சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India’s government lies about 2012 military coup fears

இந்திய அரசாங்கம் 2012 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மீதிருந்த அச்சங்கள் குறித்து பொய்யுரைக்கிறது

By Kranti Kumara
5 March 2014

Use this version to printSend feedback

ஜனவரி 2012இல் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஓர் இராணுவ ஒத்திகை உண்மையில் ஓர் இராணுவ சதி முயற்சியாக இருந்ததென்ற அதன் அச்சங்களைக் குறித்து இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து மூடி மறைத்தும், பொய்யுரைத்தும் வருகின்றது.

அப்போதைய இராணுவ தலைவர் ஜெனரல் வி. கே. சிங் ஓர் உள்நோக்கத்தோடு 2012 ஜனவரி 15-16இன் இரவில் தேசிய தலைநகர் புது டெல்லியை நோக்கி இரண்டு இராணுவ பிரிவுகளை நகர்த்த உத்தரவிட்டிருந்தார் என்று அஞ்சி, அந்த இராணுவ ஒத்திகை உடனடியாக நிறுத்தப்பட்டு, அதில் ஈடுபட்டிருந்த சிப்பாய்கள் அவர்களின் முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டுமென்று அதிர்ச்சியடைந்த இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது.

இருந்தபோதினும் அந்த அரசாங்கம், இந்திய இராணுவ பிரிவுகளின் விசுவாசத்தின் மீது ஒருபோதும் கவலை கொள்ளவில்லை என்று விடாப்பிடிவாதமாக மறுப்பதை அல்லது இந்திய இராணுவம் அதிதீவிர வலதுசாரி ஜனநாயக-விரோத சக்திகளால் அடைகாக்கப்பட்டு வருவதற்கான ஆதாரத்தை மூடி மறைப்பதைத் தொடர்கிறது.

இராணுவ பதிவியிலிருந்து அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவதை எதிர்த்து வி. கே. சிங், முன்பு நடந்திராத விதத்தில், உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 16, 2012க்கு பின்னர் சவால் விடுக்க இருந்தார் என்ற உண்மையோடு ஐயத்திற்கிடமின்றி 2012 இராணுவ சூழ்ச்சி குறித்த அரசாங்கத்தின் கவலைகள் பிணைந்திருந்தன. ஓர் எந்திரமயப்பட்ட தரைப்படை பிரிவு மற்றும் ஒரு உயர்மட்ட துணைப்படை பிரிவின் 2012 ஜனவரி 15-16இன் இயக்கத்தைக் குறித்த செய்தியை முதலில் வெளியிட்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் ஓர் உயர்மட்ட இராணுவ அதிகாரி உடனான ஒரு நேர்காணலை பிரசுரித்தது. அந்த இராணுவ ஒத்திகைக்கு அவசியமான பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையிடையே உண்மையில் அங்கே பெரும் கவலைகள் இருந்ததை அந்த நேர்காணல் உறுதிப்படுத்துகிறது.

மே 2012இல் ஓய்வு பெற்ற வி. கே. சிங், அரசியல்வாதிகளையும், இராணுவத்தில் உள்ள அவரது எதிராளிகளையும் உளவு பார்க்க ஓர் இரகசிய இராணுவ பிரிவைப் பயன்படுத்தி இருந்தார் என்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கத்தைத் தூக்கியெறியும் முயற்சிக்கு ஓர் இரகசிய நிதியைப் பயன்படுத்தி இருந்தார் என்பதும் வெளியான பின்னர், பெரும் அவப்பெயர் பெற்றார்.

இராணுவ தலைவராக அவரது பதவி காலத்தின் போது சிங் தொடர்ந்து பகிரங்கமாக அரசாங்கத்தோடு மோதினார். அரசாங்கம் அதிருப்தி அடையும் அளவிற்கு, அவர் பழைய உபகரணங்கள் இந்தியாவை ஒரு யுத்தத்திற்கு தகுதியில்லாததாக செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் தரமற்ற இராணுவ உபகரணங்கள் வாங்குவதில் ஒப்புதல் வழங்க அவருக்கு 3 மில்லியன் டாலர் இலஞ்சமாக முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார். முடிவாக ஆனால் முக்கியமாக, இராணுவ தலைவர் பதவியிலிருந்து அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கும் தேதியைத் தீர்மானிக்கும் அவரது பிறந்த தேதி மீதான சர்ச்சையும் அங்கே இருந்தது.

