சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A bankers plan for Detroit

டெட்ராய்ட்டுக்கான வங்கியாளர்களின் ஒரு திட்டம்

Joseph Kishore
24 February 2014

Use this version to printSend feedback

நெருக்கடிகால நிர்வாகி Kevyn Orrஆல் டெட்ராய்ட் திவால்நிலைமை மேற்பார்வை செய்யப்பட்டு பெடரல் நீதிமன்றத்திடம் கடந்த வாரம் சமர்பிக்கப்பட்ட பரிந்துரை, அந்நகரின் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்பட உள்ள ஒரு பேரழிவுகரமான தாக்குதலுக்கான ஒரு வரைவு நகலாகும். உலகின் புகழ்பெற்ற டெட்ராய்ட் கலைக்கூடம் உட்பட முக்கிய பொது சொத்துக்கள், ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ காப்பீடு ஆகியவற்றை இலக்கில் கொண்டுள்ள அத்திட்டம், சீர் செய்வதற்கான திட்டம்" என்பதை விட சரியாக கூற வேண்டுமானால் "அழிப்பதற்கான திட்டம்" என்றே கூற வேண்டும்.

டெட்ராய்ட் திவால்நிலைமையின் மீது பெப்ரவரி 15இல் சோசலிச சமத்துவ கட்சியால் நடத்தப்பட்ட தொழிலாளர்கள் விசாரணையின் முக்கிய விளக்கங்களான, ஒரு குற்ற நடவடிக்கை நடத்தப்பட்டு வருகிறது என்பதை மற்றும் அது இரண்டு பெருநிறுவன கட்சிகள் மற்றும் மாநிலத்தின் அனைத்து அமைப்புகளும் சம்பந்தப்பட்ட ஓர் அரசியல் சூழ்ச்சியின் விளைபொருளாக உள்ளது என்பதை Orrஇன் திட்டம் உறுதிப்படுத்துகிறது.

நியூ யோர் டைம்ஸில் வார இறுதியில் வெளியான ஒரு கட்டுரை, முழு ஒப்புதலுடன், டெட்ராய்டில் என்ன நடந்து வருகிறதோ அதை 2005இல் கத்ரீனா சூறாவளிக்குப் பின்னர் நியூ ஓர்லீயன்ஸ் மறுசீரமைப்போடு ஒப்பிட்டது. உண்மையில் கத்ரீனா சூறாவளியால் உண்டாக்கப்பட்ட பேரழிவானது, அந்நகரிலிருந்து மக்களை வெளியேற்றவும் மற்றும் அரசு பாடசாலைகளை இலாபங்கொழிக்கும் அறக்கட்டளைசார் பாடசாலைகளிடம் ஒப்படைத்தது உட்பட அடிப்படை சமூக உரிமைகளைப் பறிக்கவும் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தப்பட்டது.

நியூ ஓர்லீயனில், ஒரு பாரிய சூறாவளியால் உண்டாக்கப்பட்ட தாக்கம் பல ஆண்டுகாலம் சமூக சிதைவுகளோடு மற்றும் உள்கட்டமைப்பு அலட்சியமாக விடப்பட்டமையோடு சேர்ந்திருந்தது. டெட்ராய்டில், ஒட்டுமொத்த நெருக்கடியும் வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களால் ஒரு சமூக சீரழிப்பு நடவடிக்கை மூலமாக நடத்தப்பட்டுள்ளது. பல தசாப்தகால தொழில்சாலை மூடல்களுக்குப் பின்னர், அந்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று, அமெரிக்க வாகனத்துறை உற்பத்தியின் வரலாற்று மையமாக விளங்கிய டெட்ராய்ட், நிதியியல் கழுகுகளால் துண்டாடப்பட்டு உள்ளது.

