சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US imperialism, Ukraine and the danger of World War III

அமெரிக்க ஏகாதிபத்தியமும், உக்ரேனும், மூன்றாம் உலக யுத்த ஆபத்தும்

Barry Grey and David North
5 March 2014

Use this version to printSend feedback
 

நாம் ஓர் அணு ஆயுத யுத்தத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோமோ? இதுதான் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய  கேள்வியாக உள்ளது.

1962 அக்டோபரில் ஏற்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர், அமெரிக்காவால் ஆதரவளிக்கப்பட்ட உக்ரேனிய ஆட்சிசதி  மிக மிக ஆபத்தான சர்வதேச நெருக்கடியைத் தூண்டிவிட்டுள்ளது. உக்ரேனில் பாசிச ஆயுதக்குழுக்களால் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு ரஷ்ய-விரோத ஆட்சி நிறுவப்பட்டதற்கு விடையிறுப்பாக கிரிமியாவிற்குள் துருப்புகளை அனுப்பி வருவதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஒபாமா நிர்வாகம் மாஸ்கோவுடனான மோதலைத் தீவிரப்படுத்த தீர்மானகரமாக இருப்பதாக தெரிகிறது. கிரிமியாவில் இருந்து அனைத்து ரஷ்ய படைகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் மற்றும் கியேவில் புதிய அமெரிக்க-நேட்டோ கைப்பாவை ஆட்சியைக் கிரெம்ளின் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென கோரி உள்ளதோடு, பொருளாதாரரீதியாக ரஷ்யாவை முற்றிலுமாக தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தடைகளை விதிக்க அழைப்புவிடுத்து வருகிறது.

அமெரிக்கா "ரஷ்யாவை அரசியல்ரீதியாக, இராஜதந்திரரீதியாக மற்றும் பொருளாதாரரீதியாக தனிமைப்படுத்த" முனைந்துள்ளது என்று கியேவின் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் செவ்வாயன்று வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி அச்சுறுத்தல் விடுத்தார். அவரது அறிக்கைகள் முன்னணி அமெரிக்க அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் போர் நாடும் அச்சுறுத்தல்களாலும்  எதிரொலிக்கப்பட்டன.

செனட்டர் ஜோன் மெக்கெயின் செனட்டிலிருந்து ஊற்றெடுத்துவரும் வசைமாரியில் ஓர் ரஷ்ய-விரோத உரையை நிகழ்த்தினார். அதில் அவர் ரஷ்யாவிற்கும் ஜோர்ஜியாவிற்கும் இடையிலான 2008 யுத்தத்தில் அமெரிக்கா தலையீடு செய்யாததற்கு மீண்டும் வருத்தம் தெரிவித்தார். “பழைய ரஷ்ய, சோவியத் இரட்டைநாக்குடன் பேசுவதில்" (doublespeak) புட்டின் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டியதோடு, “மால்டோவா மற்றும் ஜோர்ஜியாவை நேட்டோவிற்குள் சேர்ப்பதற்கு ஒரு விரைவான பாதைக்கும்" அழைப்பு விடுத்தார்.

உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரஷ்யாவின் விடையிறுப்பு மீது ஒபாமா நிர்வாகம் போலித்தனமாக அதிர்ச்சியையும், அச்சத்தையும் வெளிப்படுத்துகிறது. இது ஏமாற்றும் மற்றும் ஆத்திரமூட்டும் நிலைப்பாடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அமெரிக்கா மற்றும் நேட்டோவின் கட்டுப்பாட்டின் கீழ் கியேவில் ஒரு ரஷ்ய-விரோத கைப்பாவை ஆட்சியை சுமத்துவது கிழக்கு ஐரோப்பாவின் புவிசார் மூலோபாய சூழல்களில் ஒரு பாரிய மாற்றமாகவும் மற்றும் ரஷ்யா இருப்பிற்கே ஒரு அச்சுறுத்தலாக புட்டினாலும் மற்றும் ரஷ்ய இராணுவத்தால் பார்க்கப்படும் என்பது அதற்கு முற்றிலும் நன்றாக தெரியும்.

கியேவில் நடத்தப்பட்ட ஆட்சி கவிழ்ப்புக்கு புட்டின் விடையிறுப்பு காட்டுவார் என்பதை வெள்ளை மாளிகையோ, பெண்டகனோ அல்லது அமெரிக்க உளவுத்துறையோ (CIA) முன்கணிக்கவில்லை என்பது நினைத்தும் கூட பார்க்க முடியாது. 1954 வரையில் ரஷ்யாவின் ஒரு பாகமாக விளங்கிய, ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் மையமாக விளங்கும் மற்றும் மத்தியதரைக் கடலுக்குள் அதன் முழு நுழைவு வாயிலாக விளங்கும் கிரிமியா மீது கட்டுப்பாட்டைப் பெற ரஷ்யா, மிக குறைந்தளவிலாவது, இராணுவ படைகளை நிலைநிறுத்தும் என்பதை வாஷிங்டன் எதிர்பார்க்கவில்லை என்பதை யார் ஒருவராலும் ஆழமாக நம்ப முடியுமா? அல்லது இனவெறி கொண்ட தேசியவாதிகளின் அளப்பரிய செல்வாக்கின் கீழ் ஒரு அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் நிறுவப்பட்டமை, ரஷ்யாவின் எல்லையோரத்தில் மிகவும் நெருக்கமாக உள்ள அந்நாட்டை ஏவுகணைகள் ஏந்திய நேட்டோ படைகளின் புதிய முன்னணி இராணுவ தளமாக மாற்றுகையில், ரஷ்யா சாதாரணமாக மறுபக்கம் திரும்பி பார்த்துகொண்டு இருக்கும் என்று வாஷிங்டன் நினைத்ததா?

