சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions sign Socialist Party’s “Responsibility Pact”

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் சோசலிஸ்ட் கட்சியின்பொறுப்புணர்வு ஒப்பந்தத்தில்கையெழுத்திடுகின்றன

By Kumaran Ira 
12 March 2014

Use this version to printSend feedback

மார்ச் 5 அன்று பிரெஞ்சு தொழிற்சங்கங்களும் முதலாளிகள் அமைப்புக்களும் சோசலிஸ்ட் கட்சி (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டால் அவருடைய புத்தாண்டு உரையில் அறிவிக்கப்பட்டிருந்த பொறுப்புணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது தொழிலாளர் செலவுகளை குறைக்கவும் வணிகப் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் இலக்கு கொண்டுள்ளது.

சோசலிஸ்ட் கட்சி தொடர்புடைய பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFTC), பொது மேலாளர் சங்கம் (CGC), மற்றும் பிரெஞ்சு கிறிஸ்துவ தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CFTC)  ஆகியவைகள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த உடன்பாடு, பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்புக்களில் 20 பில்லியன் யூரோக்கள் மற்றும் குடும்ப நலன்கள் பங்களிப்பிற்கு முதலாளிகள் கொடுப்பதில் கிட்டத்தட்ட 10 பில்லியன் யூரோக்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. PS ஆனது வணிக வரி குறைப்புக்களால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், 2017 ஒட்டி சமூகநலச் செலவுகளில் 50 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களை அறிவித்துள்ளது.

தொழிற்சங்கங்கள் ஏற்றுள்ள பொருளுரை வெளிப்படையாக நிறுவனங்களின் இலாபங்களை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பிரெஞ்சு வணிகங்களின் போட்டித்தன்மை சமீபத்திய ஆண்டுகளில் சரிந்துவிட்டது, இது அவற்றில் இலாப விகிதங்களில் காணலாம், இவை ஐரோப்பாவில் மிகவும் குறைவாகவும், 1985 முதல் இப்படித்தான் உள்ளதுஎன்று அது தொடங்குகிறது.

பிரான்சில் வேலையின்மை பெருகுகையில்32 மாதங்களாக உயர்ந்தபின், அது 11% எட்டியுள்ளது மொத்தம் 5 மில்லியன் முழுநேர தொழிலாளர்கள்; பொருளுரை, வணிகத்திற்கு கொடுக்கப்படும் நிதியை அது வேலைகளை தோற்றுவிக்கும் என்று கூறிவணிகப் போட்டித்தன்மையை மறுபடியும் நிறுவாவிட்டால், வேலையின்மையில் நீடித்த சரிவை தடுக்கமுடியாது என நியாயப்படுத்துகிறது.

பொறுப்புணர்வு உடன்பாடு வேலையை தோற்றுவிக்கும் திட்டம் என்னும் கூற்றுகள் அபத்தங்கள், முதலாளிகள் குழுக்களாலேயே உதறித்தள்ளப்பட்டவை; முதலாளிகளுக்கு எவரையும் நியமிக்கும் உறுதியை கொடுக்கும் விருப்பம் இல்லை. மெடெப் (Medef) முதலாளிகள் பிரதிநிதிகளின் தலைவர் ஜோன் பிரான்சுவா பிய்யார்ட் அப்பட்டமாக வேலை தோற்றுவித்தல் குறித்துஇதில் எண்ணிக்கை இலக்குகள் ஏதும் இல்லைஎன்றார்.

உண்மையில், வேலையின்மை விகிதத்தை அதிகமாக வைத்திருத்தல் பொறுப்புணர்வு உடன்பாட்டை சுமத்துவதில் முதலாளிகள் கொண்ட மூலோபாயத்தின் ஒரு முக்கிய கூறுபாடாகும். மிகப் பெரிய வேலையற்றோர் தொகுப்பின் இருப்புப் படை, PS மற்றும் பெருநிறுவனங்கள் பிரான்சில் சுமத்தும் தரத்தை ஏற்பதற்கு இழிந்த தரங்களில் வேலை பார்க்கத் தயாராக உள்ளது.

PS பிரதம மந்திரி Jean-Marc Ayrault உடன்பாட்டை பாராட்டினார். குறைவூதிய வேலைகளைக் குறிப்பிட்டஅவர் அவற்றின் விளைவுகளைப் பற்றிஇங்குத்தான் வேலைகள் உள்ளன, நாம் நியமிக்க முடியும் என்றார்.

பொறுப்புணர்வு உடன்பாடு 2010 செயற்பட்டியல், தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் என ஜேர்மனியின் ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக அரசாங்கத்தால் 2003, 2005க்கு இடையே சுமத்தப்பட்டதின் தளத்தைக் கொண்டுள்ளது. அவருடைய துவக்க முயற்சிகளில் வேலையின்மை நலன்களை 32ல் இருந்து 12 மாதங்கள் எனக் குறைப்பது,ஒரு  யூரோ வேலைகளைஅறிமுகப்படுத்துவது (ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூரோ கொடுப்பது, வேலை இல்லாதவர்களை குறைந்த ஊதியத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு) ஆகியவை அடங்கும். இந்த செல்வாக்கற்ற நடவடிக்கைகள் ஷ்ரோடர் ஜேர்மனிய தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்ததின் மூலம் செயல்படுத்த முடிந்தது.

பெருவணிக மற்றும் நிதிய மூலதனத்தின் குட்டி முதலாளித்துவ மேற்பார்வையாளர்கள் என்னும் பங்கை நிரூபிக்கும் வகையில், பிரெஞ்சு தொழிற்சங்கங்களும் உடன்பாட்டை புகழ்ந்து, தங்கள் நோக்கம் முதலாளிகளுடன் பேச்சுக்களுக்கு பின்னர் பூர்த்தியாகிவிட்டன என பெருமை பேசினர்.

முதலாளிகள் குழுக்கள் தொழில் தோற்றவித்தல் இலக்குகளை பல தொழில்களில்அளவு மற்றும் தரத்தில்நிர்ணயிக்கும் என்னும் உறுதிமொழியை மேற்கோளிட்டு CFDT உடைய துணை பொதுச் செயலர் வெரோனிக் டெஸ்காக் கூறினார்: CFDT வேலை தோற்றுவித்தல், வேலைகள், முதலீடு பற்றிய உறுதிமொழிகள் மற்றும் பலதொழில்களில் இவற்றின் நிலை பற்றிய கோரிக்கைகளில் விட்டுக் கொடுக்காமல் இருந்தது.

ஸ்ராலினிச CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) மற்றும் FO (தொழிலாளர் சக்தி) சங்கம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை, எதிர்த்தரப்பு போல் காட்டிக் கொள்ள முற்படுகிறது. உண்மையில் உடன்பாட்டை அது எதிர்க்கவில்லை; மார்ச் 18ல் ஒரு நாள் ஆர்ப்பாட்டத்திற்கு அவர்கள் பெப்ருவரியில் அழைப்பு விடுத்ததில் இது தெளிவு; அது PS உடைய பொறுப்புணர்வு உடன்பாடு பற்றி அறிவிப்பிற்கு விடையிறுப்பாகும்.

அந்த நேரத்தில் CGT தலைவர் தியரி லுபோன் மார்ச் 18 ஆர்ப்பாட்டம்பொறுப்புணர்வு உடன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கை தினமாக இராது, மாறாக ஊதியங்கள், வேலைகள், சமூக பாதுகாப்பிற்கு நிதியளித்தல் குறித்து இருக்கும்என்றார்.

பொறுப்புணர்வு உடன்பாட்டை பகிரங்கமாக ஒப்புதல் அளிக்காத வகையில், இதை அவர்கள் பேச்சுக்கள் மூலம் வருவதற்கு உதவியுள்ளனர், CGT மற்றும் FO இரண்டும் தொழிலாள வர்க்கத்தின் மீது திட்டமிட்டு நடக்கும் தாக்குதல்களில் தம் பங்கை மறைக்க முயல்கின்றனர், பிற்போக்குத்தன PS அரசாங்கத்துடன் தங்கள் அரசியல் பிணைப்பையும் மறைக்க முற்படுகின்றனர். ஒரு பயனற்ற ஒருநாள் எதிர்ப்பிற்கு அவர்கள் அழைப்பு விடுவதின் நோக்கம் அரசாங்கம் மற்றும் பெருவணிகத்துடன் ஆழ்ந்த செல்வாக்கற்ற வெட்டுக்களை சுமத்துவதில் அவர்களுடைய ஒத்துழைப்பை மறைப்பதுதான்