ஐ.நா.வில் வேலை செய்து வந்த போது, ஒரு முன்னாள் அமெரிக்க பிரஜையான ஹானி அமெரிக்காவில் பல ஆண்டுகள் இருந்துள்ளார். 2002இல் இருந்து 2004 வரையில் நிதி மந்திரியாக இருந்த அவர், மிக சமீபத்திய காலம் வரையில் அன்னிய படைகளிடம் இருந்து ஆப்கான் படைகளுக்கு பாதுகாப்பு பொறுப்புகளை மாற்றுவதில் ஜனாதிபதி கார்சாய்க்கு ஓர் ஆலோசகராக இருந்தார்.

ஒரு நிதியியல் தொழில் வல்லுனராக மேற்கில் பரவலாக ஊக்குவிக்கப்படும் ஹானி 2009 தேர்தலில் வெறும் 2.9 சதவீத வாக்குகளை மட்டுமே வென்றார். இந்த முறை, ஒரு உஸ்பெக் முன்னாள் படை தளபதியான அப்துல் ரஸ்ஷீத் தோஸ்தும் (Abdul Rashid Dostum) தான் அவரோடு உடன் தேர்தல் வேட்பாளராக நின்றிருந்தார், இவரது போராளிகள் குழு தான் அக்டோபர் 2001இல் குண்டுசில் சரணடைந்த 2,000கும் மேற்பட்ட தாலிபான் கைதிகளின் படுகொலைக்கு பொறுப்பேற்றிருந்தது.

ஹானியின் இரண்டாவது துணை ஜனாதிபதி வேட்பாளரான ஹசாரா அரசியல்வாதி சார்வார் தானிஷ் (Sarwar Danish) ஆவார். 2001இல் இறந்த ஒரு தஜிக் கெரில்லா போராளி அஹ்மத் ஷா மசூத்தின் (Ahmad Shah Massoud) சகோதரரான அஹ்மத் ஜியா மசூத்தின் ஆதரவை சமீபத்தில் ஹானி வென்றிருந்ததோடு, ஜனாதிபதி கார்சாயின் சகோதரர் கயுமினால் (Qayum) ஆமோதிக்கப்பட்டார்.

தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், அதன் விளைவாக வரும் ஒரு சதிக்கூட்டம் பொருளாதார ரீதியாகவும் மற்றும் இராணுவ ரீதியாகவும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும். கடந்த ஏழு ஆண்டுகளில், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 75 சதவீதம் அமெரிக்க "உதவிகளால்" நிறைந்திருந்ததுஅதில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க ஒப்பந்ததாரர்களால் உறிஞ்சப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

காபூலை மையமாக கொண்டு அமெரிக்காவினால் செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு செழிப்புக்குப் பின்னர், அப்போது அந்த பொருளாதாரம் ஆண்டுக்கு 14 சதவீதம் அளவிற்கு வளர்ந்திருந்தது, ஆனால் இப்போது அமெரிக்க செலவுகள் குறைக்கப்படுவதால் இந்த ஆண்டு 3.2 சதவீதத்திற்கு வளர்ச்சி குறையுமென்று உலக வங்கி அனுமானிக்கிறது. செல்வ செழிப்பான ஆப்கானிஸ்தானியர்கள் ஏற்கனவே அவர்களின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்ற தொடங்கிவிட்டனர். பல ஆதாரவளங்கள் வரியின்றி சட்டவிரோதமாக சுரங்கங்களில் இருந்து கறந்தெடுக்கப்பட்டதோடு, அந்நாட்டின் கனிம வளங்களைச் சுரண்டும் அமெரிக்க தலைமையிலான முயற்சிகள் இதுவரையில் வெகு குறைவாகவே உற்பத்தியை அந்நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

பெரும்பாலான ஆப்கானியர்கள் வறுமையில் விடப்பட்டுள்ளனர்குழந்தை இறப்புவிகிதம், ஆயுள்காலம், கழிவு வெளியேற்றும் வசதிகள் மற்றும் கல்வியறிவு ஆகியவை உலகின் மிக மோசமான மட்டங்களில் இருப்பதோடு சேர்ந்து, அந்நாட்டில் உத்தியோகபூர்வ வறுமை விகிதமோ ஏறக்குறைய 36 சதவீதமாக உள்ளது.

வாஷிங்டன் போஸ்டால் நேர்காணல் செய்யப்பட்ட காபூலில்வாசி ஒருவர் அமெரிக்க படையெடுப்பால் உருவாக்கப்பட்ட சமூக யதார்த்தத்தின் ஒரு துணுக்கை வெளிப்படுத்தினார். ஏழு வருடங்களுக்கு முன்னர் ஹெல்மண்ட் மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வாழுகின்ற பரந்த முகாமில் வசிக்கும் மிர் அஹ்மத், பிளாஸ்டிக் தார்பாய் போடப்பட்ட ஒரு அறை குடிசையில் வாழ்வதில் இருக்கும் குறைகளை எடுத்துரைத்தார். அரசு எங்கே இருக்கிறது? என்று வினவிய அவர், சிலர் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஆனால் நாங்கள் இங்கே, காத்துக் கொண்டே இருக்கிறோம், என்றார்.