சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

German President Gauck visits Greece

ஜேர்மன் ஜனாதிபதி கௌக் கிரேக்கத்திற்கு விஜயம்

By Christoph Dreier 
11 March 2014

Use this version to printSend feedback

கடந்த வாரம் ஜேர்மனியின் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக் கிரேக்கத்திற்கு மூன்று நாள் அரச விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயம் கிரேக்க அரசாங்கம் தொழிலாளர்கள் மீது நடத்தும் உரிமைகள் மற்றும் சமூக சாதனைகள் மீதான தாக்குதலை வலுப்படுத்த உதவியது. கிழக்கு ஜேர்மனியை சேர்ந்த கம்யூனிசத்திற்கு எதிரான முன்னாள் மதகுரு அவருடைய அரசியல் முத்திரையான நேர்மையற்ற தன்மை, பாசாங்குத்தனம் அனைத்தையும் வெளிப்படுத்தினார்.

நெருக்கடியின் ஏழாவது ஆண்டை பல கிரேக்கர்கள் தாங்கிக்கொண்டு இருப்பது குறித்து தான் பெரிதும் கவலை கொண்டுள்ளதாக அவர் கூறினார். அதேபோல் இந்த நெருக்கடியின் கீழ் கூடுதலாக பாதிக்கப்படுவோர் அதற்கு காரணமல்ல என்றும் கௌக் வலியுறுத்தினார். அதே மூச்சில் அவர் கூடுதலாக ஜேர்மனியால் ஆணையிடப்பட்ட கடுமையானன சிக்கன நடவடிக்கைகள் தேவையானவை மற்றும் இதுவரை நடைமுறைப்படுத்தியவை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றார்.

தன்னுடைய பயணத்தின் முடிவில், அவர் லிங்கியாடெஸ் கிராமத்தில் முதலைக் கண்ணீர் வடித்தார். இவ்விடம் இரண்டாம் உலகப் போரின்போது கிரேக்கத்தில் ஜேர்மனிய இராணுவம் பல போர்க்குற்றங்கள் நடத்திய இடத்தில் ஒன்றாகும். கிரேக்கர்கள் அதனை மன்னிக்க வேண்டும் என்ற அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்தார்.

கௌக் பயணத்தின் சூழ்நிலை சர்வாதிகார நாடுகளில் நடத்தப்படும் அராசங்க வருகைகளை நினைவுபடுத்தின. ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள கடந்த ஜூனில் வருகை புரிந்தபோது நடந்ததுபோல், ஏதென்ஸ் நகர மையத்தின் பல பகுதிகள் மூடப்பட்டடு, ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 500 பேர், பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய தடைசெய்யப்பட்ட பகுதியை அடைந்தபோது, அவர்கள் பொலிசாரின் தடியடிக்கும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு உட்பட்டனர்.

பின்னர் கௌக் ஜனநாயக கருத்து எவ்வகையிலும் வெளியிடப்படுவதை நசுக்கியதற்கு ஏதென்ஸ் அரசாங்கத்திற்கு மறைமுகமாக நன்றி கூறினார். அரசாங்கம் பெருங்குழப்பத்தையும் கட்டுப்பாடின்மையையும் தவிர்த்துள்ளதற்கும் பாராட்டினார், அதுவும் உணர்ச்சிமயமான கட்டங்களில். தொழிற்சங்கங்களையும் முற்றுகையிடும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தாதற்காக வெளிப்படையாக நன்றி தெரிவித்தார். இதன் மூலம் கிரேக்கத்திற்கு அவை சேவைசெய்துள்ளன என்றார்.

அதே நேரம், கௌக் தன்னுடைய உரையில் பலமுறை வேதனை தரும் சீர்திருத்தங்களின் தேவை பற்றிக் குறிப்பிட்டு அவை வெளியில் இருப்பவர்களால் கட்டளையிடப்படுகின்றன என்று கூறப்படுவதை எதிர்த்தார். எதிர்த்தரப்புத் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸுடன் நடத்திய விவாதத்தில் அவர் சீர்திருத்த நடவடிக்கைகள் சிக்கன நடவடிக்கைகள் அல்ல உதவித்திட்டங்கள் என்றார்.

