சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

US and NATO use Ukrainian crisis to advance military build-up in Eastern Europe

அமெரிக்கா மற்றும் நேட்டோ உக்ரேனிய நெருக்கடியை பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பாவில் இராணுவக் கட்டமைப்பை முன்னெடுக்கின்றன

By Patrick O’Connor 
24 March 2014

Use this version to printSend feedback

இந்த வார இறுதியில் வெள்ளை மாளிகை மற்றும் நேட்டோ அதிகாரிகள்  வெளியிட்டுள்ள அறிக்கைகள், ரஷ்யா அதன் பல அண்டை நாடுகளின் மீது படையெடுக்க தயாராக உள்ளது என்பது உட்பட்ட, அமெரிக்க ஏகாதிபத்தியம் கிழக்கு ஐரோப்பா முழுவதும் எடுக்கும் ஒரு உச்சபட்சமான இராணுவக் கட்டமைப்பிற்கான முன்னெடுப்பு தயாரிப்புக்களை சுட்டிக் காட்டுகின்றன.

இன்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஹாலண்ட் இல் உள்ள ஹேக்கில் ஆரம்பித்து, ஐரோப்பாவில் நான்கு நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறார். முன்னரே திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டின்போது ஒபாமா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் (G8-ரஷ்யாவை கழித்து) தலைவர்களுடைய கூட்டத்தை கூட்டுகிறார்.

உக்ரேனில் ஆட்சி மாற்றத்திற்கு ஜேர்மனியுடன் இணைந்து செயற்பட்ட பின்னர், வாஷிங்டனின் நோக்கம் தந்திரோபாய முறையில் விளாடிமீர் புட்டினுடைய நிர்வாகத்தை தனிமைப்படுத்தி பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை பரிசீலனை செய்வதும், அதே நேரத்தில் உக்ரேனை மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் வர்த்தக மற்றும் எரிசக்தி முறைகளை வளர்த்தலும், இவற்றை அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதும் ஆகும். புதன் அன்று ஒபாமா பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளையும் நேட்டோவின் செயலர் ஜெனரல் ஆண்டெர்ஸ் போக் ராஸ்முசெனையும் சந்திப்பார்.

நேட்டோவின் தலைமை கூட்டுப்படைகளின் தலைவர் அமெரிக்க விமானப் படை ஜெனரல் பிலிப் பிரீட்லவ் நேற்று ரஷ்யா மீது சீற்றம் மிகுந்த கண்டனத்தை வெளியிட்டார். புட்டின் நிர்வாகம், முன்னாள் சோவியத் குடியரசின் ஒரு பகுதியான மோல்டோவாவின் ஒரு பகுதியான டிரான்ஸ்னிஸ்ட்டிரியாவில் தலையிடும் நோக்கத்துடன் ரஷ்யாவின் மேற்கு எல்லைகளில் இராணுவப் படைகளை கட்டமைக்கிறது, அங்கு கணிசமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் உள்ளனர், இது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டவுடன் சுதந்திரம் அடைந்தது. பிரீட்லவ், ரஷ்ய துருப்புக்கள் பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா மீது படையெடுக்கும் என்ற தோற்றத்தையும் எழுப்பினார்.

இப்பொழுது கிழக்கில், உக்ரேனிய எல்லையில் இருக்கும் ரஷ்யப் படைகள் மிக, மிக அதிகம், மிக மிகத் தயாராக உள்ளவை” என்று ஜேர்மனிய மார்ஷல் நிதிய சிந்தனைக் குழு நடத்திய நிகழ்வு ஒன்றில் பிரீட்லவ் அறிவித்தார். “உக்ரேனின் கிழக்கு எல்லையில் முற்றிலும் போதுமான படை உள்ளது, டிரான்ஸ்னிஸ்ட்டிரியா மீது படையெடுக்க முடிவெடுக்கப்பட்டால் தயாராக உள்ளது; அது கவலை தருகிறது.”

கிரிமியவை ரஷ்யாவுடன் இணைத்துள்ளது பற்றிக் குறிப்பிட்டபின், நேட்டோ தளபதி: “நாம் எப்படி நமது தயார்ப்படுத்தலை மாற்றப்போகிறோம்? நாம் எப்படி நமது தயார்நிலையை மாற்றப்போகிறோம்? நாம் எப்படி நம் படைகளின் கட்டமைப்பை வருங்காலத்தில் தயாராக இருப்பதற்கு ஏற்ப மாற்றப்போகிறோம்? நம் நட்பு நாடுகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டும், நம் படைகளை கூட்டில் நிலைப்படுத்தல் மற்றும் நம் படைகள் நட்பு நாடுகளுடன் தயார்நிலையையில் என்பது பற்றி சிந்திக்க வேண்டும், குறிப்பாக பால்டிக்கிலும் பிற இடங்களிலும் இதையொட்டி நாம் தேவைப்பட்டால் அவர்களை பாதுகாக்க அங்கு இருக்க வேண்டும்” என்பவை பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.

ரஷ்யா இப்பொழுது நேட்டோவின் “பகை நாடு” போல் செயல்படுகிறது என்று பிரீட்லவ் சேர்த்துக் கொண்டார். இது ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தீவிர தயாரிப்புக்களைக் கொண்டுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் டோனி பிளிங்கன், நேற்று CNN ல் பேசுகையில் பிரீட்லவ்வின் அறிக்கைகளை ஆதரித்து, “தன் அமைப்பு எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் கட்டமைக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது” என்றார். “அவர்கள் உக்ரேனில் நுழையலாம்” என்றும் பிளிங்கன் சேர்த்துக் கொண்டார்.

