சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

G7 powers exploit Ukraine crisis to isolate Russia

G7 சக்திகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த உக்ரேன் நெருக்கடியை பயன்படுத்துகின்றன

By Mike Head 
25 March 2014

Use this version to printSend feedback

மேற்கு ஆதரவு பெற்று உக்ரேனில் நடந்த ஆட்சிசதியை தொடர்ந்து ரஷ்யாவை இராஜதந்திர, மூலோபாய முறையில் தனிமைப்படுத்த அமெரிக்கா இன்னும் ஏழு நாடுகள் குழுவின் பிற உறுப்புநாடுகளும் நடத்தும் ஒருங்கிணைந்த முயற்சியினால் நேற்று மாஸ்கோ எட்டு நாடுகள் குழுவில் இருந்து அகற்றப்பட்டதுடன், மேலும் பாதிப்பை கொடுக்கும் நிதியத்தடைகள் பற்றியும் எச்சரிக்கப்பட்டது.

ஹேக்கில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் ஜேர்மனிய, பிரெஞ்சு, பிரித்தானிய, இத்தாலிய, ஜப்பானிய, கனேடியத் தலைவர்கள் கியேவில் பாசிச தலைமையிலான ஆட்சி சதிக்கு பிரதிபலிப்பாக ரஷ்யாவுடன் சேருவதற்கு கிரிமிய மக்கள் பெரும்பான்மையுடன் வாக்களித்த சர்வஜன வாக்கெடுப்பை சட்டவிரோதம் என முத்தரையிட்டனர். ரஷ்யாவின் கிரிமியாவை இணைக்கும் சட்டவிரோத முயற்சிகள் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானதால் தமது நாடுகளின் அங்கீகாரம் அதற்கு கிடையாது என்று G7 அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை மாஸ்கோவுடனான நடக்கும் மோதலுக்கு வழிகாட்டுகின்றது.

ஆண்டின் நடுப்பகுதியில் ரஷ்ய குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடமான சோச்சியில் திட்டமிடப்பட்டிருந்த G8 உச்சிமாநாட்டை ஏழு நாடுகளும் புறக்கணித்துவிட்டன என்றும் ஹேக் அறிக்கை கூறுகிறது. மாறாக அவை பிரஸ்ஸல்ஸில் G7 மாநாட்டை நடத்தும் என்றும் ரஷ்யா போக்கை மாற்றிக் கொள்ளும் வரை G8 இல் கலந்து கொள்ளுவது முற்றாக நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

G8 நிறுத்தப்பட்டுள்ளது உலக உறவுகளில் பெரிய மாற்றத்தை குறிக்கிறது. 1998 இல் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நிர்வாகம் G7 உடன் சேர்க்கப்பட்டு அது G8 ஆக மாறியபோது, ரஷ்யாவின் பங்குகொள்ளல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை தொடர்ந்து பனிப்போர் முடிவிற்கு அடையாளம் காட்டுகிறது என முன்வைக்கப்பட்டது. இப்பொழுது வாஷிங்டனால் தூண்டப்பட்டு பெரிய முதலாளித்துவ நாடுகளிடையே புதிய மோதல் காலம் தொடங்கியுள்ளது. இதன் நோக்கம் ரஷ்யாவை அடிபணிய வைப்பது அல்லது துண்டுகளாக உடைப்பதாகும்.

இந்த அறிவிப்பு ரஷ்யாவை போக்கிரி நாடுகள் என அழைக்கப்படும்  லிபியா, சிரியா, ஈரான், வடகொரியா போன்றவற்றிற்கு பிரயோகிக்கப்பட்ட அதேமாதிரியான வார்த்தைகளில் விபரிக்கின்றது. அந்நாடுகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையிலான முடக்கிவிடும் பொருளாதாரத் தடைகள் அல்லது இராணுவ தலையீட்டை முகங்கொடுத்துள்ளன. ரஷ்யாவின் கிரிமிய நடவடிக்கைகள் உலகெங்கிலும் சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு தீவிர சவால் ஆகும் என்று G7 அறிவிக்கிறது.

ஏற்கனவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய பொருளாதாரத்திற்கு இன்னும் அதிக பாதிப்பை கொடுக்கும் அச்சுறுத்தலை G7 கொண்டுள்ளது. இந்த நிலைமையை ரஷ்யா தொடர்ந்து மோசமடைய செய்தால், ரஷ்ய பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை பெருகிய முறையில் கொடுக்கும் தனித்துறைகளின் மீதான ஒருங்கிணைந்த பொருளாதார தடை நடவடிக்கைகளை நாங்கள் தீவிரப்படுத்த தயார் என அது எச்சரித்துள்ளது. கூடுதலான பொருளாதாரத்தடை நடவடிக்கைகளுக்கு வழியமைப்பதற்கு G7 நாடுகள் ரஷ்ய எரிவாயு, எண்ணெயில் தாங்கள் தங்கியிருப்பதை குறைக்க ஒன்றாக உழைப்பதாக உறுதி எடுத்துக் கொண்டன.

ரஷ்யாவின் மிகப் பெரிய வங்கியான Sberbank நாடு மந்தநிலையை எதிர்பார்க்கும் என்று நேற்று எச்சரித்தது. இது வணிக நபர்கள், வங்கிகள் மற்றும் நிதிய நடவடிக்கைகள்மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் அதிகமாகும் என்று அது கூறியுள்ளது. கிரிமிய நெருக்கடிக்கு முன்பு ரஷ்யாவில் இருந்து ஜனவரி, பெப்ருவரி மாதங்களில் மட்டும் மூலதன வெளியேற்றம் மொத்தம் $35 பில்லியன் என இருந்தது. பெப்ருவரி மாதம் ரஷ்யா வருடாந்த அளவில் 0.3% மட்டுமே வளர்ச்சியுற்றது. இது ஜனவரியில் இருந்த 0.7% இலும் குறைவாகும். ரஷ்யாவின் Micex பங்குக் குறியீடு இந்த ஆண்டு 13%க்கும் மேலாகக் குறைந்துவிட்டது.

G7 அறிக்கை ஆட்சிமாற்ற செயலுக்குப் பின்னணியில் மற்றொரு உந்து சக்தி உள்ளது என்பதை நிரூபிக்கிறது. அதாவது மூலவளங்கள், சந்தைகள், குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு ஆகியவற்றை முதலாளித்துவம் தடையற்று சுரண்டுவதற்கு ஏனைய கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து உக்ரேனை திறந்துவிடுவதாகும். உக்ரேனிய சீர்திருத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச முயற்சிக்கு தலைமை தாங்குவதில் சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கிய பங்கை கொண்டுள்ளது. இது உக்ரேனின் பொருளாதார வலிமையற்ற நிலையைக் குறைத்து, நாட்டை பன்முகமுறை சந்தைப் பொருளாதாரத்துடன் நல்ல முறையில் ஒருங்கிணைக்கும். என அவ்வறிக்கை கூறுகின்றது.  

அதாவது, உக்ரேனிய தொழிலாள வர்க்கம், சர்வதேச நாணய நிதியம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஐரோப்பாவில் ருமேனியாவில் இருந்து கிரேக்கம், அயர்லாந்து வரை சுமத்தியுள்ள மிருகத்தன சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக அழிவிற்கு உட்படுத்தப்படும். சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உக்ரேனிய அதிகாரிகளும் விரைவான முடிவை அடைய G7 வலியுறுத்தியுள்ளது: ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கூடுதல் உதவியை பெற முக்கியமாகும்.

ஹேக்கில் ஒபாமா, ரஷ்யா மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் மற்றொரு இலக்கான சீனா மீது அழுத்தங்களைத் தீவிரப்படுத்த தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தினார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பங்குடன் ரஷ்யாவிற்கு எதிராக பெய்ஜிங் நிற்பதற்கு ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். உக்ரேனின் தேசிய இறைமைக்கு ஆதரவு கொடுத்து ஆனால் ரஷ்யாவை விமர்சிக்க மறுத்து அரசியல் தீர்வு தேவை என்னும் விருப்பத்தை ஜி வலியுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

மாஸ்கோவை கண்டித்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு தீர்மானத்தில் பங்கு பெறாத சீனத் தலைமை, உக்ரேனில் இருந்து கிரிமியா பிரிவது சீனாவிலும் தனிப் பிரிவினை இயக்கங்களுக்கு மேற்கின் ஆதரவிற்கான முன்னோடியாக பயன்படுத்தப்படும் என அஞ்சுகிறது. இது சீனாவை இராஜதந்திர, இராணுவ முறையில் சூழ்ந்து நிற்பதற்கு ஒபாமாவின் ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுத்தல் என்னும் உந்துதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜியை சந்தித்த ஒரு நாளுக்குப்பின் ஒபாமா ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே மற்றும் தென் கொரிய ஜனாதிபதி பார்க் கெயுன் ஹை உடன் மூன்று நாடுகள் உச்சிமாநாடு ஒன்றை நடத்த உள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிராந்திய, பொருளாதார அழுத்தங்களை குறைக்க முனையும். இரண்டு நாடுகளையும் அமெரிக்கா சீனாவுடன் மோதல்களுக்கு ஊக்குவிக்கிறது. ஒபாமா ஆசியாவிற்கு ஏப்ரலில் மீண்டும் இத்தாக்குதலை அதிகரிக்க வருவார்.

G7 உச்சிமாநாட்டிற்கு முன்பு ஒபாமா நிர்வாகத்தாலும், ஐரோப்பிய தலைவர்களாலும் அவர்களுடைய புதிதாக இருத்தப்பட்ட உக்ரேனிய அரசாங்கத்தில் உள்ள பினாமிகள் ஆகியோரால் ரஷ்யா உக்ரேனின் எல்லைகளில் படையெடுப்பு நடத்தலாம் என்பதற்காக துருப்புக்களை குவித்துள்ளது என தொடர்ச்சியான எரியூட்டும் கூற்றுக்கள் வந்தன. G8  இல் இருந்து ரஷ்யா அகற்றப்பட்டதற்கு காரணம் நாடுவதைத்தவிர, இக்கூற்றுக்கள் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவத்தயாரிப்பை நியாயப்படுத்தும் கணிப்பீட்டை கொண்டவை.

அமெரிக்காவும் முக்கிய ஐரோப்பிய சக்திகளும்தான் முழு பிராந்தியத்தையும் ஆக்கிரோஷத்துடன் இராணுவமயமாக்கி கொண்டு வருகின்றன. உச்சிமாநாட்டிற்கு புறப்படுமுன் பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமரோன், நேட்டோ லித்துவேனியா, எஸ்தோனியா மற்றும் லாட்வியா ஆகிய பால்டிக் நாடுகளின் இராணுவப் பிரிவுகளுக்கு மேலதிக உதவி கொடுக்கும் என அறிவித்தார். மேலும் எத்தகைய ரஷ்ய அச்சுறுத்தல்களையும் தலையீட்டிற்கான காரணமாக பற்றத் தயாராக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

நம் நேட்டோ பங்காளிகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் நேட்டோவை நாம் நம்புகிறோம், அவர்கள் பாதுகாப்பை நாம் நம்புகிறோம் என்ற தெளிவான தகவலை அனுப்புதல் மிக முக்கியம் என்று காமெரோன் கூறினார். ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டுதல்களில் உள்ள சில கணக்கீடுகள் நியூ யோர்க் டைம்ஸில் நேற்று மைக்கேல் மக்பௌலால் குறிப்பிடப்பட்டன. அவர் ஒபாமா நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்புக் குழுவிலும், ரஷ்ய தூதராகவும் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். புட்டினின் ரஷ்யாவை எதிர்கொள்ளல் என்னும் தலைப்பில் மக்பௌல் சர்வதேச ஒழுங்கமைப்பில் ரஷ்யா சேர்ந்த காலம் முடிந்துவிட்டது. கடந்த நூற்றாண்டின் மோதலுக்கு சமமான புதிய சகாப்தம் தொடங்கவுள்ளது என்றார். இது முதல், இரண்டாம் உலகப் போர்களை பற்றிய குறிப்பாகும்.

தண்டனை போன்ற பொருளாதார தடைகளை தவிர கூடுதலான இராணுவத் தளபாடங்களும் முன்னரங்கில் இருக்கும் நாடுகளுக்கு கொடுக்கப்பட வேண்டும், இன்னும் பயிற்சி, படைகள் ஒருங்கிணைப்பு மற்றும் புதிய முயற்சிகள் ரஷ்யாவின் எரிசக்தியை நம்பியிருப்பதைக் குறைப்பது தேவை என்று மக்பௌல் கூறினார். ஒரு திருத்தவாத ரஷ்யாவில் இருந்து சீனாவை ஒதுக்குவதும் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

விருப்பமற்றமுறையில் மக்பௌல் வாஷிங்டனின் புதிய உலக இராணுவவாதத்தின் புதிய கட்டம் தொடங்கப்படுதல் என்பதற்கு மாறாக, ஒபாமா நிர்வாகமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு விடையறுப்பது என்று போலிக்காரணங்களாக முன்வைப்பவற்றின் அதிர்ச்சிதரும் பாசாங்குத்தனத்தையும் போலித்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவிற்கு போன நூற்றாண்டில் இருந்த அதே அறநெறி அதிகாரம் இல்லை என அவர் குற்றம்சாட்டினார். ஒரு தூதர் என்னும் முறையில், ஈராக் தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்? என ரஷ்யர்கள் கேட்டால் இறையாண்மையையும், சர்வதேச சட்டத்தையும் பாதுகாப்பதற்கான எமது கடமைப்பாட்டை பாதுகாப்பது கடினம் என உணர்கின்றேன் என்றார்.