சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Oligarchs to the fore once again in Ukraine

உக்ரேனில் மீண்டும் நிதியப் பிரபுக்கள் முன்னிலைக்கு வருகின்றனர்

By Julie Hyland
12 March 2014

Use this version to printSend feedback

புதிதாக நிறுவப்பட்டிருக்கும் உக்ரேன் அரசாங்கத்தின் உட்சேர்க்கையானது இந்நாடு ஒருஜனநாயகப் புரட்சிக்குட்பட்டிருப்பதாய் கூறப்படும் கூற்றுகள் மீதான ஒரு இடித்துரைக்கும் குற்றச்சாட்டாக அமைந்திருக்கிறது.

ஸ்வோபோடா (Svoboda) கட்சியில் இருந்தான பாசிசக் கூறுகள், அரசாங்கத்தின் ஆறு முக்கியமான அமைச்சரகங்களைக் கட்டுப்படுத்துகின்ற நிலையில் அது தவிர, புதிய நிர்வாகமானது உக்ரேனின் தொழிற்துறை முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கத்திய பிராந்தியங்களிலான பிராந்திய நிர்வாகத் தலைமையில் பிரபலமான நிதியப்பிரபுக்களை அமர்த்தியிருக்கிறது.

Dnipropetrovsk பிராந்திய நிர்வாகத்தின் தலைவராக இஹோர் கோலோமோய்ஸ்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பிராந்தியம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவத் துறைகளுக்கு (அணு மற்றும் வான்வெளித்துறை உட்பட) மையமாக விளங்கியதாகும். உலோகத் துறை, வங்கித்துறை மற்றும் ஊடகத் துறை அதிபரான கோலோமோய்ஸ்கி உக்ரேனின் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திலான செல்வந்தராக மதிப்பிடப்படுகின்ற ஒருவராவார். அவரது மொத்த சொத்து மதிப்பு 6.5 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. PrivatBank இன் இணை ஸ்தாபகரான இவர் வான்போக்குவரத்துத்துறை, ஊடகத்துறை, நிதி, எண்ணெய், உலோகம், பெட்ரோலியம் மற்றும் இரும்புலோகக் கலவை (ferroalloys) ஆகிய துறைகளிலும் விரிவான நலன்கள் கொண்டிருக்கிறார்.

உக்ரேனிய -இஸ்ரேலிய குடிமகனான(இவரது இரட்டை குடியுரிமை அந்தஸ்து உக்ரேனில் அங்கீகாரம் பெற்றதல்ல என்றபோதிலும்)அவரது யூத மூலங்கள், அவருடன் இப்போது அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் பலரின் பாசிச, யூத-விரோத அரசியலை மறைப்பதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பின் ஆதரவாளர்களால் மேற்கோள் காட்டப்படுவது வழக்கமாகி இருக்கிறது.

உக்ரேனைக் காட்டிலும் வேறெந்தவொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டிலும் பெரு வணிகங்கள்அரசியலில் இத்தகையதொரு வலிமையான செல்வாக்கைசெலுத்தவில்லை என்று Slawomir Matuszak “நிதியப்பிரபு ஜனநாயகம்: உக்ரேன் அரசியலில் வணிகக் குழுமங்களின் செல்வாக்கு, 2012” என்ற ஆய்வறிக்கையில் கூறுகிறார். “நிதியப்பிரபுக்களின் நலன்களுக்கு இடையிலான ஆட்டம் தான் உக்ரேன் அரசியலுக்கு வடிவம் கொடுக்கும் உண்மையான பொறியமைப்பாகும் என்று கூட ஒருவர் சொல்லத் துணிய முடியும்என்று அவர் எழுதுகிறார்.

சமீபத்திய நிகழ்வுகளுக்கு முன்னதாகக் கூட, PrivatBank ஐ அடிப்படையாகக் கொண்ட Privat குழுமம் தனது சொந்த நலன்களுக்காக வெற்றிகரமாக பரப்புரை செய்வதற்கும்அத்துடன்மிக மூர்க்கமாய் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும்அறியப்பட்டதாய் இருந்தது என்று அவர் விளக்குகிறார்.

