சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

US threatens Russia as Ukraine crisis escalates

உக்ரேன் நெருக்கடி அதிகரிக்கையில் அமெரிக்கா ரஷ்யாவை அச்சுறுத்துகிறது

By Chris Marsden 
5 March 2014

Use this version to printSend feedback

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் வெளியுறவுத் துறை செயலர் ஜோன் கெர்ரியும் செவ்வாயன்று திமிர்த்தனமான அறிக்கைகளை ரஷ்யாவிற்கு எதிராக வெளியிட்டனர்; இவை, அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் உக்ரேனிய அரசாங்கத்தை வீழ்த்த ஆதரவு அளித்த வலதுசாரி ஆட்சி கவிழ்ப்பிற்கு ஒரு வராத்திற்குப்பின் வெளிவந்துள்ளன.

கிரிமியாவில் ரஷ்ய நடவடிக்கைகளுக்கு விடையிறுக்கையில், உக்ரேன் தலைநகர் கியேவுக்கு வந்துள்ள கெர்ரி, மாஸ்கோ பொய் கூறுகிறது என்றார். “மேலும் ஆக்கிரமிப்பு நடத்த ரஷ்யா ஒரு போலிக்காரணத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறது” என்றார். ரஷ்யா விரிவாக்கம் செய்யதை நிறுத்தவில்லை என்றால், ரஷ்யாவை அரசியலளவிலும் பொருளாதார அளவிலும் தனிமைப்படுத்த “எமது பங்காளிகளுக்கு நம்முடன் சேருவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

ரஷ்ய நடவடிக்கைகள் “திமிர்த்தன ஆக்கிரமிப்பு செயல்கள் ஆகும்” என்று கெர்ரி சேர்த்துக் கொண்டார்.

வாஷிங்டனில் இருந்து ஒபாமா, ரஷ்யா “அண்டை நாட்டின்மீது அழுத்தத்தைச் செலுத்த முயல்கிறது. ரஷ்ய நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது” என்றார்.

முன்னதாக பென்டகன், அது “அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள இராணுவப் பயிற்சிகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக” அறிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய உக்ரேன் நெருக்கடி குறித்த முதல் பகிரங்க அறிக்கையில் அவர் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் தேவை இப்பொழுது இல்லை என்றார். உக்ரேன் எல்லையருகே இராணுவப் பயிற்சிகள் நடத்தும் ரஷ்யத் துருப்புக்களை அவற்றின் தளங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். “நாம் உக்ரேனிய மக்களுடன் போரிடப்போவதில்லை. மிகவும் தீவிரமான நிலைமை என்றால்தான் இராணுவ பயன்படு இருக்கும்” என்றார்.

எனினும், கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்கள் ரஷ்யாவின் உதவியை நாடினால், அல்லது பெரும் குழப்பத்திற்கான அறிகுறிகள் இருந்தால், “அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்தும் உரிமை நமக்கு உண்டு” என்றார் புட்டின். ரஷ்ய ஆயுதப் படைகள் கிரிமியாவில் நேரடியாக செயல்படுகின்றன என்பதை அவர் மறுத்து, தேசிய அடையாளம் இல்லாத சீருடை அணிந்த துருப்புக்கள் “உள்ளூர் சுய பாதுகாப்புப் படையினர்” என்றார்.

கெர்ரியின் உத்தியோகபூர்வ விஜயம், கியேவில் இடைக்கால ஜனாதிபதி ஒலெக்சாந்தர் டுர்ச்சிநோவ், பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற பாசிஸ்ட்டுக்கள் மற்றும் தன்னலக்குழுவினரால் பதவியில் இருத்தப்பட்டவர்களை சந்திப்பதாகும். அவர் உக்ரேனின் நிதிய உள்வெடிப்பைத் தவிர்க்கவும் ஐரோப்பிய சந்தைகளை உறுதிப்படுத்தவும் 1 பில்லியன் டாலர்கள் கொடுக்க முன்வந்தார். சந்தை திங்களன்று பெரிதும் சரிந்து, நேற்று மீளத் தொடங்கின.

இது ஒரு நச்சு பூசப்பட்ட உணவாகும், அமெரிக்க திறைசேரி செயலர் Jack Lew, அமெரிக்க பணம் “IMF ஆதரவிற்கு துணை நிற்கும், பாதிக்கப்படக்கூடிய உக்ரேனுக்கு சீர்திருத்தங்களுக்கு தேவையான சீர்திருத்தங்களுக்கு உதவும்” என்றார். சுருக்கமாக கூறினால், ரஷ்யாவிற்கு எதிராக “ஐக்கியப்பட்டு உள்ளது” என்று உக்ரேனை சித்தரிப்பதைப் பாதிக்காத வகையில், உடனடி சமூக வெடிப்பைத் தூண்டிவிடாதவகையில் அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளை (அத்தியாவசிய தேவைகளில் உதவித் தொகைகளை வெட்டுவது உட்பட) மற்றும் தனியார் மயமாக்கல்களை தொடங்க விரும்புகின்றன.

