சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Eurozone social inequality most extreme in Germany

யூரோ பகுதியில் சமூக சமத்துவமின்மை ஜேர்மனியில்தான் மிகத் தீவிரமாக உள்ளது

By Dietmar Henning 
5 March 2014

Use this version to printSend feedback

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மனியில் வருமானம் மற்றும் செல்வப் பகிர்வு பற்றிய புள்ளிவிவரங்கள் வாடிக்கையாக அதே கண்டுபிடிப்புக்களையே வெளிப்படுத்துகின்றன: செல்வம் படைத்தவர் இன்னும் அதிக செல்வத்தை கொள்கின்றனர், வறியவர் இன்னும் வறியவர்கள் ஆகின்றனர், சமூகப் பிளவு அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம், (Deutschen Instituts für Wirtschaftsforschung -DIW) வெளியிட்ட ஒர் ஆய்வில் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொழிற்சங்க சார்பு Hans Böckler Foundation இன் Dr. Markus, M. Grabka மற்றும் Christian Westermeier ஆல் நடத்தப்பட்டது. 2002-2012 தசாப்தத்தில் மிக அதிக வருவாய் ஈட்டுபவர்கள் “தங்கள் சொத்துத் தளங்களை இன்னும் விரிவாக்க முடிந்தது”, அதே நேரத்தில் குறைந்த வருமானம் உடைய குழுக்கள்  தேக்கம் பெற்றன அல்லது மூழ்கிப்போயின என்று இது கூறிப்பிடுகிறது.

இரண்டு ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவன (DIW) ஆய்வாளர்களின் பணி, ஜேர்மனிய சமூக பொருளாதரக் குழுவின் (SOEP) 17 வயது முதல் வயதிற்கு வந்தவர்களின் நிதி நிலைமையை மதிப்பீடு செய்கிறது. 2012ல் அனைத்து தனியார் வீடுகளும் கூட்டாக மொத்த சொத்தாக கிட்டத்தட்ட 7.4 டிரில்லியன் யூரோக்களைக் கொண்டிருந்தது; இதில் தனியார் வாகனங்கள், தனியார் பொருட்கள் அடங்கவில்லை. இதன்பின் ஆய்வாளர்கள் அனைத்து வயதுவந்தவர்களின் சராசரி சொத்தைக் கணக்கிட்டனர்; இந்த மொத்த மடிப்பீட்டில் இருந்து அனைத்துக் கொடுக்க வேண்டியவையும் கழிக்கப்பட்டன. எஞ்சிய 6.3 டிரில்லியன் யூரோக்கள் பின்னர் அனைத்து வயதுவந்தோர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டது; இது ஜேர்மனியில் 17 வயதில் இருந்து ஒவ்வொரு நபரும் சராசரி 83,000 யூரோக்கள் சேர்த்தனர் என்ற முடிவுக்கு வழிவகுத்தது.

எனினும் ஒரு நெருக்கமான பார்வை, செல்வத்தில் பெரும் வேறுபாடு இருப்பதைக் குறிக்கிறது. சராசரி எண்ணிக்கை, அதாவது, செல்வம் படைத்த 50%த்தினரையும் வறிய 50% த்தினரையும் பிரிக்கும் மதிப்பு, 16,663 யூரோக்கள் தான் எனக் குறிக்கிறது. மக்களில் பாதிப்பேரின் சொத்துக்கள் இந்த எண்ணிக்கையை விட குறைவானதாகும்; செல்வம் அதிகம் படைத்த 10%த்தினர் குறைந்த பட்சம் 217,000 யூரோக்களையாவது கொண்டுள்ளனர். 2012ல் மிக அதிக செல்வம் படைத்த 1%த்தினர் நிகரச் சொத்துக்களாக 800,000 யூரோக்களுக்கு மேல் கொண்டிருந்தனர்.

உண்மையில் செல்வந்தர்களின் உயரடுக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. SOEP புள்ளிவிவரங்கள் மிகப்பெரிய பணக்காரர்களையும், பில்லியனர்களையும் முன்று இலக்க மில்லியன்கள் கொண்ட செல்வந்தர்களையும் அரிதாகவே கணக்கில் எடுக்கிறது. “வெளிப் புள்ளிவிவரங்கள் இந்த குறைந்த மதிப்பை உறுதி செய்கின்றன, எடுத்துக்காட்டாக சொத்து வரிப் புள்ளிவிரங்கள் ஜேர்மனியில் இது இல்லை” என விஞ்ஞானிகள் எழுதுகின்றனர். மக்களில் உயர்மட்ட நூறில் உள்ளவர்களின் உண்மையான சராசரி செல்வம் இன்னும் அதிகமாகத்தான் இருக்கும்.