போலந்தின் பாதுகாப்பு மந்திரி டோமஸ் சீமோனியாக் சனிக்கிழமை அன்று வாஷிங்டன் “அதன் இராணுவ இருப்பை ஐரோப்பாவிலும், போலந்திலும் கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும்” என்றார். கடந்த வாரம் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பைடென் அந்நாட்டிற்கு வருகை புரிந்திருக்கையில் “எங்கள் பக்கத்தில் இருந்தும் மற்ற கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளிடம் இருந்தும் ஒரு தெளிவான எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது நாங்கள் அமெரிக்காவிடம் இருந்து மிகப் பெரிய இராணுவ பிரசன்னத்தை எதிர்பார்க்கிறோம் மற்றும் நேட்டோவின் இந்த கிழக்குப் பிரிவு வலுப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

உக்ரேன் நிகழ்வுகளை பார்க்கும்போது, நிரந்தர அமெரிக்கத் தளம் போலந்தில் இருக்கும் வாய்ப்பு குறித்து விவாதிப்பது “இயல்பேயாகும்” என்று சீமோனிக் சேர்த்துக் கொண்டார்.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் 12, F16 போர் விமானங்கள் மற்றும் 300 துருப்புக்கள் போலந்தில் நிலைகொண்டபின்னர் வரும் இந்த அறிக்கைகள் வெள்ளை மாளிகை மற்றும் அதன் நட்பு நாடுகளின் திமிர்த்தன பாசாங்குதனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வாஷிங்டன் இப்பொழுது ஒரு போர் அச்சுறுத்தலை, ரஷ்ய துருப்புக்கள் தன்நாட்டின் எல்லைக்குள் நகர்வது குறித்து முரசு கொட்டுகிறது; அதே நேரத்தில் அமெரிக்க ஆயுதப்படைகள், ரஷ்யாவை அதன் அண்டை நாடுகளில் இருந்து சுற்றிவளைக்கும் ஒரு ஆத்திரமூட்டும் முயற்சியாக நிலை கொண்டுள்ளன.

கியேவில் நிறுவப்பட்டுள்ள ஆட்சியும் இந்த சொல்லாட்சியை அதிகம் கூறுகிறது. வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி டேஷ்சிட்சியா நேற்று அமெரிக்க தொலைக்காட்சியில் தோன்றி ரஷ்யாவுடனான இராணுவ மோதல் “மிக அதிகம்”, பெருகி வருகிறது என்றார். “நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்... மக்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகவும் கடினம், அவர்கள் தங்கள் தாய்நாட்டின் பற்றாளர்கள்.... அவர்களால் ரஷ்யா தங்கள் நாட்டின்மீது படையெடுப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள்என்றும் கூறினார்.

தாய்நாட்டின் பற்றாளர்கள்” என்னும் டேஷ்சிட்சியாவின் குறிப்பு, உக்ரேனின் தீவிர வலதுசாரி மற்றும் தேசியப் படைகள் என்னும் வாஷிங்டன்-ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கை பற்றிய குறிப்பு ஆகும்; இவர்கள் உயர்மட்ட அரசு பதவிகளிலும், ஆயுதப்படைகளிலும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு மந்திரி இகோர் டெனியுக், மூத்த அரசாங்க பதவி வகிக்கும் பல நபர்களில் ஒருவர், பாசிச ஸ்வோபோடா கட்சியின் உறுப்பினராவர், நேற்று ரஷ்ய துருப்புக்களை கிரிமியாவில் தாக்குவதில் உக்ரேனிய படைகள் தோற்றது குறித்து புலம்பினார். வார இறுதியில், ரஷ்யப் படைகள் பெல்பெக் விமானத் தளத்தின்மீது கட்டுப்பாட்டைக் கொண்டனர், இது உக்ரேனிய துருப்புக்களின் கிரிமியாவில் எஞ்சியிருந்த தளங்களில் ஒன்றாகும்.

கியேவில் செய்தியாளர்களிடம் பேசிய டெனியுக்,எங்கள் தளபதிகள் படையை பயன்படுத்த அங்கீகாரம் பெற்றிருந்தனர்” என்று அறிவித்தார். ஆனால், “துரதிருஷ்டவசமாக தளபதிகள் அவ்வப்பொழுது முடிவுகளை எடுத்தனர். குருதி கொட்டுவதை தவிர்க்கும் பொருட்டு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்தனர்” என புகார் கூறினார்.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போரைத் தூண்டிவிடும் படைகளை சேர்த்த ஆட்சியை உக்ரேனில் நிறுவியபின், வெள்ளை மாளிகை இப்பொழுது அதன் இராணுவத் திறன்களை கட்டமைத்து வருகிறது. குடியரசு காங்கிரஸ் உறுப்பினர் மைக் ரோஜெர்ஸ், பிரதிநிதிகள் மன்ற உளவுத்துறைக் குழுவின் தலைவர், நேற்று NBC யின் “செய்தியாளரை சந்திக்கவும்” நிகழ்வில், ஒபாமாவின் அலங்கார சொற்கள்,தளத்தில் உள்ள உண்மையுடன் பொருந்தி இருக்கவில்லை” என்றார். உக்ரேனிய அராசங்கத்திற்கு இராணுவ உதவி வேண்டும், “அதையொட்டி அது உண்மையில் தங்களை பாதுகாக்கும்” என்றார் அவர்.

ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் டோனி பிளிங்கன், உக்ரேனுக்கு ஆயுதம் நேரடியாக வழங்குவது இப்பொழுது மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது என அறிவித்தார்.