சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

US-backed Ukrainian regime mobilizes reserves, threatening war with Russia

அமெரிக்க ஆதரவு பெற்ற உக்ரேனிய ஆட்சி இருப்புப் படைகளைத் திரட்டி, ரஷ்யாவுடன் போர் அச்சுறுத்தல் விடுக்கின்றது

By Alex Lantier 
3 March 2014

Use this version to printSend feedback

இரண்டாம் உலக போரின் முடிவுக்கு பின் ஐரோப்பாவை எதிர்கொண்டுள்ள மிக மோசமான இராணுவ நெருக்கடியில், ஒரு வாரம் முன்பு மேற்கத்திய ஆதரவு கொண்ட பாசிஸ்டுகளின் தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பில் கியேவில் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட உக்ரேனிய ஆட்சி, நேற்று அதன் இராணுவத்தை உயர் எச்சரிக்கை நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இது ரஷ்யாவுடனான போர் அச்சுறுத்தலின் பாகமாக தன்னுடைய இருப்புப் படைகளையும் அழைத்துள்ளது, அதில் கிட்டத்தட்ட 1 மில்லியன் பேர் உள்ளனர்.

இதற்கு முதல்நாள் ரஷ்ய பாராளுமன்றத்தின் மேல் சபையில் ஒருமனதாக சட்டவரைவு ஒன்றை இயற்றி, உக்ரேனில் ரஷ்ய மொழி பெரும்பாலானோர் பேசும் கிரிமியாவிற்கு ரஷ்யப் படைகளை அனுப்ப இசைவு கொடுத்தது; அங்கு செவஸ்டோபோலில் ரஷ்யா ஒரு முக்கிய கடற்படைத் தளத்தையும் கொண்டுள்ளது. கடந்த வார இறுதியில், ரஷ்யா கிரிமியாவிற்கு 6,000 துருப்புக்களை அனுப்பியது, கியேவிற்கு எதிரான எழுச்சிக்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு ஏற்றம் கொடுக்கும் எனக் கியேவ் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையேயான அழுத்தங்கள், ரஷ்யாவுக்கும் மற்றும் கியேவிற்கு ஆதரவு கொடுக்கும் நேட்டோ சக்திகளுக்குக்கும் இடையேயான நேரடி மோதல் ஆபத்தை கொண்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலிடம்,இருதரப்பு, பலதரப்பு” தகவல் தொடர்புகள் திறந்திருக்கும் என தொலைபேசியில் ஒப்புக் கொண்டாலும், வாஷிங்டனுடனான ரஷ்ய கருத்துப்பரிமாற்றங்கள் மிகவும் பதட்டம் நிறைந்ததாக இருந்தன.

அமெரிக்க ஜனாதிபதி சனிக்கிழமை அன்று உக்ரேன் பற்றி விவாதிக்க பாரக் ஒபாமா புட்டினுடன் 90 நிமிடத் தொலைபேசித் தொடர்பு கொண்டார். ரஷ்ய துருப்புக்கள தங்கள் கிரிமியத் தளத்திற்கு திரும்ப வேண்டும் என்று கோரிய ஒபாமா, ரஷ்ய கொள்கை “உக்ரேனிய இறையாண்மையை மீறுகிறது”, “சர்வதேச சட்டத்தை மீறுகிறது” என கண்டித்து, அமெரிக்க ரஷ்ய உறவுகளில் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

புட்டின் ஒபாமாவின் கோரிக்கைகளை உதறித்தள்ளி, உக்ரேனின் நிலைமை “அசாதாரணமானது” என்றார். கியேவ் மற்றும் மேற்கு சக்திகளின் ஆதரவு கொண்ட தீவிர வலது கூறுபாடுகள்,ரஷ்ய மக்களின் உயிர்கள் மற்றும் சுகாதாரத்தை அச்சுறுத்துகின்றன, உக்ரேனில் உள்ள ரஷ்யர்களையும் அச்சுறுத்துகின்றன” என்று சுட்டிக்காட்டினார்.

