சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US media escalates propaganda offensive on Ukraine

உக்ரேன் மீதான பிரச்சார தாக்குதலை அமெரிக்க ஊடகங்கள் தீவிரப்படுத்துகின்றன

Joseph Kishore and David North
4 March 2014

Use this version to printSend feedback

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்ட உக்ரேனிய வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து, அமெரிக்க ஊடகங்கள் ரஷ்யாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ஆத்திரமூட்டும் யுத்த பிரச்சார பொழிவுடன் விடையிறுப்பு காட்டி வருகின்றன.

பத்திரிகைகளிலும் வான்வழி ஒளி/ஒலிபரப்புகளிலும், ரஷ்யா மீதான அவதூறுகள் சளைக்காமல் வந்து கொண்டிருக்கின்றன. சம்பவங்களைக் குறித்த செய்திகள் ஒரேயொரு எளிய கருத்துப்போக்கைத் தொடர்கின்றன. ரஷ்யாவின் நடவடிக்கைகள் கொடூரத்தின் முன்மாதிரியாக சித்தரிக்கப்படுகின்றன. அதன் ஜனாதிபதி, விளாடிமீர் புட்டின் சாத்தானின் அவதாரமாக காட்டப்படுகிறார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அடித்தளத்தில் உள்ள வரலாற்று பின்புலம், பொருளாதார நலன்கள், அரசியல் உள்ளடக்கம் மற்றும் புவிசார் மூலோபாய கணிப்பீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட அந்த செய்திகளின் பாதைக்குள் எந்த உண்மையும் நுழைய அனுமதிக்கபடுவதில்லை. எந்தவொரு பொய்யும் இவ்வாறு மோசமான முட்டாள்த்தனமானதாகவும் ஏளனம்மிக்கதாகவும் இருந்ததில்லை. அந்த பிரச்சார நடவடிக்கையின் உள்நோக்கம் மக்களை நம்ப வைப்பதல்ல, மாறாக அவர்களை அச்சுறுத்துவதாகும்.

திங்களன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான பிரதான தலையங்கத்தில் (ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு) பகுப்பாய்வின் ஒரு சாயல் கூட இல்லை. அது முற்றிலுமாக கண்டனங்கள், போர் முழக்கங்கள் மற்றும் எண்ணிலடங்கா பாசாங்குத்தனங்களை உள்ளடக்கி இருந்தது.

கிரிமியா மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்ற புட்டின் ஆத்திரமூட்டும் வகையில் மற்றும் இழிந்த முறையில் உக்ரேனிய நெருக்கடியைச் சுரண்டுகிறார்" என்று குற்றஞ்சாட்டி டைம்ஸ் தொடங்குகிறது. ஆனால் யதார்த்தம் தலைகீழாக உள்ளது. ரஷ்யாவின் எல்லையோரத்தில் உள்ள ஒரு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா உக்ரேனின் வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளை ஆதரித்தது. அந்த நடவடிக்கைகள் கடந்த மாதம் கசிந்த ஒரு தொலைபேசி உரையாடலால் உலகிற்கு அம்பலப்பட்டது. அதில் உக்ரேனுக்கான அமெரிக்க தூதரும், அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலரும் வாஷிங்டன் ஆதரவுடைய ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதித்திருந்தனர். ஆனால் டைம்ஸ் இந்த விடயத்தைக் குறித்து ஒன்றும் எழுதவில்லை.

மலைப்பூட்டும் அளவிற்கு வெறுப்போடு டைம்ஸ், ரஷ்யா "நாகரீகமான நடத்தையின் வரையறைகளை விட்டு வெகுதூரம் விலகி சென்றுள்ளது மற்றும் இது சர்வதேச நிலையிலும், பொருளாதார உறவுகளிலும் ஆழமான விலையைக் கொண்டிருக்கிறது" என்பதை ஒபாமா புட்டினுக்கு கூற வேண்டும் என கோருகின்றது.

