சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Police intimidation against SEP workers inquiry on industrial pollution

இலங்கை: தொழில்துறை மாசுபடுத்தல் தொடர்பான சோசலிச சமத்துவ கட்சியின் தொழிலாளர் விசாரணைக்கு எதிராக பொலீஸ் கெடுபிடிகள்

By Panini Wijesiriwardane
27 February 2014

Use this version to printSend feedback

இலங்கையில் வெலிவேரிய பிரதேசத்தில், நீர் மாசடைதல் சம்பந்தமான சுயாதீன தொழிலாளர் விசாரணைக்கு ஆதரவு பெருகிவருகின்ற நிலையில், டிப்ட் புரடக்ட் கம்பனியின் (Dipped Products Company) சார்பில் செயற்படும் பொலீஸ், சோசலிச சமத்துவ கட்சி (சோசக) பிரச்சாரகர்களை அச்சுறுத்த முயற்சித்து வருகின்றது. பொலிசின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிரான வேட்டையாடலுக்கான ஒரு தயாரிப்பே என சோசலிச சமத்துவ கட்சி எச்சரிக்கின்றது.

டிப்ட் புரடக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வெனிக்ரோஸ் ரப்பர் கையுறை தொழிற்சாலையினால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக வெலிவேரிய கிராமவாசிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக, அரசாங்கமும் செய்தி ஊடகமும் மூடிமறைக்கின்றவற்றை அம்பலப்படுத்துவதன் பேரில் சோசலிச சமத்துவ கட்சி நவம்பர் மாதம் தொழிலாளர் விசாரணை ஒன்றை தொடங்கியது. ஆகஸ்ட் 1, அரசாங்கம் தொழிற்சாலையை மூடக் கோரி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக இராணுவத்தை நிறுத்தி வைத்ததோடு, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு இளம் தொழிலாளியையும் சுட்டுக் கொன்றது. 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

வென்கிரோஸ் நிறுவனத்தினால் உள்ளூர் நீர் விநியோகம் மாசுபடுத்தப்படுதல் மற்றும் அதனால் கிராமவாசிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்படும் சுகாதார அபாயங்கள்; தொழிற்சாலையில் சுரண்டல் வேலை நிலைமைகள் மற்றும் ஆகஸ்ட் 1 கொலைகளுக்கு யார் பொறுப்பு, போன்ற விடயங்களை இந்த தொழிலாளர் விசாரணை ஆராய்கின்றது.

பொலிஸ் கட்சியின் பிரச்சாரத்தை கண்காணிக்கின்றமை பற்றிய நம்பத் தகுந்த தகவல்கள் சோசலிச சமத்துவ கட்சிக்கு கிடைத்துள்ளன. அவையாவன:

* டிசம்பரில், தொழிலாளர் விசாரணையை அறிவிக்கும் துண்டுப் பிரசுரத்தை விநியோகத்துக்கொண்டிருந்த இரு கட்சி உறுப்பினர்களை பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

* ஜனவரி 29 அன்று, பிரதேசத்தில் இருக்கும் சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினர் ஆர்.பி. இராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்த கம்பஹா பிரதேச பொலிஸ் அதிகாரி, பிப்ரவரி 2 நடக்கவிருந்த கட்சியின் பொதுக் கூட்டத்தின் அமைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் பற்றிய விபரங்களை விசாரித்தார்.

* பிப்ரவரி 2, வெலிவேரியவில் வேலை செய்யும் முச்சக்கர வண்டி சாரதியான ஜூட் நிஷாந்த, சோசலிச சமத்துவ கட்சி மற்றும் அதன் கூட்டத்தை பற்றி விசாரிப்பதற்காக அருகிலுள்ள கம்பஹா பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டார். சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினர்கள் பிரச்சாரத்தின் தேவைக்காக ஜனவரி 31 அன்று அந்த வண்டியை வாடகைக்குப் பெற்றுக்கொண்டனர்.

நிஷாந்தவின் படி, சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரு சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினர்ளின் புகைப்படங்களை பொலிசார் காட்டினர். பொலிஸ் அதிகாரிகள், அவர் ஒரு சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினரா மற்றும் அவருக்கு கட்சி பற்றி என்ன தெரியும் என்று கேட்டுள்ளனர். நிஷாந்த தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார். நிஷாந்த, ஏனைய முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுடன் சேர்ந்து, வெலிவேரிய கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருந்ததோடு ஆகஸ்ட் 1 நடந்த இராணுவத் தாக்குதலின் போது காயமடைந்தார்.

* சிவில் உடையில் இரண்டு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் பெப்ரவரி 2ம் திகதி கூட்டத்தின் போது மண்டபத்துக்குள் நுழைய முயன்றபோதும், சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினர்கள் அவர்களது விபரங்களை கேட்ட போது வெளியேறிவிட்டனர்.

சோசலிச சமத்துவ கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் பற்றிய பொலிஸ் கண்காணிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் நீர் விநியோகம் சம்பந்தமாக எதிர்ப்புக்கள் தொடங்கியதில் இருந்தே வெலிவேரிய கிராமத்தவர்களை மிரட்டும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவமும் கடத்தல்கள், கொலைகள், காணாமல் போன சம்பவங்களுக்கு பேர்போனதாகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இந்த வழிமுறைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இத்தகைய அடக்குமுறை, அரசாங்கத்தின் எதிரிகள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதோடு, மிகப் பரந்தளவில், தமது அடிப்படை உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 30, ஜூட் நிஷாந்தவை குண்டர்கள் அச்சுறுத்தினர். இராணுவ தாக்குதல் பற்றி தனியாருக்கு சொந்தமான டீஎன்எல் தொலைக்காட்சி சேனலில் அவர் நேரடி கலந்துரையாடலில் பங்குபற்றிய போது, அவரது வீட்டிற்கு சென்ற ஒரு கும்பல், அவர் வெனிக்ரோஸ் தொழிற்சாலைக்கு எதிராக மேலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவரை கொலை செய்வோம், என்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளை எச்சரித்துச் சென்றுள்ளது.

