சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Leaked phone call suggests opposition snipers killed Maidan protesters

மைதான் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்தரப்பு ஸ்னைப்பர்கள்தான் கொன்றன என்று கசிந்த தொலைபேசி அழைப்பு தெரிவிக்கிறது

By Alex Lantier 
6 March 2014

Use this version to printSend feedback

யானுகோவிச்சை பதவியிலிருந்து அகற்ற ஏகாதிபத்திய சக்திகள் நம்பிய சக்திகளைப் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நேற்று ரஷ்ய செய்தி ஊடகம், உக்ரேனிய எதிர்ப்புக்களைப் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை பிரிவுத் தலைவர் கத்ரின் ஆஷ்டனுக்கும் எஸ்தோனிய வெளியுறவு மந்திரி உர்மஸ் பேட்டுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை கசியவிட்டது. பிரெஞ்சை அடித்தளமாக கொண்ட யூரோநியூஸ் தொலைக்காட்சி நிலையத்தால் தொடர்பு கொள்ளப்பட்டபோது, எஸ்தோனியாவின் வெளியுறவு அமைச்சரகம் அத்தொலைபேசி பதிவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது.

இந்த அழைப்பு புதிய ஆட்சியை ஜனநாயகத்திற்கு உதாரணம் என்று பகிரங்கமாகப் புகழும் உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அது ஒரு குற்றத்துடன் தொடர்புடையது எனக் கருதுவதை எடுத்துக்காட்டுகின்றது. மேற்கு ஆதரவு கொண்டவர்கள் ஆட்சி கவிழ்ப்பிற்கு வகை செய்ய, கொலைகார ஆத்திரமூட்டல்களை நடத்தி, ஆத்திரமூட்டல்களை நசுக்கி, ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்று, அவர்களின் கொலைக்கு யானுகோவிச்சை குற்றம் கூறச்செய்தது தெரிய வந்துள்ளது.

தன்னுடைய சமீபத்திய உக்ரேன் பயணத்தைப் பற்றி பேட் (Paet) தகவல்  கொடுத்திருந்தார்; அங்கு அவர் மைதான் எதிர்ப்புக்களில் ஈடுபட்ட சாதாரண மக்கள் சமூகத்தினர் பலரை விவாதங்களுக்காக சந்தித்தார். இப்பொழுது கூட்டணிக்கு திரும்பியுள்ள அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை இல்லை. மைதானில் கூடியவர்களும் சாதாரண சமூகமும் புதிய அரசாங்கத்தில் எவர் இருப்பர் என்பதைத் தாங்கள் அறிவோம் என்றும், அவர்கள் அனைவரும் கறைபடிந்த கடந்த காலம் கொண்டவர்கள் என்றும் கூறினர் என்று ஆஷ்டனிடம் அவர் கூறினார்.

பேட்டின் கருத்துக்களுக்கு ஆஷ்ட்டன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை; வெறுமே ஆம் என்றுதான் கூறினார். பின்னர் அவர் உக்ரேனிய ஆட்சிக்கு  நிதிய ஆலோசகர்களை அனுப்புவதாகவும், எப்படி சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

உக்ரேனிய பாராளுமன்றமான ராடாவின் உறுப்பினர்கள் மைதானில் ஆயுதமேந்திய எதிர்த்தரப்பு குண்டர்களால் அடிக்கப்படுகின்றனர் என்றும் பேட் கூறினார். இக்கருத்தும் ஆஷ்டனிம் இருந்து விடையிறுப்பை பெறவில்லை. இது தீவிர வலதுசாரி சக்திகளில் இருந்து ராடாவை பாதுகாக்க அவர் அதிகம் அக்கறை கொள்ளவில்லை எனத் தோன்றுகிறது.

தான் பல பிராந்தியங்களில் யானுகோவிச் கட்சி உறுப்பினர்களுடன் விவாதங்கள் நடத்தி, மக்கள் சீற்றத்தைத் தணிக்க ஆர்ப்பாட்டக்காரர்களின் கொலைக்கு பெரிதும் பரிதாபத்தை காட்டிக்கொள்ள அவர்களிடம் கூறியதாக தெரிவித்தார்.

எதிர்ப்புக்களில் தீவிரமாக பங்குபற்றியிருந்த வைத்தியர்கள் கொடுத்த தகவலை மேற்கோளிட்ட வகையில் பேட் விடையிறுத்தார். ஒரே ஸ்னைப்பர்கள் இருபுறத்து மக்களையும் கொன்றது... என்ன நடந்தது என்பது பற்றி விசாரிக்க புதிய கூட்டணி விரும்பவில்லை என்பது உண்மையில் தொந்திரவைக் கொடுக்கிறது. இப்பொழுது ஸ்னைப்பர்களுக்கு பின்னால் யானுகோவிச் இல்லை என்பது மிகவலுவாக உணரப்படுகிறது. புதிய கூட்டணியில் இருந்த வேறு எவரோதான் இதன் பின்னணியில் இருந்திருக்கவேண்டும். என்றார்.

ஆஷ்டனிடம் தான் இந்த புதிய கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே மதிப்பிழப்பிற்கு உட்படுடக்கூடும் என்று தான் அஞ்சுவதாக பேட் வலியுறுத்தினார்.

புதிய ஆட்சியை குழிபறிக்கும் விசாரணைகளுக்கு அனுமதிக்கப்படக்கூடாது என்று ஆஷ்டன் வலியுறுத்தினார்.