யார் நாகரீகமான நடத்தையின்" வரையறைகளுக்கு வெளியே இருக்கிறார்கள்? பனாமா, கிரனாடா மற்றும் வியட்நாமில் இருந்து ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா வரையில் ஒரு நாடு மாறி ஒரு நாட்டில் அமெரிக்கா தலையீடு செய்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டில் அதன் இராணுவ நடவடிக்கைகளால் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் கணக்கான மக்கள் உயரிழந்துள்ளனர்.

ஒரு புத்திஜீவியாக மற்றும் வெளியுறவு கொள்கை வல்லுனராக காட்டிக் கொள்ளும் ரோஜர் கோஹெனின் ஒரு கட்டுரையையும் (புட்டினின் கிரிமியன் குற்றம்) டைம்ஸ் பிரசுரித்தது. பால்கன்களில் இருந்து சிரியா வரையில் அவர் அமெரிக்க இராணுவத்தின் ஒவ்வொரு விதமான ஆக்கிரமிப்பையும் பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளார். மௌம்மர் கடாபியின் அரசாங்கத்தைத் தூக்கி வீசுவதற்கான நடவடிக்கையை ஒழுங்கமைக்க உதவிய பின்னர், பெங்காசியின் அமெரிக்க தூதரகத்தில் கொல்லப்பட்ட லிபியாவிற்கான மறைந்த அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸின் ஒரு நெருங்கிய நண்பராக கோஹென் கருதப்படுகிறார்.

கோஹெனின் டைம்ஸ் கட்டுரை பல தொடர்ச்சியான அவதூறுகள் மற்றும் புனைவுகளை உள்ளடக்கி உள்ளது. பதவி இறங்கிய உக்ரேனின் தலைவர் யானுகோவிச்சை "குளறுபடிமிக்க, சொகுசுவாழ்க்கைவாழும், போர்விருப்பமுடைய ஜனாதிபதியாக", மற்றும் ரஷ்யாவின் "கட்டுப்பாடற்ற வல்லாட்சியோடு" புட்டின் ஆட்டிப்படைத்து கொண்டிருப்பதாக அந்த கட்டுரை வர்ணித்துள்ளது.

புட்டினின் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள முடியாதவையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பால்டிக் அரசுகளுக்குள் நேட்டோவின் விரிவாக்கத்திற்கோ"; போலாந்து மற்றும் ருமேனியா போன்றவற்றை ஐரோப்பிய ஒன்றியம் அரவணைப்பதற்கோ; நேட்டோவினால் சேர்பியா நசுக்கப்படுவதற்கோ; அல்லது "லிபியாவினுள் நுழைவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு தீர்மானத்தைத் திரிபுபடுத்த வேண்டுமென மேற்கின் விருப்பத்திற்கோ" அவர் ஏன் அஞ்ச வேண்டும்? தெளிவாக, புட்டின் பைத்தியமாகி உள்ளார்! என எழுதப்படுகின்றது

வரலாற்றைச் சுருக்கமாக மற்றும் தாறுமாறாக சூறையாடுகையில், கோஹென் இரண்டாம் உலக யுத்தத்தின் போது உக்ரேனுக்குள் நாஜிக்களின் குற்றங்களைக் குறித்து குறிப்பிடுகிறார், ஆனால் அவை ஸ்ராலினிச குற்றங்களின் ஒரு தொடர்ச்சி என்று காட்டும் விதத்தில் குறிப்பிடுகிறார். நாஜிக்கள் [ஸ்ராலினுக்குப் பின்னர்] மிக கொடூரங்களைச் செய்தனர், என்று உவகையோடு குறிப்பிடும் அவர், பல மில்லியன் கணக்கானவர்கள் இறந்தனர்" என்று குறிப்பிடுகிறார். நாஜி குற்றங்களை இன்றைய ஜேர்மன் மீள்இராணுவமயமாக்கலை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியின் பாகமாக ஒப்பிடும் பெருமளவிலான வலதுசாரி வரலாற்றாளர்களின் ஒரு பட்டியலில் இங்கே கோஹென் இணைந்துகொள்கின்றார்.

