சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds public meeting on workers inquiry into water pollution

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி நீர் மாசுபாடுதல் பற்றிய தொழிலாளர் விசாரணை சம்பந்தமாக பொது கூட்டம் நடத்தியது

By Rohantha de Silva
12 February 2014

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், வெலிவேரிய நீர் மாசுபடுதல் பற்றிய ஒரு சுயாதீன தொழிலாளர் விசாரணையின் முக்கியத்துவத்தை விளக்க, கம்பஹாவில் பிப்ரவரி 2 அன்று ஒரு வெற்றிகரமான பொது கூட்டத்தை நடத்தின. வெலிவேரிய பகுதியில் வசிப்பவர்களும் மாணவர்களும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சோசக, கடந்த ஆண்டு வெனிக்ரோஸ் டிப்ட் புரடக்ட்ஸ் கம்பனியினால் உள்ளூர் நீர் விநியோகம் மாசுபடுத்தப்படுகின்றது என்ற சந்தேகம் பற்றி விசாரணை நடத்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஆகஸ்ட் 1, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், மாசுபடுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த கிராம மக்களை தாக்க இராணுவத்தை நிறுத்தியது. இரண்டு மாணவர்களும் ஒரு இளம் தொழிலாளியும் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

சோசக மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.. உறுப்பினர்கள், பிரதேசத்தில் பரவலாக செய்த பிரச்சாரத்தின் மூலம் பொது கூட்டத்தை ஒழுங்மைத்தனர். சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கைகள் மற்றும் உலக சோசலிச வலை தளம் விசாரணை தொடர்பாக வெளியிட்ட கட்டுரைகளின் பல ஆயிரக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டதோடு அவற்றுக்கு பரந்த ஆதரவு கிடைத்தது.


பாணினி விஜேசிறிவர்தன பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்

மாசுபடுத்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விரோதமான வெகுஜன எதிர்ப்பை திசை திருப்பும் முயற்சியாக, இராஜபக்ஷ அரசாங்கம் கிராமத்துக்கு குழாய் தண்ணீர் வழங்க உறுதியளித்தது. இந்த வாக்குறுதி, மார்ச் 29 நடக்கவுள்ள மேல் மாகாண சபை தேர்தலில் வாக்காளர்கள் ஏமாற்றுவதை இலக்காகக் கொண்டதாகும்.

ஒரு சிறிய கடை உரிமையாளர் பிரச்சாரகர்களிடம் கூறியதாவது: "அரசாங்கம் கிராம மக்கள் மத்தியில் [தண்ணீர் இணைப்புகளுக்கு விண்ணப்பிக்க] படிவங்களை விநியோகிக்கின்றது. படிவங்களை ஒப்படைக்க சென்றவர்களிடம் குழாய் இணைப்புக்கு கட்டணம் கேட்டுள்ளனர். மற்ற வாக்குறுதிகளைப் போலவே, இதுவும் ஒரு தேர்தல் மோசடியாகும். தேர்தல் முடிந்தவுடன் வாக்குறுதி கிடப்பில் போடப்படும்." அவர் சோசக துண்டு பிரசுரத்தின் பல டஜன் பிரதிகளை தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் விநியோகிக்கப் பெற்றுக்கொண்டார்.

மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களில் ஒருவரான எம். இராஜபக்ஷ கூட்டத்துக்கு தலைமை வகித்தார். கட்சியின் வேட்பாளர்களுக்கு தலைமை தாங்கும் சோசக அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், பிரதான உரையை நிகழ்த்தினார்.

தொழிலாளர் விசாரணையின் தேவையை விளக்கி பீரிஸ் சுட்டிக்காட்டியதாவது: " இராணுவ கொலைகள் நடந்து ஆறு மாதங்கள் ஆனபின்னரும், நீதவான் விசாரணை இன்னமும் முடியவில்லை. கம்பஹா நீதவான், இராணுவத்தைப் பற்றி விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், அதை பற்றி சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கண்கண்ட சாட்சிகளதும் மற்றும் இராணுவ அதிகாரிகளதும் வாக்குமூலங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. அரசாங்கம் கொலைக்குப் பொறுப்பானவர்களை மூடி மறைக்கின்றது.

"பெரும் வணிகர்கள் இந்த நிலைமை பற்றி மிக அக்கறையுடன் உள்ளனர். டிப்ட் புரடக்ட் கம்பனி, நிலத்தடி நீர் மாசுபாடுவதற்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்க மறுக்கின்றது. "

பீரிஸ் நிறுவனம் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த போதிலும், சீற்றம்கொண்ட கிராம மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை தடுத்தன, என பீரிஸ் தெரிவித்தார்.

நீர் மாசுபடுத்தலால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டிய பீரிஸ், மக்களில் பலர் மோசமாக சுகவீனமடைந்ததோடு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை, என்றார். கிராமத்தவர்களுக்கு எதிராக வெனிக்ரோஸ் நிறுவனத்தை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அம்பலப்படுத்திய அவர், "அரசாங்கம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க எதையும் செய்யத் தயாராக உள்ளது என்ற சமிக்ஞையை அவர்களுக்கு அனுப்பவிரும்புகின்றது, " என்று விளக்கினார்.

 வெலிவேரியவில் இராணுவத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்று பேச்சாளர் கூறினார். இராஜபக்ஷ அரசாங்கம், 2011ல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்க போலீஸ் கமாண்டோக்களை அனுப்பியதோடு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 2012ல், அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதற்கு எதிராக சிலாபத்தில் ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்கள் மீது பொலிஸ் அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். தமிழ் மக்களுக்கு எதிரான 26 ஆண்டுகளுக்கு கால உள்நாட்டுப் போரின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட ஒடுக்குமுறையான போலீஸ் இராணுவ இயந்திரம், இப்போது உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டுள்ளது.

தன்னியல்பான எதிர்ப்புக்களால் மட்டும் அரசாங்கத்தின் பொலிஸ்-அரசு திட்டங்களை தோற்கடிக்க முடியாது என்று பீரிஸ் வலியுறுத்தினார். 2011 தொடக்கம் எகிப்தில் நடப்பவை, தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர மார்க்சிச கட்சியின் தலைமை தேவை என்பதை காட்டியுள்ளது. சோசக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்க போராடி வருகின்றது.

வலதுசாரி எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ), நீர் மாசுபாடுத்தப்படுவதை எதிர்ப்பதாகக் கூறுவது ஒரு மோசடியாகும் என பீரிஸ் கூறினார். "யூஎன்பீ பிரதேசத் தலைவர் பிரமித ஹெட்டியாராச்சி தலைமையிலான சியனே நீர் பாதுகாப்பு இயக்கம், வெனிக்ரோஸ் தொழிலாளர்களுக்கு எதிராக கிராம மக்களை நிறுத்த முயற்சிக்கின்றது. தொழிற்சாலை மற்றொரு பகுதிக்கு மாற்ற இந்த இயக்கம் கோருவது பிற்போக்கானதாகும். அது தொழிலாளர்களின் தொழில் பிரச்சினையை நசுக்குவதோடு, தொழிற்சாலை மாற்றப்படும் இடத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உடல் பாதிப்பை அலட்சியம் செய்கின்றது."

வெலிவேரிய மக்கள் மத்தியில் யூஎன்பீயின் பிற்போக்குத்தனமான தலையீட்டுக்கு உதவி செய்வதன் மூலம், நவசமசமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடது குழுக்கள் ஆற்றும் துரோகத்தனமான வகிபாகத்தை பீரிஸ் சுட்டிக் காட்டினார்.ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக இந்த வலதுசாரி முதலாளித்துவ யூஎன்பீயை ஊக்குவித்து, தொழிலாளர்களை அரசியல் ரீதியில் அதனுடன் கட்டிப்போட முயற்சிக்கும் நவசமசமாஜ மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும், தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள்வதை எதிர்க்கின்றன." தொழிலாள வர்க்கம் இந்த போலி இடதுகளை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், உற்பத்தி சாதனங்களை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துக்காகப் போராட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.  

சோசக அரசியல் குழு உறுப்பினர் பாணினி விஜேசிறிவர்தன, தண்ணீரின் தரத்துக்கு வெனிக்ரோஸ் தொழிற்சாலை ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி விளக்கினார். அவர், தொழிற்சாலையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது சம்பந்தமான விசாரணையின் பின்னர், அரசாங்க பகுப்பாய்வாளர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டார். அந்த அறிக்கை வரையறுக்கப்பட்ட, ஆனால் முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. ஆலையில் நீர் சுத்திகரிப்பு அமைப்பு ஒழுங்காக வேலை செய்யாததுடன் வெளியேற்றப்படும் நீர் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தை எட்டவில்லை.

தண்ணீர் மாசுபாடுதல் பற்றிய உண்மையை அரசாங்க முகவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்ற விஜேசிறிவர்தன கூறினார். "தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐடீஐ) மேற்கொண்ட விசாரணையின் அறிக்கைக்கு நேர்ந்த கதி நல்ல எடுத்துக்காட்டாகும். ஜனாதிபதி இராஜபக்ஷ, கிராமவாசிகளை சமாதானப்படுத்தும் முயற்சியாக வெலிவேரிய நீர் மாசுபடுதல் பற்றி ஆய்வு செய்யுமாறு ஐடீஐக்கு உத்தரவிட்டார். ஆனால் அறிக்கை எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதுவே சுயாதீன தொழிலாளர் விசாரணையின் தேவையை வலியுறுத்திக் காட்டுகின்றது."

கூட்டத்தின் முடிவில் ஒரு நேரடி கலந்துரையாடல் நடந்தது. ஒரு வயதான கிராமவாசி பேச்சாளர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டார். "நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, நீரோடைகளில் பல்வேறு வகையான மீன்கள் இருந்தன. பள்ளி முடிந்த பின்னர் நாங்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்காக மீன்பிடிக்க செல்லவோம். ஆனால் இப்போது அது கடந்த கால விடயமாகிவிட்டது. அது நீர் மாசடைந்திருப்பதையே காட்டுகின்றது," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 1 இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட ஒரு மாணவரின் நண்பரான ஒரு இளம் மாணவர், அரசாங்கம் தகவல்களை சேகரிக்க மரணச் சடங்கில் புலனாய்வு அதிகாரிகளை நிறுத்தியது எப்படி என்பதை விவரித்தார். அவர்களை விசாரித்த போது, ஒருவர் தான் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வந்ததாக பொய் சொன்னார். ஆகஸ்ட் 1 பாய்ச்சலுக்குபாதுகாப்பு படைகளை அனுப்பியது யார்,’ 'துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்,' போன்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில்கள் இல்லை. இலங்கை, ஒரு உறவினர்கள் கும்பலால் [ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்] ஆளப்படுகிறது. அவர்கள் அனைவருமே இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பு."

டெட்ரொயிட் கலை நிறுவனத்தின் மீதான தாக்குதல் மற்றும் டெட்ரொயிட் திவால் நிலைமை பற்றியும் அமெரிக்க சோசக முன்னெடுக்கும் தொழிலாளர் விசாரணைக்கு ஆதரவை வெளிப்படுத்தி கூட்டத்தில் ஏகமனதாக தீர்மாணமொன்று நிறைவேற்றப்பட்டது.டெட்ரொயிட் திவாலாக்குதல் பற்றிய தொழிலாளர் விசாரணையும், வெலிவேரிய நீர் மாசடைதல் பற்றிய தொழிலாளர் விசாரணையும், முதலாளித்துவ பெருநிறுவனங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் குற்றவியல் நடவடிக்கைகள் பற்றிய திகிலூட்டும் உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன. இந்த கொடூரமான முதலாளித்துவ முறைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதில் அவை ஒரு தீர்க்கமான வகிபாகத்தை ஆற்றும்," என அந்த தீர்மானம் தெரிவித்தது.