சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US, Europe step up threats against Russia over Ukraine

அமெரிக்காவும், ஐரோப்பாவும் உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை முடுக்கிவிடுகின்றது

By Stefan Steinberg 
28 February 2014

Use this version to printSend feedback

அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹேகல் வியாழன் அன்று பிரஸ்ஸல்ஸில் நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்திற்குப்பின் ரஷ்ய அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை முடுக்கிவிட்டார்.

மற்ற நாடுகளும் உக்ரேனின் இறையாண்மையை மதிக்க வேண்டும், ஆத்திரமூட்டுதல் நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று ஹேகல் அறிவித்தார். “அதனால்தான் நான் நெருக்கமாக உக்ரேனிய எல்லையில் நடக்கும் ரஷ்ய இராணுவப் பயிற்சிகளை கவனிக்கிறேன்; இது நேற்று அவர்களால் அறிவிக்கப்பட்டது.”

ஹேகலின் எச்சரிக்கை அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, ரஷ்யாவிற்கு எதிரான தன் சொந்த அச்சுறுத்தலை வெளியிட்ட மறுநாள் வந்துள்ளது: “உக்ரேனின் நிலப்பகுதி இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடை மீறும் எத்தகைய இராணுவத் தலையீடும் பெரிய, மகத்தான தவறாகிவிடும்” என்று அவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறினார். “உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்.”

கெர்ரி மற்றும் ஹேகலின் அச்சுறுத்தல்கள் ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி உர்சுலா வொன் டெர் லையென் ஆல் நேட்டோ கூட்டத்தில் எதிரொலிக்கப்பட்டது: “உக்ரேனில், குறிப்பாக கிரிமியாவில், உள்ள நிலைமை நமக்குப் பெரும் கவலை அளிக்கிறது. நிலைமை குழப்பமாகவும் கடினமாகவும் உள்ளது; உக்ரேன் உடைந்துபோவது குறிப்பாக இப்பொழுது தவிர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமாகும், நாட்டிலுள்ள நிதான சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.”

அமெரிக்காவும் ஐரோப்பாவும் மற்ற நாடுகள் "ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்" தவிர்க்கப்பட வேண்டும் எனக் கோருவது முற்றிலும் பாசாங்குத்தனமாகும். ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவும்தான் ஜேர்மனியின் தலைமையில் பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் கொள்கையை செயல்படுத்தியுள்ளன, உக்ரேனை உள்நாட்டுப்போர் விளிம்பில் நிறுத்த பாசிசக் குழுக்களுடன் ஒத்துழைத்துள்ளன.

அவர்களது கொள்கை, உக்ரேனை ரஷ்ய செல்வாக்கு மண்டலத்தில் இருந்து உடைத்து, ரஷ்யாவையே வலுவிழக்க செய்வதாகும். கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஒரு புதிய “பனிப்போருக்குதிரும்புதல், இப்பொழுது பல செய்தி ஊடக வர்ணனைகளில் குறிக்கப்படுவது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் சமீபத்திய மாதங்களில் தேசியவாத, பாசிச சக்திகளுக்கு மேற்கு உக்ரேனிலும் நாட்டின் தலைநகர் கீயேவிலும் கொடுத்த பொறுப்பற்ற ஆதரவின் நேரடி விளைவாகும்.

உக்ரேனில் மேற்கே தளம் கொண்டுள்ள தீவிர வலது சக்திகளின் கிரிமியாவில் நுழைவோம் என்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், ரஷ்ய சார்பு போராளிகள் கிரிமிய தலைநகர் சீம்பெரோபோலில் இருக்கும் பிராந்திய பாராளுமன்றம் மற்றும் அரசாங்க தலைமயகத்தை புதன் இரவு ஆக்கிரத்துள்ளனர். சுமார் 50 ஆயுதமேந்திய குழுவினர் கட்டிடங்களை கைப்பற்றி ரஷ்யக் கொடியை பறக்க விட்டனர்.

கிரிமியாவில் பெரும்பாலும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் மேலாதிக்கம் உள்ளது; இது ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கு தாயகமும் ஆகும்இராணுவ மோதலின் ஆபத்தை அடிக்கோடிடும் வகையில், ஒரு முன்னாள் ரஷ்யப் படைத்தலைவர் Igor Korotchenko ரஷ்யாவின் ஆன்லைன் செய்தித்தாள் slon.ru இல் சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் கிரிமியாவில் உள்ள உள்ளூர் அரசாங்கத்தை வலிமையைப் பயன்படுத்தி கவிழ்ப்பதற்கு முயன்றால், ஓர் உள்நாட்டுப் போர் ஏற்படும், ரஷ்யா அதைப் புறக்கணிக்காது.” என எழுதியுள்ளார்.

ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி குறிப்பிட்டுள்ள “நிதான சக்திகளைப்” பொறுத்தவரை, வியாழன் அன்று உக்ரேனிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையால் வாக்கு அளிக்கப்பட்ட எவரும் புதிய அமைச்சரவையில் காணப்படவில்லை. புதிய அமைச்சரவை முற்றிலும் பிற்போக்குத்தனமானது. முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் முந்தைய அரசாங்கங்களில் பல காலம் இருந்தவர்கள், அல்லது பாசிஸ்ட்டுக்கள் அல்லது தன்னலக்குழுக்களின் நலன்களை பேணும் பிரதிநிதிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. புதிய ஆட்சியின் பிற்போக்குத்தன்மையை மறைக்கும் முயற்சியில், பல அரசாங்கப் பதவிகள்  சுதந்திர சதுக்க எதிர்ப்புக்களில் தீவிரமாக இருந்த நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எதிர்பார்த்தது போல், பிரதம மந்திரி பதவி முன்னாள் வங்கியாளரும், தீவிர வலது தந்தைநாட்டு (Fatherland) கட்சியின் தலைவருமான ஆர்செனி யாட்செனியுக் வசம் சென்றுள்ளது; இக்கட்சி, தன்னலக்குழு உறுப்பினரும் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவருமான நிதி மோசடிப் பேர்வழி யூலியா திமோஷெங்கோவால் நிறுவப்பட்டது. யாட்செனியுக், முன்னாள் உக்ரேன் தேசிய வங்கியின் தலைவரும், வெளியுறவு மந்திரியும் உக்ரேனிய பாராளுமன்றத்தின் சபாநாயகரும் ஆவர்.

யாட்செனியுக் வாஷிங்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும் ஆவார்—அது அவரை “யாட்ஸ்” என்று கூறிப்பிடுகிறது; வெளியுறவுத்துறையின் உயர்மட்ட ஐரோப்பிய அதிகாரி விக்டோரியா நியூலாந்த் மற்றும் உக்ரேனில் உள்ள அமெரிக்கத் தூதர் ஜெஃப்ரி பியாட் இவர்களுக்கு இடையே நடைபெற்ற இழிவான தொலைபேசித் தகவல் வெளிப்பட்டதின் மூலம் தெரியவந்தது.

துணைப் பிரதம மந்திரிப் பதவி உட்பட மூன்று பதவிகள் பாசிச ஸ்வோபோடா கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன; அதன் போராளிகள், கடந்த வாரம் பாதுகாப்புப் படையினரைத் தாக்கி ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அகற்றியதில் உறுதியான பங்கைக் கொண்டிருந்தனர்.

ஸ்வோபோடா கட்சியின் பிரதிநிதி ஒலெக்சாந்தர் சைக் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற பிரதிநிதி என்னும் போக்கில் சைக் அனைத்து கருக்கலைப்புக்களையும், கற்பழிப்பில் ஏற்பட்ட கர்ப்பங்கள் உட்பட தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்த முற்பட்டார். ஸ்வோபோடா “உக்ரேனிய குடும்ப மதிப்புக்கள்” என்று பெருமைப்படுத்துவதில் அவருடைய பங்களிப்பு, மகளிர் மதுபானம் அருந்துதல், “பிரச்சினைக்குரிய நட்பு” இவற்றை தவிர்த்தல் மூலம் கற்பழிப்பை தவிர்க்கலாம் என்பதாகும்.

மற்ற இரு ஸ்வோபோடா உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சரகங்களை ஏற்றுள்ளனர். ஃபோர்ப்ஸ் சஞ்சிகை கருத்துப்படி, புதிய விவசாய மந்திரி ஒலெக்சாந்தர் மேர்ன்யி, ஸ்வோபோடாவின் மிக அதிகம் பணம் ஈட்டும் ஐவரில் ஒருவராவர், 2012ல் அவருடைய மதிப்பிடப்பட்டுள்ள சொத்து Hr.17 மில்லியன் ($1.6 மில்லியன்) என இருந்தது. இவருடைய முக்கிய வணிக நலன்கள் விவசாயத்தில் குவிப்புக் கொண்டவை—அவருடைய புதிய பதவியுடன் முற்றிலும் முரணானது.

மற்றொரு ஸ்வோபோடா உறுப்பினர் ஒலே மக்நிட்ஸ்கி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பொது நீதித்துறை அலுவலகத்திற்கு தலைவர் ஆவார். ஒருவாரம் முன் நியமிக்கப்பட்ட மக்நிட்ஸ்கி சர்வதேசப் பிடி ஆணை ஒன்றை இந்த வாரம் அகற்றப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் மீது பிறப்பித்ததுள்ளார்; பிந்தையவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு முக்கிய பதவி, ஆண்ட்ரி பருபியினால் வகிக்கப்படுகிறது; இவர் ஸ்வோபோடாவிற்கு முன்னோடியாக இருந்த உக்ரேன் சமூக-தேசியக் கட்சியின் (Social-National Party) இணை நிறுவனர் ஆவார். இது ஸ்வோபோடாவின் தற்போதைய தலைவரான ஒலே டியானிபோக்குடன் இணைந்து 1991ல் பருபி ஆல் நிறுவப்பட்டது. யானுகோவிச்சின் பாதுகாப்புப் படைகளின்மீது தாக்குதல் நடத்திய வலதுசாரி போராளிகளுக்கு தலைமை வகித்த பருபி, இப்பொழுது தேசியப் பாதுகாப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Liberation செய்தித்தாளின்படி, நாஜி-சார்பு வலது பிரிவு (Right Sector) குழுவின் தலைவர் டிமிட்ரி யாரோஷ், பருபியின் துணைவராக இருப்பார். இதன் பொருள் ஸ்வோபோடாவும் பிற தீவிர வலதுசாரிகளும் பாதுகாப்பு எந்திரத்தின் முக்கிய பதவிகளில் தலைமை வகிக்கின்றனர் மற்றும் வருங்கால சமூக அமைதியின்மையை அடக்க அதிர்ச்சி படைகளை அமைக்க பொறுப்புக் கொண்டுள்ளார்கள்.