சந்தன என்பவர் அந்த கும்பலின் உறுப்பினராக அடையாளங் காணப்பட்டுள்ளார். அவர் தொழிற்சாலையின் சார்பில் வெனிக்ரோஸ் மேற்பார்வையாளர்  ஒருவருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தவராவார். அதே இரவு, நிஷாந்த அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த போதிலும், போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

பிப்ரவரி 16, சியனே சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் இயக்குனரான ஜி. குமாரதாஸ, வெலிவேரியவில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள யக்கலவில் வைத்து குண்டர்களால் தாக்கப்பட்டார். தாக்குதலின் போது, தொழிற்சாலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நிறுத்த வேண்டும் என குமாரதாஸ எச்சரிக்கப்பட்டார். அவருடைய அமைப்பு, தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

குமாரதாஸ கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்ததோடு நடவடிக்கை எடுக்காமைக்கு வெலிவேரிய மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர். குமாரதாஸ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உடன், குண்டர்கள் விடுவிக்கப்பட்டதோடு பகுதியில் உள்ள பொலிஸ் மற்றும் அரசாங்க அரசியல்வாதிகளின் பாதுகாப்புடன் தொடர்ந்தும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.

சோசலிச சமத்துவ கட்சி குமாரதாஸ மீதான தாக்குதலை கண்டினம் செய்கின்து. நீர்வள அமைச்சர் தினேஷ் குணவர்தன 3,000 ரூபா செலவில் கிராமவாசிகளுக்கு குழாய் நீர் வழங்க உறுதியளித்ததாகவும், எனினும் அந்த பகுதியின் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகம் மற்றொரு அமைச்சரை சந்திக்கக் கூறியதாவும் அவர் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினார். "அரசாங்க அரசியல்வாதிகள் சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள முயற்சித்ததால், நாம் அங்கு செல்லாமல் இருக்க முடிவு செய்தோம்," என குமாரதாஸ கூறினார். இந்த தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று தான் நினைப்பதாக அவர் கூறினார்.

ஆரம்பத்தில் இருந்தே, ஒரு முன்னணி இலங்கை நிறுவனமான ஹேலிஸ்சுக்குச் சொந்தமான டிப்ட் புரடக்ட் கம்பனியை பாதுகாக்க அரசாங்கம் உறுதியாக உள்ளது. வெலிவேரிய மக்களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்து சுத்தமான குடிநீர் வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களை "நாசகாரர்கள்" மற்றும் "சதிகாரர்கள்" என்று முத்திரை குத்தி, இராணுவத்தின் பாய்ச்சலுக்கு கட்டளையிட்டதோடு, முதலீட்டாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற செய்தியை அவர்களுக்கு அனுப்ப முயற்சித்து.

இராணுவ நடவடிக்கைகள் பரந்த சீற்றத்தை தூண்டிய போது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தண்ணீரை பரிசோதிக்கப்பதாகவும் தாக்குதல் பற்றி விசாரிப்பதாகவும் உறுதியளித்தார். ஆனால், அரசு நிறுவனங்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளும் கம்பனியை மூடிமறைப்பதையே செய்தன. தொடர்ச்சியான எதிர்ப்புக்களுக்கு மத்தியில், தொழிற்சாலை பியகம சுதந்திர வர்த்தக வலயத்துக்கு மாற்றப்படும் என கம்பனி அறிவித்துள்ளதுபியகம பிரதேசத்தில் நிலத்தடி நீர் மாசுபடுத்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நிறுவனத்தின் தொழில்துறை மாசுபடுத்தலின் தாக்கத்தை மூடி மறைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களை நசுக்கவும், அரசாங்கம் மற்றும் பொலிசுடன் அது செய்த சதியை அம்பலப்படுத்த முயலும் சோசலிச சமத்துவ கட்சியின் தொழிலாளர் விசாரணை பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நன்மைகளை அன்றி, ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்தை பெருக்குவதையே அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறைமையை எதிர்த்துப் போரிடுவதற்கான சோசலிச கொள்கை மற்றும் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்துக்கான அவசியத்தை சோசலிச சமத்துவ கட்சி பிரச்சாரகர்கள் விளக்குகின்றனர்.

வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தின் மீதான இராணுவப் பாய்ச்சல் வெளிப்படுத்தியுள்ளது போல், தமது வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மற்றும் கிராமப்புற வறியவர்களின் வளர்ச்சிகண்டுவரும் விரோதத்தை நசுக்குவதை இலக்காகக் கொண்ட, இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொலிஸ் அரச வழிமுறைகளை சோசலிச சமத்துவ கட்சி எதிர்க்கின்றது. வெலிவேரியவில் சோசலிச சமத்துவ கட்சி பிரச்சாரத்தின் மீதான பொலிஸ் கண்காணிப்பு, அந்த பகுதியிலும் மற்றும் மிகவும் பரந்தளவிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிரான கூடுதலான அடக்குமுறைக்கான தயாரிப்பு பற்றிய ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.

நாம், பொலிஸ் நடவடிக்கைகளை எதிர்த்து, தொழிலாளர்கள் விசாரணையை ஆதரிக்குமாறும், நிறுவனம், அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் பற்றிய உண்மையை அம்பலப்படுத்துவதன் பேரில், அதன் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.