சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan Muslims protest Buddhist extremist attacks

இலங்கை முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாத தாக்குதல்களை எதிர்த்து போராட்டம்

By S. Jayanth
23 June 2014

Use this version to printSend feedback

ஜூன் 15 அளுத்கம மற்றும் பேருவளையில் பௌத்த அதிதீவிரவாத குண்டர்கள் நடத்திய தாக்குதல்களை எதிர்த்து, வியாழக்கிழமை இலங்கை முழுவதும் முஸ்லிம்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அளுத்கமையில் நடந்த வன்முறை, ஒரு வலதுசாரி பெளத்த அமைப்பான பொது பல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முஸ்லீம்-விரோத பொதுக்கூட்டத்தை அடுத்தே ஆரம்பித்தது. பொலிசார் பார்த்துக்கொண்டிருக்கும் போதே முஸ்லீம் கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதோடு இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் கொல்லப்பட்டனர்.

முஸ்லீம்கள்-செறிந்து வாழும் கிழக்கு மாவட்ட நகரங்களான மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறையும் குண்டர் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்தன. வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவில் முஸ்லிம்களும் தமிழர்களும் கூட்டாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தெற்கில் காலி, மாத்தறை, வெலிகம மற்றும் மத்திய மலையக மாவட்டங்களில் கண்டி, தெல்தெனிய, அகுறனை, பதுளை, பண்டாரவளை மற்றும் வெலிமடையிலும் முஸ்லீம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லீம் மற்றும் தமிழ் கடைகள் மூடப்பட்டன. கொழும்பில் சில பகுதிகளில் கடையடைப்பு நடந்ததோடு, அளுத்கம மற்றும் பேருவளையில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. முஸ்லீம் அதிகாரிகள், போலீஸ் மற்றும் அரசாங்கத்தின் தூண்டுதல்களுக்கு பயந்து வாராந்திர வெள்ளிக்கிழமை பிரார்த்தனையை குறுகியதாக்கிக்கொள்ள முடிவு செய்தனர்.

அளுத்கமவில் கறுப்பு கொடி ஏற்ற முயன்ற இரண்டு பேரை போலீஸ் கைது செய்தது. சில பகுதிகளில் பொது பல சேனாவுக்கு (பிபிஎஸ்) எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இலங்கையின் வடக்கில் ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும் போலீசாரும் இருப்பதோடு இராஜபக்ஷ அரசாங்கம் இனவாத வழியில் மக்களை பிளிவுபடுத்த முயற்சிக்கின்ற நிலையில், முஸ்லிம்களும் தமிழர்களும் கூட்டாக ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். போலீஸ் வவுனியாவில் மறியல் போராட்டமொன்றை நிறுத்த எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுலோக அட்டைகளை பறிமுதல் செய்துகொண்ட அதே வேளை, மற்ற அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் இருந்த சிலரை இழுத்துச் செல்ல முயற்சித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தவும் மற்றும் முஸ்லிம்கள் மீது போலீஸ் அடக்குமுறைக்கு காரணத்தை உருவாக்குவதற்குமான ஒரு தெளிவான முயற்சியாக, சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, “‘முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கம் என்ற பெயரில் ஒரு பதிவுசெய்யப்படாத அமைப்பு, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் வன்முறைகளை உருவாக்கும் முயற்சியில் எஸ்எம்எஸ் மற்றும் பேஸ்புக் மூலம் பிரச்சாரம் செய்வது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளாது என தெரிவித்தார்.

