சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

War threats against Russia and the social crisis in the United States

ரஷ்யாவிற்கு எதிரான யுத்த அச்சுறுத்தல்களும், அமெரிக்காவில் சமூக நெருக்கடியும்

Joseph Kishore
19 March 2014

Use this version to printSend feedback

மீண்டுமொருமுறை, அமெரிக்க மக்கள் ஒரு முழு அளவிலான யுத்த பிரச்சார உந்துதலை முகங்கொடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவோடு நடத்தப்பட்ட பதவிக்கவிழ்ப்பால் தொடக்கி வைக்கப்பட்ட உக்ரேனிய நெருக்கடியை, கிரிமியாவின் சர்வஜன வாக்கெடுப்பு மீது ரஷ்யாவிற்கு எதிரான ஒரு பிரச்சாரம் பின்தொடர்ந்துள்ளது. பொருளாதார தடைகள் மற்றும் நேட்டோ இராணுவ விடையிறுப்பின் அச்சுறுத்தலும் அதில் உள்ளடங்கும்.

தற்போதைய நெருக்கடியானது, அமெரிக்க வாழ்வில் எதுவொன்று நிரந்தர அம்சமாக மாறியுள்ளதோ அதன் தொடர்ச்சியில் சமீபத்திய ஒன்றாகும். கடந்த கோடையில் தான் அமெரிக்க மக்கள், தோற்றுவிக்கப்பட்ட ஒரு யுத்த காய்ச்சலுக்குள் தள்ளப்பட்டார்கள். அது சிரியாவிற்கு எதிரான ஒரு குண்டுவீச்சு தாக்குதலுக்கு அருகாமையில் இட்டு சென்றது. அதற்கு முன்னர் லிபியாவில், "மனித உரிமைகள்" பேரழிவைத் தடுக்க உடனடியாக இராணுவ நடவடிக்கை அவசியப்படுவதாக மக்களுக்கு கூறப்பட்டது. ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களோ, இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுடன் எப்போதும் "பரிசீலனையில் வைக்கப்பட்டு", நிரந்தரமாக உள்ளன.

கடந்த 25 ஆண்டுகளாக, அமெரிக்கா அதிகளவில் பொறுப்பற்ற மற்றும் கட்டுப்படுத்தவியலா சுபாவத்தை எடுத்துள்ள ஓர் உலகளாவிய இராணுவ வன்முறை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. வரலாற்றின் முடிவு என்ற பிரகடனங்களோடு சேர்ந்திருந்த, 1991இல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவை, குண்டுவீச்சுக்கள் மற்றும் டிரோன் தாக்குதல்களில் இருந்து நேரடியான ஆக்கிரமிப்பு வரையில், பனாமா, ஈராக், ஹைட்டி, சோமாலியா, சூடான், சேர்பியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், யேமன், பாகிஸ்தான் மற்றும் லிபியா என, பல்வேறு இராணுவ தலையீடுகள் பின்தொடர்ந்துள்ளன.

9/11 தாக்குதலுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட ஒரு முடிவில்லாத "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்பது நிரந்தரமான அச்சமூட்டல்களை மற்றும் ஒரு பொலிஸ் அரசின் கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

சில சில வேறுபாடுகளோடு, இந்த காட்சி, மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது: அதாவது, சீர்கெட்ட ஊடகங்கள் ஹிட்லரின் சமீபத்திய அவதாரத்தை பலம் வாய்ந்தவைகளாக சித்தரிக்கின்றன; அங்கே ஜனாதிபதியிடமிருந்து உருவாக்கப்பட்ட போலிக்காரணங்களும், பாசாங்குத்தனங்களும் உள்ளன; பல காங்கிரஸ் அங்கத்தவர்கள் மேலதிகமாக ஆக்ரோஷமான முறைமைகளைக் கோருகின்றனர். உத்தியோகபூர்வ சொல்லாடல்களை கேள்விக்குட்படுத்த அழைப்புவிடுக்கும் எந்தவொரு செய்தியும் உக்ரேனில் பாசிசவாத மற்றும் யூத-விரோத சக்திகளோடு அமெரிக்கா வேலை செய்து வருகிறதென்ற உண்மை போன்றவை உதறித் தள்ளப்படுகின்றன.

இப்போது வரையில், மக்கள் ஏதோவொரு அளவிற்கு இந்த நிகழ்வுபோக்கிற்கு பழகி போய் உள்ளனர், இருந்த போதினும் அரசியல் ஸ்தாபகத்திடமிருந்து அதிகரித்துவரும் யுத்த வெறி மக்களைத் தீவிரப்படுத்துகிறது.