உண்மையில் இது, நாட்டின் வங்கிகளுக்கும் மற்றும் கடன்கொடுத்தவர்களுக்குமான உதவித்திட்டமாகும். அவர்களின் பெறுமதியற்ற முதலீட்டிற்கான இழப்பீட்டை பெற்றுவிட்டனர். அதே நேரத்தில் கிரேக்க அரசாங்கக் கடன் வெடித்துப் பெருகிவிட்டது; தொழிலாளர்களின் சமூக வெற்றிகள் அழிக்கப்பட்டவிட்டதுடன், மக்களின் பரந்த பிரிவுகள் அழிவைக் கண்டுள்ளனர்.

சராசரியாக, ஊதியங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 40% சரிந்துவிட்டன. நூறாயிரக் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன, மற்றும் சுகாதார, கல்வி பாதுகாப்பு முறைகள் சீர்குலைந்துவிட்டன. 29% என்ற நிலையில் வேலையின்மை புதிய உயர்மட்டத்தை அடைந்துவிட்டது. ஒரு மில்லியன் பதிவு செய்யப்பட்ட வேலையற்றவர்களில் 16.4% இனர் தான் அரச உதவியையும், உடல்நல பாதுகாப்பையும் பெறுகின்றனர்.

இதன் விளைவாக ஒவ்வொரு புதிய பணிநீக்கம் அல்லது செலவுக் குறைப்பு என்பது வாழ்வா, சாவா என்ற கேள்வியாகியுள்ளது. சுகாதார மந்திரி அடோனிஸ் ஜோர்ஜியடேஸ் பெப்ருவரிக் கடைசியில் அவசரகால நோயாளிகள், இலவசமாக தொடர்ந்து சிகிச்சை பெறுவர் என அறிவித்தார். ஆனால் தீவிர வலதுசாரி லாவோஸ் கட்சி உறுப்பினராக முன்பு இருந்த, சுகாதார மந்திரியின் கூற்றுப்படி, புற்று நோய் போன்ற வியாதிகள் இறுதிக்கட்டத்தில் இருந்தால் ஒழிய அவசரமானவை எனக் கருத முடியாது என்றார்

இச்செயல்களை கௌக் பாதுகாத்தது மட்டும் இல்லாமல், ஐரோப்பா முழுவதும் அவை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார். கிரேக்க அரசாங்கம் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய வெட்டுக்கள் குறித்து பேச்சுக்கள் நடத்துகிறது. தகவல்கள்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், 4,000 அரச பணியாளர்களை இம்மாத இறுதிக்குள் பணிநீக்கம் செய்யவேண்டும் எனக் கோருகின்றனர். தனியார்துறையில் பணிநீக்கம் செய்வதற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், பொதுத்துறை ஊழியர்கள் ஊதியங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.

கிரேக்க நாளேடான Kathemerini யிடம் ஒரு நேர்காணலில் கௌக், ஜேர்மனியில் Agenda-2010 சீர்திருத்த திட்டத்தின் கீழ் வேதனை தரும் சீர்திருத்தங்கள் பொருளாதாரம், வேலைகளை ஊக்குவிக்க எடுக்கப்பட்டன. இவை போல் ஐரோப்பா முழுவதும் நடக்க வேண்டும். சீர்திருத்தம் பற்றி ஒரேமாதிரி இல்லை என்றாலும், எங்கெல்லாம் அர்த்தமுள்ள ஜேர்மனிய அனுபவத்தை எங்களால் வழங்க முடியுமோ, நாங்கள் மகிழ்ச்சியுடன் உதவுவோம் என்றார்.

ஐரோப்பிய தொழிலாளர்களை கொள்ளையடிக்கும் தன் அழைப்பை கௌக் ஜேர்மனிய இராணுவவாத புதுப்பித்தலுடன் பிணைத்தார். இழிந்த முறையில் அவர் நாஜி ஆட்சியால் பாதிக்கப்பட்டோரை இந்நோக்கத்திற்கு பயன்படுத்தினார்.