ஜனவரி 2012இன் அனுமதியற்ற இராணுவ உபாயத்தைச் சுற்றியிருந்த முக்கிய உண்மைகள் பொதுமக்களுக்கு தெரியாதபடிக்கு அரசாங்கம் அதை உறுதிபடுத்தி இருந்த போதினும், பாதுகாப்பு அமைச்சக அனுமதி இல்லாமல் அந்த சூழ்ச்சிக்காக துருப்புகளை அனுப்பியதன் மூலம் வி. கே. சிங் அரசாங்கத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்ப விரும்பினார் என்பது மிகவும் வெளிப்படையாக தெரியும் விளக்கமாக உள்ளது.

அனுமதி இல்லாமல் துருப்புகளை நகர்த்தியதில் அரசாங்கம் எவ்வாறு மிரண்டு போனது என்பதன் மீது அதன் பரபரப்பு செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலாக பிரசுரித்த போது, பாதுகாப்பு மந்திரி ஏ. கே. அந்தோணி அந்த செய்தியை "முற்றிலும் அர்த்தமற்றதென்று" என்று கூறி உதறித் தள்ளினார். அவரது பங்கிற்கு, இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் அந்த கட்டுரையை "இராணுவ படைகளின் மதிப்புக்கு ஏற்பட்ட ஓர் அவமதிப்பாக" கூறியதோடு, வி. கே. சிங்கின் தொடர்ச்சியான விடாப்பிடியான ஒழுங்குமீறல்களுக்கு இடையிலும், இராணுவ தலைவரின் அலுவலகத்தை "மேன்மை பொருந்திய ஒன்று" என்று அறிவித்தார்.

அண்மையில் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஜனவரி மாத மாலையில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையோடு இருந்தது, அப்போதைய பாதுகாப்பு செயலர் சாஷி காந்த் சர்மா பாதுகாப்பு அமைச்சகத்தின் அப்போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல் (DGMO) லெப்டினென்ட் ஜெனரல் சவுத்ரியை நேரில் ஆஜராகுமாறு நள்ளிரவில் உத்தரவிட்டதோடு, அவர் அதிகாரத்தின் மிக உயர் பதவியில் இருப்பவர்களை இப்போது தான் சந்தித்து வந்திருப்பதாகவும், அவர்கள் கவலைக் கொண்டிருப்பதாகவும்" அவரிடம் தெரிவித்தார்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்றிருந்த சவுத்ரிக்கும் கூட, தற்செயலாக, அதுவொரு முழு சதி இல்லையென்றால், அதன் பெரும் அசாதாரணத்தன்மையை மேலும் அதிகரித்துக் காட்டும் விதத்தில், அதற்கு ஒரு நாள் முன்னர் தான் துருப்புகளின் இயக்கம் குறித்து தெரிய வந்தது. சர்மா பின்னர் உடனடியாக "துருப்புகளை முகாம்களுக்குத் திருப்பி அனுப்ப" சவுத்ரிக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவு கடைபிடிக்கப்படும் என்ற முழு நம்பிக்கை இல்லாமல், ஒரு ஹெலிகாப்டர் எடுத்துச் சென்று துருப்புகள் உண்மையில் அவற்றின் முகாம்களுக்குத் திரும்பி விட்டனவா என்பதை உறுதிப்படுத்துமாறு சில மணி நேரங்களுக்குப் பின்னர் பல்வேறு உளவுத்துறை அமைப்பு அதிகாரிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

அந்நாட்டு இராணுவத்திற்குள் அபிவிருத்தி அடைந்துவரும் முற்றிலுமான ஜனநாயக-விரோத சூழ்ச்சிகள் மற்றும் இராணுவமல்லாத தரப்பில் கட்டுப்பாடுகள் எடுக்கப்படுவதன் மீதிருக்கும் சவால்களைக் குறித்த அதன் கவலைகளை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இந்திய மக்களிடம் இருந்து மறைத்து வைக்க தீர்க்கமாக உள்ளது என்பதை அடிக்கோடிடும் வகையில், அது கோபமான புதிய கண்டனங்கள் மற்றும் பொய்களோடு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு விடையிறுப்பு காட்டியுள்ளது.