ரஷ்யாவிற்கு எதிரான தற்போதைய உந்துதலுக்கான நிஜமான காரணங்களுக்கு, உக்ரேனின் "தேசிய இறையாண்மையுடனோ" அல்லது சர்வதேச சட்டத்தின் புனிதத்தன்மையுடனோ எந்த சம்பந்தமும் கிடையாது. மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியா மீதான வாஷிங்டனின் கட்டுப்பாட்டை விஸ்தரிக்கும் அமெரிக்க முயற்சிகள், மாஸ்கோவிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பையே சந்தித்துள்ள நிலையில் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க-ரஷ்ய பதட்டங்கள் மிகவும் தீவிரமாக வளர்ந்துள்ளன.

சிரியாவில், அசாத் ஆட்சிக்கு ரஷ்யாவின் ஆதரவு கடந்த செப்டம்பரில் அமெரிக்கா தற்காலிகமாக பின்வாங்கவும், நேரடி இராணுவ தலையீட்டிற்கான அதன் திட்டங்களை நிறுத்தி வைக்கவும் நிர்பந்தித்தது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் அதன் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு வரும் எந்தவொரு இடையூறையும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்த உலகையும் அதன் நலன்களுக்கு ஏற்ப மறுகட்டமைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களில், ரஷ்யாவை மிகச்சிறிய மற்றும் மிகவும் எளிமையாக ஜீரணமாக கூடிய சிறுதுண்டுகளாக சிதைப்பதும் உள்ளடங்கி உள்ளது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வெறுமனே வெளியுறவு இலக்குகளைக் குறித்து மட்டும் கவலை கொள்ளவில்லை, மாறாக உள்நாட்டு அழுத்தங்களின் மீதும் கவலைக் கொண்டுள்ளது. அமெரிக்க மக்களைத் திசைதிருப்பவும், குழப்பவும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு முடிவில்லா இராணுவ தலையீடுகள் மற்றும் யுத்தங்கள் அவசியப்படுகின்றன என்றளவிற்கு, அந்நாட்டின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பு வெடிப்பார்ந்த முரண்பாடுகளோடு மிகவும் பலவீனமாகவும், மிகவும் சுமையேற்றப்பட்டும் உள்ளது.

ஐந்துக்கும் அதிகமான ஆண்டுகளாக ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருந்த பின்னர், அமெரிக்க ஆளும் மேற்தட்டு அந்நாட்டிற்குள் நிலவும் பரந்த அமைதியின்மை மற்றும் அதிருப்திகள் குறித்து நன்கு அறிந்துள்ளது. அங்கே மலைப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மை அதிகளவிலான மக்களால் அடையாளம் காணப்பட்டிருப்பதோடு, அதன் மீது கோபமும் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியான முடிவில்லா யுத்தங்கள் உள்நாட்டு சமூக அழுத்தங்களை வெளியேநோக்கி மாற்றிவிடுவதை நோக்கமாக கொண்டுள்ளன.

பலவந்தமான ஏகாதிபத்திய அபிலாஷைகளுக்கும், உள்நாட்டு அமைதியின்மை மீதான அச்சத்திற்கும் இடையிலான நச்சுத்தன்மை நிறைந்த தொடர்புகள், அணுவாயுத யுத்த ஆபத்திற்கு அமெரிக்க ஆளும் மேற்தட்டு தயாராகி உள்ள ஒரு நிலைமையை உருவாக்கி உள்ளதா? அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதற்கான விடையை வழங்குகின்றன.

ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் உடனடி உள்நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், ஏகாதிபத்தியத்தின் இயக்கவியல் அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டுள்ளது. உக்ரேனில் அமெரிக்கா தூண்டிவிட்டுள்ள நிலைமைகளில், அந்த மண்ணில் எடுக்கப்படும் கணக்கில்லா நடவடிக்கைகளில் ஏதோ ஒன்று கூட, அது உள்நோக்கதோடு இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, கட்டுப்பாட்டை மீறிய பல தொடர்ச்சியான சம்பவங்களைத் தூண்டிவிடக் கூடும்.

இந்த குறிப்பிட்ட நெருக்கடி தீர்க்கப்பட்டாலும் கூட, மற்றொன்று வெடிப்பதற்கு வெகு காலம் ஆகாது. விரைவிலேயோ அல்லது சில காலம் கழித்தோ, இத்தகைய நெருக்கடிகளில் ஒன்று ஓர் அணு ஆயுத பேரழிவைத் தூண்டிவிடும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் யுத்தத்தை எதிர்க்கும் அனைவரது குரலும் கேட்கப்பட வேண்டும்! இருப்பத்தோராம் நூற்றாண்டில் நிலவும் நிலைமைகளுக்கு மிகவும் தொடர்புபட்டவிதத்தில் பொருந்தும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று படிப்பினைகள், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் மட்டுமே யுத்தத்தை தடுக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன.