சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

The crisis in Ukraine and the historical consequences of the dissolution of the Soviet Union

உக்ரேனிய நெருக்கடியும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் வரலாற்றுரீதியிலான விளைவுகளும்

By Peter Schwartz and David North 
7 March 2014

Use this version to printSend feedback

வாஷிங்டன் மற்றும் நேட்டோவிற்கு முற்றிலுமாக அடிபணிந்த ஒரு வலதுசாரி தேசியவாத ஆட்சியை நிறுவியதோடு, ரஷ்யாவுடனான ஒரு மோதலைத் தூண்டும் உள்நோக்கில் அமெரிக்காவும் ஜேர்மனியும், உக்ரேனிய நெருக்கடியை தூண்டிவிடுவது ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது.

வியாழனன்று, ஒபாமா நிர்வாகம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினிடம் இருந்து வந்த சமரச பேச்சை ஒதுக்கி தள்ளியது மற்றும் அதற்கடுத்த நாள் ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த பொருளாதார தடைகளை அறிவிக்க அழுத்தம் கொடுத்ததோடு, தடைகளின் ஒரு ஆரம்பசுற்றையும் அது அறிவித்தது. இதற்கிடையில், அமெரிக்க யுத்தவிமானங்கள் பால்டிக் பிரதேசத்திற்கு விரைவாக  அனுப்பப்பட்டுள்ளதுடன் மற்றும் அமெரிக்க யுத்தகப்பல்கள் கருங்கடலுக்குள் நுழைந்துள்ளன.

உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்ய கூட்டமைப்பில் இணைவதற்கும், மார்ச் 16இல் பிரிவினைக்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கும் ஆதரவாக கிரிமிய நாடாளுமன்றத்தின் ஒரு ஏகமனதான வாக்களிப்பிற்கு காட்டிய விடையிறுப்பில், ஜனாதிபதி ஒபாமா அதுபோன்றவொரு வாக்களிப்பு உக்ரேனிய அரசியலமைப்பையும் மற்றும் சர்வதேச சட்டத்தையும் மீறுவதாகும் என்று அறிவித்தார்.

எப்போதும் போல இந்த நெருக்கடிகாலகட்டம் முழுவதிலும் நடந்துள்ளதை போல அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கைகள் போலித்தனத்தில் ஊறியுள்ளன. 1992இல், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா யூகோஸ்லாவியாவின் உடைவிற்கு அழுத்தத்தை பிரயோகித்தது. பின்னர் அது 1999இல், கொசோவோவின் பிராந்திய பிரிவினையைப் பாதுகாக்க சேர்பியாவிற்கு எதிரான யுத்தத்திற்குள் சென்றது. இந்த எந்ததொரு பிரச்சினையிலும், வாஷிங்டனின் நிலைப்பாடு சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளால் தீர்மானிக்கப்பட்டதாக ஒருபோதும் இருந்ததில்லை, மாறாக அது அமெரிக்க புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களின் கணிப்புகளாலேயே தீர்மானிக்கப்பட்டிருந்தன.

இந்த மோதலில் ரஷ்யா மீது ஒரு வெற்றியைப் பெற அமெரிக்கா எந்தளவிற்கு செல்ல தயாராக உள்ளது? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. ஒரு தொலைக்காட்சி உரையாடலில், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சமன்தா பவார், கியேவில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சியை ரஷ்யா அங்கீகரிக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் இறுதி எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதோடு, உக்ரேனிய நிகழ்வுகள் "தெற்கு நோக்கி செல்லக்கூடும்" என்றளவிற்கு அப்பெண்மணி எச்சரித்தார்.

ஏகாதிபத்திய அதிகார அரசியலை மிகவும் இரக்கமின்றி ஆதரிக்கும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் கூட எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு அமெரிக்காவின் யுத்தம் நாடும் போக்கு மூர்க்கமாக உள்ளது. அவர் வியாழனன்று வாஷிங்டன் போஸ்டின் ஒரு தலையங்க கட்டுரையில், “உக்ரேன் மீதான அரசியல் விவாதங்கள் அனைத்தும் மோதல் குறித்ததாகும். ஆனால் நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியுமா?” என்று எழுத தொடங்கினார்.

வாஷிங்டனின் மூலோபாய திட்டவரைபுகள் மிகவும் தெளிவாக உள்ளது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை கவிழ்க்க மற்றும் அந்நாட்டின் மீது தடையற்ற கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அது உக்ரேனிய பாசிச "ஆர்ப்பாட்டக்காரர்களை" பயன்படுத்திக் கொண்டது. ஒரு முழு அவமானத்தை தவிர்க்கும் பொருட்டு, புட்டின் குறைந்தபட்ச அடையாள எதிர்ப்பை மட்டும் காட்டுவார் என ஒபாமா நிர்வாகம் அனுமானித்தது.

