சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

IMF cuts projection for US economic growth

சர்வதேச  நாணய நிதியம் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கான முன்மதிப்பீட்டை குறைக்கின்றது

By Gabriel Black
17 June 2014

Use this version to printSend feedback

2014-ல் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 2.8 சதவிகிதமாக இருக்கும் என்ற அதன் முன்மதிப்பீட்டை முன்மதிப்பீட்டை 2.0 சதவிகிதமாக குறைத்து சர்வதேச நாணய நிதியம் திங்களன்று ஒரு அறிக்கை வெளியிட்டது

அமெரிக்கா மந்தநிலையிலும் வீழ்ச்சியிலும் மூழ்கி இருக்கிறது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அரசாங்கத்தின் பாரிய பிணையெடுப்புகள் மற்றும் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட வட்டியற்ற கடன் போன்ற கொள்கைகளால் வரலாற்றில் முன்னெப்பொழுதுமில்லாத சொத்து அளவை அடைந்து நிதியியல் பிரபுத்துவம் பெறுகையில் மக்களின் பரந்த பெரும்பான்மை பெருகிவரும் பொருளாதார பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடுத்த பல ஆண்டுகளுக்கு சராசரியாக கிட்டத்தட்ட 2% ஆக அதிகரிக்கும் என்று கணித்து, மெதுவான வளர்ச்சியின் ஒரு எல்லையற்ற காலத்திற்குள் அமெரிக்கா நுழைந்திருக்கிறது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, வேலைவாய்ப்பின்மை, குறைந்தகூலிகள் மற்றும் வீழ்ச்சியடையும் வாழ்க்கைத் தரம் ஆகியவையே கோடிக்கணக்கான அமெரிக்கர்களின்  வாழ்க்கைக்கு  ஒரு நிரந்தர தன்மையாக இருக்கும்.

கடந்த வாரம் உலக வங்கியின் இதே போன்ற ஒரு கீழ்நோக்கிய திருத்தத்தைப் பின்பற்றி அந்த அறிக்கை வெளி வருகிறது. அது இந்த வருடம் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கான அதன் மதிப்பீட்டை 2.8 சதவிகிதத்திலிருந்து 2.1 சதவிகிதமாக திருத்தியது. அதே நேரம், அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவற்றில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலை, சீனா, இந்தியா மற்றும் ஏனைய "எழுச்சியடைந்து வரும் பொருளாதாரங்கள்" எனக்கூறுப்படுபவற்றின் குறைந்துவரும் வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கும் விதமாக உலக பொருளாதார வளர்ச்சிக்கான அதன் முன்வரைவை உலக வங்கி குறைத்து மாற்றியமைத்தது.

உண்மையில் அமெரிக்க பொருளாதாரம் 1 சதவிகித அளவிற்கு சுருங்கியதாக மே மாத இறுதியில் அமெரிக்க வர்த்தகத் துறையின் அறிக்கையில் காண்பித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கைகள் வெளிவந்தன. இது மூன்று வருடங்களில் முதல் சுருக்கமாகும்.

2014 இன் முதல் காலாண்டு மோசமானதாக இருந்திருந்தால் குறைந்த வளர்ச்சி "புதிய வழமையான ஒன்றாக" இருந்திருக்கும் என சர்வதேச நாணய நிதிய அறிக்கை தெளிவாக்குகிறது. எதிர்ககால அமெரிக்க பொருளாதார வளர்ச்சி பற்றிய இந்த நிதியத்தின் முன்மதிப்பீட்டின்படி 2008 இற்கு முந்தைய சராசரியான ஆண்டுக்கு 3 சதவிகிதத்திற்கு குறைவாக இருக்கும்.