போலீஸ் உடந்தைக்கு மேலும் ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. அளுத்கமவில் பெளத்த கும்பலின் தாக்குதலை நேரடியாக கண்ட ஒரு சாட்சியான, எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பீ) பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும, ஜூன் 15 அன்று போலீசார் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பிபிஎஸ் தாக்குதல்களை முன்னெடுத்தது என்பதை உறுதி செய்துள்ளார். விடுதியொன்றில் சிக்கிக்கொண்டுள்ள சில முஸ்லீம் சிறுவர்களை காக்க உதவுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்ட பின்னர் அளுத்கமக்கு செல்ல அவர் முடிவு செய்திருந்தார். இந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறுவர்களை காப்பாற்ற முயன்ற போது, முஸ்லீம்-விரோத குண்டர்கள் அவரை தாக்கியுள்ளனர். அவரது கண் மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

முஸ்லீம் விரோத தாக்குதல்கள் தொடர்கின்றன. சனிக்கிழமை காலை, கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் நோ லிமிட் ஆடை காட்சியறை தீ பற்றியது. இதற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நோ லிமிட் முஸ்லிம்களுக்கு சொந்தமானதாகும். சனிக்கிழமை, கொழும்பு வெள்ளவத்தை மற்றும் புறநகர் பகுதியான தெகிவளையிலும் நோ லிமிட் காட்சியறைகளை மூடுமாறு அச்சுறுத்திய ஐந்து பேரை கைது செய்துள்ளதாக ஒரு போலீஸ் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கமால் வீதியில் ஒரு மசூதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. உள்ளூர் மக்கள் கட்டிடத்தை காப்பதற்காக ஒன்று கூடிய போது தாக்குதல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிபிஎஸ்சை பாதுகாக்க முன்நிற்கின்றார். கடந்த வாரம் படுகொலைக்கு காரணமான அளுத்கம கூட்டத்தில், பிபிஎஸ் செயலாளர் கலேகொட அத்தே ஞானசார ஆத்திரமூட்டும் வகையில் உரையாற்றினார் என்பதை அவர் மறுத்தார், வியாழக்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அளுத்கம கூட்டம், பௌத்த பாதுகாப்பு பேரைவை என்ற ஒரு உள்ளூர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

அதே கூற்றை தெரிவித்த பிபிஎஸ் தலைவர் ஞானசார, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிபிஎஸ் அந்த கூட்டத்தை நடத்தவில்லை என வலியுறுத்தினார். பொறுப்பை மறுக்கக் கூடிய வகையில், வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி கூட்டங்களை நடத்துவது, பிபிஎஸ் மற்றும் ஏனைய அதிதீவிரவாத குழுக்களின் ஒரு பொதுவான வழக்கமாக இருக்கிறது.

முஸ்லீம் விரோத தாக்குதல்களில் பிபிஎஸ் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளது போது, இராஜபக்ஷ சனிக்கிழமை தனது ட்வீட்டர் செய்தியில், "சமீபத்திய தொந்தரவுகள் பற்றி விசாரிக்க ஒரு உயர் மட்ட குழுவை" நியமிப்பதாக அறிவித்தார். இராஜபக்ஷ அரசாங்கம், உண்மைகளை மறைக்க ஆணைக் குழுக்கள், விசாரணை கமிசன்கள் மற்றும் நிபுணர்கள் குழுக்களை பயன்படுத்துவதில் பேர் போனதாகும்.

இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் உள்ள, ஒரு பௌத்த கட்சியான ஜாதிக ஹெல உறுமய, இனவாத மக்கள் விடுதலை முன்னணியில் (ஜேவிபீ) இருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்ச தலைமையிலான பேரினவாத தேசிய சுதந்திர முன்னணி போன்ற பங்காளிகள் அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றன.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணியும் பிபிஎஸ் தலைமையிலான தாக்குதல்களை முழுமையாக ஆதரித்ததுடன், அவை முஸ்லீம்களின் ஆத்திரமூட்டல்களுக்கான பிரதிபலிப்பு என கூறிக்கொண்டன. ஜாதிக ஹெல உறுமய தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக அளுத்கம பகுதியில் சுற்றுப்பயணம் செய்ததோடு வீடுகள் சேதமடைந்த சிங்கள மக்களை சந்தித்தார். அந்த சொத்துக்களை புனரமைக்க நிதி வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, இன மற்றும் மத கலவரங்களை உருவாக்கும் கூட்டங்கள் தடை செய்யப்படுவதோடு பங்கேற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அளுத்கம மற்றும் பேருவலையில் படையும் கவச வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளன.