சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Japan’s diplomacy in shambles over Ukraine crisis

உக்ரேன் நெருக்கடியை ஒட்டி ஜப்பானின் இராஜதந்திர முறை சிதைந்துள்ளது

By Peter Symonds 
7 March 2014

Use this version to printSend feedback

பெப்ருவரி 22 பாசிசத் தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து வெடித்துள்ள உக்ரேனிய நெருக்கடியின் திடீர் வெடிப்பு, ஜப்பானிய இராஜதந்திர முறைகளை கொந்தளிப்பில் தள்ளிவிட்டது. ஜப்பானிய அரசாங்கம் முறையாக ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரோஷம் மிகுந்த அமெரிக்க மோதலுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளது; ஆனால் இவ்வாறு செய்கையில், பிரதம மந்திரி ஷின்சோ அபேயின் மாஸ்கோவுடனான நெருக்கமான உறவுகளை இணைக்க வேண்டும் என்ற அவரது அயராத இராஜதந்திர முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது.

வாஷிங்டனிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ், அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, இத்தாலி மற்றும் கனடாவுடன் ஞாயிறு வெளிவந்த ஒரு G7 அறிக்கையில் ஜப்பானும் சேர்ந்து, ஜூன்மாதம் வரவிருக்கும் சொச்சி G8 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அமெரிக்க ஆதரவைக் கொண்ட அறிக்கை, உக்ரேனில் ரஷ்ய நடவடிக்கைகள் G8 கொள்கைகளுக்கு மாறானது என கண்டித்து, அதன் ஆதரவை "உக்ரேனின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும்" அளித்துள்ளது; ஆனால் இந்த கொள்கையைஉக்ரேனில் பாசிசக் கட்சிகளுடன் அமெரிக்கா தன் விருப்பப்படி ஒத்துழைத்து மீறுகிறது.

நெருக்கடி பற்றிய ஜப்பானிய அரசாங்கத்தின் சொந்த அறிக்கைகள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன. திங்களன்று பேசிய அபே, உக்ரேன் நிலைமை சமாதானமான முறையில் தீர்க்கப்படும்என தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். உக்ரேனிய இறையாண்மையை மதிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தொடர்புடைய நாடுகள் நிதானத்துடனும், பொறுப்பு எச்சரிக்கையுடனும்நடந்து கொள்ள வேண்டும் என முறையிட்டார்; ரஷ்ய நடவடிக்கைகளை கண்டிக்கவில்லை.

ஆனால், கவனமாக இயற்றப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு பின்னால், கணிசமான பீதி இருந்தது. ஒரு இராஜதந்திர ஆதாரம் ராய்ட்டர்ஸிடம் கூறியது; அவர்கள் அதிர்ச்சி நிலையில் உள்ளனர் ஜப்பானிய அரசாங்கத்தின் முதுகில் இது பெரும் வேதனை ஆகும்.

Asahi Shimbun கட்டுரை ஒன்று செவ்வாயன்று விளக்கியதுபோல், ரஷ்யாவுடன் உள்ள தன் நல்ல உறவுகள் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு அபே விமர்சனத்தை விமர்சனத்தை குறைக்க முற்பட்டார். ஆனால் ஓர் உயர்மட்ட ஜப்பானிய அரசாங்க அதிகாரி விளக்கியுள்ளபடி, டோக்கியோ வாஷிங்டனை பகைத்துக் கொள்ள முடியாது. ஜப்பான் ரஷ்ய-சார்பு நிலைப்பாட்டைக் கொண்டால், ஜப்பானிய-அமெரிக்க உடன்பாடு சரிந்துவிடும்என்று அதிகாரி அப்பட்டமாக கூறினார்.

அபே 2012 டிசம்பரில் பதவி ஏற்றதில் இருந்து, அமெரிக்க உடன்பாடு அவரின் இராஜதந்திர மூலபாயத்திற்கு மையமாக உள்ளது. அவர், ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவில் முன்னிலைக்கு முழு ஆதரவைக் கொடுத்துள்ளார். இது ஒரு ஆக்கிரோஷமான இராஜதந்திர பிரச்சாரம் மற்றும் பிராந்தியம் முழுவதும் இராணுவ உடன்பாடுகள் மூலம் சீனச் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. வாஷிங்டனுடைய ஆதரவுடன் அபே சீனா மீது கிழக்கு சீனக்கடலில் உள்ள பூசலுக்கு உட்பட்ட தீவுகள் மீதான அழுத்தங்களை அதிகரித்துள்ளது; மேலும் ஜப்பானிய செல்வாக்கை தென்கிழக்கு ஆசியாவில் விரிவாக்க முற்பட்டுள்ளது குறிப்பாக மற்றொரு அமெரிக்க நட்பு நாடான பிலிப்பைன்ஸில்.

அதே நேரத்தில், அபே ரஷ்யாவுடன் உறவுகளை மேம்படுத்த கணிசமான முயற்சிகளை செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், ஒரு தசாப்தத்தில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த ஒரே பிரதம மந்திரியானார் பின்னர் மேலும் நான்கு சந்தர்ப்பங்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்தித்தார். ஒபாமாவும் பல ஐரோப்பிய தலைவர்களும் சமீபத்திய குளிர்கால சொச்சி ஒலிம்பிக் பந்தயங்களை, ரஷ்யாவில் மனித உரிமைகள் மீறல் பற்றிய எதிர்ப்பினால் புறக்கணித்தபோது, அபே அங்கு சென்று புட்டினையும் சந்தித்தார்; புட்டின் இந்த ஆண்டு பிற்பகுதியில் ஜப்பானுக்கு வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்னும் அபேயின் உறுதிப்பாடு மூலோபாய மற்றும் பொருளாதார விளைவுகளால் உந்துதல் பெறுகிறது. அவருடைய அரசாங்கம் சீனாவுடன் மோதலைத் தூண்டுகையில், அபே பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையே மூலோபாய முகாம் அல்லது உடன்பாடு அமைவதைத் தடுக்க முயல்கிறார்.