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலப்படுத்தியவற்றில் புதிதாக அங்கே ஒன்றும் இல்லையென பாதுகாப்பு மந்திரி ஆண்டனி தெரிவித்தார். இந்திய இராணுவத்தின் மீது பாராட்டுக்களைக் குவித்து, ஆண்டனி அறிவித்தார், நமது நாட்டில் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு என்பது தொலைதூர காலத்திற்கும் கூட சாத்தியமில்லை என்பதோடு அது குறித்து அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை, என்றார்.

ஆண்டனி தொடர்ந்து கூறினார், இந்திய இராணுவம் ஒரு பொறுப்பான படை என்பதை என்னுடைய அனுபவத்தில் இருந்து என்னால் நம்பிக்கையோடு கூற முடியும். அவர்கள் இராஜாங்கரீதியில் அல்ல நேரடியாக பேசுவார்கள், ஆனால் எப்போதும் மக்கள் அரசால் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளுக்கு கீழ்படிந்து இருக்கிறார்கள். இதற்கிடையில் தான், இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் அவர்களால் கையாளப்படுகின்றன, என்றார்.

அதன் சொந்த கூட்டாளிகளில் ஒன்றால் தலைமை வகிக்கப்படும், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தைத் தூக்கியெறிய காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் சொந்த இரகசிய கொள்கை இருந்தால் ஒழிய, ஜம்மு & காஷ்மீரில் ஒரு மக்கள் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்கான இராணுவத்தின் முயற்சி என்பது "மக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்குக்" கீழ்படிந்துள்ள இராணுவத்தின் ஒரு உறுதிப்பாடாக இருக்காது.

வி. கே. சிங்கால் அமைக்கப்பட்ட ஒரு இரகசிய உளவுத்துறை பிரிவால் நடத்தப்பட்ட ஜம்மு & காஷ்மீர் அரசாங்கத்தைக் கலைக்கும் ஒரு முயற்சியில், இலஞ்சங்கள் வழங்கப்பட்டமை மற்றும் அரசியல்வாதிகள் மீது உளவுப்பார்க்கப்பட்டமை உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறைக்கு (CBI) அரசு உத்தரவிட வேண்டுமென ஓர் இரகசிய இராணுவ புலனாய்வு அறிக்கை பரிந்துரைத்ததாக கடந்த செப்டம்பரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. (பார்க்கவும்: "Secret Indian Army unit implicated in anti-constitutional acts-constitutional Acts).

முன்னாள் இராணுவ தலைவர் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளரின் பிரச்சார தொடக்க விழாவில் தோன்றி அவரது அரசியல் சாயத்தை வெளிப்படுத்திய பின்னர், அவர் மதிப்பைக் கெடுக்கும் வகையில் அந்த புலனாய்வு அறிக்கை குறித்த தகவல்களை அரசில் இருக்கும் யாரோ கசியவிட்டுள்ளார் என்பதையே, இந்த அம்பலப்படுத்தல் வெளியாகி இருக்கும் காலம் வலுவாக அறிவுறுத்துகிறது.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இராணுவத்திற்குள் நடத்தப்பட்ட அந்த புலனாய்வு அறிக்கை கண்டுபிடித்தவைகளின் முக்கியத்துவத்தை அவசரமாக குறைத்துக் காட்டியது. எந்தவொரு சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்படவில்லை என்பதோடு இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைவரால் மற்றும் தற்போது பிஜேபி'இன் தேசிய நாடாளுமன்ற வேட்பாளராகும் சாத்தியக்கூறைப் பெற்றுள்ளவரால் அனுமதி வழங்கப்பட்ட ஜனநாயக-விரோத மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கைகளைக் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதைத் தடுக்க, அரசாங்கம் இராணுவத்தின் உயர்மட்டத்தோடு கூடி வேலை செய்துள்ளது என்பதையே அனைத்தும் குறித்துக் காட்டுகின்றன.