இருந்த போதினும், அமெரிக்கா ரஷ்யாவுடன் ஒரு சமரசத்தைக் காண முயலவில்லை. ரஷ்யா அவமானகரமாக பின்வாங்க வேண்டுமென அது விரும்புவதோடு, அந்த நிகழ்ச்சிப்போக்கில் அணுவாயுத யுத்தம் வெடிப்பதற்கான ஆபத்தையும் கொண்டு வருகிறது. அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவ படைகளுக்கு ஒரு முன்னோக்கிய அரங்காக சேவை செய்யும், ஒரு விரோத உக்ரேனை மற்றும் ரஷ்யாவை உடைக்கும் நோக்கிலான தீவிர நடவடிக்கைகளை மாஸ்கோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறொன்றையும் அமெரிக்கா கோரவில்லை.

வாஷிங்டனால் எடுக்கப்பட்டுள்ள நிலைப்பாடு, முற்றிலுமாக இல்லையென்றாலும் பகுதியாக, குறிப்பாக சிரியாவின் அசாத் ஆட்சிக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவு மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் இரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் வழங்க புட்டின் எடுத்த முடிவு ஆகிய சமீபத்திய சம்பவங்கள் மீதான அதன் கோபத்தை பிரதிபலிக்கிறது. அந்த இரண்டு விடயங்களுமே அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கை நிபந்தனையின்றி ரஷ்யா ஏற்றுக்கொள்ள மறுத்ததன் ஒரு வெளிப்பாடாக பார்க்கப்படுகின்றன. வாஷிங்டன் தனக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான உறவில் ஒரு கூர்மையான மற்றும் நிரந்தரமான மாற்றத்தை விரும்புகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஒருங்கிணைந்த இராணுவ மற்றும் நிதியியல் பலத்திற்கு முன்னால் புட்டினின் விருப்பங்கள் மண்டியிடப்படுவதை ஒபாமா நிர்வாகம் எதிர்பார்த்து வருவதாக தெரிகிறது. ஆனால் பேரழிவுகரமான விளைவுகளோடு ஓர் இராணுவ மோதலுக்குள் சுழலக்கூடிய ஒரு நெருக்கடியை அது தூண்டிவிட்டுள்ளது என்பதே உண்மையாக உள்ளது. இந்த சமயத்தில் அணு ஆயுத யுத்தம் தடுக்கப்பட்டாலும் கூட, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஒரு புதிய உலக யுத்தம் வெறுமனே ஒரு அபாயம் மட்டுமல்ல என்பதை கடந்த வார சம்பவங்கள் எடுத்துக்காட்டி உள்ளன. முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்ட தொழிலாள வர்க்கம் தலையீடு செய்தால் ஒழிய, அது தவிர்க்கவியலாத ஒன்றாக உள்ளது.

இந்த சூழ்நிலையும், மற்றும் ரஷ்யா தன்னைத்தானே எந்த நிலைமையில் காண்கிறதோ அந்த நிலைமையும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவுகரமான விளைவுகளை முற்றிலுமாக உறுதிப்படுத்துகின்றன. டிசம்பர் 1991இல், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அறிவித்த ரஷ்ய ஜனாதிபதி போரிஸ் யெல்ஸ்டின் மற்றும் அவரது உக்ரேனிய மற்றும் பெலாரஸ்சிய சமபங்காளிகளான லியோனிட் கிராவ்சுக் (Leonid Kravchuk) மற்றும் ஸ்ரானிஸ்லாவ் சுஷ்கேவிச் (Stanislav Shushkevich) ஆகியோரின் அறிவிப்பானது, தொழிலாளர்களின் அரசை உருவாக்கிய 1917 அக்டோபர் புரட்சியையும் மற்றும் அந்த புரட்சி அடித்தளமாக கொண்டிருந்த சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தையும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் பல தசாப்த காலமாக காட்டிக்கொடுக்கப்பட்ட துரோகத்தின் இறுதி நடவடிக்கையாக இருந்தது.

ரஷ்ய "விரிவாக்கவாதம்" குறித்த மேற்கத்திய ஊடகங்களின் ஆத்திரமூட்டும் பிரச்சாரம் முற்றிலும் அர்த்தமற்றதாகும். சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் -USSR- உடைந்ததில் இருந்து, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பாரிய பகுதிகளும் மற்றும் அதன் கிழக்கு பிராந்திய பங்காளிகள் அனைவரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் சுற்றுவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதானது சோவியத்திற்கு-பிந்தைய ரஷ்யாவை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு வறிய, கொடுங்கோன்மை மிக்க அரை-காலனித்துவமாக மாற்றுவதில் போய் முடியும் என்ற ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எச்சரிக்கையை ரஷ்யாவின் தலைவிதி உறுதிப்படுத்தி உள்ளது.

USSR இன் உடைவிற்கு முன்னர், ஏகாதிபத்தியத்துடன் "சமாதான சகவாழ்வே" ஸ்ராலினிச வெளியுறவு கொள்கையின் அச்சாணியாக இருந்தது. சோவியத் ஒன்றியத்துடன் ஏகாதிபத்தியத்தை இணக்கமாக வைப்பதற்கு கைமாறாக முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்க கிரெம்ளின் அதன் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தியது.

அதன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் கோர்பச்சேவின் கீழ் கிரெம்ளின் அதிகாரத்துவம், அக்டோபர் புரட்சியின் மரபிலிருந்து எதுவெல்லாம் மிஞ்சியிருந்ததோ அவற்றையெல்லாம் நிராகரித்திருந்த நிலையில், ஏகாதிபத்தியத்தை ஒரு மார்க்சிச கட்டுக்கதை (fiction) என்று கருதி செயற்பட்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட நிலையில், பழைய சோவியத் ஒன்றியத்தின் செல்வத்தை சூறையாடியதில் இருந்து புதிய ரஷ்ய வணிக பெருமக்கள் (biznismen) மேலும் மேலும் செல்வந்தர்களாக வளர்ந்த போது, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகள் ஒரு முதலாளித்துவ ரஷ்யாவை அமைதியாக வாழ விடுவார்கள் என்ற பிரமையை அதிகாரத்துவவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால் ஏகாதிபத்தியம் ஒரு கட்டுக்கதை அல்ல. ஆனால் அதுவொரு மூர்க்கமான எதார்த்தமாகும், மற்றும் அதன் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள், ரஷ்யாவுடன் அமைதியாக இணங்கி இருப்பதை நிராகரித்தது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்காவின் எதிர்ப்பு, USSRஇன் முதலாளித்துவம்-அல்லாத கட்டமைப்பை மட்டும் அடித்தளமாக கொண்டிருக்கவில்லை. அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சோவியத் ஒன்றியம், அதுபோன்றவொரு பெரிய நாட்டின் பாரிய இயற்கை மற்றும் மனிதவளங்கள் மீதான அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டை இழக்கச் செய்தது என்ற உண்மையோடு அமெரிக்காவால் ஒருபோதும் தன்னைத்தானே சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. இப்போது சோவியத் ஒன்றியம் இல்லையென்றாலும் கூட, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அந்த விருப்பங்கள் இன்னமும் இருக்கின்றன.

இவ்வாறு, ஒரு பலவீனமான முதலாளித்துவ ரஷ்யா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. முறையற்ற வகையில் சேர்த்த செல்வங்களின் கணிசமான பகுதியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகளில் சேமித்து வைத்துள்ள, ஒரு முற்றிலும் ஊழல் நிறைந்த மேற்தட்டைச் சார்ந்திருக்கும் ஓர் ஆட்சிக்கு தலைமையெடுத்துச் செல்லும் புட்டின், இராணுவ உபாயங்கள் மற்றும் மகா ரஷ்ய பேரினவாதத்தின் பிற்போக்குத்தனமான எந்திரங்களின் மீது தங்கி உள்ளார். ரஷ்ய எல்லைகளைக் கடந்து ஆதரவு தேடுவது ஒருபுறம் இருக்கட்டும்ஒரு பொருத்தமான மூலோபாய தொலைநோக்கு கூட இல்லாமல் அவரது ஆட்சி முழுமையாக அவமானப்படாமல், அதன் மரியாதைக் கெடாமல் பின்வாங்குவதற்கான ஒரு பாதையைப் புட்டின் தேடிவருகிறார். ஆனால் அமெரிக்கா அழுத்தத்தை தளர்த்தும் என்பது நிச்சயமற்றதாக உள்ளதோடு இந்த நெருக்கடி கட்டுப்பாட்டை மீறி தீவிரமடைவதற்கான ஆபத்து நிலவுகிறது.

முதலாம் உலக யுத்தம் வெடிக்க இட்டுச் சென்ற ஜூலை 1914 நெருக்கடி குறித்து சமீபத்தில் பிரச்சுரிக்கப்பட்ட The Sleepwalkers நூலில், வரலாற்றாளர் கிறிஸ்டோபர் கிளார்க், யாருடைய தவறான கணிப்புகள் ஒரு பேரழிவை உருவாக்கியதோ அதே ஐரோப்பிய இராஜாங்க அதிகாரிகளின் பொறுப்பற்றத்தன்மையின் மீது கவனத்தைத் திருப்ப அழைப்பு விடுக்கிறார். ஆனால் ஒபாமா மற்றும் அவரது ஐரோப்பிய கூட்டாளிகளோடு ஒப்பிடுகையில், 1914 நெருக்கடிக்கு காரணமாக இருந்த பாத்திரங்கள் கிட்டத்தட்ட கட்டுப்பாட்டுடன் இருந்த உருவங்களாக தெரிகின்றனர்!

தற்போதைய முட்டுச்சந்திற்கு ஒரு பாதை கண்டறியப்பட்டாலும் கூட, அதுவும் ஒரு சிறிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். மற்றொரு நெருக்கடி விரைவில் தொடரும். பெப்ரவரி-மார்ச் 2014 நெருக்கடியானது, ஐயத்திற்கிடமின்றி, ஏகாதிபத்திய அமைப்புமுறை யுத்தத்திற்கு மட்டுமே இட்டு செல்லும் என்பதை விட்டுவைக்கிறது. சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது மட்டுமே இதை தடுப்பதற்கான ஒரே வழியாக உள்ளது.