"வேலைவாய்ப்பின்மை மெதுவாகத்தான் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.... பொருளாதாரம் 2017 இறுதியளவில் முழு வேலைவாய்பை அடையும்" என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. (பொருளாதார நிபுணர்களின் மொழியில், “முழு வேலைவாய்ப்புஎன்பது 5.0 சதவிகித வேலைவாய்ப்பின்மை அளவாகும்). இந்த தவறான நம்பிக்கையுடைய மதிப்பீடு உண்மையாகுமானால், அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை என்பது ஏறத்தாழ ஒரு முழு தசாப்தத்திற்கும் போருக்கு பிந்தய உச்ச அளவுகளில் இருக்கிறது என அர்த்தத்தை  ஏற்படுத்தக்கூடும்.

"வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை குறித்த தலையங்கங்களில் சுட்டிக்காட்டப்படுவதைவிட தொழிலாளர் சந்தைகள் பலவீனமாக இருக்கின்றன" என்று அந்த அறிக்கை கூறுகிறது. "நீண்டகால வேலைவாய்ப்பின்மை உயர்வாக இருக்கிறது, தொழிலாளர்களின் மிக குறைவான பங்கெடுப்பை மக்கள் புள்ளிவிபர கணிப்பீடுகள் மூலமாக விளக்க முடியும்"  மற்றும்  ஊதியங்கள்  அதிகரிக்காதுள்ளன என்று குறிப்பிடுகிறது.

தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் ஏழ்மையை நுகர்வு புள்ளி விபரங்களில் காண முடியும். முதல் காலாண்டில் ஒரு 13 சதவிகித வருவாய் அதிகரிப்பை எதிர்பார்த்தார்கள், எதிர்பார்பிற்கு மாறாக கடந்த வாரம் அமெரிக்க சில்லறை விற்பனை வருவாய் 4.1 சதவித அளவிற்கு குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அநேகமாக ஆறு அமெரிக்கர்களில் ஒருவர் பற்றாக்குறையுடன் மோசமான மத்திய அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறார். ஐந்து குழந்தைகளில் ஒன்று அதே வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் ஒரு குடும்பத்தில் உறுப்பினராக உள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியினால் சமீபத்தில் கருத்திற்கொள்ளப்பட்டதை விட நீண்டகாலத்திற்கு பெடரல் ரிசர்வின் வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கு அருகாமையில் வைத்திருக்க சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைக்கிறது. இது பங்குகள் மற்றும் கட்டிட-நில சந்தைகள் போன்றவற்றின் மதிப்பை மென்மேலும் ஊதிப் பெருக்குவதற்கும், அதன் விளைவாக பொருளாதார ஏணியின் அடித்தளத்திலிருந்து உச்சிக்கு திசைத்திருப்ப இது ஒரு செய்முறையாக இருக்கிறது.

"பொருளாதாரத்தில் அமெரிக்க தொழிலாளர் சந்தையில் இருக்கும் தொய்வின் அளவு உள்ளிட்ட கணிசமான பொருளாதார தொய்வு" காரணமாக சந்தைகளால் தற்பொழுது எதிர்பார்க்கப்படுவதுபோல் நிதிய சந்தைகளுக்கு 2015 மத்தியை விட நீண்டகாலத்திற்கு கிட்டதட்ட வட்டியற்ற கடனுக்கான அதன் கொள்கையை பெடரல் ரிசர்வ் விஸ்தரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் எழுதுகிறது.

மிக அதிக நிகர சொத்துமதிப்புடைய தனிநபர்கள் ($100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள்) அவர்களுடைய சொந்த நிறுவனங்களின் பங்குகளை தவிர்த்து தங்கள் செல்வம் 2013இல் 19.7 சதவிகித ஒரு சராசரி அதிகரிப்பை கண்டார்கள் என்று Boston Consulting Group இனால் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய report எடுத்துக்காட்டிகிறது. அதேநேரம், சமீபத்திய ஆண்டுகளில் மிக குறைவான அளவாக உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 2.9 சதவிகிதம் மட்டுமே இருந்தது.

உலகத்தின் மத்திய வங்கிகளில் வட்டி விகிதங்கள் வரலாற்றிலேயே குறைந்த அளவில் இருக்கின்றன. இந்த மாதத்தின் ஆரம்பத்தில், ஐரோப்பிய மத்திய வங்கி அதன் முக்கிய விகிதத்தை ஒரு சாதனை குறைப்பாக 0.15 சதவிகதத்திற்கு குறைத்ததோடு அதன் வட்டி வீதங்களில் ஒன்றை எதிர்மறையில் 0.10 சதவிதத்திற்கு கொண்டுவந்தது.

பொருளாதார அமைப்புமுறையின் அடிப்படையிலுள்ள நிலைமுறிவை தீர்ப்பதற்கு பதிலாக, கிட்டத்தட்ட இலவச மற்றும் அளவற்ற கடன் கொள்கை ஒரு புதிய பொருளாதார நெருக்கடிக்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் பொருளாதாரத்தின் உற்பத்தித்துறை உட்பட உண்மையில் முதலீடு செய்வதற்கு இலாபகரமான இடம் எதுமில்லை, வோல் ஸ்ட்ரீட்டைச் சுற்றிசுழரும் வேகமான மற்றும் இலகுவான பணப் புழக்கம் அதிக அபாயமிக்க மற்றும் ஊக சொத்துக்களை நோக்கி வழிநடத்துகிறது

சர்வதேச நாணய நிதியம் தன்னுடைய அறிக்கையில் இந்த குறிப்பை எடுத்துக்கொள்கிறது அதாவது "நீண்ட கால குறைந்த வட்டி வீதங்கள் பொருளாதார நிலைப்பாட்டு கவலைகளை தொடர்ந்து எழுப்புகின்றன.” உருவாகி வரும் பாதிப்புகளின் இந்த இருப்புக்களின் சில பரந்த பிணைப்பு ஒரு குறுகிய கால வட்டி வீதங்களின் எழுச்சிக்கு எதிராக பின்னனியில் அமைக்கப்பட்டுள்ளது... இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என நிரூபிக்கக்கூடும்... ஒரு எதிர்பாராத மற்றும் சுயமான வலியுறுத்தும் பொருளாதார சொத்துக்களின் ஒரு தொடரை மறுவிலையிடுவதை தூண்டிவிடக்கூடும்.”

கடந்த வாரம், கட்டிட-நில விலைகளின் திடீர் வீழ்ச்சி குறித்து சாத்தியம் பற்றி அதிலும் தனிப்பட்ட முறையில் ஐக்கிய இராஜ்யத்தை (UK) குறிப்பிடும் போது சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது.

ஒரு புதிய நிதி நெருக்கடியை தவிர்க்க வேண்டும் சர்வதேச நாணய நிதியம் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை பூஜ்ஜியத்திற்கு அருகாமையில் தொடர்ந்து வழங்க மத்திய வங்கிகளை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் கடன் குமிழ் தானே ஒரு நிதிய உடைவிற்கு  அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கிறது.

2008 இல் வோல் ஸ்ட்ரீட்டினால் அறிவிக்கப்பட்ட நிலைமுறிவிலிருந்து உண்மையான மீட்சி ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, பொருளாதார வளர்ச்சி குறைந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு உலக மந்தநிலையின் ஒரு அடித்தளத்தின் மீது, பங்கு விலைகளில் ஒரு பரந்த எழுச்சி, பெருநிறுவன லாபங்கள் மற்றும் தலைமை அதிகாரி ஊதியம் ஆகியவை மத்திய வங்கிகளால் பாரிய நிதி செலுத்துகைகள் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது நிலைத்திருக்கக்கூடிய ஒன்றல்ல.

சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண் இயக்குநர், கிறிஸ்டின் லகார்ட்டின் ஈராக்கிலுள்ள நெருக்கடி மற்றும் எண்ணைய் விலைகள் மீதான அதன் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார். அவர் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒரு பேட்டியின் போது FOX Business-இக்கு:“ஈராக்கில் சமீபத்திய பதட்டங்களின் விளைவாக ஏற்படக்கூடிய எண்ணைய் அதிர்ச்சி குறிப்பாக பொருளாதாரத்தை பாதிக்கலாம் என நாம் நம்புகின்றோம் என அவர் கூறினார்.