சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel stoking conflict in Iraq, Iran, Syria and the Occupied Territories

ஈராக், ஈரான், சிரியா மற்றும் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் இஸ்ரேல் மோதலைத் தூண்டிவிடுகிறது

By Chris Marsden
25 June 2014

Use this version to printSend feedback

சிரியாவிற்குள் ஒரு பிராந்திய இராணுவ தலைமையகம் மற்றும் ஏனைய எட்டு இலக்குகளின் மீது திங்கட்கிழமை நடத்தப்பட்ட விமான தாக்குதல்கள், எல்லை தாண்டிய தாக்குதலில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதை சாக்காக கொண்டு நடத்தப்பட்டிருந்தது.

எல்லா தாக்குதல்களும் எல்லையோர அல்லது கோலன் குன்றுகளுக்கு அருகிலிருந்த இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்டன. கோலன் குன்றுகள் எனும் அந்த பகுதி 1967இல் நடந்த "ஆறு நாள்" அரேபிய-இஸ்ரேலிய யுத்தத்தின் போது இஸ்ரேலால் சிரியாவிடமிருந்து கைப்பற்றி ஆக்கிரமிக்கப்பட்டதாகும், பின்னர் அது 1981இல் சட்டவிரோதமாக இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

சிரிய எல்லையின் தரப்பிலிருந்த படைகளால் நடத்தப்பட்ட ஒரு முந்தைய தாக்குதலில் கோலன் குன்றுகளில் ஒரு பொதுஜன வாகனம் தாக்கப்பட்டு, ஒரு சிறுவன் கொல்லப்பட்டான் மற்றும் ஏனைய இரண்டு பேர் காயமடைந்தார்கள். இந்த மோதல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அதன் பங்காளிகள் மற்றும் துருக்கியால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே [சிரியாவிற்குள்] உள்நாட்டு யுத்தம் தூண்டிவிடப்பட்டதற்குப் பின்னர் நடத்தப்பட்டிருக்கும் கடுமையான முதல் இஸ்ரேலிய-சிரிய தாக்குதலாகும்.

வெகுஜன ஒப்பந்ததாரர்கள் மீதான அந்த தாக்குதல் சிரிய துருப்புகளால் தான் நடத்தப்பட்டன என்பதற்கு அங்கே எந்தவொரு அறிகுறியும் இல்லை. அது மேற்கத்திய ஆதரவிலான சிரிய எதிர்ப்பு படைகளின் வேலையாக இருக்கவும் அங்கே எல்லாவித சாத்தியக்கூறும் இருக்கிறதுஒன்று அவர்களே செய்திருக்கலாம் அல்லது இஸ்ரேலால் வழங்கப்பட்ட ஒரு திட்டத்திற்கேற்ப அவர்கள் வேலை செய்திருக்கலாம்.

எந்தவொரு சிறுபீரங்கி குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் சிறிய துப்பாக்கி சூடு நடவடிக்கைக்கும், ஜனாதிபதி பெஞ்சமின் நெத்தனியாகுவின் இஸ்ரேலிய அரசாங்கம் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியின் மீது குறைகூறுவதை ஒரு கொள்கையாக கொண்டுள்ளது, மேலும் இதை சிரியா மீதான அதன் முந்தைய வான்வழி தாக்குதல்களுக்கு ஒரு சாக்குபோக்காகவும் பயன்படுத்தி உள்ளது.

கொல்லப்பட்ட அந்த 14 வயது சிறுவன் மொஹாம்மது கராக்கா, வாகனம் ஒட்டுநரான அவனது தந்தைக்கு வேலையில் உதவிக்காக வந்திருந்தான். அவரது கரங்களில் கணக்கில்லா பாலஸ்தீனியர்களின் இரத்தக்கறையைக் கொண்டிருக்கும் நெத்தனியாகு அப்பட்டமான ஆத்திரத்தைக் காட்டுவதற்காக இதழாளர்களிடையே கூறுகையில், “நம்முடைய எதிரிகள் யூதர்களுக்கும், யூதர்-அல்லாதவர்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்" என்று அவர் அந்த சிறுவனின் தந்தையிடம் கூறியிருந்ததாக தெரிவித்தார்.

சிரியாவிற்கு எதிரான தாக்குதலைத் தொடங்க இஸ்ரேலுக்கு ஏதாவதொரு நியாயப்பாடு தேவைப்படுகிறது என்பது தெளிவாக உள்ளது. NBCஇன் "பத்திரிகைகளைச் சந்தித்தல்" நிகழ்ச்சியின் ஒரு நேர்காணலில், ஞாயிறன்று, நெத்தனியாகு சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள சுன்னி கிளர்ச்சியாளர்களை தோற்கடிக்க தெஹ்ரானுடன் கூடி வேலை செய்வதற்கு மாறாக, அவர்களை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியபோது, அவர் இஸ்ரேல் ஆளும் மேற்தட்டின் அரசியல்ரீதியான குற்ற சிந்தனைக்கு ஒரு வெளிப்படையான உள்பார்வையை வழங்கினார்.

அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள், ஈரானின் அணுசக்தி திட்டம் மீது வியன்னாவில் நடக்கும் பேச்சுவார்த்தையினூடாக சந்திப்பு நிகழ்த்தியதற்கு பின்னர் தான், நெத்தனியாகு இவ்வாறு கூறி இருந்தார். ISISக்கு (ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசு) எதிராக ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே சாத்தியப்படும் ஒரு கூட்டணி மீதான ஊகங்களுக்கு இடையே, அதனோடு அசாத்துடனும் ஒரு உடன்பாட்டிற்கு வர சில குரல்கள் வலியுறுத்தி வருவதோடு சேர்ந்து, ஈராக்கில் ISISக்கு எதிரான அமெரிக்க வான்வழி தாக்குதல்கள் ஈரானை பலப்படுத்துமா என்று நெத்தனியாகுவிடம் கேட்கப்பட்டது.

ஈரான் தரப்பில் அணிதிரண்டுள்ள தீவிர கொள்கையுடைய ஷியைட்களும் சரி, அல் கொய்தா மற்றும் ISIS தலைமையிலான தீவிர சுன்னி பிரிவுகளும் சரி இரண்டுமே அமெரிக்காவின் எதிரிகள் தான் என்று அவர் பதிலளித்தார். “உங்கள் எதிரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகிறார்கள் என்றால், அவர்களில் யாரையும் பலப்படுத்தாதீர்கள்,” என்று வலியுறுத்திய அவர், மாறாக "ஈராக்கில் ISIS கைப்பற்றுதலைகளை எதிர்கொள்ள அவசியமானவையாக நீங்கள் கருதும் நடவடிக்கைகளை" அமெரிக்கா எடுக்க வேண்டும், ஆனால் "லெபனான் மற்றும் சிரியாவில் ஈரான் மேலாதிக்கம் செய்வதைப் போல ஈராக்கின் மீதும் அது மேலாதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். ஆகவே நீங்கள் இரண்டு தரப்பிலும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நான் கூறுவதைப் போல, நீங்கள் இரண்டு தரப்பையும் பலவீனப்படுத்த முயலுங்கள்,” என்றார்.

ஈரான் "அணுஆயுத தகைமைகளோடு வெளியே வரக்கூடும்" என்பது மிக மோசமான விளைவாக இருக்குமென தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், “அதுவொரு துன்பியலான பிழையாக ஆகிவிடும். அது வேறு எல்லாவற்றையும் ஒப்பீட்டில் ஒன்றுமில்லாததாக்கும்.... அதை என்ன விலைக் கொடுத்தாவது தடுத்தாக வேண்டும்,” என்றார்.

அதே தொனியில், திங்கட்கிழமை இராணுவ தாக்குதலுக்குப் பின்னர் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தின் போது நெத்தனியாகு கூறுகையில், சிரியாவில் நடப்பதைப் போன்ற மோதல்களில், அதன் எதிரிகளே ஒருவரையொருவர் பலவீனப்படுத்த விட்டுவிட்டு, பேசாமல் இருப்பதே இஸ்ரேலுக்கு சிறந்ததாகும் என்றார். “இது நாகரீகமடைதலுக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான ஒரு அபாயப்பகுதி,” என்றார்.

சிரியாவிற்கு எதிரான சமீபத்திய தாக்குதல், ஈரானின் ஒரு முக்கிய கூட்டாளியான ஹமாஸை குறிவைத்து ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் நடத்தப்பட்ட ஒரு இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு பின்னர் வருகிறது. அந்த விடயத்தில் சாக்குபோக்காக இருந்தது என்னவென்றால் ஜூன் 12 அன்று பெத்லெஹெமிற்கு அருகில் மூன்று சிறுவர்கள் இலவச பயணத்திற்காக சாலையில் காத்திருந்த போது அவர்கள் குற்றமான முறையில் கடத்தப்பட்டார்கள் என்பதாகும்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) “Operation Brother’s Keeper” ஹெப்ரோன், நபுலுஸ் மற்றும் ரமல்லாஹ் நகரங்களுக்குள் இராணுவ ஊடுருவல்களை நடத்தியுள்ளதோடு, புதிய சோதனைச்சாவடிகளையும் சுருள் கம்பி தடுப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கே 361க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பெருந்திரளாக கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பான்மையினர் ஹமாஸ் அங்கத்தவர்கள் ஆவர், மேலும் 2011இல் ஹமாஸூடன் செய்து கொள்ளப்பட்ட கைதிகள் பரிவர்த்தனையின் பாகமாக இஸ்ரேல் சிப்பாய் ஜிலாத் ஷாலிட்டிற்கு மாற்றாக விடுவிக்கப்பட்ட 51 பாலஸ்தீனிய கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதும் இதில் உள்ளடங்கும். ஒரு 14 வயது சிறுவன் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் இந்த சிறுவனுக்காக நெத்தனியாகு முதலைக்கண்ணீர் கூட வடிக்கவில்லை.

