சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian refugee camp atrocity: The class issues

ஆஸ்திரேலிய அகதிகள் முகாம் கொடுமை: வர்க்கப் பிரச்சினைகள்

By Patrick O’Connor 
14 March 2014

Use this version to printSend feedback

பாப்புவா நியூகினியாவில் (PNG) மனுஸ் தீவில் ஆஸ்திரேலிய அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் நடத்திய எதிர்ப்பு கடந்த மாதம் நசுக்கப்பட்டமை ஆளும் வர்க்கம் தயாரிக்கும் வன்முறை, பொலிஸ் அரசாங்க நடவடிக்கைகள் குறித்த தீவிர எச்சரிக்கையாகும். தண்டனைகளை தவிர்த்துக்கொள்ள தஞ்சம் நாடும் வலிமையற்ற, நம்பிக்கையற்ற மக்களுக்கு எதிரான மிருகத்தனமான வழிவகைகள் தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைக் பாதுகாக்கப் போராடும்போது இன்னும் பரந்தமுறையில் பயன்படுத்தப்படும்.

மனுஸ் முகாமில் என்ன நடந்தது என்பதை உத்தியோகபூர்வமாக மூடிமறைத்தல் இப்பொழுது நடந்துவருகின்றது. ஆனால் பெப்ருவரி 17-18 நிகழ்வுகள் பற்றி பல சாட்சியங்களின் குறிப்புக்கள் ஒரு ஸ்திரமான விபரிப்பை வழங்குகின்றன. முகாமின் பாதுகாப்பு முறைகளை முன்னர் அதிகரித்தபின், அதிகாரிகள் 1,300 காவலில் இருப்பவர்களையும் ஒரு பெரிய கூட்டத்திற்கு அழைத்து அவர்களிடம் ஆஸ்திரேலியா அல்லது மூன்றாம் நாடு ஒன்றில் அவர்கள் ஒருபொழுதும் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர். பாப்புவா நியூகினியா அரசாங்கம் குடியேற்றத்திற்கு உறுதியளிக்க மறுக்கையில், இது மனுஸ் முகாமில் நிரந்தரசிறை அல்லது அவர்கள் தப்பிஓடிவந்திருக்கும் நாட்டிற்குத் திரும்புதல் என்ற சாத்தியப்பாடுகளையே முன்வைக்கின்றது.

இக்கூட்டம் சீற்றமிகு எதிர்ப்பை தூண்டியதில் வியப்பேதும் இல்லை. பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச பாதுகாப்பு பெருநிறுவனமான G4S இனால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள், ஆஸ்திரேலியாவில் இருந்து நிதியுதவி பெறும் இழிந்த வன்முறைக் கையாளும் பாப்புவா நியூகினியா துணை இராணுவ பொலிஸ் பிரிவை அழைத்தது. பொலிசார், முகாம் பகுதிக்குள் சூறாவளியென புகுந்து, உண்மையான தோட்டாக்களால் ஐந்து சுற்றுக்கள் சுட்டனர். அவர்களுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வாள்களை கொண்ட குண்டர்களும் சேர்ந்து அனைவரும் முகாமை முற்றுகையிட்டு தஞ்சம் நாடியோரைத் தாக்கினர். பல காவலில் இருந்தவர்கள் தீவிரகாயம் அடைந்தனர். ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றதும் இதில் அடங்கும். ஆஸ்திரேலியாவில் கட்டிடக்கலை வரைபவராக வேலைசெய்யலாம் என வந்த 23 வயது ஈரானிய குர்திஸ் ரேசா பெரட்டி தலையில் நசுக்கப்பட்டு, மோதப்பட்டதில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு அடிப்படை ஜனநாயக உரிமைகள், சர்வதேச சட்டம் இவற்றை மீறி அகதிகளை கட்டாயமாக காலவரையற்று காவலில் வைக்கும் அதன் ஆட்சிக்கு வலிமை கொடுக்க ஆஸ்திரேலிய அராசங்கம் திட்டமிட்டுச் செய்த ஒரு ஆத்திரமூட்டலுக்கான அடையாளங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. இறப்பும் காயங்களும் குற்றங்கள் மட்டுமல்லாது, இதற்கு பிரதம மந்திரி டோனி அபோட்டும் குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்பு மந்திரி ஸ்கொட் மொரிசனுமே பொறுப்பாகும்.