ஆனால் ஜேர்மனியில் வயதிற்கு வந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலானவர்கள் 2012ல் எந்தச் சொத்துக்களையும் கொண்டிருக்கவில்லை; இன்னும் 7 சதவீதத்தினர் சொத்துக்களைவிட அதிக கடன்களைத்தான் கொண்டுள்ளனர்.

சொத்துக்கள் பகிர்வில் சமத்துவமின்மை அளவைக் கணக்கிடுகையில், Grabka வும் Westermeier ம் கினியின் மதிப்பீட்டையே சமூக சமத்துவத்தின் அடையாளமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த மதிப்பு 0 மற்றும் 1க்கு இடையே இருக்கலாம். மதிப்பு 0 என்றால், சொத்துக்கள் சமமாக எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன, அனைவரும் ஒரே அளவு சொத்து கொண்டுள்ளனர் எனலாம். ஜேர்மனியில் ஒவ்வொரு வயது வந்தவரும் 83,000 யூரோக்கள் மதிப்புடைய சொத்துக்களை, மேலே கூறியுள்ளபடி, கொண்டிருந்தால் பொருந்தும். மதிப்பு 1 என இருந்தால், ஒருவர் மட்டும் 6.3 டிரில்லியன் யூரோக்களையும் கொண்டுள்ளார், மற்ற எவரிடமும் சொத்து இல்லை என்று பொருளாகும். எனவே இந்த மதிப்பு 0-1 அளவில் கூடுதலாக இருந்தால் சமத்துவமற்ற நிலை அதிகம் என்று பொருள். அமெரிக்கா, மிகவும் பிளவுடைய நாடுகளில் ஒன்று, கினி மதிப்பீட்டு எண் 2010ல் 0.87 என்று இருந்தது.

2012ல் ஜேர்மனியில் சமூக சமத்துவமின்மையின் அளவு இந்த மதிப்பீட்டினால் அளக்கப்பட்டது 0.78 என்று யூரோப்பகுதியில் மற்ற நாடுகளைவிட அதிகமாக இருந்தது. ஸ்லோவாக்கியாவில் (0.45), இத்தாலியில் (0,61), பிரான்ஸில் (0.68) என்னும் மதிப்புக்கள் கணிசமாக குறைவாக இருந்தது. DIW விஞ்ஞானிகள் கருத்துப்படி பிரான்ஸில் மதிப்பு யூரோப்பகுதியின் சராசரிக்கு அருகே உள்ளது.

கினி மதிப்பீட்டு பெறுமதி 2002ல் இருந்து 2007 வரை அதிகம் மாறவில்லை என்பதால், ஜேர்மனியில் சமத்துவமின்மை “மிக அதிக அளவில் உள்ளது” என்பதை விஞ்ஞானிகள் கவனத்துடன் கூறுகின்றனர்.

Süddeutsche Zeitung பத்திரிகை,  எனவே செல்வந்தர்கள் இன்னும் செல்வத்தைப் பெறுகின்றனர், வறியவர்கள் இன்னும் ஏழைகளாகின்றனர் என்று கூறுவது ஒரு “முன்கருத்து” என்ற முடிவுரையை கூறுகிறது. ஆனால் கினி மதிப்பீடு பற்றிய புள்ளிவிவரம், சொத்துக்களை பொறுத்தவரை, புள்ளிவிவரங்களில் நலிந்த தன்மையைக் காட்டுகின்றன; அவை விரிவான, துல்லியமான சித்திரத்தை வருமான விநியோகம் தொடர்பாக கொடுக்கவில்லை.

இந்த ஆய்வே கடந்த தசாப்தத்தில் வணிக செயற்பாடுகள் மற்றும் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானம், ஊதியங்கள், சம்பளங்களில் இருந்து கிடைப்பதுடன் ஒப்பிடுகையில் கணிசமாக உயர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.

வயதிற்கு வந்தவர்களில் 10 சதவீதத்தினர் 2012ல் மிகவும் குறைந்த வருமானங்களாக 20,000 யூரோக்கள்தான் சராசரி என்று கொண்டிருக்கையில், உயர்மட்ட 10 சதவீதத்தினர் வருமானக் கணக்கில் சராசரி சொத்தாக 285,000 யூரோக்களை கொண்டிருந்தனர். கடந்த தசாப்தத்தில் உயர்மட்ட 20 சதவீதத்தினர் தங்கள் சொத்துக்களில் சராசரி 25,000 யூரோக்கள் உயர்வை பதிவு செய்தனர். கீழே உள்ள 30 சதவீதத்தினர், வருமானக் கணக்கில், எந்த மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை, இக்குழுவில் சொத்துக்கள் மிகவும் குறைந்த அளவில்தான் இருந்தன.

2012ல் கிட்டத்தட்ட மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கடன்கள் 2002ல் இருந்ததைவிட கணிசமாக அதிகமாகி இருந்தன. குறிப்பாக, நுகர்வோர் கடன் கொண்ட மக்களின் விகிதம் கணிசமாக 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் என உயர்ந்துள்ளது.

