சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Denouncing Crimea referendum, US and EU step up pressure on Russia

கிரிமிய வாக்கெடுப்பைக் கண்டித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது அழுத்தங்களை அதிகரிக்கின்றன.

By Johannes Stern 
11 March 2014

Use this version to printSend feedback

மார்ச் 16ம் திகதி நடைபெற உள்ள கிரிமியாவின் அந்தஸ்து குறித்த பொதுஜன வாக்கெடுப்பிற்கு முன்னதாக, வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்யா மீது இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தங்களை முடுக்கிவிட்டுள்ளன.

திங்களன்று உக்ரேனிலுள்ள அமெரிக்க தூதர் ஜெஃப்ரி பயாட்பொதுஜன வாக்கெடுப்பு என அழைக்கப்படுவதின்முடிவை அமெரிக்கா அங்கீகரிக்காது என்று அறிவித்து, ரஷ்யாவிற்கு எதிராக மேலும் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தியுள்ளார். வாஷிங்டன்பொதுஜன வாக்கெடுப்பின் எந்த முடிவையும் அங்கீகரிக்கத் தயாராக இல்லைஎன்ற அவர் கிரிமியாஉக்ரேனின் ஒரு ஒருங்கிணைந்த பகுதிஎனக் கருதப்படுகிறது என்றார். ரஷ்யா,துப்பாக்கி முனையில் கிரிமியாவின் அந்தஸ்த்தை மாற்ற முயல்கிறது என்று குற்றம் சாட்டினார்.

ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரியும் வார இறுதியில் ஐரோப்பியத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தினர், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொதுஜன வாக்கெடுப்பை தொடர்ந்து கடுமையான தடைகள் வரும் என்பதில் உடன்பட்டுள்ளன என்றார். இதில் எந்த வேறுபாடும் எங்களுக்கு இடையே இல்லைஎன்று பயாட் கூறினார்.

வாஷிங்டனுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் ஐரோப்பியத் தலைவர்கள், தங்கள் சொந்த போர்வெறி அறிக்கைகளையும் வெளியிட்டனர். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடைய செய்திச் செயலர், ஸ்ரெபென் சைய்பேர்ட், ஞாயிறன்று ரஷ்யத் தலைவர் விளாடிமீர் புட்டினுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில்ஜேர்மனிய நிலைப்பாட்டை வலுவாக சான்ஸ்லர் உறுதிப்படுத்தினார்என்றும், கிரிமியாவில் மார்ச் 16 நடக்க உள்ள பொதுஜன வாக்கெடுப்பு எனப்படுவது சட்டவிரோதம் ஆகும்என்றும் உறுதிப்படுத்தினார் என்றார்.

ரஷ்ய பக்கத்தில், கிரிமியாவில் ரஷ்ய நிலை குறித்து பேச்சுக்களை நடத்ததொடர்புக்குழுஎன அழைக்கப்படுவதை அமைக்க ஆர்வம் காட்டவில்லைஎன்றார் ஸ்ரெபென் சைய்பேர்ட். இந்நிலைப்பாட்டை விரைவில் மாஸ்கோ மாற்றிக் கொள்ள வேண்டும் என்றதுடன்உரையாடல் மற்றும் சமரசம் செய்து கொள்ள குறுகிய காலம்தான் உள்ளதுஎன்றும் சைய்பேர்ட் கூறினார்.

மேர்க்கெலும் பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோனும், ஞாயிறு இரவு விருந்தில் சந்தித்து, மாஸ்கோ பொதுஜன வாக்கெடுப்பை பயன்படுத்தி உக்ரேனில் இருந்து கிரிமியாவை பிரிக்க முயல்வதை நியாயப்படுத்தினால்மேலும் விளைவுகள் வரும் என அச்சுறுத்தினர். இருவரும் பொதுஜன வாக்கெடுப்புசட்டவிரோதம்என்றனர்.

ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரோஷ நிலைப்பாடு, ஐரோப்பாவில் உள்ள கன்சர்வேடிவ் மற்றும் சமூக ஜனநாயக அரசியல்வாதிகளின் ஆதரவைக் கொண்டுள்ளது. பிரித்தானிய தொழிற் கட்சித் தலைவர் எட் மில்லிபண்ட், ரஷ்யா மீது காமெரோன் "அதிகபட்ச அழுத்தம்"  கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்; ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) வார இறுதியில் புதிய பொருளாதார தடைகள் வரும் என மிரட்டினார்.

திங்களன்று கீழ்சபையில் பேசிய காமெரோன்சில நாட்களுக்குள் ரஷ்யா இலக்கு வைக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

ஞாயிறு கடைசியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஒபாமாவிற்கும் மேர்க்கெலுக்கும் அழுத்தங்களின் அளவை குறைக்க அறிவுறுத்திய தொலைபேசி அழைப்பையும் மீறி அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். உக்ரேன் நிலைமை மிகவும் சிக்கலானது மற்றும் மிகவும் உடனடியான தேவை, அனைத்துப் புறங்களும் அமைதியாக இருந்து, நிதானத்தைக் கடைப்பிடித்து, அழுத்தங்கள் பெருகுவதை தவிர்க்க வேண்டும்என்று ஒபாமாவிடம் ஜி ஜின்பிங் கூறினார். இந்நெருக்கடியை தீர்க்க அரசியல் மற்றும் இராஜதந்திர வழிவகைகள் பயன்படுத்தப்பட வேண்டும்என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். சீனா, இராஜதந்திர வழிவகைகளுக்கு வசதியாக உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேர்க்கெலிடம் ஜி, நிலைமை "உயர்ந்த தூண்டுதல் உணர்வு கொண்டது" நெருக்கடிக்கு அரசியல் தீர்வு வேண்டும் என சீனா விரும்புகிறதுஎன வலியுறுத்தினார்.

சீனத் தலையீட்டிற்கு எந்த தாக்கமும் இல்லை என்பது வெளிப்படை. திங்கள் அன்று ஐரோப்பிய ஒன்றியம்புதிய தடைகள் மீதான தயாரிப்புப் பணிதொடங்கிவிட்டது என உறுதிபடுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இன்று, லண்டனில் மார்ச் 17 ல் நடக்க இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் முறையாக ஏற்கப்பட இருக்கும் மற்றொரு சுற்று தடைகளைப் பற்றி விவாதிக்க கூடுகின்றனர்அந்த நாள், கிரிமிய பொதுஜன வாக்கெடுப்பின் அடுத்த நாள் ஆகும்.

ரஷ்ய அதிகாரிகளின் பயணத் தடைகள், அவர்கள் சொத்துக்கள் முடக்கம் உட்பட பொருளாதாரத் தடைகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று கட்ட திட்டத்தில் இரண்டாம் கட்டத்தை குறிக்கும். முதல் கட்டமாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம், ரஷ்யாவுடனான புதிய முதலீட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் விசா பேச்சுக்களை தற்காலிகமாக நிறுத்துவதாக உடன்பட்டுள்ளது. மூன்றாம் கட்டம் ஆயுதங்கள் மற்றும் கடுமையான பொருளாதார தடைகளை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கும்.

வணிகத் தடைகள் குறித்து முறையான முடிவு ஏற்படவில்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிசக்தி விநியோகங்களை தடையிடும் ஆரம்ப நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. ஐரோப்பிய ஆணைக்குழு, உக்ரேன் வழியேவராமல், மத்திய ஐரோப்பாவிற்கு வரும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான எரிசக்தி பெருநிறுவனம் காஸ்ப்ரோத்தின் எரிவாயுவை நிறுத்த திங்களன்று முடிவெடுத்துள்ளது. பைனான்சியல் டைம்ஸ் கருத்துப்படி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்தனிப்பட்ட முறையில் இந்த நடவடிக்கை தொழில்நுட்பம் என்பதைவிட பூகோள அரசியல் தன்மை கொண்டதுஎன ஒப்புக் கொண்டனர்.

இந்த முடிவுகள், ஏகாதிபத்திய சக்திகளின் போர் வெறி ஆத்திரமூட்டல் தொடர் நிகழ்வுகளில் சமீபத்தியதாகும். பெப்ருவரி 22 உக்ரேனில் மேற்கத்திய ஆதரவு கொண்ட இராணுவ ஆட்சி கவிழ்ப்பை அடுத்து, ரஷ்ய பெரும்பான்மை கொண்ட மற்றும் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தாயகமான கிரிமியாவை, ரஷ்யா பாதுகாப்பதற்கு முயற்சித்ததுடன் ஏற்பட்டது.

தங்கள் பூகோளஅரசியல் இலக்குகளை அடையவும், ரஷ்யாவின் செல்வாக்கை உக்ரேன் மேற்குப் பகுதியில் மட்டும் இல்லாமல் கிழக்கிலும் பிராந்தியம் முழுவதும் அழிக்கவும் விரும்பும் வாஷிங்டன், பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் உக்ரேனை உள்நாட்டுப்போரில் தள்ளவும் மற்றும் ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதல் என்னும் இடர்பாட்டுக்கும் தயாராக உள்ளன.

திங்களன்று நேட்டோ, அது AWACS (வான்வழி வெப்பம் மற்றும் கட்டுப்பாட்டு முறை) கண்காணிப்பு விமானத்தை போலந்திற்கும் ருமேனியாவிற்கும்உக்ரேன் நெருக்கடியை கண்காணிக்கும் நட்பு நாடுகளின் முயற்சியில் ஒரு பகுதியாக அனுப்பும்என அறிவித்தது.

இராணுவக் கட்டமைபில் ஜேர்மனி ஒரு அதிகரித்த பங்கைக் கொண்டுள்ளது. AWACS விமானங்கள் தங்கள் தளத்தை ஜேர்மனிய சிறுநகரான Geilenkirchen ல் கொண்டுள்ளன. இந்த நிலைப்பாடு, அமெரிக்க படைகள் F-15 போர் விமானங்கள் நேட்டோ வான் ரோந்துகளின் எண்ணிக்கையை பால்டிக் நாடுகளில் அதிகரிக்கையில் வந்துள்ளது.

இன்று ஸ்ரைன்மையர் எஸ்த்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவிற்கு கிரிமிய நெருக்கடி குறித்த பேச்சுக்கள் நடத்த பயணிக்கிறார்.

ஞாயிறன்று, நேட்டோ தலைமைச் செயலர் தளபதி ஆண்டர்ஸ் போக் ரஸ்முசென் ஜேர்மனிய Bild செய்தித்தாளுக்கு ஒரு பேட்டி கொடுத்தார்; அதில் அவர் உக்ரேனிய இராணுவத்தின் திறனை மேம்படுத்தும் திட்டங்களை அறிவித்தார். திங்கள் அன்று உக்ரேனிய இராணுவம் அதன் இராணுவப் பயிற்சிகளை தொடங்கியது. உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சரகத்தின் அறிவிப்பு ஒன்றின்படி, அரசாங்கம் அதன் படைகளின் போர்த்தயாரிப்பை சோதிக்கிறது.

பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக் ஒரு தேசியவாத, போர்வெறி உரையை கவிஞர் டாரஸ் ஷெவ்செங்கோவின் 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் அரசாங்க சார்பு கூட்டத்தில் பேசிய ஒரு நாளின் பின்னர் உக்ரேனிய இராணுவப் பயிற்சிகள் ஆரம்பமானது. அந்த நிகழ்வில், நம் தந்தையரும், பாட்டனார்களும் இந்நிலத்திற்காக தங்கள் குருதியைக் கொட்டியுள்ளனர்யாட்சென்யுக் அறிவித்தார். உக்ரேனிய நிலத்தில் இருந்து ஒரு செ.மீ. கூட விட்டுக் கொடுக்கமாட்டோம். ரஷ்யாவும் அதன் ஜனாதிபதியும் இதை அறியட்டும்என யாட்சென்யுக் பிரகடனப்படுத்தினார்.