நாடு எப்போதும் யுத்தத்தில் இருக்கிறது அல்லது யுத்தத்தின் விளிம்பில் இருக்கிறது என்ற உண்மையானது, விளக்கத்தைக் கோரும் ஓர் அரசியல் மற்றும் சமூக-தர்க்க நிகழ்வுபோக்காகும்.

அனைத்திற்கும் முதலாவதாக, அங்கே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் நிதியியல் கட்டாயங்கள் உள்ளன. சோவியத் ஒன்றியத்தின் பொறிவை, அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்த உலகின் மீதும் தடையற்ற கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக கண்டது. வெளியுறவுக் கொள்கைகளை பொறுத்த வரையில், அமெரிக்க நலன்களோடு துல்லியமாக ஒத்துபோகாத நலன்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டால் ஏற்று கொள்ள முடியாததாக இருந்தாலும் கூட, அது அதனை செயல்படுத்துகிறது. மிக முக்கிய சந்தைகள் மற்றும் ஆதாரவளங்களின் மீது கட்டுப்பாட்டை பெறுவது உட்பட, அதன் அபிலாஷைகளுக்கு இடையூறாக இருக்கும் எந்தவொரு அரசாங்கமும், தாக்குதலுக்கான, அடிபணிய செய்வதற்கான அல்லது ஆட்சி மாற்றத்திற்கான ஒரு முக்கிய இலக்காகி விடுகிறது.

எவ்வாறிருந்த போதினும், தொடர்ச்சியான யுத்த உந்துதலில் உள்ள ஒரு மத்திய காரணி அமெரிக்காவிற்கு உள்ளேயே நிலவும் சமூக சூழ்நிலையாகும். யுத்த நெருக்கடி சூழல் ஒரு தீர்க்கமான செயல்பாட்டிற்கு அதாவது, ஒரு நாட்டிற்குள் நிலவும் சமூக அழுத்தத்தை சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட எதிரிக்கு எதிராக திருப்பி விட சேவை செய்கிறது.

பின்வரும் சில புள்ளிவிபரங்கள், 2008 பொறிவுக்கு ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க சமூக உறவுகளின் நிலையைக் குறித்த ஒரு சித்திரத்தை வழங்குகின்றன:

* அமெரிக்காவில் உத்தியோகபூர்வமாக 10.5 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பற்றுள்ளனர், ஆனால் இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வேலை நெருக்கடியின் அளவை பாரியளவில் குறைத்துக் காட்டுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், பொருளாதார காரணங்களுக்காக கூடுதலாக 5.5 மில்லியன் மக்கள் தொழிலாளர் சந்தையிலிருந்து வெளியேறி உள்ளனர் (அவர்கள் வேலையற்றோராக சேர்க்கப்படவில்லை). 2008-2009 பொருளாதார பொறிவு ஆழமடைந்ததில் இருந்து, வேலையில் இருக்கும் மக்களின் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஒரே அளவில் இருந்துள்ளது, அதேவேளையில் ஏற்கனவே அற்பமான அளவிற்கு வழங்கப்பட்டு வந்த வேலையற்றோருக்கான உதவிகள் வெட்டப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன.

*
சமீபத்திய ஆண்டுகளில் மக்கள்தொகையில் 15 சதவீதத்தினரைப் பாதிக்கும் அளவிற்கு, வறுமை தொற்றுநோய் போல் பரவி உள்ளது இந்தளவிலான அளவு கடைசியாக 1960களில் தான் காணப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை தகவலின்படி, அமெரிக்க குழந்தைகளில் ஏழில் ஒருவர் வறுமையில் வாழ்கிறார், இது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அமெரிக்காவை 29இல் 26வது இடத்தில் நிறுத்துகிறது. அமெரிக்க குழந்தைகளில் அதிகளவிலான சதவீதத்தினர் நெருக்கடியில் சிக்கிய கிரீஸை விட வறுமையில் வாழ்கின்றனர். 3.55 மில்லியன் குழந்தைகள் உட்பட, சுமார் 1.65 மில்லியன் குடும்பங்கள் நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைந்த தொகையில் வாழ்கின்றன.

