சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama and Kerry lecture Russia on Ukraine

ஒபாமாவும் கெர்ரியும் உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவிற்கு உபதேசிக்கின்றனர்

Bill Van Auken
1 March 2014

Use this version to printSend feedback

மேற்கத்திய தலையீடு உக்ரேனிய சூழ்நிலையை கொதிநிலைக்கு கொண்டு வந்துள்ள நிலையில், உக்ரேனின் "ஸ்திரத்தன்மை" மற்றும் "பிராந்திய ஒருமைப்பாட்டை" தாங்கிப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரஷ்யாவிற்கு உபதேசிக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி வெள்ளியன்று நடந்த அரசுத்துறையின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை பயன்படுத்தினார்.

அந்த கருத்துரைகள், தலைநகர் கியேவில் பாசிச மற்றும் தீவிர-வலதுசாரி சக்திகளின் ஒரு வன்முறை ஆட்சிக்கவிழ்ப்புக்கு இட்டுச் சென்ற அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய சக்திகளின் ஒருங்கிணைந்த தலையீட்டிற்கு வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர் வெட்ககேடாக வெளியாகி உள்ளன.

அமெரிக்கா முற்றிலுமாக உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் [உள்ளபடியே] இறையாண்மைக்கு ஆதரவு வழங்குகிறது. அதேபோல ஏனைய நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று கெர்ரி அறிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “சூழ்நிலையை மேலும் எரியூட்டாமல் மற்றும் தவறான சேதிகளை அனுப்பாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அனைவருக்கும் முக்கியமாகும்,” என்று அதற்கு முந்தைய நாள் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரொவ்விடம் தாம் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

அதற்கடுத்த நாள், இதே கருத்துக்கள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் எதிரொலிக்கப்பட்டன. ரஷ்ய துருப்புக்களின் நடமாட்டங்கள் குறித்த செய்திகள் "ஆழமாக தொந்தரவுக்கு உள்ளாக்குவதாக உள்ளன" என்று அவர் தெரிவித்தார். “உக்ரேனிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஐக்கியத்தை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் ஆழ்ந்த ஸ்திரமின்மையை ஏற்படுத்தும்,” என்று தெரிவித்த அவர், தொடர்ந்து அச்சுறுத்தும் விதத்தில் கூறினார், “உக்ரேனில் எந்தவிதமான இராணுவ தலையீட்டிற்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.”

கெர்ரியும், ஒபாமாவும் யாரை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள்? அந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டில் மேற்கத்திய ஆட்சிக்கு நேசமான ஓர் அரசியல் கருவியை வடிவமைக்கும் நோக்கங்கொண்ட வேலைத்திட்டங்களுக்குள் 1990களில் இருந்து சுமார் 5 பில்லியன் டாலரை பாய்ச்சியதன் மூலமாக, உக்ரேனின் உள்நாட்டு விவகாரங்களில் வாஷிங்டன் அப்பட்டமாக தலையீடு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, ஐரோப்பா மற்றும் யுரேஷியாவிற்கான வெளியுறவுத்துறை துணை செயலர் விக்டோரியா நூலாந்தினால் கடந்த டிசம்பரில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

சமீபத்திய மேலெழுச்சிகளின் போக்கினூடாக நூலாந்து அவரே கீவ்விற்கு குறைந்தபட்சம் நான்கு முறை பயணத்திருந்தார். சுதந்திர சதுக்கத்தில் நவ-பாசிசவாத "போராட்டக்காரர்களுக்கு" அவர் ரொட்டியும், சிற்றுண்டிகளும் அளித்ததோடு, அமெரிக்க தூதர் உடனான அவரது பதிவு செய்யப்பட்ட உரையாடலில் அவமானகரமாக யாரை அவர் [செல்ல நாய்க்குட்டிகளைக் குறிப்பிடும் சொற்களில்] "Yats” மற்றும் "Klitsch” என்று குறிப்பிட்டாரோ அந்த எதிர்ப்புக்குழு பிரபலங்களான அர்செனி யாட்செனிக், விடாலி கிளிட்ஸ்ச்கோவையும் மற்றும் யூத-விரோத மற்றும் பாசிசவாத ஸ்வோபோடா கட்சியின் தலைவர் ஓலெஹ் தியாஹ்ன்போக்கையும் கூட சந்தித்திருந்தார்.