புதிய உக்ரேனிய அரசாங்கத்தினதும் மற்றும்மைதான் இய்கத்தினதும் பிற்போக்குத்தன்மை, ரஷ்ய தன்னலக்குழு உறுப்பினர் மிகைல் கோடோர்கோவ்ஸகி ஞாயிறன்று அவர் சில ஆயிரம் எதிர்ப்பாளர்களுக்கு முன் உரையாற்ற நட்புடன் வரவேற்கப்பட்டார் என்பதில் வெளிக்காட்டப்படுகிறது.

கோடோர்கோவ்ஸ்கி, சோவியத் ஒன்றிய கலைப்பிற்குப் பின் தங்கள் அதிகாரத்துவ பதவிகளை பயன்படுத்தி, நம்பமுடியாத செல்வங்களை முன்னாள் தேசிய சொத்துக்களை மோசடி செய்தல், திருடுதல் மூலம் சேகரித்த முன்னாள் ஸ்ராலினிச அடுக்குகளை உருவகப்படுத்துகிறார். அவர் தனது குற்றங்களுக்காக சிறையில் பத்து ஆண்டுகள் கழித்த வேளையில் புட்டின் ஆட்சிக்கும் பேர்லினுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு உடன்பாட்டிற்குப்பின் கடந்த ஆண்டு இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மைதான் சதுக்கத்தில் கோடோர்கோவ்ஸ்கியின் பிரசன்னம், எதிர்ப்பு இயக்கம் ஜனநாயகம், மனித உரிமைகளுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கியேவில் உள்ள புதிய ஆட்சி, தீவிர வலது மற்றும் பாசிசக் குழுக்களுடன் ஒத்துழைத்து, தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் தாக்குதல்களை சுமத்த மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த உதவுவதற்கும் கோடோர்வோஸ்கி மாதிரியிலான உக்ரேன் தன்னலக் குழுக்களை நம்பியுள்ளது.

மைதான் கூட்டத்தில் உரையாற்றிய கோடோர்கோவிஸ்கி புட்டின் ஆட்சியைக் கண்டித்து, ரஷ்யாவின் ஆதரவைக் கொண்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை ஆட்சி கவிழ்ப்பில் அகற்றிய பாசிசக் கூறுபாடுகளுக்கு வெள்ளைப்பூச்சையும் கொடுக்க முற்பட்டார். ரஷ்ய பிரச்சாரம் எப்பொழுதும் போல், பொய்தான். இங்கு பாசிஸ்ட்டுக்களோ நாஜிக்களோ இல்லை, எப்படி மாஸ்கோ அல்லது செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் தெருக்களில் இல்லையோ அப்படித்தான். வேறு ஒரு வித்தியாசமான ரஷ்யா உள்ளது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அங்கு அந்நாட்களில் மக்கள் தெருக்களுக்கு வந்து மாஸ்கோவில் நடக்கும் போர் எதிர்ப்பு அணிவகுப்புக்களில் பங்கு பெற்றனர். கைதுகளையும் மீறி, பல ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் என்பதையும் மீறி அவர்கள் அவ்வாறு செய்தனர்.

கோடோர்கோவ்ஸ்கியின் கருத்துக்கள் உத்தியோகபூர்வ பிரச்சாரத்திற்கு இயைந்து உள்ளதால், பரவலாக மேற்கத்திய செய்தி ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டன. அவை பாசிசக் குண்டர்கள் மற்றும் பல பில்லியனர் தன்னலக்குழுக்களின் கூட்டத்தையும் ஜனநாயக புரட்சி எனச் சித்தரிக்க விரும்புகின்றன.