வெள்ளியன்று கௌக் கிரேக்கத்தின் வடமேற்கில் சிறுநகரமான அயோனினாவிற்கு சென்றிருந்தார், அதற்கு அருகில் இருந்து லிங்கியாடெஸ் கிராமத்திற்கும் சென்றார். அக்டோபர் 1943ல் ஜேர்மனிய இராணுவம் மிகக் கொடூர போர்க்குற்றத்தை அங்கு செய்திருந்தது.

இழிபெயர்பெற்ற 1 Alpine division Edekweib பிரிவில் இருந்த ஒரு அதிகாரி, கிரேக்க கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டபோது, தளபதி ஹூபேர்ட் லான்ஸ் பதிலடியாக ஒரு கிராமத்தின் அனைத்து மக்களையும் அழிக்க உத்தரவிட்டார். Wehrmacht படையினர் கிராமவாசிகளை அறைக்குள் தள்ளி, சுட்டு, பின்னர் கட்டிடங்களை தீக்கிரையாக்கினர். முக்கியமாக பெண்களும், குழந்தைகளுமாக 82 பேர் இறந்து போயினர். அவர்களுள் மிக இளவயதாக இருந்தது ஒரு இரண்டு மாதக் குழந்தையாகும். போர்க்குற்றங்களுக்காக தளபதி ஹூபேர்ட் லான்ஸ் நூரெம்பேர்க்கில் தண்டனை பெற்றார். ஆனால் நான்கு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த பின்னர் அவர் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (FDP) பாதுகாப்பு வல்லுனராகவும், Alpine துருப்புக்களின் சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் ஆனார்.

ஜேர்மனிய படையினர் 1,725 யூதர்களை இயோனினா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து அவுஷ்விட்சுக்கு அனுப்பினர். இவர்களில் பத்தில் ஒரு பகுதியினர்தான் அந்த சித்திரவதை முகாம்களில் இருந்து உயிர்பிழைத்தனர்.

கௌக், லிங்கியாடெஸில் உரை ஒன்றை நிகழ்த்தினார். கொலைசெய்யப்பட்ட கிராமவாசிகள் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் ஒன்றை அணிவித்தார். இரு குற்றங்களுக்கு ஜேர்மனிதான் பொறுப்பு என்ற கௌக், இந்த தீமையை செய்தவர்கள் நீண்டகாலமாக மன்னிப்புக் கேட்கவில்லை என்றார். அவர்கள் சார்பில் இதை இப்பொழுது தான் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இச்சொற்களின் பாசாகுத்தனத்தை ஜீரணித்துக்கொள்வது கடினமாகும். ஒரு நாள் முன்புதான், கௌக் உறுதியாக, ஜேர்மனியின் அறநெறி குற்றமிழைத்தற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகோருவதற்கான சட்டபூர்வ உரிமை இல்லை என்றார்.

14 வயதில் ஜேர்மனிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த கிரேக்க ஜனாதிபதி காரோலோஸ் பாப்பௌலியஸ், கூட்டுச்செய்தியாளர் கூட்டத்தில் வியாழன் அன்று கிரேக்கம் இழப்பீட்டு கோரிக்கைகளை கைவிட்டதில்லை என்றபோது, சட்டரீதியான விசாரணைகள் முடிந்துவிட்டது என நம்புகிறேன் என்றுதான் விடையளிக்க என்னால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். என பதிலளித்தார் கௌக்.