திரைக்குப் பின்னால், எப்படி ரஷ்யாவை தனிமைப்படுத்தி உறுதிகுலைக்கச் செய்யலாம் என்பது பற்றிய பேச்சுவார்த்தை துல்லியமாக இருக்கும்.

கெர்ரியும் ஒபாமாவும் கடந்த சில நாட்களாக மாஸ்கோவிற்கு எதிரான ஏகாதிபத்திய, பிராந்திய சக்திகளின் மூலோபாய உடன்பாட்டை ஒருங்கிணைக்க எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய சக்திகள் உக்ரேன் மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்து வலுவான நிலைப்பாடு கொள்ள செலவழித்தனர். தவிரவும் வாஷிங்டன் பலமுறை, ஜோர்ஜியா மற்றும் மோல்டோவா தலைவர்களை சந்தித்து ரஷ்யாவிற்கு எதிராக உயர்மட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் பிற நாடுகளையும் அவ்வாறே இருக்க ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பெப்ருவரி 26 அன்று கெர்ரி அமெரிக்க-ஜோர்ஜிய மூலோபாய கூட்டுக்குழுவிடம் பேசி, கூடுதலான உதவியை “ஜோர்ஜியாவின் ஐரோப்பிய மற்றும் யூரோ-அட்லான்டிக் ஆதரவுக்கு” அறிவித்தார்; அதே நேரத்தில் ரஷ்யா தொடர்ந்து ஜோர்ஜியாவின் பிரிந்து சென்ற பகுதிகளான அப்காசியா, தெற்கு ஒசிஷியாவிற்கு ஆதரவு அளிப்பதையும் கண்டித்தார்.

“ரஷ்ய ஆக்கிரமிப்பு, இராணுவமயப்படுத்தல், ஜோர்ஜிய நிலப்பகுதிக்கு அருகே எல்லையில் மோதல் என ரஷ்யாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்க்கிறது” என்றார் கெர்ரி.

ஜோர்ஜிய பிரதம மந்திரி இராக்லி கரிபாஷ்விலி, வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தபின், ஜோர்ஜியாவின் உறுப்பினர் தன்மைக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று நேட்டோவுக்கு அழைப்பு விடுத்தார். பல ஆண்டுகளாக ஜோர்ஜியா நேட்டோ உறுப்பினர் தன்மைக்காக முயல்கிறது; ஆனால் கடந்த காலத்தில் ஜேர்மனியும், பிரான்ஸும் ரஷ்யாவை சீற்றப்படுத்தக்கூடாது என்னும் அச்சத்தில் இதை எதிர்த்து வந்தன. கரிபாஷ்விலி ஜோர்ஜியா “அமெரிக்காவுடனான நம் மூலோபாய பங்காளித்தனத்திற்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது” என வலியுறுத்தினார்.

கெர்ரி உக்ரேனுக்குப் பயணிப்பதற்கு முதல் நாள் அவர் மோல்டோவாவின் பிரதம மந்திரி லூரி லெயன்காவை சந்தித்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொள்ள, 3.5 மில்லியன் மக்கள் கொண்ட அந்த நாட்டிற்கு 7.5 மில்லியன் டாலர்கள் உதவ அளிப்பதாக உறுதியளித்தார். உக்ரேன் எல்லையில் உள்ள மோல்டோவா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புநாடாகும் தகுதியைக் கேட்கிறது. “உக்ரேனில் நாம் இப்பொழுது காணும் சவால்களில் சில, மோல்டோவா மீது ரஷ்யா அழுத்தம் கொடுப்பதால் என்பது வருத்தம் தருகிறது” என்றார் கெர்ரி.

ஒபாமா, மால்டோவாவின் இறையாண்மையை மற்றும் அதன் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள எல்லைகளுக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் “அமெரிக்கா வலுவாக ஆதரவளிக்கிறது” என்று கூறியுள்ளார் என வெள்ளை மாளிகை ஓர் அறிக்கையில் கூறியது; இது லியான்காவை, அதன் டிரான்ஸ்நிஸ்ட்ரியா பிரிவினைப் பகுதிக்கு ரஷ்யா ஆதரவு கொடுத்ததால் எப்படி மோல்டோவா இடர் உற்றது என்று மேற்கோள் கூற வைத்துள்ளது.