Orr திட்டத்தின் மிக முக்கிய அம்சங்கள்:

* அரசியலமைப்புரீதியில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியங்களில் கூர்மையான வெட்டுக்கள் அமெரிக்க வரலாற்றில் அரசுத்துறை பணியாளர்கள் தங்களின் ஓய்வூதியங்களில் இதுபோன்றவொரு கண்மூடித்தனமான வெட்டுக்களை ஒருபோதும் முகங்கொடுத்ததில்லை. பெரும்பாலான நகர தொழிலாளர்களின் ஓய்வூதிய தொகைகள் 34 சதவீதத்திற்கு குறைக்கப்படும். தீயணைப்புத்துறை மற்றும் பொலிஸ்துறையில் ஓய்வூதியங்கள் 10 சதவீத அளவிற்கு வெட்டப்படும். சராசரி ஓய்வூதியம் ஏற்கனவே ஒட்டுமொத்தமாக 19,000 டாலராக போதாமையில் உள்ளது. கூடுதலாக செய்யப்படும் வெட்டுக்கள் பத்து ஆயிரக்கணக்கான ஓய்வூபெற்ற தொழிலாளர்களைக் கடும் வறுமையில் தள்ளும். வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ப உயரும் ஓய்வூதிய தொகைகளின் அதிகரிப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

* நகரத்தால் வழங்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டை நீக்குதல் அடுத்த மாதம் தொடங்கி, நகரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. ஓய்வூதியதாரர்களுக்காக நகரம் எதை வைத்திருக்கிறதோ அதில் மூன்று பங்கை விட குறைவான நிதி தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிதிய அமைப்பிற்கு மாற்றப்படும். 65 வயதில் உள்ளவர்கள் அல்லது அதைவிட வயதான ஓய்வூதியதாரர்கள் ஒபாமா நிர்வாகத்தால் வரவு-செலவு திட்ட வெட்டுக்களை முகங்கொடுத்துள்ள பெடரல் திட்டமான மெடிகேர் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். எஞ்சியவர்களுக்கு ஒபாமாகேர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தனியார் மருத்துவ பரிவர்த்தனை மையங்களில் காப்பீட்டைப் பெற போதியளவிற்கு அல்லாத மானியங்கள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் குறைந்த தரத்திலான காப்பீட்டிற்காக தங்கள் கையிலிருந்து ஆயிரக்கணக்கான டாலர்களைச் செலவு செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.

* டெட்ராய்ட் கலைக்கூடம் மற்றும் ஏனைய நகர சொத்துக்களின் தனியார்மயமாக்கல் நூற்றாண்டு காலமாக நகரத்திற்கு சொந்தமாக இருந்த டெட்ராய்ட் கலைக்கூடத்தின் உரிமையை Orrஇன் திட்டம் முடிவுக்கு கொண்டு வர அழைப்புவிடுக்கிறது. இது டெட்ராய்ட் மக்களுக்கு சொந்தமான விலை மதிப்பில்லா கலைப்படைப்புகளை தனியார் அமைப்புகள் மற்றும் செல்வசெழிப்பான கடன்வழங்குனர்களின் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றிவிடும், அவர்கள் "டெட்ராய்ட் கலைக்கூட கார்ப்" (DIA Corp) என்ற பெயரில் அதை நடத்துவார்கள். கலையைக் காப்பாற்றுவதற்கான" ஒரு வழி என்று காட்டப்பட்ட அந்த திட்டம் உண்மையில் டெட்ராய்ட் நகரவாசிகளுக்கு நுழைவு கட்டணம் விதிக்க மற்றும் அருங்காட்சியத்தின் உள்ளடக்கம் மற்றும் அணுகுதல் என இரண்டிற்குமே இதர தடைகளை விதிக்க வழியைத் திறந்துவிடுகிறது.

அந்த திட்டம் டெட்ராய்ட் குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு துறை மற்றும் பொது மின்சாரத்துறையில் இருந்து சுகாதாரத்துறை வரையில் ஏனைய சேவைகளையும் தனியார்மயமாக்கம் செய்வதற்கான படிகளை உள்ளடக்கி உள்ளது. டெட்ராய்ட் குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு துறையில் ஏற்கனவே 600 தொழிலாளர்கள், அதாவது மொத்த தொழிலாளர்களில் சுமார் 40 சதவீதத்தினர் வேலைநீக்கத்திற்கு இலக்கில் வைக்கப்பட்டுள்ளனர்.