வேலையில்லாதவர்கள் 2002ல் இருந்து கடுமையான நிதிய இழப்புக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பொழுது அவர்களுடைய சராசரி சொத்துக்கள் இன்னமும் 30,000 யூரோக்கள் என இருந்தன; 2012ல் இவை 18,000 யூரோக்கள் என்றுதான் அளவிடப்படுகிறது. Grabka வும் Westermeier ம் இந்நிகழ்விற்கு முக்கிய பங்காக ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) SPD-பசுமை கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஹார்ட்ஸ் சட்டங்களை கூறுகின்றனர்; மற்ற கட்டுப்பாடுகளுடன், ஹார்ட்ஸ் விதிகள், வேலையற்றோர் அவர்களுடைய சேமிப்புக்கள் அனைத்தையும் பயன்படுத்திய பின்னர்தான் வேலையின்மை நலன்களை பெறலாம் என்று கூறுகிறது. 2012ல் கிட்டத்தட்ட வேலையற்றோரில் முன்றில் இரு பகுதியினர் எந்த சொத்துக்களையும் கொண்டிருக்கவில்லை அல்லது கடன்பட்டே இருந்துள்ளனர்.

கூட்டாட்சி வேலைதரும் நிறுவனத்தின், தொழிலாளர் சந்தை மற்றும் வேலை ஆய்வுக்கூடம் (IAB) நடத்திய ஒரு சமீபத்திய ஆய்வு, அரசாங்கம் மில்லியன் கணக்கான மதிப்புடைய சேமிப்புக்களை வேலையற்றோர் இழப்புக்களில் இருந்து பெறுகிறது என உறுதி செய்துள்ளது. இந்த ஆய்வு வேலையின்மை நலன்களின் மொத்தச் செலவுகள் கடந்த 10 ஆண்டுகளில் உண்மை அளவில் பாதிக்கு மேல் குறைந்துவிட்டன” எனக் குறிப்பிட்டுள்ளது. 2012ல் வேலையின்மை நலன்களின் மொத்த அளவு 53.8 பில்லியன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2% ஒத்திருந்த நிலையில், 2003ல் ஹார்ட்ஸ் 4 விதிகள் அறிமுகப்படுத்தப்படுமுன் இந்நலன்களின் மொத்த செலவுகள் 91.5 பில்லியன் யூரோக்கள் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அப்பொழுது 4.3% என இருந்துள்ளது.

தற்போதைய DIW ஆய்வில் குறிப்பிடத்தக்கது “மறு-இணைப்பின் 25 ஆண்டுகளுக்கு பின்னரும் கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனிக்கு இடையே இன்னும் பெரிய பிளவு உள்ளது” என்பதுதான். 2012ல் கிழக்கு ஜேர்மனியர்களின் சராசரி நிகர சொத்துக்களின் மதிப்பு (41,000 யூரோக்கள்) மேற்கு ஜேர்மனியர்களின் (94000 யூரோக்கள்) சராசரி நிகர சொத்துக்களின் மதிப்பைவிட பாதிக்கும் குறைவாக இருந்தது. பால் வேற்றுமைகளுக்குள் எதிர்பார்த்தபடி மேலும் அதிகமாகத்தான் இருந்தன.

ஆய்வின் முடிவில் Grabka வும் Westermeier ம் வயது முதிர்ந்த காலத்தில் வறுமையால் வரவிருக்கும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளனர். அதிகமான ஜேர்மனியர்கள் தனிப்பட்ட காப்பீடுகளை கொண்டிருந்தாலும், அது அரச ஓய்வூதிய வெட்டுக்களை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை. விஞ்ஞானிகள், குறிப்பாக கிழக்கு ஜேர்மனியில் வரவிருக்கும் வயதான காலத்தை எதிர்கொள்ள மக்களிடம் அதிகம் சொத்துக்கள் இல்லை என்று எச்சரித்துள்ளனர்.

ஒப்புமையில் நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகளில் இருந்து குறைவூதியத்திற்கு மாற்றம் அதிகரித்துள்ள நிலையில், மிக வறியவர்களுக்குக் குவியும் பெருகும் கடன்களை கணக்கில் கொண்டால், தொழிலாளர் சந்தைக் கொள்கையில் வெட்டுக்கள் இருக்கையில், ஜேர்மனி மாபெரும் உருவமாக, ஆனால் களிமண் கால்களுடன் இருப்பது போல் உள்ளது. செல்வந்தர்களும் அவர்களுடைய அரசியல் பரிவாரங்களும் மற்றும் செய்தி ஊடகத்தினரும் ஒரு பெரும் சமூக வெடிமருந்தின் மீது அமர்ந்திருக்கின்றனர்.