* ஒவ்வொரு சமூக பிரச்சினைக்கும் ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பானது, மக்களை சிறை கம்பிகளுக்குப் பின்னால் பூட்டுவதற்காக அமைந்துள்ளது. உலகின் வேறெந்த நாட்டையும் விட, வெகு அதிகமாக, அமெரிக்கா அதன் மக்கள்தொகையில் அதிக சதவீதத்தினரை — 100,000 நபர்களுக்கு 743 பேர், அல்லது 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்களை சிறையில் அடைத்துள்ளது. உலகின் கைதிகளில் ஏறத்தாழ ஒரு கால் பகுதியினர், உலக மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமெரிக்காவில் உள்ளனர்.

*
அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்கள் பல தாசப்தங்களாக தொடர்ச்சியான தாக்குதலின் கீழ் இருத்தப்பட்டுள்ளன, மற்றும் தேசிய வருவாயில் தொழிலாளர்களுக்குச் செல்லும் பங்கு சீராக வீழ்ச்சி அடைந்துள்ளது. நுகர்வோர் அத்தியாவசிய பண்டங்களின் விலையுயர்வை எதிர்கொண்டுள்ளனர். கடன் அட்டைகள் (இதன் மூலமாக கடன் பெற்றுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சராசரி 15,252 டாலராக உள்ளது), மாணவர் கடன்கள் ($32,986) மற்றும் அடமான கடன்கள் ($152,209) என குடும்பங்களின் மீது தாங்கவியலா கடன் அளவுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆளும் வர்க்கம் செல்வ வளத்தை அடியிலிருந்து மேல் மட்டத்திற்கு பாரியளவில் மறுபகிர்வு செய்ய இந்த பொருளாதார நெருக்கடியைச் சுரண்டியுள்ளது. பெருநிறுவன இலாபங்களோ, பங்குச்சந்தைகளைப் போன்றே, சாதனையளவிலான உயரங்களில் உள்ளன. மிகப்பெரிய 400 செல்வந்தர்கள் தற்போது செல்வத்தில் 2.2 ட்ரில்லியன் டாலரைக் கொண்டுள்ளனர், இது 2012இல் இருந்து 2013 வரையில் மட்டும் 500 பில்லியன் டாலர் உயர்ந்தது.

வெளியுறவு கொள்கையைப் போன்றே உள்நாட்டு கொள்கையும் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆழ்ந்த வேர்களைக் கொண்டுள்ள நிகழ்முறைகளின் தீவிரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. கடந்த நான்கு தசாப்தங்களாக ஆளும் வர்க்கம், முந்தைய அனைத்து சமூக சீர்திருத்தங்களை மற்றும் வியாபாரங்கள் மீதான நெறிமுறை கட்டுப்பாட்டுகளை புரட்டிப் போடும், மற்றும் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரங்களில் ஒரு வரலாற்று திருப்பத்தை வடிவமைக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மோசடி, ஊக வணிகம் மற்றும் திருட்டு மூலமாக செல்வத்தைக் குவித்துக் கொண்டு, ஆளும் வர்க்கம் அதுவே அதிகளவில் ஒரு குற்றவியல் சுபாவத்தை எடுத்துள்ளது. பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் சீரழிந்த சமூக இலட்சணம் அதன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கை இரண்டிலும் யுத்தம், சமூக எதிர்புரட்சி மற்றும் ஜனநாயக உரிமைகளை சிதைப்பதில் வெளிப்பாட்டைக் காண்கிறது.

வர்க்க உறவுகளின் இந்த மறுகட்டமைப்பினால் உருவாகியுள்ள பாரியளவிலான சமூக பதட்டங்களுக்கு, ஒரு முற்போக்கான வடிகால் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவை எந்தொரு அரசியல் வெளிப்பாட்டையும் கூட காணவில்லை. அரசும், ஊடகங்கள் உட்பட அதன் துணை அமைப்புகளும் ஓர் இரக்கமற்ற மற்றும் அதிகளவிலான குற்றத்தனமான நிதியியல் செல்வந்த மேற்தட்டிற்கு சொந்தமான துணை நிறுவனங்களைப் போன்று செயல்படுகின்றன.

அவற்றின் புவிசார் அரசியல் குறிக்கோள்கள் என்னவாக இருந்தாலும், இராணுவ நடவடிக்கைகளானது வர்க்க விரோதங்களை திசைதிருப்பி விடவும், நெறிப்படுத்தவும் சேவை செய்கின்றன. அமெரிக்க இராணுவவாதத்தின் முரட்டுத்தனம் அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியின் ஆழ்ந்த மற்றும் திடமான குணாம்சத்தின் ஒரு வெளிப்பாடாகும். அது அதன் எதிர்தரப்பில் உள்ள தவிர்க்கவியலா சமூக புரட்சியின் அவசியத்தைக் குறித்துக் காட்டுகிறது.