இவற்றில் எதுவும் "பிராந்திய ஒருமைப்பாடு,” “இறையாண்மை" மற்றும் "ஸ்திரப்பாடு" ஆகியவற்றிக்கு உறுதியளிப்பதை நோக்கமாக கொண்டவை அல்ல, மாறாக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைத் தூக்கியெறிய மற்றும் வாஷிங்டனின் போக்கிற்கு அடிபணியும் மற்றும் ரஷ்ய எல்லைக்கருகில் அமெரிக்க அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஓர் ஆட்சியை நிறுவுவதற்கு ஒரு வன்முறை குழப்பத்தைக் கட்டவிழ்த்துவிடுவதை நோக்கமாக கொண்டவை ஆகும்.

கெர்ரி வியாழனன்று குறிப்பாக கிரீமியாவில் உள்ள ரஷ்யாவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் குறித்து பேசுகையில், “இந்த பதட்டங்களைத் தணிப்பது" அவசியமாகும் என்றார். இத்தகைய "பதட்டங்கள்" இடைக்கால அரசாங்கம் என்றழைக்கப்படுவதின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றால் தூண்டிவிடப்பட்டிருந்தன என்ற உண்மையை அவர் குறிப்பிடவில்லை. அந்த இடைக்கால அரசாங்கம் ரஷ்ய மொழி பேசுவோரின் சிறுபான்மை மொழி உரிமைகளை அழிக்க இருந்தது. அங்கே தெற்கு மற்றும் கிழக்கின் நிறைய பகுதிகளில் பெருமளவிலான மக்கள் மற்றும் மொத்த மக்கள்தொகையில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், அத்தோடு பல்கேரியர்கள், ஹங்கேரியர்கள், ருமானியர்கள் மற்றும் போலாந்தினர் போன்ற சிறுபான்மையினரும் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர்.

உக்ரேனில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பானது, 25 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் செய்யப்பட்ட கிழக்கு ஐரோப்பிய தலையீட்டின் ஒரு நீண்டநெடிய நிகழ்முறையில் உயர்ந்த கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளது.

பிராந்திய ஒருமைப்பாடு" என்பது இந்த ஆக்ரோஷமான, ஆபத்தான முயற்சியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்பட்ட சில உறுதியான கோட்பாடுகளில் ஒன்றாக இருந்துள்ளது என்று முறையிட்டால், அது நகைப்பிற்கிடமாக இருக்கும். அதற்கு நேர்மாறாக, அமெரிக்க தலையீடு முன்னாள் யூகோஸ்லாவியாவில் போர்நாடும் விதத்தில் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்ததில் இருந்து மற்றும் வாஷிங்டனின் மேலாதிக்கத்தின் கீழ் இன அடிப்படையிலான புதிய குட்டி-நாடுகளை உருவாக்க ஒட்டுமொத்த "இனச் சுத்திகரிப்புக்கு" மற்றும் பிரிவினைக்கு ஆதரவு வழங்கியதில் இருந்து தொடங்கியது. அது, 1990களில் இரண்டு முறை, அமெரிக்க-நேட்டோ யுத்தங்களுக்கு இட்டுச் சென்றது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயப்பட்டனர் மற்றும் நூறு ஆயிரக் கணக்கான மக்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அந்த விடயங்களில், வாஷிங்டனின் நிலைப்பாடு மிகத் தெளிவாக இருந்தது, என்னவென்றால்: அமெரிக்க வடிவமைப்புகளுக்கு எதிராக அவற்றின் பிராந்திய ஐக்கியத்தைப் பாதுகாக்க அப்போதிருந்த அரசுகளுக்கு எந்தவொரு உரிமைகளும் கிடையாது, அவை அதற்கு முயன்றால், அமெரிக்க இராணுவம் அவற்றின் மீது குண்டுகளை வீசும் என்பதே ஆகும்.

மேலும் இதெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு புதிதல்ல. அது 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொலாம்பியாவில் அதன் சொந்த பிரிவினைவாத இயக்கத்தை உருவாக்கியதன் மூலமாக மற்றும் கொலாம்பியா எதிர்த்தால் அதன் மீது அது தாக்குதல் நடத்தும் என்பதைத் தெளிவுபடுத்தியதன் மூலமாக கொலாம்பியாவிடமிருந்து எதிர்காலத்தில் ஏற்படுத்தவிருந்த கால்வாய்க்கான இடத்தை மற்றும் பனாமாவைப் பறித்தது.

கடந்த தசாப்தங்களில், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா ஆகியவற்றின் "பிராந்திய ஒருமைப்பாடு" என்பதில், வாஷிங்டன் ஆட்சி மாற்றத்திற்கான நேரடியான தாக்குதல்களோடு அல்லது மறைமுக யுத்தங்களோடு தாறுமாறாக பயணித்துள்ளது.

பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான" புனிதக் கோட்பாடு என்று கூறப்படுவது, ரஷ்யாவுடனான உறவோடு உராய்ந்து செல்லும் என்பதையும், அதிலே ரஷ்யாவை உடைக்கும் மற்றும் அடிபணிய செய்யும் நோக்கத்தோடு வாஷிங்டன் இன மற்றும் தேசிய மோதல்களைத் தூண்டிவிட்டு, உக்ரேனில் அதன் ஆதாயங்களை அது நிச்சயமாக பின்தொடரும் என்பதையும் ஒருவரால் உறுதியாக கூற முடியும்.

இறையாண்மையை" மதிப்பது குறித்து ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட உபதேசத்தைப் பொறுத்த வரையில், 1825இல் மோன்ரோ கோட்பாட்டின் (Monroe Doctrine) பிரகடனத்திற்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் முக்கியமாக அதன் தெற்கில் உள்ள நிலப்பகுதிகளின் மீது உரிமை கோரியுள்ளதை நினைவுக்கூர்வது மதிப்புடையதாக இருக்கும். கடந்த ஆண்டில் தான், கெர்ரி அவரது செனட் உரையில், இலத்தீன் அமெரிக்காவை "நமது கொல்லைப்புறம்" என்று குறிப்பிட்டார்.

அதே வாஷிங்டனால் தற்போது ரஷ்யாவின் எல்லைகளில் அமெரிக்க சமாதானத்தைப் (Pax Americana ) பரப்ப முடிகிறதென்றால், பகுப்பாய்வின் இறுதியாக, அதற்கு மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இறுதியான மற்றும் வரலாற்றுரீதியிலான நிலைப்பேறுடைய குற்றமான, சோவியத் ஒன்றியத்தின் சிதைவால் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட நிகழ்முறைகளுக்கு தான் நன்றி கூற வேண்டும்.

ஸ்ராலினிசம் உக்ரேனில், ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஏனைய பகுதிகளில், அத்துடன் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காட்டிகொடுத்தது. தனிச்சலுகை படைத்த அதிகாரத்துவவாதிகள் 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சமூக செல்வத்தைச் சூறையாடியும், ஏகபோகமாக்கியும் தங்களைத்தாங்களே முதலாளித்துவவாதிகளாக மாற்றிக் கொண்டனர்.

அமெரிக்கா மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தால் உக்ரேன், கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஏனைய பகுதி மக்கள் மீது மீண்டும் காலனித்துவ அடிமையாக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்பதென்பது ரஷ்யாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் ஒரு விடயமோ அல்லது உக்ரேனின் அரசியல் கோஷ்டிகளில் ஏதாவதொன்றின் ஆட்சியைப் பாதுகாக்கும் ஒரு விடயமோ அல்ல. அவை அனைத்துமே விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில செல்வந்த மேற்தட்டுக்களின் நேரடியான கருவிகளாக செயல்படுகின்றன.

உக்ரேனுக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கமான உந்துதல் விளாடிமீர் புட்டின் தலைமையிலான ரஷ்ய ஆட்சியின் அழுகியதன்மையை மற்றும் திவால்நிலையை அம்பலப்படுத்த சேவை செய்துள்ளது. ஆளும் வர்க்கத்தின் ஓர் ஊழல் முகவர்களாக உள்ள முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகள் மற்றும் குண்டர்களின் ஒரு அடுக்கின் நலன்களை பிரதிபலித்துக் கொண்டு, அது அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டிற்கு எந்தவொரு உண்மையான மக்கள் எதிர்ப்பையும் ஒன்றுதிரட்ட விருப்பமில்லாமல் உள்ளது; இலாயகற்று உள்ளது. உக்ரேனிய எல்லையில் தொடங்கப்பட்ட இராணுவ ஒத்திகைகள் அடிப்படையில் இந்த சூழ்நிலையில் மாஸ்கோவால் குறைந்தபட்சம் என்ன செய்ய முடியுமென்பதை எடுத்துக்காட்டுகிறது.

முன்னாள் சோவியத் ஒன்றிய பிராந்தியங்களின் மீதான ஏகாதிபத்திய சுற்றி வளைப்பானது, வாழ்க்கை தரங்களின் மீது மற்றொரு பேரழிவுகரமான அழிவையும், அத்தோடு தவிர்க்கவியலாத இரத்த ஆறையும் உள்ளடக்கி உள்ள நிலையில் அதற்கு எதிரான போராட்டத்தை தேசிய அடிப்படையில் நடத்தவியலாது. அதற்கான ஒரே நிஜமான மாற்றீடு, முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வை சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதற்கான மற்றும் அரசியல்ரீதியாக சுயாதீனமாக ஒன்றுதிரட்டுவதற்கான, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்கில் தங்கி உள்ளது.