கடந்த மாதம், அபே நீண்டகாலமாக ரஷ்யாவுடன் கொண்டிருந்த நிலப்பகுதிப் பூசலை, ஜப்பானுக்கு வடக்கே உள்ள நான்கு தீவுகள் குறித்தவற்றை, தீர்ப்பதாக உறுதி கொண்டார். இத்தீவுகள், இரண்டாம் உலகப் போரின்போது முன்னாள் சோவியத் படைகளால் கைப்பற்றப்பட்டவை, அப்பொழுது முதல் பிரச்சினைக்கு உரியவையாக இருக்கின்றன; இது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முறையான சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்படுவதை தடுக்கிறது. தான் பிரதம மந்திரியாக இருக்கும்போது இதைத் தீர்க்க உள்ளதாக அபே வலியுறுத்தியுள்ளார்.

சைபீரியாவில் உள்ள ரஷ்யாவின் எரிசக்தி இருப்புக்களை அணுகிப்பெறுவதிலும் ஜப்பான் ஆர்வம் கொண்டுள்ளது. அதன் அணுசக்தி விசை ஆலைகள் மூடப்படும் நிலையில் நாடு எண்ணெய், எரிவாயு இறக்குமதிகளை அதிகரிக்க நேர்ந்துள்ளது; கடந்த ஆண்டு இவை $500 பில்லியனை கடந்தன. ஜப்பான் தன் மொத்த இயற்கை எரிவாயுத் தேவையில் (LPG) 10%த்தை ரஷ்யாவிடம் இருந்து பெறுகிறது; கடந்த ஆண்டு ரஷ்யாவில் இருந்து வரும் இறக்குமதிகளை கிட்டத்தட்ட 7% அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவிற்கான எரிசக்தி ஏற்றுமதிகளில் தான் தங்கியிருப்பதை குறைக்க வேண்டும் என முற்படும் ரஷ்யா, ஆசியாவில் தன் சந்தைகளை விரிவாக்க முற்படுகிறது. ஜப்பான் தொழில்நுட்ப மற்றும் நிதிய ஆதரவைத் தன் எரிசக்தி திட்டங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது; இதில் சைபீரியாவிலுள்ள எரிவாயு வயல்கள் வளர்ச்சி, விளாடிவோஸ்டோக்கிற்கு எரிவாயுக்குழாய்த் திட்டம் அமைத்தல் மற்றும் துறைமுக நகரத்திற்கு அருகே LNG ஆலை அமைத்தல் ஆகியவை அடங்கும்.

ரஷ்யாவுடன் ஒபாமா நிர்வாகத்தின் உக்ரேன் குறித்த மோதல் இப்பொழுது புட்டினுடன் அபேயின் இராஜதந்திர நடவடிக்கைகளை வினாவிற்கு உட்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொள்ள வேண்டும் என்னும் ஒபாமாவின் அழுத்தங்களின் கீழ் ஐயத்திற்கு இடமின்றி அபே வருவார்; இதற்காக அவர் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் உட்பட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் மற்றும் கடந்த மாதம் பாசிச தலைமையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பில் அகற்றப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடக்க இருப்பதில் சேர வேண்டியிருக்கும்.

அமெரிக்கா பொருளாதாரத் தடைகள், எரிசக்தி ஏற்றுமதிகள் உட்பட, விரிவாக்கப்படுவதில் தெளிவாக அக்கறை கொண்டுள்ளது. இவை ஐரோப்பிய பொருளாதாரங்களை பாதிப்பது மட்டும் இல்லாமல் ஜப்பானையும் பாதிக்கும். வாஷிங்டனின் பொறுப்பற்ற, மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் ஒரு போரைக் கொண்டுவரலாம்; அது விரைவில் ஜப்பான் உட்பட அனைத்து பிரதான சக்திகளையும், ஈர்க்கும்.

ஜப்பானின் வர்த்தக அமைச்சர் டோஷிமிட்சு மோடெகி செவ்வாயன்று ஜப்பானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான பொருளாதார, மூலவள இராஜதந்திர முறையில் எந்த மாற்றமும் இல்லைஎன வலியுறுத்தினார். புதன் அன்று வெளியுறவு மந்திரி புயுமியோ கிஷிடா, ரஷ்யாவுடனான இராஜதந்திர அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் ஜப்பான் நிலைமையை நெருக்கமாக கவனிப்பதாக தெரிவித்தார். புட்டினுடைய ஜப்பானிய வருகை தவிர, அபே ரஷ்ய ஜனாதிபதியை G8 உச்சிமாநாட்டில் மற்றும் மாஸ்கோவில் வடக்கு வசந்த காலத்தில் கிஷிடாவிலும் சந்திக்க உள்ளார்.

உண்மையில், ஒபாமா நிர்வாகத்தின் உக்ரேனிலான சீற்றம் மிகுந்த தலையீடு இத்திட்டங்கள் அனைத்தையும் சிதைக்கின்றன.