ஆரம்பத்தில் ஒரு வெற்றுத்தனமான பொய்யான தடுப்புமையத்தில் எந்த வன்முறையும் நடக்கவில்லை என்பதை வெளியிட்ட மொரிசன் எத்தகைய எதிர்ப்புக்களும் இத்தகைய வன்முறையை சந்திக்கும் என்பதை தெளிவுபடுத்தும் முறையில்  அவர்களுடைய நிலைக்கு அகதிகளைத்தான் குற்றம் கூறினார் இந்நிகழ்வு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் நாட விரும்பும் மற்றவர்களையும் சிந்திக்க வைக்கும். மொரிசனை ஒரு வலுவான மந்திரி என்று அபோட் ஆதரித்து, தான் ஒரு வலுவற்றவர் எல்லைப் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருக்க விரும்பவில்லை என்றார்.

முழு அரசியல் ஆளும்வர்க்கமும் மனுஸ் தீவு தடுப்புமுகாம் நிகழ்விற்கும் மற்றும் அகதிகளை சிறையில் வைத்துள்ள நிலைக்கும் பொறுப்பாகும். பசுமைவாதிகளின் ஆதரவைக் கொண்ட முன்னாள் தொழிற்கட்சி அரசாங்கம் 2012இல் தடுப்புமையத்தை மறுபடியும் திறந்தது. இது முந்தைய லிபரல் பிரதம மந்திரி ஜோன் ஹோவர்ட் பசிபிக் தீர்வு என அழைத்திருந்ததைவிடக் கூடுதலான நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்தது.

தொழிற் கட்சி விட்டுச்சென்ற இடத்தில் இருந்து அபோட் அரசாங்கம் தொடர்ந்தது. பசுமைவாதிகள் இப்பொழுது மனுஸ் தீவில் நடந்த வன்முறை நிகழ்வைப் பயன்படுத்தி தம்மை தாராளவாதிகளின் விரோதிகள் எனக்காட்டிக் கொள்ள முற்படுகின்றனர். ஆனால் அவர்கள் பிற்போக்குத்தன எல்லைப் பாதுகாப்பு நிலைப்பாட்டிற்கு ஆதரவை கொடுக்கின்றனர். அதாவது தேசிய அரசுகளுக்கு இடையே மக்கள் இடம்பெயர்வதை தடுக்க தேவையான தடைகளையும் பொலிசையும் முதலாளித்துவ அரசாங்கம் பயன்படுத்தலாம் என்பதற்கு ஆதரவைக் கொடுக்கின்றனர்.

ஆஸ்திரேலிய கோட்டைக்கு எதிரான சவால் எதையும் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள மிருகத்தன வழிவகைகள் உள்நாட்டில் சமூக அமைதியின்மையும் அரசியல் எதிர்ப்பையும் அடக்கும் பரந்த பொலிஸ் அரசாங்க செயற்பாட்டின் ஒரு பகுதிதான். நம் எல்லையில் ஒரு தேசிய நெருக்கடியை அறிவித்தபின், அபோட் அரசாங்கம் தண்டனையிலிருந்து தப்புவதற்காக தப்பியோடிய குற்றத்தை மட்டுமே செய்த மக்களின் எதிர்ப்பை ஒடுக்கும் ஒரு சட்டவிரோத, இரகசிய அரசாட்சி முறைக்கு இராணுவத்தை அழைக்கின்றது. மக்களுடைய ஒரே குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதுதான். இதேபோன்ற நடவடிக்கை ஆஸ்திரேலிய எல்லைக்குள்ளேயே எவருக்கும் நடக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பெரும் செல்வந்த உயரடுக்கின் நலன்களை அச்சுறுத்தும் தொழிலாள வர்க்க மக்களுக்கு எதிராக நடக்கும்.

மோசமாகிக் கொண்டு வரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே, ஆளும் வர்க்கம் அமைதியின்மையும் எதிர்ப்பும் எதிர்பாராத வடிவங்களில் திடீரென வெடிக்கும் சாத்தியப்பாடு இருப்பது பற்றி மிகவும் உணர்மையாக உள்ளது. 2011இல் இருந்து வாழ்க்கை தரங்களில் ஆழ்ந்த பாதிப்புக்கள் ஏற்படுவதை தொழிலாள வர்க்கம் எதிர்க்கத் தொடங்கிவிட்டது. புரட்சிகர எழுச்சிகள், வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் எகிப்து, கிரேக்கம் உட்பட பல நாடுகளில் வெளிப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள கீழ்நோக்குச்சரிவு ஆஸ்திரேலிய பொருளாதாரத்தையும் தாக்கியுள்ளது. ஆரம்பத்தில் இதன் தாதுப்பொருட்கள் ஏற்றுமதி பெருக்கத்தினால் நாடு ஓரளவிற்கு பாதுகாப்பை கொண்டிருந்தது. பசுமைவாதிகள் ஆதரவு கொண்ட முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்தைப் பின்பற்றி அபோட் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைப்பாட்டின் மீது பெரும் தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது. பெருவணிகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஒன்றாக உழைத்து முறையாக தொழில்துறையின் முழுப்பிரிவுகளையும் அழிக்கின்றது. மிகவும் குறிப்பாக கார்த்தொழிற்துறையை. இதனால் நூறாயிரக்கணக்கான வேலைகள் இல்லாதொழிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பொது உடல்நலப்பாதுகாப்பு, கல்வி, பொதுநலச் செலவுகள், சேவைகள் இன்னும் பிற சமூக உள்கட்டுமானத்தில் நீண்டகால விளைவை கொண்ட வெட்டுக்களுக்குத் தயாரிப்பை நடத்துகிறது.

தொடர்ச்சியான அரசாங்கங்கள் செயல்படுத்திய நடவடிக்கைகள் ஏற்கனவே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் 50 பெரும் செல்வம் படைத்த நபர்கள் மொத்தமாக அமெரிக்க $102 பில்லியனைக் கொண்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 49% அதிகம் ஆகும். மறுபறுத்தில், சமூகப் பிளவின் மறுபக்கத்தில், சமீபத்திய ஆஸ்திரேலிய சமூக சேவைகள் குழுவின் அறிக்கை இரண்டு மில்லியன் மக்கள் அல்லது 12.8% மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஆழ்ந்த வர்க்கப் பிளவு சமூக அமைதியின்மையை தோற்றுவிக்கும் என்பதை நன்கு அறிந்து, அதற்கு ஏற்ப தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற மோசடியின் பேரில் தொழிற்கட்சி, லிபரல் அரசாங்கங்கள் இரண்டும் கடந்த 15 ஆண்டுகளில் ஒரு பொலிஸ் அரசுக்கான கட்டமைப்புமுறையை நிறுவியுள்ளனர். இதில் உள்நாட்டு இரகசியப் பொலிஸ் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆஸ்திரேலிய பாதுகாப்பு உளவுத்துறை நிறுவனம் (ASIO) வலுப்படுத்தப்பட்டுள்ளதும் அடங்கும். இவை இப்பொழுது ஒருவரை குற்றம்சாட்டாமல் காவலில் வைத்து இரகசிய விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. இராணுவத்திற்கு கொடுக்கப்படக் கூடிய அதிகாரங்கள் அமைதியின்மையை அடக்க அவற்றின் தலையீட்டை அனுமதித்துள்ளது.

தொழிலாள வர்க்கமும் தமது தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய தொழிலாளர்களின் வர்க்க நலன்கள் ஏனைய எல்லா இடங்களிலும் இருக்கும் தொழிலாளர்களுடைய நலன்களைப்போன்றதுதான். அதில் தண்டனைகளில் இருந்து தப்பியோடுபவர்கள்,வன்முறை, வறுமை இவற்றில் இருந்து தப்பி ஓடுபவர்களும் உள்ளடங்குவர். தொழிலாள வர்க்கம் மனுஸ் தீவிலும் மற்றும் நௌரு மற்றும் ஆஸ்திரேலியாவிற்குள் இருக்கும் பிற முகாம்களில் பூட்டி வைக்கப்பட்டுள்ள தஞ்சம் நாடுவோரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இதற்கு மக்கள் எங்கும் பயணிக்கும் அடிப்படை உரிமை, உலகில் எங்கு வேண்டுமானாலும் முழு குடிமை உரிமைகளுடன் வசித்து உழைக்கும் உரிமைகளுக்காகவும் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

இக்கொள்கைக்கான போராட்டம் என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஜனநாயக உரிமைகள் மீது மேலதிக தாக்குதல், இராணுவவாதம் மற்றும் போர், பொருளாதாரச் சுமைகளை கொடுக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையை அகற்ற ஒரு அரசியல் போராட்டம் நடத்துவதின் ஒரு முக்கியமான உள்ளடக்கமாக இருக்கவேண்டும்.