மேற்கத்திய ஆதரவுடன் நடந்த 2004 “ஆரஞ்சுப் புரட்சியில் யூலியா திமோஷெங்கோ (உக்ரேனின் இன்னுமொரு மிகச் செல்வம் படைத்த நிதியப்பிரபு)மற்றும் விக்டர் யுஷ்செங்கோவின் முன்னாள் ஆதரவாளரான கோலோமோயிஸ்கி, பேர்லின் ஆதரவுடனான விடாலி கிளிட்ஷ்கோவின் உக்ரேன் சீர்திருத்தத்திற்கான ஜனநாயகக் கூட்டணியின் (UDAR) [கீவ் ஆர்ப்பாட்டங்களில் இது முன்னணிப் பாத்திரம் வகித்தது] ஒரு முக்கியமான ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

PrivatBank உட்பட இந்த குழுமத்தின் முக்கியமான வணிகத் துறைகள் Dnipropetrovsk ஐ அடிப்படையாக கொண்டவை.

Dnipropetrovsk நிர்வாகத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது போரிஸ் ஃபிலாடோவ். இவர் இந்தப் பிராந்தியத்தின் மிக வசதியான தொழிலதிபர்களில் ஒருவர் என்பதோடு புரூசேல்ஸில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஐரோப்பிய உக்ரேனியர் கழகத்தின் அறங்காவலர் வாரியத்திலும் (Board of Trustees) உறுப்பினராக உள்ளார்.

கிரிமியா நிகழ்வுகள் குறித்து ஃபிளாடோவ் தனது நியமனத்திற்குப் பின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாக இவ்வாறு கூறினார்: “இந்த கழிசடைகளுக்கு வாக்குறுதிகள், உத்தரவாதங்கள் மற்றும் ஏதேனும் சலுகைகளைக் கூட அளிக்க வேண்டும்: பின் தொங்க விட வேண்டும்: அவர்களை அதன்பின் தூக்கிலேற்ற வேண்டும்.”

நாஜி போர்க்கால ஒத்துழைப்பு அளித்தவரும் உக்ரேன் தேசியவாத அமைப்பின் தலைவருமான ஸ்டீபன் பண்டேராவை அவர் பாராட்டினார். “பண்டேரா குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். அவர் எனது நாயகர். குறிப்பாக சிவப்பு மற்றும் கறுப்புக் கொடிகளின் கீழ் மரணிப்பதற்கு மக்கள் தயாராய் இருப்பதைக் காணும்போதுஎன்று ஃபிளாடோவ் எழுதியிருப்பதாய் RT செய்தி குறிப்பிடுகிறது.

உக்ரேனின் 10வது பெரும் பணக்காரரும் உலோகத் துறை அதிபதியுமான செர்ஹி தருதா நிலக்கரி மற்றும் உருக்குத் துறையின் மையமாகத் திகழும் Donetsk இன் புதிய பிராந்திய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் Donbass தொழிற்சங்கம்(Industrial Union of Donbass)என்ற ஐரோப்பாவின் மிகப்பெரும் உருக்கு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தருதா யுஷ்செங்கோவின் இன்னுமொரு கூட்டாளி ஆவார். இவர் தனது நியமனத்தை அடுத்து அளித்த ஒரு நேர்காணலில்உக்ரேனை மற்றும் அதன் எதிர்காலத்தை நேசிக்கும் அனைவருக்கும்ரஷ்யாவுக்கு எதிராகநமது நாட்டின் பிராந்திய இறையாண்மையப் பாதுகாப்பதற்கு வலிமையூட்ட அழைப்புவிடுத்தார்.

உக்ரேனின் நிதியப்பிரபுக்கள் முன்னர் எத்தரப்புக்கு விசுவாசமாயிருந்தனர் - அதாவது ரஷ்யாவுக்கா அல்லது ஐரோப்பாவுக்கா - என்பதற்கும் இப்போது அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டிற்கும் அதிகம் தொடர்பில்லை. Matuszak குறிப்பிடுவது போல, ”ஆதரவளிக்கும் நிதிப்பிரபுக்களை பிரதிநிதித்துவம் செய்வது ஒரு குழுவாக்கத்தின் மேலோங்கிய இலக்காக இருப்பது தான் பெரும்பாலுமான நிகழ்வாக இருக்கிறது.

சொல்லப் போனால், விக்டர் யானுகோவிச் வெளியேறுவதை உறுதி செய்ததற்கான அதிக பெருமை கொண்டவர் என்றால் மிக சமீபம் வரை ஜனாதிபதியின் பிராந்தியங்களது கட்சி (Party of the Regions) இன் முக்கிய நிதியுதவியாளரான ரினாட் அஹ்மெடோவ் தான். ரஷ்ய அச்சுறுத்தல்களாக சொல்லப்படுவனவற்றுக்கு எதிராக தாயகத்தைப் பாதுகாப்பதற்குசாத்தியமான அனைத்தையும் செய்யவாக்குறுதியளிப்பதில் சென்ற வாரத்தில் அவர் தருதா உடன் இணைந்து கொண்டார்

உக்ரேனின் பெரும்பணக்காரராகவும் உலகின் பெரும்பணக்காரர்களில் 47வது இடத்திலும்(15.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பிடப்படுகிறது)இருக்கும் அஹ்மடோவ் சிஸ்டம் கேபிடல் மேனேஜ்மெண்ட் (SCM) என்ற முன்னணி நிதி மற்றும் தொழிற்துறை நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவரும் ஆவார். நாட்டின் மிகப்பெரும் இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான METINVEST என்ற இதன் துணைநிறுவனம் ஐரோப்பவின் மிகப்பெரும் உருக்கு வணிக நிறுவனங்களில் ஒன்றாய் இருக்கிறது. DTEK என்ற அதன் சுரங்க மற்றும் மின் உற்பத்தி நிறுவனத்தின் மூலம், இந்த நிறுவனம் விரிவான எரிசக்தி நலன்களைக் கொண்டிருக்கிறது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவை அடுத்து, அடாவடித்தனமான வழிமுறைகளின் மூலமாக அரச சொத்துகளை சூறையாடி பெரும் செல்வம் குவித்த ஒரு குற்றவியல் அடுக்கின் மிகச்சிறந்த பிரதிநிதி தான் இந்த அஹ்மடோவ். அஹ்மடோவ் தனது ஆரம்ப காலத்தில் அக்ஹட் ப்ரஜின் என்ற மாபியா தலைவனிடம் உதவியாளராக இருந்து வந்தார் என்றும், அவர் இறந்த பின்னர் அவரது நிதி சாம்ராஜ்யம் இவருக்கு வந்து விட்டது என்றும் உக்ரேன் எழுத்தாளரான செர்ஹி குசின் எழுதிய டோனிட்ஸ்க் மாபியா: எழுத்து வரிசை (Donetsk Mafia: Anthology) ஐ மேற்கோள் காட்டி விக்கிபீடியா எழுதுகிறது.

பிப்ரவரி 3, 2006 விக்கிலீக்ஸ் தூதரக கேபிள் ஒன்றையும் அது மேற்கோளிடுகிறது. அதில் அப்போதைய அமெரிக்க தூதரான ஜோன் ஹெர்ப்ஸ்ட் அஹ்மடோவின் பிராந்தியங்களது கட்சியைடோனெட்ஸ்க்கைச் சுற்றிய தாதாக்கள் மற்றும் பெரும்புள்ளிகளுக்கு நெடுங்காலமாய் புகலிடமாக இருக்குமிடம்என்று குறிப்பிடுகிறார், அத்துடன் அஹ்மடோவை, டோனெட்ஸ்க் வம்சத்தின்ஞானத்தந்தை(godfather) என்றும் குறிப்பிடுகிறார்.

மேற்கத்திய ஆதரவு ஆரஞ்சுப் புரட்சியின் தலைவர்களுடன் அஹ்மடோவுக்கு இருந்த மோதல்களில் அநேகமானவை அவர்களது போட்டியான பெருநிறுவன நலன்களுடன் தொடர்புபட்டவை. ”யானுகோவிச் உடன் இணைபிரியாத ஒருவராக விவரிக்கப்பட்டு வந்த நிலையிலும் அஹ்மடோவ் யுஷ்செங்கோவுக்கு நிதியாதாரம் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 13 அன்று தான் அஹ்மடோவ், முதன்முதலில் தனது விசுவாச மாற்றத்தை வெளிப்படையாக சமிக்கை செய்து Maidan ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளித்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலரான விக்டோரியா நியூலான்ட் (“F**k the EU” தொலைபேசி பேச்சு புகழ்) உக்ரேன் தலைநகரில் Maidan ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படையாக இணைந்த இரண்டு நாட்களுக்கு பின்னரும், வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரி யானுகோவிச் அரசாங்கத்தைக் கண்டனம் செய்து மூன்று நாட்களுக்குப் பின்னரும் இது நடந்துள்ளது.

நாட்டின் இரண்டு சக்திவாய்ந்த பெரும்புள்ளிகள்- அஹ்மடோவ் மற்றும் டிமிட்ரி ஃபிர்டாஷ் - அவர்களை செல்வந்தராக்கியிருந்த ஒரு மனிதர் வெளியேற பாதையமைத்துத் தர தயாராகி விட்டிருந்ததன் ஒரு பகுதி தான் அஹ்மடோவின் இந்த அறிக்கை என்று பிப்ரவரியில் Spiegel Online ஒப்புக்கொண்டது.

ஃபிர்டாஷ், மின்சாரம் மற்றும் இரசாயனத் துறையில் மையமான ஒரு ஆளுமையாக இருந்து வருகிறார். ரியல் எஸ்டேட், ஊடகங்கள் மற்றும் உக்ரேனில் வளர்ந்து வரக் கூடிய டைட்டானியம் வணிகம் ஆகியவற்றில் இவர் விரிவான நலன்களைக் கொண்டிருக்கிறார். ரஷ்யாவில் இருந்து உக்ரேனுக்கு எரிவாயு விநியோகத்தை மேற்பார்வை செய்கின்ற RosUkrEnergo என்ற எரிவாயு இடைநிறுவனத்திலும் இவர் இணைஸ்தாபகராக உள்ளார் என்பதோடு, உக்ரேன் முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவருமாவார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்கள் ரஷ்யாவின் குற்றத் தலைவன் என்று கூறப்படும் செம்யான் மோகிலிவிச்சுடன் இவரைத் தொடர்புபடுத்துவதாகக் கூறப்படுகிறது.

அஹ்மடோவ் மற்றும் ஃபிர்டாஷ், பிராந்தியங்களின் கட்சியில் ஏறக்குறைய பாதியை தம் இருவருக்கிடையில் கட்டுப்படுத்துகின்றனர்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்தான சமிக்கைகளை உரக்கவும் தெளிவாகவும் பெற்று விட்ட பின்னர், அஹ்மடோவ் தனது ஆதரவை ஆர்செனி யாட்சென்யுக்கிற்கு மாற்றி விட்டதாகவும் ஃபிர்டாஷ் தனது ஆதரவை கிளிட்ஷ்கோவுக்கு மாற்றியதாகவும் Spiegel தெரிவிக்கிறது. அவர்களின் ஊடக சானல்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக மாறியதை அடுத்து, “நாங்கள் யானுகோவிச்சை வீழ்ச்சி காண விடுகிறோம் என்ற பெரும்புள்ளிகளின் செய்தி தெளிவாக இருக்கிறதுஎன்று Spiegel ஒரு வருணனையில் எழுதியது.

பாசிஸ்டுகள், அதிவலது துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களது மேற்கத்திய ஆதரவாளர்கள் இவர்களுடன் ஒத்திசைவான வகையில் இந்த நிதியப்பிரபு ஆட்சியினரின் நோக்கமாக இருப்பது என்னவென்றால், ரஷ்யாவை தனிமைப்படுத்தி வழிக்குக் கொண்டு வருவதில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவுகின்ற அதேநேரத்தில் உக்ரேன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிக்கன பூமி நடவடிக்கைக் கொள்கை ஒன்றைத் திணிப்பதே ஆகும்.

அமெரிக்காவால் அமர்த்தப்பட்டிருக்கும் ஜனாதிபதியான யாட்சென்யுக்மக்களுக்கு மிகவும் பிடிக்காத நடவடிக்கைகளை அமலாக்க உறுதிபூண்டிருக்கிறார். “என் நாட்டின் வரலாற்றில் பொதுமக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட ஜனாதிபதியாக நான் இருப்பேன்என்றும் அவர் கூறியிருக்கிறார்

தொழில்முறை மேற்பூச்சுடன் சிக்கன நடவடிக்கை தேவை என்றால் அதற்கான சரியான அரசியல் அதிகாரியாக யாட்சென்யுக்கைக் கூறலாம்என்று பிரெட்டன் வூட்ஸ் ரிசர்ச் LLC எனும் முதலீட்டு ஆய்வு நிறுவனத்தின் தலைவரான விளாடிமிர் சிக்னோரெல்லியை மேற்கோள்காட்டி ஃபோர்ப்ஸ் இதழில், கென்னெத் ரபோஸா எழுதுகிறார்.

கிரேக்கர்கள் தமக்கு செய்து கொண்டதை நாம் நமக்கு செய்து கொள்ளப் போகிறோம் என்று யாட்சென்யுக் கூறினார்என்று சிக்னோரெல்லி கூறினார். “அவர் கிரேக்க பொருளாதார மாதிரியை பின்பற்ற விரும்புகிறார்.