* செல்வந்தர்களின் நலன்களுக்காக நகரை மறுசீரமைத்தல் "சிதைந்தவற்றை நீக்குவதற்காக", அதாவது ஒரு வாரத்திற்கு 400-450 என்ற ஒரு திட்டமிட்ட விகிதத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை உடைப்பதற்காக சுமார் 500 மில்லியன் டாலர் ஒதுக்கப்படும். அங்கே மறுகட்டமைப்பு செய்வது நோக்கமல்ல, மாறாக ஆளும் வர்க்கத்திற்கு பயன்படாதென கருதப்படும் சேவைகளை ஒட்டுமொத்த அண்டை சமூகத்திடமிருந்தும் வெட்டுவதன் மூலமாக நகரை "சுருக்குவதே" நோக்கமாகும்.

கட்டிடங்களை இடிப்பதற்கான திட்டத்தை வரையும் வேலை Quicken Loans நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டான் ஜில்பேர்ட்டிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஜில்பேர்ட் மலிவான விலையில் சொத்துக்களை வாங்கியும், 2012இல் இருந்து 2013 வரையில் மட்டுமே 1.5 பில்லியன் டாலர் அளவிற்கு அவரது செல்வவளத்தை உயர்த்தியும் நகரில் அவர் அவரது கட்டுப்பாட்டைத் தாங்கி உள்ளார். இந்த தொகை ஓய்வூதியதாரர்களின் மருத்துவ காப்பீட்டிற்கு செலுத்துவதற்காக நகரம் பரிந்துரைக்கும் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஜில்பேர்ட், Little Caesar இன் தலைமை செயல் அதிகாரி மைக் இலிட்ச் மற்றும் ஏனைய பில்லியனர்கள், அங்கே நகரின் மையத்தில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் குறைந்த வருவாய் குடிவாசிகளை வெளியேற்றி, அரசு மானியமளிக்கும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மாவட்டம் உட்பட ஒரு சிறிய கீழ்நோக்கிய பகுதியை "புதுப்பிக்க" ஒரு திட்டம் வைத்துள்ளனர்.

இதற்கிடையில் உத்தரவாதமுள்ள பங்குபத்திரங்கள் வைத்திருப்போருக்கு முழு தொகை வழங்கப்படும் அதேவேளையில் உத்தரவாதமற்ற பத்திரங்களுக்கு டாலரின் மீது 20 சென்டுகள் என வழங்கப்படும். அமைப்புரீதியிலான முதலீட்டாளர்களுக்கு மீத தொகை வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதியங்களில் கூர்மையான வெட்டுக்களை மற்றும் இழப்புகளுக்கு ஏற்ப அதிகப்படியான நகர சொத்துக்களைக் கோரி, அந்த உடன்பாட்டை குறை கூறி உள்ளன.

***

தொழிலாளர் விசாரணை வெளிப்படுத்தியதைப் போல, Orrஇன் நியமனமும் டெட்ராய்டை திவால்நிலைமைக்குள் செலுத்துவதற்கான முடிவும் மாநில மற்றும் உள்ளூர் மட்டத்தில் குடியரசு மற்றும் ஜனநாயக அரசியல்வாதிகளின் ஈடுபாட்டோடு பல ஆண்டுகளாக மிக கவனமாக திட்டமிடப்பட்டிருந்தன. இந்த நிகழ்முறையில், சட்டங்கள், அரசியலமைப்பு பாதுகாப்புகள் மற்றும் மக்களின் வெளிப்படையான விருப்பம் ஆகியவை மீண்டும் மீண்டும் மீறப்பட்டன, கடந்து செல்லப்பட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டன.

இதுவரையில் யாருடைய குரல் கேட்கப்படாமலேயே விடப்பட்டு இருந்ததோ அந்த ஓர் முக்கிய சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் குரலுக்கு தொழிலாளர் விசாரணை வெளிப்பாட்டை அளித்தது. அந்த விசாரணை நகர தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சேவை தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் ஏனைய பிரிவினரை ஒன்று சேர்த்து கொண்டு வந்தது. அது நகரம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளின் ஆதரவை வென்றது. டெட்ராய்டில் வங்கியாளர்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட, அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் பொய்களை எதிர்கொள்ள, தொழிலாளர்களுக்கு உண்மை தெரிய வேண்டுமென்ற கருத்துருவின் அடிப்படையில் தொழிலாளர் விசாரணை நடத்தப்பட்டது.

அது எதை வெளியில் கொண்டு வந்தது?