கோஹென் பின்னர் எந்தவித விளக்கமும் இல்லாமல் "சவங்கள் நிரப்பப்பட்ட Babi Yar கால்வாயை" மேற்கோளிட்டு காட்டுகிறார். வரலாற்று பரிச்சயமில்லாத வாசகர்கள் கோஹென் ஏதோ ஒரு ஸ்ராலினிச கொடூரத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் என்று அனுமானிக்கக்கூடும். உக்ரேனிய தலைநகர் கியேவில் உள்ள Babi Yar கால்வாய், 1941 செப்டம்பர் 29-30இல் நாஜிக்களால் 33,000 யூதர்கள் கொடூரமான கொல்லப்பட்ட இடமாகும் என்பதை அவர் அவரது வாசகர்களுக்கு தெளிவுபடுத்தவில்லை.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக "நிர்மூலமாக்கும் யுத்தம்" [Vernichtungskrieg] தொடங்கிய வெறும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் அந்த சம்பவம் நடந்தது. ஜேர்மானிய ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகள் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்களின் படுகொலைகளை உள்ளடக்கி இருந்தது. ஜேர்மன் பாசிச ஆட்சியின் அட்டூழியங்களைத் தோற்கடிக்க அந்த போராட்டத்தில் அண்ணளவாக 27 மில்லியன் சோவியத் படையினரும், மக்களும் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தற்போது உக்ரேனில் யாரோடு கூடி இயங்கிவருகின்றனவோ அந்த சக்திகளின் அரசியல் மரபுவழியைக் குறிப்பிடாமல், கோஹென் Babi Yarஐ குறிப்பிடுகிறார். அங்குள்ள எதிர்த்தரப்பு மோசமான யூத-விரோதவாதிகளால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது.

யானுகோவிச்சைத் தூக்கியெறிந்த எதிர்ப்புகளில் ஸ்வோபோடா கட்சி பிரதான அரசியல் சக்தியாக உள்ளது. அது அதற்கு முன்பிருந்த அமைப்பான உக்ரேனின் சமூக தேசிய கட்சியால் (Social National Party of Ukraine -SNPU) மறுஅடையாளம் வழங்கும் ஒரு முயற்சியின் பாகமாக 2004இல் உருவாக்கப்பட்டது. நாஜி இராணுவ படைப்பிரிவான Waffen Ssஆல் பயன்படுத்தப்பட்ட முத்திரைகளை அணியும் அங்கத்தவர்களைக் கொண்ட அந்த கட்சியின் பாசிசத்துடனான நெருக்கமான தொடர்பு, ஆரெஞ்ச் புரட்சிக்குள்" அதை ஒருங்கிணைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியை சிக்கலாக்கியதால் அதன் பெயரை மாற்ற அது நிர்பந்திக்கப்பட்டது, இறுதியாக அப்பேர்மாற்றம் 2005இல் நடத்தப்பட்டது.

ஸ்வோபோடா கட்சியின் நீண்டகால தலைவரான ஓலெஹ் தியாஹ்ன்பொக், கடந்த மாத ஆட்சி மாற்றத்திற்கு எது தயாரிப்பு செய்ததோ, அந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடனான சந்திப்பில் பங்கு பெற்றிருந்தார். 2004இல், யாவொரினா மலையில் நிகழ்த்திய ஓர் உரையில் தியாஹ்ன்பொக், இரண்டாம் உலக யுத்த சகாப்தத்திய உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தைப் புகழ்ந்தார். உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (Ukrainian Insurgent Army – UIA) "ருஷ்யர்களுக்கு எதிராக சண்டையிட்டது, ஜேர்மனியர்களுக்கு எதிராக சண்டையிட்டது, யூதர்களுக்கு [Yids] எதிராக சண்டையிட்டது மற்றும் எங்களிடம் இருந்து உக்ரேனிய அரசைப் பிடுங்க விரும்பிய ஒவ்வொரு கீழ்மக்களுக்கு எதிராகவும் சண்டையிட்டது, என்று அவர் கூறுகிறார். உக்ரேனைக் கட்டுப்படுத்துகின்ற ருஷ்ய-யூத மாஃபிய" படைகளை மிகவும் அச்சுறுத்திய அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் பலத்திற்காக தியாஹ்ன்பொக் அவர்களை பாராட்டினார். 2005இல், உக்ரேனில் யூத அமைப்புகளைத் தடை செய்யக்கோரிய ஒரு மனுவில் தியாஹ்ன்பொக் கையெழுத்திட்டார்.

