சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

After White House meeting with Ukrainian prime minister
Obama issues new threats against Russia

வெள்ளை மாளிகையில் உக்ரேனிய பிரதம மந்திரியுடன் பேச்சுக்களுக்குப்பின் ஒபாமா ரஷ்யாவிற்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை வெளியிடுகிறார்

By Chris Marsden 
13 March 2014

Use this version to printSend feedback

வெள்ளை மாளிகையில் உக்ரேனிய இடைக்காலப் பிரதம மந்திரி ஆர்செனி யான்சென்யுக்குடனான சந்திப்பினை தொடர்ந்து புதிதாக பதவியில் இருத்தப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு, அமெரிக்க ஆதரவு மற்றும் ரஷ்யா மீது அழுத்தம் அதிகரிப்பதை வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி பாரக் ஒபாமா மாஸ்கோவிற்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

வாஷிங்டனும்சர்வதேச சமூகமும் கிரிமியாவில் ஞாயிறன்று நடைபெற இருக்கும் உக்ரேன் பிரிந்து ரஷ்யக் கூட்டமைப்பில் இணைதல் பற்றிய சர்வஜன வாக்கெடுப்பைமுற்றிலும் நிராகரிக்கும்என அறிவித்தார். ரஷ்யா அதன் படைகளை கிரிமியாவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்க ஐரோப்பிய ஆதரவில் ஆயுதமேந்திய பாசிச ஆயுதக்குழுக்களால் வழிநடத்தப்பட்டு ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பை அடுத்து கியேவில் உள்ள புதிய வலதுசாரி, ரஷ்ய எதிர்ப்பு ஆட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரஷ்யா இக்கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் அமெரிக்கா புதிய தடைகளைச் சுமத்தும் என்று ஒபாமா கூறினார்; சர்வதேச சட்டத்தை ரஷ்யா மீறுவதற்குசர்வதேச சமூகம்... இதற்கு விலை கொடுக்கவைக்கும் கட்டாயத்திற்கு உட்படும்என்றார் அவர்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் உக்ரேன் நெருக்கடி பற்றி உத்தியோகபூர்வமான அறிக்கைகளில் படர்ந்துள்ள பொய்கள், பாசாங்குத்தனத்தை ஒட்டி, ஒபாமா மைதான் சதுக்க ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை பாராட்டினார்; அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய சார்பு விக்டர் யானுகோவிச்சின் அரசாங்கத்தை அகற்றுவதில் முக்கிய பங்கு கொண்டிருந்தனர். அவர்களை ஒபாமாமாற்றத்திற்கும், ஜனநாயகத்திற்கும் போராடும் சாதாரண மக்கள்என்று அழைத்தார்.

இந்த அறிக்கைகளை ஒபாமா வெளியிட்ட அன்றே, புதிய அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள மைதானசுதந்திரப் போராளிகளில்ஒருவரும், புதிய பாதுகாப்பு பிரிவுத் தலைவருமான ஆண்டிறி பருபிய், பாராளுமன்றம் வியாழன் அன்று 20,000 பேர் கொண்ட தேசிய பாதுகாப்புப் படையை நிறுவும் எனவும், இவர்கள் ரஷ்ய எதிர்ப்புக்களில் தீவிரமாக இருந்தவர்களில் இருந்தும்பயங்கரவாத செயல்களைதடுக்கும் இராணுவ உயர்கல்விக்கூடங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார்.

ஆட்சி சதியை வழிநடத்திய பாசிசவாதிகளானால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட படைகளின் தலைவர்களில் ஒருவரான பருபிய் விக்கிபீடியாவில்சோவியத் ஒன்றியம் உடைந்த 1991ஆம் ஆண்டு நவ-நாசி சமூக-தேசிய உக்ரேனியக் கட்சியைநிறுவினார் என விளக்கப்பட்டுள்ளார். 2010ல் பருபிய், இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவிற்கு உக்ரேனின் உன்னதமான வீரர் என்ற விருதை வழங்காமல் விட்டதை மறு பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய பாராளுமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

புதிய அரசாங்கத்தில் பருபிய் இன் உதவியாளர் பாசிச Right Sector இன் தலைவரான டிமிட்ரோ யாரோஷ் ஆவார். இவர்கள் ஒன்றாக, அரசாங்கம் ஒப்புதலும் நிதியும் கொடுத்துள்ள தீவிர தேசியவாத ஆயுதக்குழுக்களுக்கு தலைமை தாங்குவர். அதற்கு புதிய ஆட்சியின் எதிராளிகளை அச்சுறுத்தவும், யூதர்கள், மற்ற சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேனுக்கு தன் விவகாரங்களை எப்படி நிர்வகிப்பது என்று ஆணையிட ஒரு வெளிநாடு தேவையில்லைஎன ஒபாமா அறிவித்தார். மேலும்அமெரிக்க நலன்கள் முற்றிலும் உக்ரேன் மக்கள் தங்கள் விதியை நிர்ணயிக்கும் திறனை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் என்றும் அவர் கூறினார். இதனால்தான் அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை நாட்டில் பினாமிப் படைகளைக் ஒருங்கிணைக்க செலவு செய்து, பொறுக்கி எடுக்கப்பட்ட “Yats” களையும்கூட்டியது. அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் அதிகாரி விக்டோரியா நியூலாண்டின் நினைவில் கொள்ள வேண்டிய சொற்களான “Yats” யானுகோவிச்சிற்குப்பின்  ஆட்சிக்கு வரவேண்டும்  எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் போர்வெறித்தனக் கருத்துக்கள் வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியினால் விரிவாக்கப்பட்டன. புதன் அன்று மன்றக்குழுவில் சாட்சியம் அளித்த கெர்ரி உக்ரேனில் நிலைமைதவறான விருப்புரிமைகளை மேற்கோண்டால் வேகமாக மோசமாகப் போகலாம். பல வழிகளிலும் இழிந்து போகலாம்என்றார்.

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவைச் சந்திக்க வெள்ளியன்று தான் லண்டனுக்கு செல்ல இருப்பதகவும் அவர் குழுவிடம் கூறினார். இது ஒபாமா நிர்வாகம் ஞாயிறு கிரிமிய வாக்கெடுப்பிற்கு முன்னால் இராஜதந்திர கடைசி முயற்சியாகஇருக்கும் என்று கூறியுள்ளது.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை அறிக்கைக்கு முன் G7 குழு முக்கிய சக்திகளின் தலைவர்கள் அறிக்கை ஒன்று வெளிவந்தது. அது ஞாயிறு வாக்கெடுப்புசட்டப்பூர்வ நெறி அற்றது”, “அறநெறி அற்றதுஅங்கீகரிக்கப்பட மாட்டாது என அறிவித்தது.

இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளடங்கலான நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது என்பதற்குத் தெளிவான அடையாளமாக அறிக்கை, “ரஷ்யா கிரிமியாவை இணைப்பது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தை தெளிவாக மீறுவது ஆகும். ஹெல்சிங்கி இறுதிச் சட்டத்தின் கீழ் ரஷ்யாவின் உறுதிகளை மீறுவது ஆகும். 1997 நட்பு, ஒத்துழைப்பு, பங்காளித்தனம் என்று 1997ல் இது உக்ரேனுடன் கொண்டவற்றை மீறுவது ஆகும். அதேபோல் ரஷ்ய-உக்ரேனிய 1007 உடன்பாடு மற்றும் 1994 புடாபெஸ்ட் உடன்படிக்கையில் உள்ள உறுதிப்பாடுகளையும் மீறுவது ஆகும் என தெரிவிக்கின்றது.

உக்ரேனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையில் பாதிப்பு என்பதைத் தவிர, கிரிமியா இணைக்கப்படுவது என்பது எல்லா நாடுகளின் இறையாண்மை மற்றும் ஐக்கியம் ஆகியவற்றைக் பாதுகாக்கும் சட்டபூர்வ ஒழுங்கில் தீவிர தாக்கங்ளை கொள்ளும். ரஷ்யக் கூட்டமைப்பு அத்தகைய நடவடிக்கையை எடுத்தால், நாம் கூடுதல் நடவடிக்கையை தனிப்பட்டும், கூட்டாகவும் எடுப்போம்.”

யாட்சென்யுக் வாஷிங்டனுக்கு இராணுவ ஆதரவு, நிதி ஆகியவற்றைக் கேட்டு வந்தார். உக்ரேன் வாஷிங்டனால் $1 பில்லியன் கடன் உத்தரவாதங்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளது, $15 பில்லியன் ஐரோப்பிய ஒன்றியத்தால் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை $700  மில்லியன்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

களத்தில், அமெரிக்காதான் உக்ரேனை அதன் கியேவிலுள்ள பிரதிநிதிகள் மூலம் ஆட்சி செய்கிறது. ஞாயிறன்று யாட்சென்யுக் வருகையை அறிவித்த ஒபாமாவின் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டோனி பிளின்கன் NBC உடைய Meet the Press நிகழ்ச்சியில் நிதி, நீதித்துறைகள், FBI இன் குழுக்கள் கியேவில் உள்ளன என்றும் அவை யானுகோவிச்சின் அகற்றப்பட்ட அரசாங்கத்தின்ஊழல்தனத்தைவெளிப்படுத்தும் என்றும் கூறினார்.

அரசாங்கத்திற்கு நிதி அளிப்பது, அரசியல் எதிர்பாளர்களுக்கு எதிராகத் தன் பிரச்சாரத்தை நடத்துவது தவிர அமெரிக்கா உக்ரேனின் இராணுவத்தை முறையாக அமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாயன்று உக்ரேனின் ஜனாதிபதி ஒலெக்சாந்தர் ருர்ஷினோவ் அறிவித்தார்: “பாராளுமன்றத்தின் முதல் பணி நம் பாதுகாப்பிற்கு உறுதியளித்த நாடுகளை தங்கள் உறுதிகளை நிறைவேற்றக் கோருதல் ஆகும். இதையொட்டி உக்ரேன் அதன் ஆயுதப்படைளை மீண்டும் இணைக்கும். ருர்ஷினோவ் இவை தற்பொழுது 6,000 போரிடும் படையினரைத்தான் காலாட்படையில் கொண்டுள்ளது. ஆனால் பெயரளவிற்கு 90,000 பேர் இருக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா ஏற்கனவே உக்ரேனின் அண்டை நாடுகளில் இராணுவ செயல்களின் கட்டுப்பாட்டை கிட்டத்தட்ட எடுத்துள்ளது. கூட்டுப் பயிற்சிகளை போலந்து, ருமேனியா, லாட்வியா, எஸ்தோனியா மற்றும் லித்துவேனியாவுடன் நடத்தி, விமானத்துறை எச்சரிக்கை, கட்டுப்பாட்டு முறையை (AWACS) ஜெட்டுக்களுடன் ஜேர்மனியில்  கெல்சென்கிர்சென்னில் இருந்தும் பிரித்தானியாவில் வாடிங்டனில் இருந்தும் செயல்படுத்தியுள்ளது. AWACS விமானச் செயற்பாடுகள் நேட்டோவின் உயர்மட்ட இராணுவத் தளபதி அமெரிக்க விமானப்படை ஜெனரல் பிலிப் பிரீட்லவ்வால் பரிந்துரைக்கப்பட்டன.

திங்களன்று கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே, PBS இடம் உக்ரேனில் ரஷ்யாவின் தலையீடுகிழக்கு ஐரோப்பாவை கணிசமான ஆபத்திற்கு உட்படுத்துகிறதுஎன்றார். அமெரிக்க இராணுவத் தலையீடு இராது என அவர் கூறவில்லை.

அந்த வினா மதிப்பிற்கு உட்படுத்தப்ட வேண்டும், நிகழ்வுகள் தொடர்கையில் மறுமதிப்பிற்கு உட்படுத்தப்படவேண்டும் என நான் நினைக்கிறேன்என்றார் அவர். “நம் நேட்டோ நட்புநாடுகளுடன் நாம் உடன்பாட்டுக் கடமைப்பாடுகளை கொண்டுள்ளோம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள் என்றார்.

செவ்வாயன்று போலந்துடன் கூட்டுப் போர் பயிற்சிகள் தொடங்கின. கருங்கடலில் கடற்படைச் செயற்பாடுகள் ருமேனியா மற்றும் பல்கேரியாவில் நேற்று தொடங்கின. இதில் அணுத்திறன் கொண்ட USS Truxtun, பல்கேரிய கடற்படை கப்பல் Drazki மற்றும் மூன்று ருமேனிய கப்பல்கள் உள்ளடங்கியிருந்தன.

வாஷிங்டனின் ரஷ்ய எதிர்ப்புத் தந்திர உத்திகளுக்கு சீனாவின் மறைமுகமான ஆதரவைப் பெறும் முயற்சிக்கு கணிசமாக ஒபாமா முயன்றுள்ளார். சீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரஷ்யத் தலையீடு கிரிமியாவில் சட்டவிரோதம் எனக் கூறவேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான தொலைபேசி விவாதங்கள் முற்றுப்பெறவில்லை.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடனும் ஜி ஜின்பிங் தொலைபேசி உரையாடலைக் கொண்டார்; இதன்பின் அரச செய்தி நிறுவனம் ஜின்ஹுவா, இருதிறத்தாரும்மத்தியஸ்திற்கு தேவைஉள்ளது என்பதை வலியுறுத்தின எனக் கூறியுள்ளது.

அமெரிக்கத் திட்டங்களுக்குத் திறவு கோல், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக கடின நிலைப்பாடு எடுக்கிறது என்பதற்கு, ஜேர்மனி முழு ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். முன்பு ஜேர்மனி ரஷ்யாவுடன் வணிகத்தில் ஈடுபாடு என்ற கொள்கையைத் தொடர்ந்தது. இப்பொழுது அவை அதிகம் பணயத்தில் உள்ளன. ஜேர்மனிய நிறுவனங்கள் $27.7 பில்லியனை ரஷ்யாவில் முதலீடு செய்துள்ளன, 6,000 ரஷ்ய நிறுவனங்களில் சொந்தப்பங்குகளைக் கொண்டுள்ளது. ஜேர்மனிக்கு ரஷ்யா அதன் எண்ணெய், எரிவாயு விநியோகத்தின் கூடுதலானதை வழங்குகிறது.

இவ்வாறு இருந்தபோதிலும்கூட, ஜேர்மனி அமெரிக்கா விரும்பும் திசையில் மாறுகிறது. சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் கிரிமியாவில் திட்டமிட்டுள்ள வாக்கெடுப்பைசட்டவிரோதம்என்று விவரித்துள்ளார். வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் கடுமையான தடைகள் வரும் என அச்சுறுத்தியுள்ளார்.

ஐக்கிய இராச்சியம் தடைகளின் பாதிப்பு பற்றி கவலை தெரிவிக்கும் மற்றொரு ஐரோப்பிய சக்தியாகும். கிரிமியாவிற்கு அப்பால் கிழக்கு உக்ரேனின் முக்கிய பகுதிக்கு ரஷ்யப் படைகள் நகர்ந்தால் மட்டுமே எரிசக்தி, வணிகம், நிதிய உறவுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடு பரந்த முறையில் வரும் என்றார்

ஆனால், லண்டனில் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ள தன்னலக்குழுவினர் அல்லது அங்கு சென்று வசிப்பவர்கள் பாதிப்பிற்கு உட்படமாட்டார்கள். ரஷ்யாவிற்கு ஐக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு 3.9 பில்லியன் பவுண்டுகள் எனவும் இறக்குமதி 6.8 பில்லியன் பவுண்டுகள் எனவும் டெலிகிராப் குறிக்கிறது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஆரம்பித்த 60 நிறுவனங்கள் லண்டனில் பங்குச்சந்தைப் பட்டியலில் சமீபத்திய ஆண்டுகளில் பதிவு செய்துள்ளன.