மாஸ்கோ கிரிமியாவில் மட்டுமல்ல, கியேவின் வலதுசாரி ஆட்சிக்கு விரோதமாக உள்ள ரஷ்ய மொழியை பெரும்பாலும் பேசும் மக்கள் இருக்கும் இடங்களிலும் தலையிடக்கூடும். கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று: “கிழக்கு உக்ரேன், கிரிமியாவில் இன்னும் வன்முறை படருமேயானால், ரஷ்யா, ரஷ்ய மொழி பேசும் அப்பகுதி மக்களை பாதுகாக்கும் உரிமையை தக்க வைத்துள்ளது” என கூறுகிறது.

ரஷ்ய துருப்புக்கள், கோசாக்குகள், ரஷ்ய சார்பு உள்ளூர் மக்கள் மற்றும் புட்டினின் “இரவு ஓநாய்கள்” (மிதிவண்டிக் கும்பல்கள்) கிரிமியாவிற்கும் உக்ரேனின் மற்ற பகுதிகளுக்கும் இடையே உள்ள நிலப் பாலங்களை கோட்டைபோல் வலுப்படுத்த ஒன்றாகச் செயல்படுவதாகவும் இது உக்ரேன் இராணுவத்தின் தாக்குதல் திறனை எதிர்ப்பதற்கு என்றும் கூறப்படுகிறது.

ரஷ்ய அதிகாரிகள், அமெரிக்காவின் விமர்சனங்களை பாசாங்குத்தனம் என்று அப்பட்டமாக நிராகரித்து, வாஷிங்டன் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் மீது படையெடுத்து அவற்றின் இறையாண்மையை மீறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசான் ரைசின் கருத்தான, ரஷ்யா உக்ரேனுக்குத் துருப்புக்கள் அனுப்புவதின் மூலம் “பெரும் தவறை” இழைக்கிறது என்பதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சரக ஆதாரங்கள், அமெரிக்காவும் வலிமையை பயன்படுத்த வேண்டாம் என்று ஆலோசனை கூறியுள்ளது.

அவர்கள் கூறினார்கள்: “உலகில் பல இடங்களிலும் பலமுறை அமெரிக்க இராணுவத் தலையீடுகளை அடிப்படையாக கொண்ட சூசான் ரைசின் நிபுணத்துவமான மதிப்பீடுகளை, குறிப்பாக அமெரிக்க நிர்வாகம், மேற்கத்திய ஜனநாயகத்தின் நெறிகள் ஆபத்திற்கு உட்பட்டுள்ளன அல்லது ஆளும் ஆட்சிகள் “கட்டுப்பாட்டை விட்டு” கைநழுவுகின்றன என்பதை உணர்ந்தால் வருபவை என்பதை நாங்கள் கண்டோம். தற்போதைய ஜனாதிபதியின் ஆலோசகர், ஒருவேளை புதிய தலையீடு பற்றி முடிவு எடுக்கப்பட வேண்டுமென்றால் தவறு பற்றிய இத்தகைய ஆலோசனையை அமெரிக்க தலைமைக்கு கூறுவார் என நம்புகிறோம்.”

பிற்போக்குத்தன கிரெம்ளின் தன்னலக்குழுவால், உக்ரேனில் பெருகி வரும் அழுத்தங்களுக்கு ஒரு முற்போக்கான தீர்வை வழங்க முடியாது; இது, ஏகாதிபத்தியம் மற்றும் சோவியத் ஒன்றிய கலைப்பிற்குப்பின் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள் இருக்கும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் திரள்வின் மூலம்தான் தடுத்து நிறுத்தப்பட முடியும். ஆனால் உக்ரேனில் இன்று நடக்கும் இராணுவ விரிவாக்கத்திற்கும் மற்றும் நாடு போரை நோக்கிய சரிவுக்கும் மையப் பொறுப்பு, ஏகாதிபத்திய சக்திகளாகும்.

உக்ரைனில் ரஷ்ய தலையீடு, வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொறுப்பற்ற முடிவான, கியேவில் ஒரு பாசிச ஆட்சி கவிழ்ப்பை ஆதரித்ததின் தவிர்க்க முடியாத விளைவாகும். கியேவ் ஆட்சி, மேற்கத்தைய சார்பு மூலோபாயத் திட்டத்தின் மூலம் பதவிக்கு வந்துள்ளது மற்றும் ஓய்வு ஊதிய வெட்டுக்கள், பாரிய எரிபொருள் விலை அதிகரிப்புக்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழ்ந்த சிக்கன நடவடக்கைகளை சுமத்துகிறது, இந்த இழிவுற்ற மூலோபாயத்தை, பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக் தன்னுடன் ஒப்பிட்டு, இது ஒரு “அரசியல் தற்கொலை” (political kamikaze) என்றார்.

தன்னிடம் தீர்வு எதுவும் இல்லாத சமூக முரண்பாடுகளால் உந்துதல் பெற்ற கியேவ், அதன் சிறிய சமூக அடித்தளத்தை அணிதிரட்டும் பொருட்டு, ஸ்வோபோடா போன்ற பாசிஸ்ட்டுக்கள், அல்லது யூத இன ஒழிப்பை புகழும் வலது பிரிவு (Right Sector) படைகள் மற்றும் சோவியத் யூனியனுடன் ரஷ்யாவை அடையாளம் காண்பவர்கள் என வெறித்தன கம்யூனிச எதிர்ப்பாளர்களை ரஷ்ய வெறுப்புடன் இணைக்க, ரஷ்யா மற்றும் ரஷ்ய இனத்தவருடன் மோதலைத் தூண்டுகிறது.

இந்த அபிவிருத்திகள், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பினால் வந்துள்ள பேரழிவுகரமான தாக்கத்தை சுட்டிக்காட்டுகின்றன. ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத்தன பங்கினால் தொழிலாள வர்க்கம் அரசியல் வாழ்வில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட சூழலில், முழு பிராந்தியத்தையும் ஏகாதிபத்திய சதி மற்றும் போரில் ஈடுபடுத்த மிக இழிவான பாசிச சக்திகள் முன்னிலையில் உள்ளன.

கியேவ் ஆட்சி, ரஷ்ய மொழியை உத்தியோகபூர்வ மொழி என்னும் அந்தஸ்த்தில் இருந்து அகற்ற சட்டங்களை தயாரிக்கிறது, உக்ரேனில் இருந்து பிரியலாம் என அது நினைக்கும் ரஷ்ய-சார்பு பகுதிகளுக்கு, அதிகாரிகளை அடித்து மிரட்ட குண்டர்களையும் அனுப்பியுள்ளது.

முன்னணி ஸ்வோபோடோ உறுப்பினர்கள், ரஷ்யர்களை குருதி கொட்ட வைக்கும் நோக்கத்தினால் இழிவுற்றவர்களாவர். Iryna Farin, ரஷ்ய பேச்சாளர்களை “இழிந்தவர்கள்” சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள் என அழைத்துள்ளார்; ஒலே தியானிபோக், ஸ்வோபோடா கட்சித் தலைவர் எனக் கருதப்படும் ஒரு உயர்மட்ட அதிகாரி, ஸ்வோபோடா அரங்குகளில் “அனைத்து ரஷ்ய மொழி பேசும் அறிவாளிகள், மற்றும் அனைத்து உக்ரேனை எதிர்ப்பவர்களையும் அழிக்க வேண்டும், உக்ரேன் எதிர்ப்பு வெறியர்கள் இங்கு ஸ்வோபோடா உறுப்பினராக பதிவு செய்யப்படலாம்.” என்றார்.

தீவிர வலது சக்திகளின் ஒரு ஆட்சி கவிழ்ப்புக்கு ஆதரவு அளித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், இப்பொழுது அதன் தீவிர வலதுசாரி பினாமி, ஆட்சி நடத்துகையில், உக்ரேனின் பெரும்பகுதிகள் சிதைந்துபோவதைக் காண்கின்றன.

இந்த வார இறுதியில், உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்கு தொழிற்துறை மையப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன; கிரிமிய தீபகற்பம் போல் இங்கும் பல ரஷ்ய மொழிபேசுபவர்கள் இருந்தனர். கார்க்கோவில் 20,000 எதிர்ப்பாளர்கள் ரஷ்ய கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்; உள்ளூர் அரசாங்க அலுவலகங்களை முற்றுகையிட்டு, கீவ் அனுப்பிய அதிகாரிகளை துரத்தினர்.

கிரிமியா போல் கியேவில் இருந்து சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடக்க இருக்கும் டோன்பாஸ் பிராந்தியத்தின் தலைநகர் டோனெட்ஸ்க்கில் 10,000 எதிர்ப்பாளர்கள் அணிவகுத்து கியேவை மீறுமாறு குடிமக்களுக்கு அழைப்புவிடும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். மற்றும் ஒரு 20,000 கியேவ் எதிர்ப்பாளர்கள் ஒடிசாவில் அணிவகுத்தனர்; சிறு ஆர்ப்பாட்டங்கள் மாரியுபோல், மெலிடோபோல், யெவ்பாடோரியாவில் நடைபெற்றன.

உக்ரேனின் கடற்படைக்கு தலைவராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் அட்மைரல் டென்னிஸ் பெரிஜோவ்ஸ்கி, கீவ் அதிகாரிகளுக்கு எதிராக திரும்பி, உக்ரேனிய கடற்படையின் முக்கிய போர்க்கப்பலான Hetman Sahaydachniy உடன் கிரிமியாவில் இருக்கும் ரஷ்ய சார்பு அதிகாரிகளின் பக்கம் சென்றுவிட்டார்.

இந்த நிலைமைகளின் கீழ் முக்கிய ஆபத்து, ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனுக்குள் மோதல்களைத் தூண்டி அல்லது நேரடியாக தாங்களே தலையிட்டு ஒரு பெரும் போராக நெருக்கடியை விரிவாக்குவர்.

கார்டியனில் எழுதிய Carnegie Moscow Center சிந்தனைக் குழுவின் டிமிட்ரி ட்ரெனின், பெரிய சக்திகளின் போர் ஆபத்து குறித்துச் சுட்டிக்காட்டினார். “ரஷ்யாவிற்கும் உக்ரேனியப் படைகளுக்கும் நேரடி மோதல் என்பது அமெரிக்காவை ஒருபுறத்திற்கு இழுக்கும்” என்று சுட்டிக்காட்டிய அவர், இன்றுவரக்கூடிய மோதலை 2008 ல் முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு காகசசில் இருக்கும் ஜோர்ஜியாவுடன் ஒப்பிட்டார்; அதில் ரஷ்ய அமைதிப் படை மீதான அமெரிக்க ஆதரவு பெற்ற ஜோர்ஜிய படைகளின் தாக்குதல், ரஷ்யாவால் தோற்கடிக்கப்பட்டது.

இதுவரை ரஷ்யாவிற்கும் உக்ரேனிய படைகளுக்கும் இடையே எந்த இராணுவ மோதலும் இல்லை; ஆனால் அவை மோதினால், இது 2008ல் தெற்கு காகசசில் இருந்தது போன்ற ஐந்து நாள் போராக இருக்காது. இம்மோதல் மேலும் நீண்டு, அதிக இரத்தம் தோய்ந்ததாயும், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய பாதுகாப்பும் உயர்ந்த ஆபத்திற்கு உட்படும்.” என அவர் எழுதியுள்ளார்.