அந்த வாகனத்துறை நகரில் என்ன நடந்து வருகிறதென்றால் ஒரு தேசியளவிலான, உண்மையில் சர்வதேச அளவிலான ஒரு சமூக எதிர்-புரட்சியாகும். 2008 நெருக்கடியில் இருந்து, பாரியளவிலான செல்வவளத்தின் மறுபகிர்வு நடத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கும், செயற்கையாக விலையேற்றம் பெற்ற சந்தைகளுக்கும் மற்றும் பெருநிறுவன இலாபங்களுக்கும் ட்ரில்லியன் கணக்கான தொகை வழங்கப்பட்டுள்ளன, அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தின் மீது சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஒபாமா நிர்வாகம் அந்த திட்டத்தை, திரைக்குப் பின்னாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கையிலும் ஆதரித்தது. மாநில அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியங்களை வெட்ட நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதென்பது ஏனைய நகரங்களுக்கான ஒரு முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. ட்ரில்லியன் கணக்கான ஓய்வூதிய நிதிகள் பணயத்தில் உள்ளன. பெருநிறுவனங்களும், நிதியியல் மேற்தட்டும் அதை கொள்ளையடிக்க தீர்க்கமாக உள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் மீது பல தசாப்தங்களாக விட்டுகொடுப்புகளை சுமத்த ஒத்துழைப்பு வழங்கிய பின்னர், தொழிற்சங்கங்கள் இந்த திவால்நிலைமையில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. அவை தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து அவற்றின் சொந்த நலன்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே விழைந்துள்ளன. டெட்ராய்டில், அரை பில்லியன் டாலர் மருத்துவ காப்பீட்டு நிதியின் கட்டுப்பாட்டை அவற்றிடம் ஒப்படைத்து, தொழிற்சங்கங்களை ஒரு "மிகப் பெரிய பேரம்பேசுதலுக்கு" கொண்டு வர முடியுமென ஆளும் வர்க்கம் நம்புகிறது. இந்த மருத்துவ காப்பீட்டு நிதியம் மிதமிஞ்சிய சம்பளத்திற்கான ஓர் ஆதாரமாக மற்றும் அத்தகைய அமைப்புகளைக் கட்டுபாட்டில் கொண்டுள்ள நிர்வாகிகளுக்கான ஆதாரவளமாக விளங்குகிறது.

ஓய்வூதியங்கள், மருத்துவ காப்பீடு, கல்விக்கான உரிமை மற்றும் அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு அங்கே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. டெட்ராய்டில் தொழிலாளர்கள் மத்தியில் விரோத உணர்வு மேலோங்கி உள்ளது. அந்த உணர்வு தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் Orrஇன் சரிசெய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தும் போது இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த உணர்வு ஓர் ஆக்கப்பூர்வமான போராட்டத்திற்குள் திருப்பிவிடப்பட வேண்டும். டெட்ராய்ட், ஆளும் வர்க்கத்திற்கான ஒரு பரிசோதனைக் களமாக பார்க்கப்படுகிறது. அது, தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கான ஒரு பரிசோதனை களமாக திருப்பப்பட வேண்டும்.

எவ்வாறிருந்த போதினும், அப்படியொரு போராட்டம் வெற்றியடைவதற்கு, நெருக்கடிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் சக்திகள் மற்றும் காரணங்கள் மீதான ஒரு பகுப்பாய்வின் அடிப்படையில் அதை வழிநடத்தும் அரசியல் முன்னோக்கு இருக்க வேண்டும். அது ஜனநாயக கட்சி மற்றும் தொழிற் சங்கங்களின் எதிர்ப்பில் முற்றிலும் சுயாதீனமாக நிறுத்தப்பட வேண்டும். அது டெட்ராய்டில் உள்ள தொழிலாளர்களை, அதே போல தாக்குதலை முகங்கொடுத்துள்ள நாடு முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த முனைய வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, டெட்ராய்டின் கதி முதலாளித்துவ அமைப்புமுறையின் மற்றும் இந்த அமைப்புமுறை யாருடைய நலன்களுக்கு சேவை செய்கிறதோ அந்த ஆளும் வர்க்கத்தின் திவால்நிலைக்கு தீர்க்கமான சான்றாக உள்ளது. முதலாளித்துவத்தின் தோல்வியானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சோசலிச இயக்கத்தின் மறுமலர்ச்சியைக் கொண்டு விடையளிக்கப்பட வேண்டும்.