சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US presents new UNHRC resolution on Sri Lankan human rights

இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக யு.என்.எச்.ஆர்.சியில் அமெரிக்கா புதிய தீர்மானத்தை முன்வைத்துள்ளது
 

By Panini Wijesiriwardena
8 March 2014

Use this version to printSend feedback

பிரிட்டன், மொன்டெனக்ரோ, மசடோனியா மற்றும் மொறிசியஸ் ஆகிய நாடுகள் கூட்டாகக் கைச்சாத்திட, அமெரிக்கா இப்போது ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (யுஎன்எச்ஆர்சி) இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்னொரு தீர்மானத்தை இந்த வாரம் முன்வைத்தது. இந்த வரைவுத் தீர்மானம், இலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றிய ஒரு உடனடியான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்காவிட்டாலும், கொழும்பு அரசாங்கம் சீனாவுக்கு எதிராக ஆசியாவில் அமெரிக்காவின் மூலோபாய நலன்களுடன் அணிசேர வேண்டும் என்ற கூர்மையான எச்சரிக்கையை அதற்கு அனுப்பியுள்ளது.

மூன்று ஆண்டுகளில் வாஷிங்டனின் அனுசரணையுடன் முன்வைக்கப்பட்ட மூன்றாவது தீர்மானம் இதுவாகும். மற்றும், முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட சில மேலதிக பிரிவுகளை இது உள்ளடக்கியுள்ளது. 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழ் முதலாளித்துவ அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தின் கடைசி மாதங்களின் போது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்கள் பற்றி அமெரிக்கா மீண்டும் கபடத்தனமாக குரல் எழுப்புகின்றது.

புலிகளின் தலைவர்கள் சரணடைந்த பின்னர் அவர்களைக் கொன்றமை உட்பட அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆதாரங்கள் குவிகின்றன. .நாவின் மதிப்பீடுகளின் படி, மோதலின் கடைசி மாதங்களில் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், மனித உரிமைகள் பற்றிய வாஷிங்டனின் கவலைகள் முற்றிலும் மோசடியானவையாகும். வாஷிங்டன் பிரதான ஐரோப்பிய சக்திகள், சீனா மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவு கொடுத்தது. உலகம் பூராவும், அமெரிக்காவே யுத்தக் குற்றங்களின் பிரதான தயாரிப்பாளனாகும்அது தனது மேலாதிக்க நிலையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, நாடுகளை ஆக்கிரமிப்பது, ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை தூண்டிவிடுவது, ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வது மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதையும் செய்துவருகின்றது.

முந்தைய அமெரிக்க அனுசரணையிலான யூஎன்எச்ஆர்சி தீர்மானத்தைப் போல், இந்த வரைவுத் திருத்தமும், இலங்கை அரசாங்கத்தின் சொந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அதற்கு வேண்டுகோள் விடுக்கின்றது. இராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு, யுத்தக் குற்றங்களை மூடி மறைத்ததோடு தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களுக்கு அதிகாரங்களைப் பகிரவும் துணைப் படைக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கவும் மட்டுப்படுத்தப்பட்ட பிரேரணைகளை முன்வைத்தது.

இராஜபக்ஷ மீது அழுத்தத்தை அதிகரிக்க, தற்போது பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சிறுபான்மை மதச் சமூகங்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்களை தூண்டிவிடுதல் போன்றவற்றில் அவரது அரசாங்கத்தின் உடந்தையை அமெரிக்கா சுரண்டிக்கொள்கின்றது. வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி விசாரணை நடத்துமாறு இந்த தீர்மானம் அழைப்பு விடுக்கின்றது.

ஆகஸ்ட் 1 அன்று வெலிவேரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டைப் பற்றிய விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும் இந்த தீர்மானம் கோருகின்றது. தூய்மையான நீர் விநியோகம் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

மேலதிகமாக, முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மேலாதிக்கம் செய்யப்படும் வடக்கு மாகாண சபைக்குஆள்வதற்கு அவசியமான வளங்கள் மற்றும் அதிகாரத்தையும் வழங்கக் கூடிய நிலைமைகளை உருவாக்குமாறும் தீர்மானம் அழைப்பு விடுக்கின்றது. நாட்டின் அரசியலமைப்பின் கீழ், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைக்கான நிதியை இராஜபக்ஷ அரசாங்கம் முடக்கிவிட்டுள்ளது.

முந்தைய தீர்மானங்களில் இருந்து கணிசமாக முன்நகர்ந்துள்ள இந்த வரைவு, இலங்கையில்வன்முறைகள் மற்றும் மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்தோடு சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரணை நடத்துமாறு மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானியர் அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கின்றது. அதுநம்பகமான தேசிய நடவடிக்கைகள் இல்லாமை தொடர்பாக ஒரு சுயாதீனமான மற்றும் நம்பகமான சர்வதேச விசாரணையை பிரேரிக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆனையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வரவேற்றுள்ளது.

ஆணையாளரின் அலுவலகம், செப்டெம்பரில் யுஎன்எச்ஆர்சியின் அடுத்த கூட்டத்திற்கு ஒரு வாய்மூல அறிக்கையை முன்வைக்குமாறும் மார்ச் மாதம் நடக்கவுள்ள அடுத்த கூட்டத்தில் பூரணமான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. தீர்மானத்தின் சிபாரிசுகளை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறுமானால், “சர்வதேச விசாரணை ஒன்று முன்வரக் கூடும் என்ற எச்சரிக்கையே இதுவாகும். சாத்தியமான திருத்தங்களின் பின்னர், தீர்மானம் மார்ச் மாதம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

பெப்பிரவரி 26, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி, கொழும்புக்கு மேலும் அச்சுறுத்தல்களை விடுத்தார். 2013ம் ஆண்டுக்கான இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையை வெளியிட்ட கெர்ரி, இலங்கையைப் பற்றிக் குறிப்பிட்டதோடு அதன் வன்முறைகள் பற்றிய ஒரு விசாரணையை வலியுறுத்தினார். “நாங்கள் அரசாங்கம் இன்னமும் பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அடிப்படை கோரிக்கைகளையிட்டு பதிலளிக்காமல் இருக்கின்ற இலங்கையில் நாம் இதைச் செய்வோம்,” என அவர் பிரகடனம் செய்தார்.

அமெரிக்க நலன்களுக்கு அமெரிக்கா ஒரு சவாலை முன்வைக்கின்றது என சமிக்ஞை செய்த கெர்ரி தெரிவித்ததாவது: “மனித உரிமைகளையும் மனித கௌரவத்தையும் மதிக்காத நாடுகள், எங்களது நலன்களுக்கும் அதே போல் மனித நலன்களுக்கும் சவால் விடுக்கின்றன.”

இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பட்டியலிடும் இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை, அரசாங்கத்தில் இராஜபக்ஷ குடும்பத்தின் மேலாதிக்கத்தை சுட்டிக் காட்டுகிறது. “ஜனாதிபதியின் இரு சகோதரர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற பிரதான நிர்வாகப் பொறுப்புக்களைக் கொண்டுள்ளதோடு மூன்றாவது சகோதரர் பாராளுமன்ற சபாநாயகராக இருக்கின்றார்,” என அது தெரிவித்துள்ளது.

கெர்ரி குறிப்பிடுபவை, மோசடியானதும் வஞ்சகமானதுமாகும். மனித உரிமைகள் அல்லது யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக ஒபாமா நிர்வாகத்துக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. புலிகளின் தோல்வியின் பின்னர், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவதைப் பற்றி மட்டுமே அது கவலை கொண்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் நிதியும் கொடுத்து இராபக்க்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளித்த பெய்ஜிங், இப்போது அவரது அரசு ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருக்கும் நிதி உதவியை வழங்கி வருகின்றது.

இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதன் மூலம் சீனாவின் வளர்ச்சியை தடுப்பதன் பேரில், ஒபாமாவின் ஆசியாவுக்குமீண்டும் திரும்பும் கொள்கைக்கு மிகவும் தீர்க்கமாக இருப்பது, இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் அமைந்துள்ள இந்த தீவிலான உறவுகளை மாற்றியமைப்பதே ஆகும்.

ஜெனீவாவில் ஒரு தைரியமன முகத்தைக் காட்டிய இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ், உயர் ஸ்தானிகரின் அறிக்கையையும் அமெரிக்க தீர்மானத்தையும் கண்டனம் செய்தார். 2009 முதல் இராஜபக்ஷ அரசாங்கம் செய்ததைப் போலவே, சகல யுத்தக் குற்றச் சாட்டுக்களையும் முற்றாக நிராகரித்த பீரிஸ், எந்தவொரு சுயாதீன விசாரணையையும் நிராகரித்தார்.

வெளிநாட்டு நிருபர்களுடன் கடந்த வாரம் உரையாடிய இராஜபக்ஷ தெரிவித்ததாவது: “இந்த முழு தீர்மானம் சம்பந்தமாகவும் நாங்கள் அசௌகரியத்தை உணர்கின்றோம் தீர்மானம் கொண்டுவந்திருக்கவே கூடாது.” அவரது அரசாங்கத்தின் பாசாங்குகளுக்கு எல்லை கிடையாது. அது புலிகள் மீதான யுத்தத்துக்கு அமெரிக்கா உட்பட பெரும் வல்லரசுகளின் ஆதரவிலேயே ஆர்வத்துடன் தங்கியிருந்த போதிலும், இப்போது அமெரிக்காவை ஒதுங்கிக்கொள்ளுமாறு கூறுகின்றது.

அதே சமயம், இராஜபக்ஷ உள்நாட்டில் தனது நிலைமையை தூக்கி நிறுத்துவதற்காக, கொழும்பில் ஆட்சி மாற்றத்துக்கானஒரு சர்வதேச சதிக்கு எதிராக நிற்கும் ஒரு உறுதியான தலைவராக காட்டிக்கொள்வதற்கு அமெரிக்கப் பிரேரணையை சுரண்டிக்கொள்கின்றார். அரசாங்கமும் கொழும்பு ஊடகங்களும், “நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு புலிகள் திட்டமிடுவதாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுகின்றன.

இராஜபக்ஷ அரசாங்கம், முதலீட்டாளர்களதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கட்டளைகளை அமுல்படுத்த முயற்சிக்கின்ற நிலையில், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் இடைவிடாத தாக்குதல்கள் சம்பந்தமாக தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் அமைதியின்மையை திசை திருப்புவதற்காக அதற்கு இந்த போலி பிரச்சாரம் தேவைப்படுகிறது.

அமெரிக்காவிடமிருந்து அந்நியப்பட்டுவிடுவோம் என்று கவலை கொண்டுள்ள இலங்கை ஆளும் வர்க்கத்தின் பகுதியினர், அரசாங்கத்தின் பிரதிபலிப்புகளையிட்டு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ), அரசாங்கம்சர்வதேச சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை அது அமுல்படுத்த வேண்டும் என கோருகின்றது. இது பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களை ஆதரிக்க யூஎன்பீயின் தயார் நிலையை தெளிவாக சமிக்ஞை செய்கின்றது.

யுஎன்எச்ஆர்சிக்கான முன்னால் இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக, கொழும்பு டெலிகிராப்பில் எழுதியதில், “தீர்மானத்தின் வரைவை முழுமையாக நிராகரித்து இந்த நாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள பொறிக்குள் விழ வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றார். “இச்சந்தர்ப்பத்தில் அமெரிக்கஐக்கிய இராஜ்ஜிய அழைப்பு, எமது நடவடிக்கைகளை துப்புரவு செய்துகொள்வதற்கே ஆகும். இந்த அழைப்புடன் அரசாங்கம் முறையாக செயற்பட ஒத்துழைத்தால் இலங்கை சிறப்பாக இருக்கும்,” என அவர் மேலும் எழுதுகின்றார்.

வாஷிங்டனின் செய்தி மேலும் மேலும் தெளிவானது. இராஜபக்ஷ தன்னை சீனாவிடம் இருந்து தூர விலக்கிக் கொண்டால், அமெரிக்க நலன்களை அனைத்துக்கொண்ட பர்மா போன்ற ஏனைய அரசாங்கங்களுடன் செய்ததைப் போலவே, அது உடனடியாக தனது மனித உரிமை குற்றச் சாட்டுக்களை கைவிட்டுவிடக் கூடும். அவர் தவறினால், அமெரிக்கா அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதோடு, யுத்தக் குற்றச் சாட்டுக்களுடன் அவரை கூண்டில் நிறுத்தவும் செயற்படக் கூடும்.