சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

EU-Ukraine trade pact paves way for brutal austerity

ஐரோப்பிய ஒன்றிய-உக்ரேன் வர்த்தக ஒப்பந்தம் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது

By Mike Head 
22 March 2014

Use this version to printSend feedback

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்கள் தீவிரமாவதற்கு நடுவே நேற்று ஐரோப்பிய ஒன்றியமும், உக்ரேனில் மேற்கு ஆதரவுடைய அரசாங்கமும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன. இது மிருகத்தன நடவடிக்கைகள் மற்றும் சுதந்திர சந்தை சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு வழி அமைக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய-உக்ரேன் ஒருங்கிணைப்பு உடன்பாடு முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் அரசாங்கம் நிராகரித்ததை அடித்தளமாக கொண்டது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தூண்டிவிட்ட எதிர்ப்புக்கள் தோன்றின, வன்முறையால் ஜனாதிபதியை கடந்த மாதம் பதவியிலிருந்து அகற்றியது.

பிரஸ்ஸல்ஸில் கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாடு உக்ரேனிய அரசாங்கம் விரைவில் கட்டுமான சீர்திருத்தங்கள் என்னும் பேரவாமிக்க திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த வேண்டும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டிற்கு அடங்கவேண்டும் என்று அறிவிக்கிறது. வரையப்படும் திட்டங்கள் கிரேக்க மாதிரியை கொண்டவை. அதாவது சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்கத்தின் மீது சுமத்திய மிருகத்தனமான வெட்டுக்கள் போன்று நாட்டில் வேலையின்மை, வறுமையை பெரும் அதிகரிப்பிற்கு உட்படுத்தியவை போன்றவை ஆகும்.

ஜனநாயகப் புரட்சி என்ற கூற்றுக்கள் இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மற்றும் உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்படாத முன்னாள் வங்கியாளர்கள், பாசிசவாதிகளின் மற்றும் தன்னலக்குழுவினர் நடத்தும் ஆட்சி தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைக்கும் உடன்பாட்டின் பொருளாதார விடயங்களை முற்றுப்பெறச்செய்வதில் தாமதம் இருக்கும் என அறிவித்துள்ளன. இதனால் மே மாத தேர்தல்களுக்கு பின்னரே சிக்கன நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்.

இந்த உடன்பாடு உக்ரேனிய ஆட்சிசதியின் அடித்தளத்தில் உள்ள நோக்கங்களை அடைவதற்கு மற்றொரு படியாகும். அதாவது மேற்கு சக்திகளுடைய ஆதிக்கவட்டத்தில் உக்ரேன் ஒருங்கிணைவது, நாட்டை உலக முதலாளித்துவத்திற்கு குறைவூதியத் தொழிலாளர் அரங்காக ஆக்குவது மற்றும் ரஷ்யா மீதே பொருளாதார, மூலோபாய அழுத்தங்களை அதிகரிப்பதே அவையாகும்.

உக்ரைனின் பொறுக்கி எடுக்கப்பட்ட இடைக்கால பிரதம மந்திரி ஆர்செனிய் யாட்சென்யுக் பின்வருமாறு அறிவித்தார்: வெளிப்படையாகக் கூறினால், இந்த உடன்பாட்டில் ரஷ்யா கையெழுத்திடுவது குறித்து நான் பொருட்படுத்தவில்லை.... இந்த உடன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் மில்லியன் கணக்கான உக்ரேன் மக்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்யும்.

ஐரோப்பிய குழுவின் தலைவர் ஹெர்மன் வொன் ரொம்பே இது உக்ரேனை ஐரோப்பிய வாழ்வுமுறைக்கு நெருக்கமாக கொண்டுவரும் என்றார். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், நிகழ்வு, கூட்டாகக் கொண்டுள்ள மதிப்புக்களை எடுத்துக்காட்டுகின்றது என்றார்.

ஐரோப்பிய வாழ்வு முறை என்றால் என்ன? தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரை, கிரேக்கத்தில் மட்டும் இல்லாமல் கண்டம் முழுவதும் இது சமூக பேரழிவு எனப் பொருள் கொடுக்கிறது. 2008இல் வெடித்த பொருளாதார கரைப்பிற்குப் பொறுப்பானவர்களான இதே வங்கிகள், நிதிய அமைப்புக்கள் மற்றும் பெருநிறுவனங்கள் திருப்திப்படுத்துவதற்கு வேலைகள், ஊதியங்கள், பொதுப் பணிகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் கடும் வெட்டுக்களாகும். உக்ரேனில் சோவியத் ஒன்றியம் கலைப்பிற்குப்பின் நடந்துள்ள இரு தசாப்தங்களாக முதலாளித்துவ மீட்பு இங்கு ஏற்கனவே பரந்த வறுமையும் அதிர்ச்சி தரும் சுகாதார, சமூக நிலைமைகளையும் கொடுத்துள்ளது.

மேர்க்கெல் கூறும் மதிப்புக்கள் யாவை? அவை அவரின் உக்ரேனின் நட்பு அமைப்புக்கள் பிரச்சாரம் செய்யும் யூதஎதிர்ப்பு, தீவிரத் தேசிய வாதம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படலாம். பிரஸ்ஸல்ஸில் நடந்த நிகழ்ச்சிக்கு மூன்று நாட்கள் முன்பு  ஒரு YouTube ஒளிப்பதிவில் கீயேவில் பாசிசக் குண்டர்கள் கட்டவிழ்த்துள்ள ஆட்சிசார்பில் நடத்தப்பட்ட பயங்கரவாத நிலை குறித்து ஒரு பார்வையை அளித்தது. தன்னுடைய யூத எதிர்ப்பால் இழிந்துள்ள ஸ்வோபோடா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி. மிரோஷ்னிசெங்கோ தலைமையில் ஒரு கும்பல் உக்ரேனின் அரசாங்கத் தொலைக்காட்சி நிலையமான NTU இன் மீது முற்றுகையிட்டு அதன் தலைவரை இராஜிநாமா கடிதம் ஒன்றைக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியது.

ரஷ்யாவிற்கு இன்னும் குழிபறிக்க ஐரோப்பிய ஒன்றியம் இதேபோன்ற தொடர்பு உடன்பாட்டை ஒருகாலத்தில் சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளான ஜோர்ஜியா, மோல்டோவா போன்று இரண்டு மற்ற வறிய நிலப்பகுதிகளுடன் கையெழுத்திடும்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்த வாரம் கிரிமியா குறித்து நேரடிப் போருக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என்பதை முறையாக மறுத்தார். ஆனால், வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் உக்ரேனில் அவை தோற்றுவித்த நெருக்கடியைத் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் ரஷ்ய பொருளாதாரத்தை இலக்கு கொண்டு, ரஷ்ய எல்லையில் இராணுவ பயிற்சிகளையும் நடத்துகின்றன.

ஒபாமாவும் ஐரோப்பிய தலைவர்களும் ரஷ்யாவிற்க எதிராக புதிய தடைகளை அறிவித்தபின், கடன்தர நிர்ணய அமைப்புக்கள் நிர்ணய அமைப்புக்களான Fitch, Standard& Poor இரண்டும் ரஷ்யாவின் கடன் தரத்தை எதிர்மறையாக திருத்தியுள்ளன. சமீபத்திய அமெரிக்கத் தடைகள் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளை 20 தனிநபர்கள்மீது சுமத்துகிறது. அவர்களில் சிலர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு நெருக்கமானவர்கள் என கருதப்படுகின்றனர். அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் நிறுவனங்களை அவர்களுடன் வணிகம் செய்யக்கூடாது என்று தடுக்கிறது. அதைத்தவிர ரஷ்ய வங்கியான Bank Rossiya வும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

Visa and MasterCard உடனே Bank Rossiya இற்கு பணம் கொடுக்க வேண்டியதை நிறுத்தின. மாஸ்கோ பங்குச் சந்தையில் பங்குகள், இந்த மாதம் அவற்றின் மதிப்பில் 70 பில்லியன் டாலர்களை இழந்ததுடன், ஒபாமா, பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் தாக்கப்படும் என்ற அச்சுறுத்தலைக் கொடுத்தவுடன் தீவிரமாக சரிந்தன. அவை உலகப் பொருளாதாரத்திற்கு தடையை ஏற்படுத்தும் என்றாலும் தான் நிர்வாக ஆணை ஒன்றை அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்து கையெழுத்திட்டுள்ளதாக ஒபாமா கூறினார்.