கிரேக்க கோரிக்கைகளில் ஒன்று, 1942 ஆக்கிரமிப்பாளர்கள் அச்சுறுத்தி சுமத்திய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதாகும். மூன்றாம் குடியரசு கூட இக்கடனை உத்தியோகபூர்வக் கடன், கிட்டத்தட்ட 500 மில்லியன் ரைச் மார்க் என்று அங்கீகரித்திருந்தது. ஆனால் கூட்டாட்சிக் குடியரசு இது செல்லுபடி ஆகாது என அறிவித்துவிட்டது. 1960களில் இருந்து உலக  இழப்பீடு திருப்பியளித்தல் உடன்பாட்டு விதிகளை கிரேக்க கோரிக்கைகள் அனைத்தும் திருப்தி செய்கின்றன என்று இன்று கருதுகிறது. அந்நேரத்தில் ஜேர்மனி ஏதென்ஸிற்கு அற்பதொகையான 115 மில்லியன் மார்க்குகளை கொடுத்தது. ஜேர்மனிய அரசாங்கம் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர் என்னும் முறையில் பெற்றுக்கொண்ட பிணையெடுப்பு மீண்டும் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுக்கான அனைத்துக் கோரிக்கைகளையும் செயலற்றதாக்கவிட்டது என்று கருதுகிறது.

வெளிநாடுகளில் நாஜி குற்றங்களை குறிக்கும் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவதை தன் பயணங்களின் முக்கிய பகுதியாக கௌக் கொண்டுள்ளார். லிங்கியாட்ஸுக்கு முன் இவர் பிரான்சில் Oradour, செக் குடியரசில் Lidice, இத்தாலியில் Sant’Anna diStazzama ஆகியவற்றிற்குச் சென்றிருந்தார்.

பசுமைக் கட்சியின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜொஷ்கா பிஷ்ஷர் ஒருமுறை சேர்பியாவிற்கு எதிரான போரில் ஜேர்மனி பங்குபெற்றதை நியாயப்படுத்தும் வகையில் அவுஷ்விட்ஸ் இற்கான ஜேர்மனியின் பொறுப்பை பற்றிக் குறிப்பிட்டார். இப்பொழுது கௌக் ஒவ்வொரு ஜேர்மனிய இராணுவத் தலையீட்டையும் நியாயப்படுத்துகிறார். இதில் ஜேர்மனிய அரசாங்கம் தற்பொழுது உக்ரேனில் பாசிசவாதிகளுடன் கொண்ட ஒத்துழைப்பு அடங்கும். இது குற்றமிழைப்பதை தடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன் Deutsche Welle வானொலிக்கு கொடுத்த நேர்காணலில், கௌக், ஜேர்மனிய மிருகத்தனம், ஜேர்மனியக் குற்றம், ஜேர்மனியின் கொலைகாரச் செயல்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஆபத்து விரட்டப்பட்டுவிட்டது என்று நாம் ஒரு பொழுதும் நம்ப முடியாது. ஐரோப்பாவில், செப்ரெனிகாவில் சிலநேரம் வெறும் வார்த்தைகள் மட்டும் உதவுவதில்லை என்பதை காண்கிறோம். ருவண்டாவில் தலையிடாவிட்டால் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்கிறோம்.

நாஜிக்களின் இக்குற்றங்களை, ஜேர்மனி இராணுவத் தலையீட்டில் இருந்து ஒதுங்கி நிற்பதற்கு ஒரு நியாயப்படுத்துதலாக உபயோகிக்க முடியாது என்று கௌக் கூறினார்.

இதே நேர்காணலில் கௌக், உக்ரேனில் தலையீட்டை வெளிப்படையாக நியாயப்படுத்தினார். அங்கு ஜேர்மனிய அரசாங்கம் பாசிச ஸ்வோபோடா கட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைத்தது. அக்கட்சி யூத எதிர்ப்பாளரும் மற்றும் நாஜி ஒத்துழைப்பாளருமான ஸ்டீபன் பண்டேராவை அடித்தளமாக கொண்டிருப்பதுடன், ஜேர்மன் பாசிச தேசிய ஜனநாயகக் கட்சியுடன் (NPD) நெருக்கமான உறவுகளையும் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் வலிமையான சக்தி என்பதால் ஜேர்மனி பின் இருக்கையில் அமர முடியாது என்று ஜனாதிபதி அறிவித்தார். எங்கள் தலையீட்டிற்கு எதிராக முன்வைக்க, எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை. என்றார்.