சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Oppose the attacks on Muslims in Sri Lanka

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்திடு

By Socialist Equality Party (Sri Lanka)
23 June 2014

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) அதிதீவிரவாத பொது பல சேனா அல்லது பிபிஎஸ் அமைப்பால் இலங்கையின் தென்மேற்கில் உள்ள அளுத்கம மற்றும் பேருவலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டனம் செய்கின்றது -இந்த தாக்குதல்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த இனவாத பிரச்சாரமானது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். தனது சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ச்சி காணும் எதிர்ப்பையிட்டு விழிப்புடன் உள்ள அரசாங்கம், வாழ்க்கை நிலைமைகள் மீதான ஒரு புதிய சுற்று தாக்குதல்களுக்கான தயாரிப்பில், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி முயல்கின்றது.

அரசாங்கம் பல நகரங்களில் இராணுவத்தை நிலைநிறுத்தவும் நாடு முழுவதும் போலீசை "விழிப்புடன்" வைக்கவும் இந்த நிலைமையை பயன்படுத்திக்கொண்டுள்ளது. "இன அல்லது மத பகைமையை உருவாக்கும் கூட்டங்களைதடை செய்யவதாக போலீஸ் நேற்று அறிவித்ததுஇதை நியாயபூர்வமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களை தடை செய்வதற்கான சாக்குப் போக்காக பயன்படுத்த முடியும்.

பொது பல சேனா அளுத்கமவில் ஜூன் 15 அன்று ஒரு கூட்டத்தை நடத்திய பின்னரே இந்த முஸ்லீம்-விரோத வன்முறை வெடித்தது. காத்திரமான முஸ்லீம்-விரோத உரை ஒன்றை ஆற்றிய, ஒரு பௌத்த துறவியும் பொது பல சேனாவின் செயலாளருமான கலேகொட அத்தே ஞானசார, முஸ்லிம்கள் மற்றும் "பரதேசிகள்" யாராவது ஒரு சிங்களவர் மீது விரல் வைத்தால் அது அவரின் முடிவாக இருக்கும்," என்று அறிவித்தார். துறவியின் உரையின் பின்னர், வன்முறையில் ஈடுபட்ட கும்பல் இரண்டு முஸ்லிம்கள் மற்றும் ஒரு தமிழரை கொலை செய்ததுடன் பெருந்தொகையானவர்களை காயப்படுத்தியதோடு கடைகள் மற்றும் வீடுகளுக்குத் தீ மூட்டின.

வன்முறையை நிறுத்துவதற்கு என்ற பெயரில் நூற்றுக்கணக்கான போலீஸ் மற்றும் போலீஸ் கமாண்டோக்களும், பின்னர் இராணுவத்தினரும் நகரில் நிலைகொண்டிருந்தனர். ஊரடங்கை போர்வையாக்கிக் கொண்டு தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட்ட அந்த சிங்கள பெளத்த கும்பல்களை பாதுகாப்பு படையினர் கண்டும் காணாதது போல் இருந்தனர். தாக்குதல்கள் தொடர்கின்றன. சனிக்கிழமை, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தில் பாணந்துறையில் முஸ்லீம்களுக்கு சொந்தமான ஆடை வியாபார நிலையம் அழிக்கப்பட்டது.

அரசாங்கம், போலீஸ், ஊடகங்கள் மற்றும் எதிர் கட்சிகளும் இந்த வன்முறையை ஒரு "மதங்களுக்கு இடையேயான மோதல்" என சித்தரிப்பதோடு ஒருவருக்கொருவர் "அதிதீவிரவாதிகள்" என குற்றம் சாட்டுகின்றனர். இது அப்பட்டமான பொய் ஆகும். நாட்டை ஒரு பெரும் இனவாத தீ மூட்டலின் விளிம்பிற்கே கொண்டு வந்த பொது பல சேனாவின் சமீபத்திய ஆத்திரமூட்டல்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும்.

பொது பல சேனாவுடன் சேர்ந்து ராவணா பலகாய (இராவணன் படை), சிங்கள ராவய (சிங்கள எதிரொலி) மற்றும் இதே போன்ற பெளத்த பிக்குகள் தலைமையிலான தீவிரவாத கும்பல்கள், நாட்டின் பல பகுதிகளிலும் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மீது நூற்றுக்கணக்கான வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளன. முஸ்லீம் வணிக நிலையங்கள் தாக்கப்பட்டதோடு அவர்களிடம் பொருட்களை வாங்க வேண்டாம் என்ற பிரச்சாரமும் தூண்டிவிடப்பட்டது.