“மோல்டோவோ இராணுவம் தொழில்நேர்த்தி பெறுவதற்கும் அமெரிக்கா உதவியது” என்றும் “அமெரிக்க உதவி மோல்டோவோவின் திறன்களை அமைதி காப்பதற்கு சக்தி அளிக்கும் தன்மை உடையதாக ஆக்கி, பிராந்தியப் பாதுகாப்பிற்கு வளர்ச்சி கொடுத்துள்ளது” என அறிக்கை தொடர்கிறது.

ஒபாமாவின் குடியரசு ஆதாரங்கள் பற்றி நிர்ணயிக்காத தன்மை இருந்தது குறித்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட, புதிய அமெரிக்க அறக்கட்டளையின் மூத்த ஆராய்ச்சியாளர் பீட்டர் பெய்னார்ட், அட்லான்டிக்கில் அமெரிக்காவின் சுற்றி வளைக்கும் கொள்கை பற்றிய துல்லியமான சுருக்கத்தை கொடுத்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான அழுத்தம், ஜேர்மனிய மறு-இணைப்புடன் எப்படித் தொடங்கியது என்று குறிப்பிட்ட அவர், தொடர்ந்தார்: “1995ல் நேட்டோ சேர்பியாவிற்கு எதிராக போருக்குச் சென்று, பின்னர் அதைத் தொடர்ந்த உடன்படிக்கையை செயல்படுத்த பொஸ்னியாவிற்கு அமைதிப்படையை அனுப்பியது. இந்த புதிய கிழக்கு ஐரோப்பிய பணி இன்னும் விரிவாக்கத்திற்கு வகை செய்தது. 1997 ஐ ஒட்டி போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகியவையும் உடன்படிக்கையில் சேரும் என்பது தெளிவாயிற்று.

“2004ல் நேட்டோ, முன்னாள் சோவியத் முகாம் நாடுகளில் இன்னும் ஏழு நாடுகளைச் சேர்த்துக் கொண்டது; அவற்றுள் மூன்று, லித்துவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்தவை. 2009ல் குரோஷியா மற்றும் அல்பேனியா குழுவில் சேர்ந்தன. ஆறு முன்னாள் சோவியத் ஒன்றிய குடியரசுகள் – உக்ரேன், ஜோர்ஜியா, மோல்டோவா, காஜக்ஸ்தான், ஆர்மீனியா மற்றும் அஜெர்பைஜன் – இப்பொழுது தங்கள் இராணுவங்களை நேட்டோவுடன் “சமாதானத்திற்கான பங்காளித்துவத்தின்” மூலம் இணைத்துள்ளன. மத்திய ஆசியாவிலுள்ள ஐந்து முன்னாள் சோவியத் குடியரசுகளும் – கிரிகிஸ்தான், டாஜிக்ஸ்தான், துர்க்மேனிஸ்தான், காஜக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் – நேட்டோ நாடுகளுக்கு தளங்கள், போக்குவரத்துச் சலுகை, எரிபொருள் நிரப்பிக் கொள்ளுதல் மற்றும் வான்வழி உரிமைகளை ஆப்கானிய போரின்போது கொடுத்தன.

“புட்டின் கண்ணோட்டத்தில், அமெரிக்கா பின்வாங்கும் தன்மையில் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஒரு நீண்ட அணிவகுப்பில் ரஷ்ய எல்லைக்கு இன்னும் நெருக்கமாகவே கொண்டுவந்துவிட்டது” என்று அவர் முடிக்கிறார்.

மாஸ்கோ இப்பிராந்தியத்தில் கொண்டுள்ள நடவடிக்கைகளால், தான் அச்சுறுத்தப்படுகிறது என்ற தளத்தின் அடிப்படையில் செவ்வாயன்று போலந்து, நேட்டோவின் வட அட்லான்டிக் குழுக் கூட்டத்தை நடத்த முடிந்தது. நேட்டோ, “நட்பு நாடுகளின் பாதுகாப்பு நலன்களை காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது” பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தது.

வரவிருக்கும் நாட்களில் உக்ரேனில் நிகழ்வுகள் எப்படி வரும் என்பதைத் துல்லியமாக கணிப்பது கடினம் என்றாலும், அபிவிருத்திகளின் போக்கு தெளிவாக உள்ளது. உள்நாட்டுப் போரின் விளிம்பில் உக்ரேனை கொண்டுவந்திருப்பதை, அமெரிக்கா அரசியல், பொருளாதார, இராணுவ அழுத்தத்தை ரஷ்யாவிற்கு எதிராக பரந்த மோதலாக்கும் வகையில் கொண்டு செல்லுகிறது.