இதேபோல, பெருநிறுவன ஊடகங்களின் ஆதரவு பெற்ற அந்த அரசாங்கம், இந்து வகுப்புவாத சக்திகளின் பெருகிவரும் அடித்தளமாக இராணுவம் மாறி உள்ளது என்பதை பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைத்துள்ளது. ஏழு முஸ்லீம்கள் கொல்லப்பட்ட மஹாராஷ்டிராவின் மாலேகாவ்வில் குண்டு வைக்க கருவியாக இருந்த இந்து பயங்கரவாதிகளுக்கு இராணுவ தரத்திலான RDX வெடிமருந்துகளை வழங்கியதற்காக இராணுவத்தில் சேவை செய்து வரும் ஓர் இராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் ஓய்வுபெற்ற ஒரு மேஜரும் பொலிஸால் நவம்பர் 2008இல் கைது செய்யப்பட்டனர் என்பது தோற்றப்பாட்டளவில் தெரியாமலேயே போயுள்ளது.

இத்தகைய வெளிப்படையான மூடிமறைப்புகளுக்குப் பின்னால், இந்திய முதலாளித்துவ ஆட்சியின் முற்றுமுதலான பாதுகாப்பு அரணாக விளங்கும் சவாலுக்கிடமற்ற அந்த இராணுவத்தின் அதிகாரத்தைக் காங்கிரஸ் அரசாங்கம் சார்ந்திருப்பதும், மற்றும் அதைத் தூக்கிப்பிடிக்க தீர்மானமாக இருப்பதும் தங்கி உள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்திய மேற்தட்டு அதன் அதிகார அபிலாஷைகளை அடைவதிலும், உள்நாட்டு கிளர்ச்சிகளை ஒடுக்குவதிலும் இராணுவத்தைப் பெரிதும் முன்பை விட அதிகமாக சார்ந்து இருந்துள்ளது. 2009இல் அரசாங்கம் மாவோயிஸ்ட் தலைமையிலான பழங்குடி மக்களின் கிளிர்ச்சியை இரக்கமின்றி ஒடுக்க "ஆப்ரேஷன் க்ரீன் ஹன்ட்" [பசுமை வேட்டை நடவடிக்கை] என்று கூறப்பட்ட பல்வேறு மாநிலந்தழுவிய இராணுவ தாக்குதலைத் தொடங்கியது. முதன்முறையாக உள்நாட்டில் கிளர்ச்சி-ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக இந்திய விமானப்படையைப் பயன்படுத்தி உள்ளது மற்றும் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் தற்போது கிளர்ச்சி-ஒடுக்கும் யுத்தமுறைகளில் துணை இராணுவ படைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

அதன் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கு சார்பாக அரசாங்கம், அது காங்கிரஸ் தலைமையிலானதாக இருந்தாலும் சரி அல்லது பிஜேபி தலைமையிலானதாக இருந்தாலும் சரி, வான்வழி, தரைவழி மற்றும் நீர்வழி அணுஆயுத திட்டத்தோடு மற்றும் இந்திய பெருங்கடல் பிரதேசம் முழுவதிலும் இந்திய பலத்தை எடுத்துக்காட்டக் கூடிய ஒரு நீலக்கடல் கடற்படையோடு (blue-water navy) இந்தியாவை ஓர் இராணுவ சக்தியாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளன. அரசாங்கம் சமூக செலவினங்களைக் குறைத்து வருகின்ற நிலையில், ஆயுதங்கள் வாங்குவதன் தரப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் இராணுவத்திற்காக செலவிடப்பட்டுள்ளனஇப்படியான ஒரு நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமானவர்கள் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில் உயிர்வாழ வேண்டியவர்களாக உள்ளனர்.