புதிய ஆட்சியில் நிதி அமைச்சின் முக்கிய பொறுப்பு, ஒலெக்சாந்தர் ஷலபக் என்னும் முன்னாள் பிரைவேட்பாங்கின் துணைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது; இவர் நிதிய மூலதனத்தின் நலன்களுக்கு உத்தரவாதம் அளிப்பவர் எனக் கருதப்படுபவர்.

மற்ற நிதியமிக்கப்பட்டவர்கள் பல தன்னலக்குழுவினருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்களாவர். பிராந்தியக் கொள்கையின் புதிய துணை மந்திரி வோலோடிமிர் க்ரோய்ஸ்மன் தன் தொழில் வாழ்க்கையை விவசாய வணிகத்திலும் சொத்துக்கள் துறையிலும் தொடங்கினார். அவர் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் கட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார், இப்பொழுது கோடீஸ்வர தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான பெட்ரோ போரோஷெங்கோவிற்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறார். புதிய எரிசக்தி மந்திரி யூரி ப்ரோடன், முன்பு Kyivenergo என்ற தலைநகர எரிசக்தி அளிக்கும் ஏகபோக நிறுவனத்தின் பணியாளர் மற்றும் தேசிய மின்சார சந்தை உருவாக்கத்தில் மையப் பங்கு கொண்டிருந்தார். இவர், பில்லியனர் ஐகோர் கோலோமோய்ஸ்கியின் Privat குழுவிற்கு நெருக்கமானவர் என உக்ரேனிய செய்தி ஊடகத்தால் விவரிக்கப்படுகிறார்.

புதிய அரசாங்கத்தின் பணியானது, முந்தைய அரசாங்கங்களால் செயல்படுத்தப்படவில்லை என்று பிரதம மந்திரி யாட்சென்யுக் புகார் குறிய “மிகவும் செல்வாக்கற்ற நடவடிக்கைகளை” எடுப்பதாகும் – அதாவது எரிபொருள் கட்டணங்களை உயர்த்துதல், கனரக தொழில்துறையில் பாரிய பிரிவுகளை மூடல் மற்றும் சமூகநலன் சேவைகளில் பாரிய வெட்டுக்களைக் கொண்டுவருதல் ஆகியவையாகும்.

நாடு பெரும் நிதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பிணை எடுப்புக் கடன் தொகைகள் 35 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதை செலுத்த வேண்டும். இதில் கிட்டத்தட்ட பாதிப்பணம், 15 பில்லியன் டாலர்கள் மேற்கத்தைய வங்கிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

செவ்வாயன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட், IMF உக்ரேனுக்கு பொருளாதார நிலைமையை மதிப்பிட்டு புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆட்சிக்கு “நிதி ஆதரவு திட்டத்திற்கு அடிதளமான கொள்கைச் சீர்திருத்தங்களை விளக்க” ஒரு குழுவை அனுப்ப இருப்பதாகத் தெரிவித்தார். யானுகோவிச் அரசாங்கத்துடன் முந்தைய நடவடிக்கைகளில் IMF ஏற்கனவே இத்தகைய “சீர்திருத்தங்கள்” பற்றி ஆணையிட்டுள்ளது, அதாவது, தீவிர சிக்கன நடவடிக்கைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் கடுமையான குறைப்புக்கள், எரிவாயு நிதியுதவிகளுக்கு முற்றுப்புள்ளி என்று – இவை நுகர்வோர் விலைகளை உயர்த்தும்.

2008ல் பூகோள நிதிய நெருக்கடி வெடித்ததில் இருந்து, அமெரிக்க ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியம், சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தவும் மேற்கத்தைய வங்கிகளுக்கு நிதி  கொடுக்கவும் கிரேக்கத்திலும் இத்தாலியிலும் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கங்களை நிறுவியுள்ளது. இப்பொழுது முதல் முறையாக, அதே ஏகாதிபத்தியக் கூட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க, ஒரு புதிய மேற்கத்திய சார்பு ஆட்சியை நிறுவ, தீவிர-தேசியவாத மற்றும் பாசிச சக்திகளை அணிதிரட்டியுள்ளன.