மின்சார வினியோக வெட்டுக்கள் உட்பட, காசா மற்றும் மேற்கு கரையின் "வெகுஜன மக்களுக்கு எதிரான ஒரு பரந்த நடவடிக்கைக்கு" அவர் ஆதரவாக இருப்பதாக துணை பாதுகாப்பு மந்திரி டேனி டேனோன் (லிகுட்) ஞாயிறன்று தெரிவித்தார்.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அம்மாதிரியான நடவடிக்கையை கூட்டு தண்டனைமுறையின் (collective punishment) ஒரு வடிவமாக, நான்காவது ஜெனிவா தீர்மானங்களின் ஷரத்து 33இன் கீழ் சட்டவிரோதமானதாக மற்றும் ஒரு யுத்த குற்றமாக அறிவித்தது. இராணுவத்தின் நடவடிக்கைகள் "அடிப்படை உரிமைகள் மற்றும் கூட்டு தண்டனைமுறை மீதான உத்தரவாணையில்லாத மீறல் குறித்த ஆழ்ந்த கவலைகளை உயர்த்துவதாக" வாதிட்டு பதினொரு இஸ்ரேலிய மனித உரிமைகள் குழுக்கள் பாதுகாப்பு மந்திரி மோஷி யாலொனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரி இட்ஜக் அஹரோனோவிச்சிக்கும் கடிதம் எழுதி இருந்தன.

ஜனாதிபதி மஹ்மொத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீனிய ஆணையம் சம்பிரதாயமாக அந்த கைது நடவடிக்கைகள் மற்றும் ஏனைய முறைமைகளுக்கு கண்டனங்களை அறிவித்தது, ஆனால் அது நேரடியாக IDF உடன் வேலை செய்து வருகிறது. ஹமாஸின் முக்கிய எதிரியான பதாஹிற்கு தலைமை கொடுக்கும் அப்பாஸ் முன்னதாக கூறுகையில், “நாங்கள் அந்த இளைஞர்களை மீட்டு கொண்டு வருவதற்காக [இஸ்ரேலுடன்] இணைந்து செயல்பட்டு வருகிறோம்...” என்றார்.

மீண்டுமொருமுறை இஸ்ரேலின் உண்மையான நோக்கம் மத்திய கிழக்கின் மோதல்களுக்கு மறுதூண்டுதல் அளிப்பதற்கு முயற்சி செய்வதாகும், அது ஈரானின் செல்வாக்கைக் குறைத்து வாஷிங்டனுடனான உறவுகளில் அதன் கரங்களைப் பலப்படுத்துமென்று அது நம்புகிறது.

பதாஹ் மற்றும் ஹமாஸிற்கு இடையிலான ஒரு சமரச உடன்படிக்கை ஏப்ரலில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பிரதேசங்கள் மீதான அந்த தாக்குதல் நடத்தபட்டிருந்தது. இந்த உடன்படிக்கை, பதாஹ் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு படுகையை ஹமாஸ் தலைமையில் இருந்த காசா பகுதியிலிருந்து பிரிப்பதற்கு இட்டு சென்ற 2007இல் முதன்முதலில் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதை அர்த்தப்படுத்தியது.

அந்த உடன்பாட்டிற்கு இஸ்ரேலின் விடையிறுப்பு கடுமையாக விரோதமாக இருந்தது, மேலும் அது PA உடன் தொடர்ந்து நடந்துவந்த சமாதான பேச்சுவார்த்தைகளையும் இடைநிறுத்தம் செய்தது. அமெரிக்க அரசு செய்தி தொடர்பாளர் ஜென் பிஸாக்கி அதை ஆதரித்து கூறுகையில், “இஸ்ரேலின் உரிமை நிலவுவதை நம்பாத ஒரு அரசாங்கத்தோடு இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்துமென்று எவ்வாறு எதிர்ப்பார்ப்பது, இவ்வாறு காண்பது கடினமாக உள்ளது,” என்றார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஒரு இடைக்கால ஒருங்கிணைந்த அரசு பதவியேற்றது. நெத்தனியாகு அவரது மந்திரிகளுக்கு தெரிவிக்கையில், காசா பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் எந்தவொரு தாக்குதலுக்கும் இப்போதிருந்து பாலஸ்தீன ஆணையத்தையே அவர் பொறுப்பாக்குவதாகவும், ஹமாஸூம் பங்கெடுக்கும் 2015இல் நடக்கவுள்ள பாலஸ்தீனிய தேர்தல்களைத் தடுக்க செயல்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் கூறிய வார்த்தைகளுக்கு அவர் உண்மையோடு இருந்துள்ளளார். அந்த சிறுவர்கள் காணாமல் போனமை "ஹமாஸ் மிதமாக மாறி வருகிறார்கள் என்ற மேற்கின் சிந்தனை கூடம்" தவறாகி இருப்பதை நிரூபிப்பதாக நெத்தனியாகுவின் வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் டோர் கோல்ட் தெரிவித்தார். ஒருங்கிணைந்த அரசாங்கத்தை ஹமாஸ் அங்கீகரித்த பின்னர், “2012 மற்றும் 2013இன் அமைதி, முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது," என்றார்.