இந்த பேரினவாத பிரச்சாரம், இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது. ஜனாதிபதி, பொது பல சேனா பற்றி "ஆத்திரமூட்டும் கருத்துக்களை" வெளியிட வேண்டாம் என கடந்த வியாழக்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்களை எச்சரித்ததாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இராஜபக்ஷ அதே கூட்டத்தில், அளுத்கமை சம்பவங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு "சர்வதேச சதி" என்று ஆதாரம் எதுவும் இல்லாமல் அறிவித்தார். ஜனாதிபதி, தொழிலாளர்களின் போராட்டங்களை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை கண்டனம் செய்ய "சர்வதேச சதி" என்ற ஆதாரமற்ற கூற்றுக்களை பயன்படுத்துவது வழக்கமாகும்.

தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொது பல சேனாவுடன், இராஜபக்ஷவும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலருமான கோட்டாபய இராஜபக்ஷவும் நெருக்கமான உறவு வைத்துள்ளனர். பொது பல சேனா மற்றும் ஏனைய சிங்கள பேரினவாத குழுக்களுக்கும் பௌத்த துறவிகள், சிறு கடைக்காரர்கள் மற்றும் சமூக விரோத தட்டினர் மத்தியில் ஒரு அடித்தளம் உள்ளது. இராஜபக்ஷக்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்த இந்த அமைப்புக்களை ஊக்குவித்துள்ளனர்.

அரசாங்கம் பொருளாதார வெற்றிகள் பற்றி பெருமை பேசுகின்ற போதிலும், இவை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களிலேயே பெரிதும் தங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியமானது கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக இருந்த வரவு- செலவுப் பற்றாக்குறையை இந்த ஆண்டு 5.3 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று மே மாதம் வலியுறுத்தியது. இது தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் கடுமையான புதிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் வரிவிதிப்புக்களையே அர்த்தப்படுத்துகிறது.

சமூக அழுத்தங்கள் ஏற்கனவே வெடிக்கும் நிலையில் இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக இரயில் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் மின்சார துறை ஊழியர்களும், ஆசிரியர்களும் சம்பளம் மற்றும் நிலைமைகள் தொடர்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி தனியார்மயத்துக்கு எதிராக ஒரு நீண்ட பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். மானிய குறைப்பு தொடர்பாக விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

இராஜபக்ஷ, உழைக்கும் மக்கள் மத்தியில் பிளவுகளை மற்றும் குழப்பங்களை விளைவிக்க பொது பல சேனா மட்டுமன்றி ஏனைய சிங்கள அதிதீவிரவாதிகளையும் பயன்படுத்துவார். அவர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களுக்கு எதிராகவும் அவர்களை கட்டவிழ்த்துவிடுவார். குறிப்பிடத்தக்க வகையில், தனது வர்த்தகர்கள்-சார்பு திசையமைவை ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ள பொது பல சேனா தலைவர் ஞானசார, தனது அமைப்பு தனியார் பல்கலைக்கழகங்களை ஆதரிப்பதோடு சூதாட்டம் உட்பட வெளிநாட்டு முதலீடுகளை எதிர்க்காது என்று அறிவித்துள்ளார்.

உழைக்கும் மக்கள் மத்தியில் பிளவுகளை விதைக்கவும் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுக்கவும் இனவாதம் மீண்டும் மீண்டும் தூண்டி விடப்பட்டு வருகிறது. 1948ல் இருந்தே ஒவ்வொரு நெருக்கடியின் போதும், ஐக்கிய தேசிய கட்சியினதும் (யூஎன்பீ) இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் (ஸ்ரீலசுக) அரசாங்கங்கள் சிங்கள பேரினவாதத்தை நாடின. 1983ல், தனது சந்தை சார்பு மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு வளர்ந்த நிலையில், யூஎன்பீ அரசாங்கம் தூண்டிவிட்ட தமிழர் விரோத படுகொலைகள், நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் தொடங்கத்தை குறித்தன. இதனால் இலட்சக் கணக்கானவர்கள் உயிரிழந்ததோடு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கு நாசமாக்கப்பட்டு ஒரு பெரிய பொலிஸ் அரச எந்திரம் உருவாக வழிவகுத்தது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகள் தோல்வியடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், இராஜபக்ஷ அரசாங்கம் நெருக்கடியில் மூழ்கியுள்ளது. முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை ஊக்குவிப்பதை போலவே, அது புலிகள் புத்துயிர் பெறுகின்றனர் என்று கூறி தமிழர் விரோத உணர்வையும் தூண்டிவிட்டு வருகின்றது. அரசாங்கம், இராணுவம் மற்றும் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகளில் தங்கியிருப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்குவதற்கு பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை.

உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைகின்ற நிலையில், வலதுசாரி சக்திகளின் தோற்றம் ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும். கிரேக்கத்தில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட சமூக பேரழிவுகளுக்கு மத்தியில், பாசிச கோல்டன் டோன் அமைப்பானது அரசியல் ஸ்தாபனத்தின் பிரிவுகளின் மறைமுக ஆதரவுடன் முன்னணிக்கு வந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் தடுக்கும் தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கட்சிகளே இத்தகைய பிற்போக்கு அமைப்புக்களின் தோற்றத்துக்கான பிரதான அரசியல் பொறுப்பளிகளாகும்.

இலங்கையில், அனைத்து எதிர் கட்சிகளும் இனவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ளன. எதிர்க்கட்சியான யுஎன்பீ, அளுத்கமவில் முஸ்லீம்-விரோத தாக்குதலை கண்டனம் செய்த போதிலும், அது இனவாத ஆத்திரமூட்டல்களை செய்வதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக 1983 தமிழர் விரோத படுகொலைகளுக்கு அது பொறுப்பாளியாகும். அறிக்கை ஒன்றை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபீ) தலைவர் அனுர குமார திசாநாயக்க, “இனவாதத் தீயை மூட்டுவதாகஅரசாங்கத்தை குற்றம் சாட்டிய போதிலும் முஸ்லீம், தமிழ் மற்றும் சிங்களவர்களுமாக அனைத்து சமூகத்தவர் மீதும் குற்றம் சாட்டினார். பொது பல சேனா மற்றும் ஏனைய பௌத்த அதிதீவிரவாதிகளை அவர் குற்றம் சாட்டவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (ஸ்ரீலமுகா) தலைவர் ரவூப் ஹக்கீம் அளுத்கம தாக்குதலை அடுத்து ஆரம்பத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக மிரட்டிய போதிலும், தான் அமைச்சரவையில் இருந்தால் மேலும் அழுத்தங்களை கொடுக்க முடியும் என்று கூறி, பின்வாங்கினார். முஸ்லிம்கள் மத்தியிலான பரந்துபட்ட ஆத்திரத்தை தணிப்பதற்கு, அவர் சமீபத்திய தாக்குதல்கள் பற்றி விசாரிக்க ஐநா மனித உரிமைகள் சபையின் தூதருக்கு அழைப்பு விடுத்தார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், முஸ்லீம் முதலாளித்துவ தட்டின் நலன்களையே பிரதிந்தித்துவம் செய்கின்றது, முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை அல்ல.

நவ சமசமாஜ கட்சி (நசசக) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (யுஎஸ்பீ) போன்ற போலி இடது அமைப்புகள், தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட வர்க்க பிரதிபலிப்பை தடுப்பதில் மிகவும் தீய பங்கை ஆற்றுகின்றன. ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, பொது பல சேனாவை கண்டனம் செய்ததோடு சமீபத்திய தாக்குதல்களுக்கு கோடாபய இராஜபக்ஷவை குற்றம் சாட்டினார். எனினும், நவசமசமாஜ கட்சியும் யுஎஸ்பீயும், "மஹிந்த இராஜபக்ஷவின் பாசிச பாணியிலான ஆட்சிக்கு" எதிரான ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக வலதுசாரி யூஎன்பீயை போலியாக ஊக்குவித்து, அதனுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளன. முதலாளித்துவ கட்சிகளுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப் போடுவது, அரசியல் ரீதியில் தொழிலாளர்களை நிராயுதபாணிகளாக்கி, அரசாங்கம் மற்றும் சிங்கள அதிதீவிரவாதிகளின் கரங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு உறுதியான வழியாகும்.

இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்யும் சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் தோற்றமானது, தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. சோசலிச சமத்துவ கட்சி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்ப்பதோடு அனைத்து உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்குமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. இந்த இனவாத அமைப்புக்களை எதிர்த்து போரிடுவதற்கான ஒரே வழி, தொழிலாளர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையிலும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதேயாகும்.

இதற்கு தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டம் அவசியமாகும். இந்த போராட்டத்துக்கு தலைமை வகிக்க அவசியமான ஒரு புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை உருவாக்க அதில் சேர்ந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.