உக்ரேனில் அமெரிக்கா யாருடன் கூட்டு வைத்துள்ளதோ அந்த பாசிசவாத மற்றும் யூத-விரோத சக்திகளைக் குறித்த எந்தவொரு மேற்கோளையும் ரோஜர் கோஹென் கவனத்தோடு தவிர்த்து விடுகிறார். எவ்வாறிருப்பினும், இதில் கோஹென் மட்டும் தனியாக இல்லை. மாறாக, இந்த விடயம் மொத்தமாக அமெரிக்க பத்திரிகைகளில் விலக்கப்பட்ட விடயமாக உள்ளது.

நியூ யோர்க் டைம்ஸின் போக்கு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலினது (அது ரஷ்யாவின் விடாப்பிடியான ஆக்கிரமிப்பு பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் முதன்முறையாக ஐரோப்பாவின் இருதயதானத்தில் யுத்த அச்சுறுத்தலைக் கொண்டு வருவதாக" தலையங்கத்தில் எழுதுகிறது), வாஷிங்டன் போஸ்டினது (அது ரஷ்யாவின் உக்ரேனிய ஆக்கிரமிப்புக்கான விளைவுகளை ஒபாமா நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது) மற்றும் நேஷன் இதழினது (இதன் வெளியுறவு கொள்கை பகுதிக்கான தலைமை செய்தியாளரும் மற்றும் முன்னாள் லரோசியன் (ex-Larouchite) ஆதரவாளரான ரோபர்ட் டிரெபிஸ், விளாடிமீர் புட்டின் பின்வாங்க வேண்டுமென எழுதுகிறார்) போக்கோடு ஒன்றுபோல பொருந்தி உள்ளது.

அமெரிக்க ஊடக விடையிறுப்பின் ஒருங்கிணைந்த குணாம்சம், தனிநபர்களின் எழுத்துக்களோடு சம்பந்தப்பட்டதல்ல, மாறாக முன்னர் சிந்திக்கவே முடியாததாக இருந்த நடவடிக்கைகளை வலுக்கட்டாயமாக மக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு செய்யும் நோக்கங்கொண்ட ஒரு தெளிவான திட்டமிடப்பட்ட திட்டம் கட்டவிழ்க்கப்பட்டு வருகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

கொள்கைகளை தீர்மானிக்கும் செல்வாக்குமிக்க வல்லுனர்கள் இராணுவ நடவடிக்கைக்கு அழைப்புவிடுத்து வருகின்றனர். மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஆண்ட்ரூ குச்சின்ஸ், கிரிமியாவை கடந்த ரஷ்ய இராணுவ தலையீடு "ஒரு சிவப்பு கோடாகும், அதை கடந்து வந்தால் உக்ரேன் மற்றும் நேட்டோ படைகளுடன் யுத்தம் என்பதை அது குறிக்கிறது, என்று எழுதுகிறார். அவர் தொடர்கிறார், உக்ரேனிய கடல் எல்லையை ஒட்டி மிக நெருக்கமாக கருங்கடலில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை நிலைநிறுத்த வேண்டும், என்கிறார்.

அதுபோன்றவொரு யுத்தம் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும். யுத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, ஊடகங்களின் பொய்களை அம்பலப்படுத்தும் ஒரு சளைக்காத போராட்டம் அவசியமாகும். உலக சோசலிச வலைத் தளத்தைப் பின்தொடர்வதை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டுமென நாங்கள் எங்கள் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் வினியோகியுங்கள். தற்போதிருக்கும் மரணகதியிலான ஆபத்துக்கள் குறித்து உலக மக்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.