சர்வதேச சட்டத்தோடு முற்றிலும் இணங்கிய விதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடத்த" இஸ்ரேல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டுமென திங்களன்று ஐநா அரசியல் விவகார தலைவர் ஜேஃப்ரி பெல்ட்மேன் வலியுறுத்தினார்.

.நா பாதுகாப்பு கவுன்சிலின் மூடிய கதவுக்குப் பின்னால் நடந்த ஒரு அமர்வின் போது, “நிலைமை அங்கே அவ்விடத்தில் மிகவும் மோசமாக உள்ளது,” என்று எச்சரித்த அவர், “நாம் ஒரு மூன்றாம் பாலஸ்தீன புரட்சியின் (intifada) விளிம்பில் இருக்கிறோமோ என்று நான் அஞ்சுகிறேன்,” என்றார்.

வாஷிங்டன், இஸ்ரேல் மீதான எந்த கண்டனத்தையும் விரும்பாது என்பதால் ரஷ்யாவின் ஐநா தூதர் விடாலி சுர்கினால் நிராகரிக்கப்பட்ட திருத்தங்களை எடுத்துக்காட்டி, இஸ்ரேலிய இளைஞர்கள் குற்றகரமாக கடத்தப்பட்டமை மீதான ஒரு வரைவு அறிக்கையை அமெரிக்கா தடுத்தது.

இஸ்ரேலின் ஐநா தூதர் ரோன் புரோசர் ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், “ஹமாஸ்களுக்கு இஸ்ரேல் வரவேற்பேற்பளிக்காது என்பதைப் போல சில நாடுகள் நடந்து கொள்கின்றன,” என்றார். ஆனால் நேற்று இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கையைக் குறைப்பதாக அறிவித்தது. சனிக்கிழமை முதலாக புனித ரமலான் மாதம் தொடங்குவதால், சம்பவங்கள் வேறுவிதத்தில் "கட்டுப்பாட்டை மீறிவிடுமென" நெத்தனியாகுவின் பாதுகாப்பு துறை அங்கத்தவர்கள் அச்சங்களை எழுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பதட்டங்களைத் தூண்டிவிடுவதற்கான மற்றொரு முயற்சியில், காசாவில் உள்ள ஹமாஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பணியாளர்களின் சம்பள நெருக்கடியை தீர்க்க பாலஸ்தீனிய ஆணையத்திற்கு கட்டாரில் இருந்து 20 மில்லியன் டாலர் பரிவர்த்தனை செய்ய ஐநா மத்திய கிழக்கு சமாதான தூதர் ரோபர்ட் ஷெர்ரி உதவியதாக குற்றஞ்சாட்டி, அவரை இஸ்ரேலில் இருந்து வெளியேற்ற வெளியுறவுத்துறை மந்திரி அவிக்டொர் லெபெர்மேன் அச்சுறுத்தி உள்ளார். செய்திகளின்படி, “இஸ்ரேல் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் [இது] ஏற்புடையதென்றால் மட்டுமே அவரால் உதவ முடியுமென" குறிப்பிட்டு, அந்த நிதி பரிவர்த்தனைகளுக்கு தடைவிதிக்க அப்பாஸ் மறுத்துவிட்டார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு விஜயமாக அவர் கட்டார் சென்றிருந்த போதும் கூட இந்த விடயம் முன்னுக்கு வரவில்லை என்று குறிப்பிட்டு, அவரது பங்கிற்கு ஷெர்ரி, பரிவர்த்தனையில் தாம் பங்கெடுக்கவில்லை என மறுத்துள்ளார்.

மேற்கு கரையில் இஸ்ரேலின் கொடூரமான கூட்டு தண்டனையின் மீது அந்த தூதர் கவலைகளை வெளியிட்டதற்காக மற்றும் "சர்வதேச சட்டத்திற்கு இணங்க, உயிர்களை மதித்து, பாலஸ்தீனியர்களின் கண்ணியம் மற்றும் வாழ்வாதாரங்களை மதித்து" டெல் அவிவ் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியமைக்காக அவர் இலக்கில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.