வியாழன் அன்று ஒரு மூடிய கதவிற்குப் பின் நடந்த உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பின்னர் இன்னும் ஒரு டஜன் பெயர்களைச் சேர்த்துள்ளனர். ரஷ்ய, கிரிமிய அதிகாரிகள் மீது அவர்கள் சுமத்தியுள்ள பயணத் தடைகள், சொத்து முடக்கங்கள் பட்டியிலில் இப்பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை பரந்த மூன்று கட்ட பொருளாதாரத் தடைகளை இயற்ற உத்தரவிட்டுள்ளனர். ஜேர்மனிய சான்ஸ்லர் மேர்க்கெல்: உக்ரேனுள் இன்னும் மோதல் விரிவாக்கம் ஏற்பட்டால், நாங்கள் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிக்க தயாராக உள்ளோம். என அறிவித்தார்

ஐரோப்பிய ஒன்றியம் கிரிமியாவில் இருந்து ரஷ்யா ஊடாக செல்லும் பொருட்கள் மீதும் ஆத்திரமூட்டும் தடைகளைச் சுமத்தியுள்ளது. இப்பொழுது முதல் கிரிமியாவில் இருந்து உக்ரேன் மூலம் பொருட்கள் வரவேண்டும். இல்லாவிடில் அவற்றிற்கு மிக அதிக அபராதங்கள், சுங்ககாப்பு வரிகள் அவற்றின் மீது சுமத்தப்படும் என்று பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோன் கூறினார்.

பரந்த பொருளாதாரத் தடைகள் தங்கள் பெருநிறுவன நலன்களான ஜேர்மன் கார் விற்பனைகள், ரஷ்யாவில் எரிசக்தி முதலீடுகள், பிரான்சின் மாஸ்கோவிற்கு ஆயுதங்கள் விற்பனை, சிட்டி ஆப் லண்டனின் நிதியப் பணிகள் என்பவற்றின் மீது கொடுக்கும் பாதிப்பின் சாத்தியப்பாட்டின் கவலைகள் இருந்தபோதிலும் ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிராகத் தாக்குதலுக்கு உறுதியாக உள்ளன.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ பங்காளிகள் தொடர்ந்து இராணுவ அழுத்தங்களைத் தூண்டியுள்ளன. ஒபாமா, ரஷ்யா அதன் மேற்கு எல்லைகளுக்குள் நடத்தும் இராணுவப் பயிற்சிகள் போர் விரிவாக்கத்திற்கு ஆபத்தான இடர்களைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்.

நேற்று போலந்தில் அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் மல் அமெரிக்க இராணுவம் போலந்தில் மிகப் பெரிய போர்பயிற்சி நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுள்ளது என்றும் இதில் செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, பல்கேரியா, ருமேனியா மற்றும் பால்டிக் துருப்புக்களும் ஈடுபடும் என்றார்.

வெள்ளியன்றே உக்ரேனிய இராணுவம் பல்கேரியாவில் பல நாடுகளின் இராணுவப் பயிற்சிகளில், இரு வாரங்கள் நடைபெற இருப்பதில், சேர்ந்தது; இதில் நேட்டோ உறுப்பு நாடுகள், மற்றும் ஆர்மெனியா, அஜர்பைஜன், ஜோர்ஜியா, மோல்டோவா, சேர்பியா, துருக்கி என்ற பங்காளி நாடுகள் 12ம் உள்ளன.

ஒரு நாள் முன்னதாக அமெரிக்கா மற்றும் நேட்டோ வருடாந்த Rapid Trident போர் பயிற்சிகளை அறிவித்தன. இது இக்கோடை காலத்தில் உக்ரேனில் நடக்கும். அமெரிக்க, பிரித்தானிய படையினரை தவிர, ஆர்மெனியா, அஜர்பைஜன், பல்கேரியா, கனடா, ஜோர்ஜியா, ஜேர்மனி, மோல்வோடோ, போலந்து, ருமேனியா மற்றும் உக்ரைன் நாட்டுப் பிரிவுகளும் இதில் இருக்கும்.

பென்டகன் ஏற்கனவே 12 போர் விமானங்களையும் நூற்றுக்கணக்கான துருப்புக்களையும் போலந்திற்கு அனுப்பியுள்ளது. கடந்த வாரம், அமெரிக்க இராணுவம் அமெரிக்க போர் விமானம் தாங்கி கப்பலான USS George H.W.Bush மற்றும் அதன் குழுவும் மத்தியதரைக் கடலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.